பிரமசாரியான ஆஞ்சநேயனுக்கு மகனா எனத் திகைப்பு வரலாம். ராம--ராவண யுத்தத்தின் போது ராவணனின் நண்பன் ஆன மயில் ராவணன், விபீஷணனைப் போல் உருமாறி ராம லக்ஷ்மணர்களைப் பாதாளத்திற்குக் கடத்திச் செல்கிறான். அவர்களை மீட்டு வரப் பாதாளம் சென்ற அநுமனை அங்கிருந்த ஓர் இளைஞன் தடுத்து நிறுத்திச் சற்றும் அயர்வில்லாமல் அநுமனோடு போரிடவே அனுமனுக்கு ஆச்சரியம் மிகுந்தது. அந்த இளைஞனை யார் என விசாரிக்க அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தார் அனுமன்.
தான் அனுமனுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்த பிள்ளை என்றும், அனுமனின் பிள்ளை என்பதால் தன்னிடம் வீரம் மிகுந்திருப்பதாகவும் கூறவே தன் பிரமசரியத்துக்கு விரோதமாய்ப் பேசும் அந்த இளைஞனிடம் கோபமும் வந்தது அனுமனுக்கு. தான் தான் அந்த அனுமன் என்பதைத் தெரிவித்துவிட்டு பூரண பிரமசாரியான தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்கிறார். தன் தாய் சுவர்ச்சலா தேவியை அந்த இளைஞன் அழைக்க அங்கே வந்த சுவர்ச்சலா தேவி அனுமனைக் கண்டதுமே பணிந்து வணங்கினாள். அனுமனிடம், தான் மகர வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், இலங்கையில் அநுமன் வாலில் தீ மூட்டியபோது அதை அணைக்க அனுமன் கடல் நீரில் வாலை நனைத்தபோது அவர் உடலின் வியர்வை கடலில் விழுந்ததாகவும், அந்த நீரைத் தான் விழுங்கியதால் தன் வயிற்றில் தோன்றியவனே இந்தக் குமாரன் என்றும் கூறினாள். மேலும் மயில் ராவணன் தன் மாயா சக்தியால் மகரத்வஜனை மயக்கித் தன் பிடியில் வைத்திருப்பதையும் தெரிவித்தாள்.
அனுமனும் மயில் ராவணனின் அரண்மனைக்குள் புகுந்து அவனை அடியோடு அழித்துத் தன் மகனையும் மயக்கத்திலிருந்து மீட்டு அங்கே அரசனாக்குகிறார். சிவ சக்தி ஐக்கியமின்றிப் பிறந்த விநாயகரையும், முருகனையும் போலவே சிவ சொரூபமான அனுமனுக்கும், அம்பிகை சொரூபமான சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் தான் மகரத்வஜன்.
அங்கிருந்து லலிதா தேவி கோயிலுக்குச் சென்றோம். இது ஒரு சக்தி பீடம் என்கின்றனர். நைமிசாரண்யத்தில் வந்து விழுந்த மனோமய சக்கரத்தை லலிதா தேவி தான் நிறுத்தினதாகவும் சொல்கின்றனர். மஹிஷாசுரனை வதைத்த பின்னர் தேவாதி தேவர்களுக்கு தரிசனம் கொடுத்த இடமாகவும் சொல்கின்றனர்.
தேவி லிங்கதாரிணி என அழைக்கப்படுகிறாள். அதோடு இல்லாமல் ததீசி முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதம் செய்வதற்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்ததும் நைமிசாரண்யத்திலே என்பதும் தெரிய வருகிறது.
