எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 12, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா ---14

ரவி மன உளைச்சலோடு இருந்தான்.  அவன் முகமே சரியில்லை.  நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்றே நினைத்தான்.  அன்று, அந்தப் பிசாசுக்குப் பொன்னுக்கு வீங்கி வந்தபோது தொலைபேசியில் பேசிய மருத்துவர் சொன்னது அவன் மனதில் அலை மோதியது. "ரவி, இந்தப்பொன்னுக்கு வீங்கி பெண்களுக்கு வந்தால் பரவாயில்லை.  ஆண்களுக்கு வரக் கூடாது.  ஆகவே உன் மகனை குழந்தையின் பக்கம் நெருங்க விடாதே.  என்னைக் கேட்டால் நீ கூட அந்தக் குழந்தையிடமிருந்து விலகியே இரு.  இந்தப்பொன்னுக்கு வீங்கி குழந்தை பிறக்க வைக்கும் விந்துகளை அழித்துவிடும்.  பின்னர் குடும்பக்கட்டுப்பாடே தேவையில்லை.  என்ன செய்தாலும் மீண்டும் சரி செய்ய இயலாது.  ஆகவே உன் சந்ததி வளரவேண்டுமானால் கவனமாக இரு!" என்றல்லவோ சொன்னார்.  ஆனால் அந்தப் பிசாசு அவனை அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு இரு நாட்கள் விடவே இல்லையே!

சாந்தியிடம் சொன்னதுக்குக் கூட, "அதான் நூற்றில் ஒருவருக்கு ஒண்ணும் நேராது என்றிருக்கிறார்.  நல்லதையே நினையுங்கள்.  ஒண்ணும் ஆகாது."  என்று சொல்லி விட்டாளே!  இப்போது நினைத்துப் பார்த்தால் அந்தப் பிசாசு திட்டமிட்டே இதைச் செய்திருக்கிறது.  அதன் பின்னர் பெரிய பையனையும் கொன்றிருக்கிறது.  ரவிக்கு எல்லாமும் புரிந்துவிட்டது.  ஆனால்??? ஆனால்??? மருத்துவரின் பரிசோதனை குறித்த அறிக்கை நல்லவிதமாக வந்துவிட்டால்?? இரவு முழுதும் கழிவதற்குள் ரவி தவித்துப் போனான். இரவோ நீண்டு கொண்டு போவதாகத் தெரிந்தது.  காலை எப்போது வரும் எனக் காத்திருந்து அவசரம், அவசரமாக மருத்துவருக்குத் தொலைபேசித் தெரிவித்துவிட்டுக் கிளம்பினான்.  காலை உணவு கூட எடுத்துக்கொள்ள மனம் வரவில்லை.  இது பற்றி  நிச்சயமாக ஏதேனும் தெரிந்தால் தான் அவனால் தண்ணீரே குடிக்க முடியும் போல் இருந்தது.


மருத்துவர் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.  எதுவுமே பேசாமல் ரவியிடம் அறிக்கையைக் கொடுத்தார்.  அதைப் படித்த ரவி திகைத்துப் போனான்.  He is sterilised! அது தான் அங்கு கண்டது.  மருத்துவரைக் கெஞ்சுவது போல் பார்த்தான் ரவி.  "நான் எதுவும் செய்யவோ, சொல்லவோ முடியாத நிலையில் இருக்கிறேன். ரவி.  உன் நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும்.  ஆனால் இது மிக மோசமாக உன்னைத் தாக்கி இருக்கிறது. இனி உன்னால் சாந்திக்குக் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்க முடியாது.  சாந்தியிடம் இதை நானே பக்குவமாக எடுத்துச் சொல்கிறேன்."  என்றார்.  பேசக் கூட முடியாமல் தலையை ஆட்டினான் ரவி.  அன்று அலுவலகம் செல்லக் கூட மனமில்லாமல் வீடு வந்து சேர்ந்தான்.  வீட்டில் தன் அறைக்குப்போய்க் கதவைச் சாத்திக் கொண்டு வாய் விட்டு அழுதான்.  கடவுளே, என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? என்றுபுலம்பினான்.  கதவு தட்டப்பட்டது.  கதவைத் திறந்தான் சாந்தி தான்.

