எங்கள் அணித் தலைவி சுபா கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்னும் சில பழைய பாடல்கள். ஆஹா! அவை காதலை மட்டுமா சொல்கின்றன! அப்படியே உள்ளத்து உணர்வுகளை வடித்து எடுத்துக் காட்டுகின்றனவே! இப்படி எல்லாம் பாடல்கள் எழுத இப்போது யாரும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், "கொலவெறிடா"னு பாடறாங்க. கேட்டால் காதல் பாட்டாம். இல்லைனா, "வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" அப்படினு சம்பந்தமே இல்லாமல் பாடச் சொல்றாங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?? என்ன அர்த்தம்னு கேட்கிறேன். நம்ம காதலர்கள் பாருங்க இயல் தமிழை மட்டுமில்லாமல் இசைத் தமிழையும் வளர்க்கிறாங்க. இதுவன்றோ பாடல்கள்! இங்கே பாருங்க, எப்படி எல்லாம் சம்பவங்கள் நடக்கின்றன நம்ம கதாநாயகி வாழ்க்கையிலே.
காதல் மயக்கத்திலே தன்னந்தனியாகப் பாடிட்டு இருந்தாள் கதாநாயகி.
http://www.youtube.com/watch?v=KYrJMTS1eqc
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கிவிட்டதா
இதயம் சொல்லி விட்டதா சொல்மனமே
அங்கே கதாநாயகனோ
http://www.youtube.com/watch?v=aHr31vJV5qk
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
உடனே தன் காதலியைக் காணும் ஆவல் பொங்க அவளுக்குத் தகவல் அனுப்பிவிட்டுச் செல்கிறான். அவளும் வருகிறாள்
http://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
ஏன் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!
நீயல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!!
பாருங்க ஒருத்தருக்காக ஒருத்தர் எப்படித் துடிக்கிறாங்கனு! இந்த வரிகளிலேயே காதலனின் அன்பும், காதலியின் அன்பும் தெள்ளத் தெளிவாகப் புலப்படவில்லையா?
அப்படினு பாடி ஆடறாங்க ரெண்டு பேரும். அப்போத் தான் இதை ஒளிஞ்சுட்டு இருந்து வில்லன் பார்த்துடறான். இந்த வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் பல காலமாப் போட்டி, பொறாமை. இப்போ நல்ல பொண்ணு நமக்குக் கிடைக்கலையேனு பொறாமை ஜாஸ்தி ஆக, காதலி வீட்டில் வத்தி வைக்கிறான். காதலியின் அப்பாவும் இதை எல்லாம் கேட்டுட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிடறார். பெண்ணின் சம்மதத்தைக் கேட்கவே இல்லை. கதாநாயகி சோகம் பொங்க
விதி செய்த சதியோ அத்தான்
இது எல்லாம் நீயே அத்தான்
சதி பதியாய் வாழ அத்தான்
கெதி இல்லாமற் போனோம் அத்தான்!
என சோக கீதம் இசைக்க அவள் தோழிக்கு விஷயம் தெரிந்து அங்கே வருகிறாள்.
https://www.youtube.com/watch?v=NMbmPvRBFLk
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு..)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு..)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு..)
அவள் யாருக்கு மாப்பிள்ளை யாரோ னு சொல்லித் தன் சிநேகிதிக்கு ஆறுதல் கொடுக்கிறாள். உனக்குனு ஒருத்தன் ஏற்கெனவே பிறந்துட்டான். அவன் நீ காதலிப்பவன் தான் என்றெல்லாம் சொல்லிக் காதலனுக்குக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்கிறாள். அவளும் உடனே எழுதுகிறாள்.
http://www.youtube.com/watch?v=PQ0Bfm1gF7I
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
(அன்புள்ள ....
மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
இந்தக் கடிதத்தை எழுதிட்டு உடனே தன் தோழியிடம்
http://www.youtube.com/watch?v=CZ6bwPzd1v4
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி
என்று சொல்லித் தோழியை தூது அனுப்புகிறாள். மிச்சமெல்லாம் நாளைக்குத் தான்! இன்னிக்கு இதுவே ஜாஸ்தி. :))))

ஆகா... அருமையான இனிமையான பல பாடல்கள் மூலம் கதை அழகாக செல்கிறது... மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteபின்னு பின்னென்று பின்னுகின்றீர்களே! கோர்வை - அருமை. நெஞ்சம் நிறைந்த பாடல்கள்.
ReplyDeleteஏதாவது குறிப்பிட்ட தலைப்பில் எழுதுகிறீர்களா? என்ன தொடர்பு பாடல்களுக்கிடையே என்று புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கள் ப்ளாக் சைட் பாரில் உங்கள் பதிவுகள் அப்டேட் ஆகவில்லை போல...
ReplyDeleteவாங்க டிடி, ஶ்ரீராமுக்கு இங்கேயே பார்க்கும் வசதி செய்து கொடுக்கலைனு வருத்தம். வேண்டாம்னு தான் விட்டுட்டேன். :)))))ரசனைக்கு நன்றிப்பா.
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteஶ்ரீராம், எ.ப். சைட் பாரில் அப்டேட் ஆகி இருந்தது; இன்றைய பதிவும் ஆகி இருக்கு. :)))
ReplyDeleteஆமாம் குறிப்பிட்ட தலைப்புத் தான். திரைப்படக் காதல் பாடல்களில் சிறந்தவை 2000 ஆம் வருஷத்துக்கு முன்னர் என்பது எங்க அணி. வேறொரு அணி தற்காலப் புதிய பாடல்களுக்காக வாதாடியது. :)))) நடுவிலே நடுவரே காணோம். :))))
பாடல்களுக்கிடையே தொடர்பே கிடையாது. எனக்குத் தோணற பாடல்களைப் புகுத்த எனக்குத் தோன்றுகிறதை எழுதிச் சேர்க்கிறேன். அஷ்டே! :)))))
ReplyDeleteதொடர்பு வேணுமா என்ன. பாடல்களெ அருமையாக்த் தொடுத்துக் கொள்கின்றன கீதா. நம் எல்லோர் மனதிலும் எப்பவும் உலாவும் பாடல்கள் பழைய பாடல்கள்தான்.
ReplyDeleteவாங்க வல்லி. பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteதொடரும் கலாட்டா......
ReplyDeleteலிங்க் கொடுத்ததை எல்லாம் மீண்டும் கேட்கவேண்டும்.....
கேட்கிறேன்.