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தைப் பாடி இருப்பது குறித்து ஏற்கெனவே பார்த்தோம். அதைத் தவிரவும் இங்கே அஹோபில மடமும் ராமாநுஜ கூடமும் இங்கே மடங்கள் அமைத்திருக்கின்றன. ராவணனைக் கொன்ற பாவம் தீர ஶ்ரீராமன் இங்கே வந்து தீர்த்தத்தில் நீராடியதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையும் இங்கே சிறப்பாகக் கருதப்படுகிறது. லலிதா தேவி கோயிலே முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதோடு இல்லாமல் ஸ்வாயாம்புவ மனு தவம் செய்கையில் ஶ்ரீமந்நாராயணனே தனக்கு மும்முறை மகனாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டதாகவும். அவ்வாறே ஸ்வாயாம்புவ மநு தசரதனாகவும், வசுதேவராகவும் பிறந்து முறையே ஶ்ரீராமரும், ஶ்ரீகிருஷ்ணரும் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்ததும் நைமிசாரண்யத்தில் செய்த தவத்தையே முன் வைத்துச் சொல்கின்றனர். மேலும் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் எனச் சொல்லும் வட இந்திய மக்கள் ஶ்ரீராமனின் அவதாரமாக ஒர்ச்சா என்னும் இடத்தை ஆண்ட மன்னன் ஒருவனைக் கூறுகின்றனர். இவரே கலியுகத்தில் ஶ்ரீராமனுடைய மூன்றாம் அவதாரம் எனப்படுகிறது. இந்த ஒர்ச்சா குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கணும்.
ஓர்ச்சா குறித்த தகவல்கள்
ஓர்ச்சா குறித்த தகவல்களுக்கு கூகிளாரைக் கேட்டப்போ நம்ம வெங்கட் நிறையவே கொடுத்திருப்பது தெரிய வந்தது. அதோட சுட்டி மேலே! :)))) பழம் நழுவிப் பாலிலே விழுந்து அந்தப் பழம் நேரே வயித்துக்குள்ளேயும் போயிடுச்சு. :)))))
தான் அனுமனுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்த பிள்ளை என்றும், அனுமனின் பிள்ளை என்பதால் தன்னிடம் வீரம் மிகுந்திருப்பதாகவும் கூறவே தன் பிரமசரியத்துக்கு விரோதமாய்ப் பேசும் அந்த இளைஞனிடம் கோபமும் வந்தது அனுமனுக்கு. தான் தான் அந்த அனுமன் என்பதைத் தெரிவித்துவிட்டு பூரண பிரமசாரியான தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்கிறார். தன் தாய் சுவர்ச்சலா தேவியை அந்த இளைஞன் அழைக்க அங்கே வந்த சுவர்ச்சலா தேவி அனுமனைக் கண்டதுமே பணிந்து வணங்கினாள். அனுமனிடம், தான் மகர வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், இலங்கையில் அநுமன் வாலில் தீ மூட்டியபோது அதை அணைக்க அனுமன் கடல் நீரில் வாலை நனைத்தபோது அவர் உடலின் வியர்வை கடலில் விழுந்ததாகவும், அந்த நீரைத் தான் விழுங்கியதால் தன் வயிற்றில் தோன்றியவனே இந்தக் குமாரன் என்றும் கூறினாள். மேலும் மயில் ராவணன் தன் மாயா சக்தியால் மகரத்வஜனை மயக்கித் தன் பிடியில் வைத்திருப்பதையும் தெரிவித்தாள்.
அனுமனும் மயில் ராவணனின் அரண்மனைக்குள் புகுந்து அவனை அடியோடு அழித்துத் தன் மகனையும் மயக்கத்திலிருந்து மீட்டு அங்கே அரசனாக்குகிறார். சிவ சக்தி ஐக்கியமின்றிப் பிறந்த விநாயகரையும், முருகனையும் போலவே சிவ சொரூபமான அனுமனுக்கும், அம்பிகை சொரூபமான சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் தான் மகரத்வஜன்.
அங்கிருந்து லலிதா தேவி கோயிலுக்குச் சென்றோம். இது ஒரு சக்தி பீடம் என்கின்றனர். நைமிசாரண்யத்தில் வந்து விழுந்த மனோமய சக்கரத்தை லலிதா தேவி தான் நிறுத்தினதாகவும் சொல்கின்றனர். மஹிஷாசுரனை வதைத்த பின்னர் தேவாதி தேவர்களுக்கு தரிசனம் கொடுத்த இடமாகவும் சொல்கின்றனர்.
தேவியின் சக்தி பீடம், கீழே சந்நிதிக்கு இருபக்கமும் அமர்ந்திருந்த பண்டிட்கள். அதிசயமாக இவர்கள் பணம் வசூலிக்கவே இல்லை. நல்லா தரிசனம் பண்ண உதவி செய்தாங்க.
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தைப் பாடி இருப்பது குறித்து ஏற்கெனவே பார்த்தோம். அதைத் தவிரவும் இங்கே அஹோபில மடமும் ராமாநுஜ கூடமும் இங்கே மடங்கள் அமைத்திருக்கின்றன. ராவணனைக் கொன்ற பாவம் தீர ஶ்ரீராமன் இங்கே வந்து தீர்த்தத்தில் நீராடியதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையும் இங்கே சிறப்பாகக் கருதப்படுகிறது. லலிதா தேவி கோயிலே முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதோடு இல்லாமல் ஸ்வாயாம்புவ மனு தவம் செய்கையில் ஶ்ரீமந்நாராயணனே தனக்கு மும்முறை மகனாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டதாகவும். அவ்வாறே ஸ்வாயாம்புவ மநு தசரதனாகவும், வசுதேவராகவும் பிறந்து முறையே ஶ்ரீராமரும், ஶ்ரீகிருஷ்ணரும் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்ததும் நைமிசாரண்யத்தில் செய்த தவத்தையே முன் வைத்துச் சொல்கின்றனர். மேலும் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் எனச் சொல்லும் வட இந்திய மக்கள் ஶ்ரீராமனின் அவதாரமாக ஒர்ச்சா என்னும் இடத்தை ஆண்ட மன்னன் ஒருவனைக் கூறுகின்றனர். இவரே கலியுகத்தில் ஶ்ரீராமனுடைய மூன்றாம் அவதாரம் எனப்படுகிறது. இந்த ஒர்ச்சா குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கணும்.
ஓர்ச்சா குறித்த தகவல்கள்
ஓர்ச்சா குறித்த தகவல்களுக்கு கூகிளாரைக் கேட்டப்போ நம்ம வெங்கட் நிறையவே கொடுத்திருப்பது தெரிய வந்தது. அதோட சுட்டி மேலே! :)))) பழம் நழுவிப் பாலிலே விழுந்து அந்தப் பழம் நேரே வயித்துக்குள்ளேயும் போயிடுச்சு. :)))))
அனுமனுக்குப் பிள்ளையா! புராணங்களில் இது மாதிரி சில விஷயங்களைத்தான் ஜீரணம் பண்ண முடிவதில்லை! வியர்வையை, அதுவும் நீரில் கலந்த வியர்வையை விழுங்கினால் ஜீரணம் பண்ணலாம். குழந்தை பிறக்குமோ! :)))
ReplyDeleteஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்... தொடர!
ReplyDeleteஅறியாத கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteஓர்ச்சா பத்தி தேட வச்சுட்டீங்க..
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இந்தக் கதையின் உண்மைத்தன்மை குறித்து எனக்கும் சந்தேகம் உண்டு. தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே இதன் உள் அர்த்தம் ஏதானும் இருக்கானு கேட்டுட்டு பதில் கிடைச்சதும் பகிர்ந்துக்கறேன். :))))
ReplyDeleteராமரே என்ன பாடு படறார்! அநுமன் எந்த மூலைக்கு? :))))
ReplyDeleteநன்றி டிடி.
ReplyDeleteஅப்பாதுரை, எல்லாரையும் பூகோள அறிவிலும் வரலாற்றிலும் தேர்ச்சி பெற வைக்கிறேனே, எவ்வளவு பெரிய விஷயம் இது! :))))
ReplyDeleteஓர்ச்சா குறித்த சுட்டி நம்ம வெங்கட் எழுதின பதிவுகளிலேயே கிடைச்சிருக்கு. இதிலேயே இணைச்சுட்டேன். :)
ReplyDeleteஓர்ச்சா போயிட்டு வானு சொன்னா தப்பா நினைப்பாங்களா தெரியலியே..
ReplyDeleteஓர்ச்சா பற்றி எழுதியதைப் படித்தபோது நானே எழுதி இருக்கிறேனே என நினைத்தேன்.
ReplyDeleteஎன் பதிவினையும் இங்கே சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கீதாம்மா...
நல்ல தகவல்கள் மற்றும் படங்கள்.