அவள் முகமும் வெளுத்துக் களை இழந்து போயிருந்தது.  அவன் முகத்தைப் பார்த்தாள்.  எதுவும் பேசவே இல்லை.  அவனைத் தடவிக் கொடுத்தாள்.  அவள் மடியில் தலை வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான் ரவி. எதுவுமே பேசாமல் இருவரும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.  அப்போது அந்தக் குழந்தை அழும் சப்தம் கேட்க சாந்தி எழுந்தாள்.  அவளைப் போகவிடாமல் பிடித்து அமர்த்தினான் ரவி.  "போகாதே, சாந்தி! போகாதே.  இப்போது உன் அருகாமை எனக்கு மிகவும் தேவை.  அந்தப் பிசாசிடம் போனால் நீ என் சாந்தி மாதிரித் தெரியவில்லை. யாரோ வேற்று மனுஷியாகத் தெரிகிறாய்.  உன்னிடம் பேசினாலோ நீ என்னிடம் இப்போது காட்டும் இந்தப் பாசத்தையும் அன்பையும் எங்கோ கொண்டு ஒளித்து விடுகிறாய்.  அதைத் தூக்காதே.  அது வேண்டாம் நமக்கு!  நம் குடும்பத்தின் சாபம் அது!  நம் ஒவ்வொரு குழந்தையையும் அது தான் கொல்கிறது.  இனி இருக்கும் சுஜாவையாவது பத்திரமாய்ப் பாதுகாப்போம்."

"அரசு வேண்டும்; இருக்கும் என நினைத்தேன்.  எல்லாம் மொத்தமாய்ப் போய்விட்டன.  இப்போது இந்த ஆலாவது இருக்கட்டும் சாந்தி.  விழுது விட்டுப் படர்ந்து நம் வம்சத்தை ஒளிர வைக்கும்.  தயவு செய்! போகாதே, சாந்தி, போகாதே!" என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் ரவி.  குழந்தை வீறிட்டு அழுதது.  அது நடந்து வரும் சப்தமும் கேட்டது.  இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.  யாரோ அடித்தது போல் அழுது கொண்டிருந்த குழந்தை சாந்தியைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டது.  அதற்கு மேல் சாந்தியால் தாங்க முடியவில்லை.  குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டு கொஞ்சினாள்.  "என் செல்லம், அம்மாவைக் காணோம்னு அழுதியா!" என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள்.  சுஜாவும் அப்போது அங்கே வந்தாள்.  "அம்மா, பசிக்குது!" என்றவள், ரவியை அப்போது தான் பார்த்தவளாக, "ஹை, அப்பா!" என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.  சுஜாவை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்ட ரவி, அவள் தலையில், கண்களில், முகத்தில், உடலில் என முத்தமிட்டு விட்டு மீண்டும் அணைத்துக் கொண்டான்.

அப்போது ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்த ரவிக்கு, அந்தக் குழந்தை தன்னையும் சுஜாவையும் வெறுப்போடு பார்ப்பது புலப்பட்டது.  "சாந்தி, சாந்தி, நான் சொல்லும்போது நம்பவில்லை, இல்லையா?  இதோ, பார்! இது என்னையும், சுஜாவையும் எப்படிப் பார்க்கிறது பார்!  எங்கள் இருவரையும் உன்னிடமிருந்து பிரிக்கவே இது திட்டம் போடுகிறது." என்று பற்களைக் கடித்தான்.  அவனைக் கோபமாகப் பார்த்த சாந்தி, "இந்தப் பச்சைக் குழந்தையிடம் இவ்வளவு வன்மமா?  அதுக்குத் தான் யார் இருக்காங்க? தகப்பன் பெயரே தெரியாது.  தாயாரோ பெற்றுப்போட்டுவிட்டுக் கடமை முடிஞ்சதுனு போயிட்டா.  இங்கே நம்மிடம், நம் தயவில் இருக்கிறது.  இதால் என்ன செய்ய முடியும்?  நீங்க சொல்லும் பொய்யை எல்லாம் நம்பும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை." என்றாள்.

"மருத்துவர் சொன்னதைக் கேட்டாய் தானே!  இது என்னை அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டதில் தானே எனக்கும் பொன்னுக்கு வீங்கி வந்து இப்போது இந்த மாதிரியான துர்ப்பாக்கியசாலி ஆயிருக்கேன்.  அதை நினைச்சுப் பார். அப்போதாவது உனக்கு உண்மை புரியும்." என்றான்.  சாந்தி தலையை ஆட்டினாள்.  "அது ஏதோ தற்செயல்.  தற்செயலாக நடந்ததை எல்லாம் விபரீத அர்த்தத்தில் புரிந்து கொண்டால் எப்படி?" என்று கோபமாய்க் கேட்டாள்.  ரவி சாந்தியின் கையிலிருக்கும் குழந்தையைப் பிடுங்கிக் கீழே இறக்க முயற்சித்தான்.  அப்போது அது அவனைப் பார்த்த பார்வை.   ரவி அதிர்ந்தே போனான்.

அவனையும், சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தது.  அது மனதில் சுஜாவுக்குச் சீக்கிரம் முடிவு கட்டணும் என நினைப்பது ரவிக்குப் புரிந்தது.  ரவி புரிந்து கொண்டான் என்பதை அதுவும் புரிந்து கொண்டது.  அவனைப் பார்த்த அந்தப் பார்வை அது சட்டென மறுபக்கம் திரும்பியதும் மின்வெட்டுப் போல் மாறி மீண்டும் அந்த அப்பாவித் தனமான குழந்தைப்பார்வைக்கு மாறியது.  ரவி சுஜாவை அணைத்துக் கொண்டு அப்படியே படுத்தான். 

12 comments:

  1. இதை விட கொடூரம் ஏதுமில்லை...

    ReplyDelete
  2. ரொம்ப பயமுறுத்துது அந்த குழந்தை!

    ReplyDelete
  3. இத்தனை பதிவுகள் படித்தும் ஒரு குழந்தை ரவி நினைப்பது போல் இருக்க முடியுமா என்றே தோன்றுகிறது குழந்தைகளைக் கொல்லும் சக்தி இருக்கும் குழந்தை அது என்று ரவி அதன் பார்வையை ( (பிரமையோ)வைத்தே முடிவு செய்கிறான் என்பதும் நெருடுகிறது. குழந்தை பற்றிய கூடுதல் தகவல்கள் இல்லாமல் இருக்கிறது பார்ப்போம். எப்படி முடிக்கிறீர்கள் என்று . கதையை முழுதும் எழுதி பகுதி பகுதியாகப் பதிவிடுகிறீர்களா இல்லை அவ்வப்போது எழுதுகிறீர்களா

    ReplyDelete
  4. குழந்தை சுஜாவை வேறு எங்காவது வளர்க்கலாமே! என்னவோ போங்க... ஒவ்வொருத்தரா கொல்றீங்க!

    ReplyDelete
  5. டிடி, கதை படிக்கும்போது நான் அழுதுட்டேன். :(

    ReplyDelete
  6. ஆமாம் சுரேஷ்,

    ReplyDelete
  7. வாங்க ஜிஎம்பி சார், மூலக்கதையில் என்ன படிச்சேனோ அதைத் தான் நினைவில் வைத்து இங்கே தருகிறேன். ஏற்கெனவே கதைச் சுருக்கம் கொடுத்திருக்கேன். பலர் படிச்சிருக்காங்க. மற்றபடி எனக்கு இதில் நெருடுதல் ஏதும் இல்லை. குழந்தை குறித்த கூடுதல் தகவல்களே அது அமாநுஷ்யக் குழந்தை என்பதே. மூலத்தோடு நிகழ்வுகளில் வேண்டுமானால் மாறுதல் இருக்கலாம். மற்றபடி தமிழில் கொஞ்சம் விரிவாக்கம் செய்ததோடு என் வேலை சரி. அதுவும் அவ்வப்போது தான்.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், அலுப்பு வந்துடுச்சா? எனக்கும் இதைப் படிச்சதும் எத்தனையோ கேள்விகள்! ஆனால் பாருங்க யாரோ கொடுத்த புத்தகம். பையரோட நண்பர் கொடுத்தது. அது எப்போ எழுதினதுனு சொல்ல முடியலை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்னு நினைக்கிறேன். கதைக்களம் இங்கிலாந்து. ஆசிரியர் யாருனு எல்லாம் நினைவில் இல்லை. பையரிடமே இரண்டு, மூணு தரம் கேட்டுட்டேன். அவருக்கு இப்படி ஒரு கதை படிச்ச நினைப்பே இல்லை. ஹிஹிஹி

    அப்போ அவர் பள்ளி மாணவர்! அதனால் இத்தனை வருஷங்களில் மறந்திருப்பார் போல! வேறே படிச்சவங்க யாரானும் இதைப்படிச்சுட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நல்லா இருக்கும். :))))

    ReplyDelete
  9. why this கொலைவெறி? எப்போது அடங்கும் இந்தக் கொலைவெறி?

    ReplyDelete
  10. இன்னும் எத்தனை கொலைகள்.....

    இன்னும் எத்தனை பகுதிகள் என்று சொல்லிவிடுங்களேன்!

    ReplyDelete
  11. வாங்க ரஞ்சனி, முடிஞ்சுடும். :)

    ReplyDelete
  12. அதிகமில்லை வெங்கட், இன்னும் ஒண்ணுதான் வரும்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete