எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 23, 2014

முக்கியமான செய்தி ஒண்ணு சொல்றேன்! :)

birthday song

https://www.youtube.com/watch?v=EKZvq0dUk50&feature=youtube_gdata_player

லிங்க் நல்லாவே வேலை செய்யுது.  இருந்தாலும் கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன்.  இன்னிக்கு என்னோட பிறந்த நாளை இணைய உலகே கொண்டாடுதா, கூகிள் காலங்கார்த்தாலே கணினியைத் திறந்ததுமே கேக்கோடும், மற்றப் பரிசுகளோடும் வந்துடுச்சு.  அதுக்கப்புறமா முகநூல் வந்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போச்சு.  அதுக்கப்புறமா முகநூலில் எல்லா நண்பர்களும் வாழ்த்துச் சொல்லி இருக்காங்க.  அதுக்கு பதில் சொல்லிட்டு வரேன்.  குழுமத்திலும் நண்பர்கள் வாழ்த்து.

அதிலே பாருங்க நம்ம பார்வதி ராமச்சந்திரன் அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க.  மேலே உள்ள யூ ட்யூப் சுட்டி அவங்க கொடுத்தது தான்.  அதிலே வருது பாருங்க பிறந்த நாள் பாட்டு.  இன்னிக்கு வரை கேட்டதில்லை.  உங்க வீட்டுக் குழந்தைகளுக்கும் அனுப்பலாம் என்பதால் அந்தச் சுட்டியை இங்கே பகிர்ந்திருக்கேன்.  போய்ப் பாருங்க.  ரொம்ப நல்லா இருக்கு.  நான் ரசிச்சேன்.

இதைத் தவிர சுகி சிவத்தோட கீதைச் சொற்பொழிவும், "அன்பே, சங்கீதா" என்ற பாடல் காட்சியும் அனுப்பி இருந்தாங்க.  அன்பே சங்கீதானு பாட்டு இருக்குன்னே இன்னிக்குத் தான் தெரியும். :))))  நானும் சினிமா அறிவை வளர்த்துக்கணும்னு தான் பார்க்கிறேன்.  அது என்னமோ வளரவே மாட்டேங்குது. இனிமே எங்கே! வரேன், இன்னிக்கு இதிலேயும் மின் வெட்டிலேயும் பொழுது போயிடுச்சு. 

30 comments:

  1. நான் பிறந்தநாள் பாடல்கள் என்று மூன்று பாடல்கள் கணினியில் வைத்திருக்கிறேன். ஒன்று இந்த ஹிந்திப் பாடல். நான் வைத்திருப்பது மொகமது ரஃபி பாடிய ஒரிஜினல் பாடல்! இரண்டாவது நான் வாழவைப்பேன் படத்தில் வரும் 'என்னோடு பாடுங்கள்" ஐந்தில் கடைசி வரிகள் "விஷ் யு மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே" என்று எஸ் பி பி மறுபடி மறுபடி பாடுவார். அந்தப் பாடல். மூன்றாவது டி எம் எஸ் பாடிய 'பிறந்தநாள் இன்று பிறந்தநாள்... நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்' பாடல் (இந்தப் பாடலை சிலோன் ரேடியோவில் முன்பு தினமும் கேட்டிருக்கலாம்! இவற்றைப் பின்னணியில் ஒலிக்க விட்டு வாழ்த்து கூறுவேன்!

    சொல்ல மறந்துட்டேனே... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=A1urkXQpolc

    ReplyDelete
  3. தங்களுக்கு, எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், முகநூலில் சொல்லிட்டீங்களே, இந்தப் பாட்டு இன்னிக்குத் தான் கேட்கிறேன். மொகமது ரஃபி பாடினது நீங்க அனுப்பின லிங்கில் கேட்டேன். அதையும் கேட்டதில்லை. மற்றபடி எஸ்பிபி பாடினதும், டிஎம் எஸ் பாடினதும் கேட்டிருக்கேன். :))) சிலோன்லே தான் தினம் காலை வருமே.

    ReplyDelete
  5. ஹை!... இங்கயும் வாழ்த்துச் சொல்லலாம்னு வந்தா, குழுமச் செய்தியை இங்கே பதிவு செய்திருப்பதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிருச்சு!!!....ஸ்ரீராம் ஜி சொல்லியிருக்கற பாட்டுத்தான் ஒரிஜினல்.. நான் போட்டது குழந்தைங்களுக்கான அனிமேஷன் பாட்டு!:)))!!!!...

    வாழ்க பல்லாண்டு கீதாம்மா..நலமோடும் வளமோடும்!

    ReplyDelete
  6. என்னன்பு கீதா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஸாம்பு சாரோடும், ஆரோக்கியத்தோடும்,தமிழ் பாதுகாப்போடும் நீண்ட நாள் வாழ்ணும்.

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. மீண்டும் இங்கே பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  9. எப்பொழுதுமே உங்கள் பிர்மாண்ட பல்வேறுபட்ட வரிசைப் பதிவுகளின் பின்னணியில் தான் நீங்கள் எனக்குத் தெரிவீர்கள்.

    உங்கள் உழைப்பும் எழுத்து வேகமும் விஷய ஞானமும் மனசாட்சித் துணிவும் எப்பொழுதுமே எனக்கு பிரமிப்பூட்டுவை.

    அன்பான ஆசிகள், கீதாம்மா...

    ReplyDelete
  10. தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    [ முன்னாடியே சொல்லியிருந்தால் பால் பாயஸம் சாப்பிட நானும் அங்கு
    வந்திருப்பேனே ;)

    ஒருவேளை அதனால் தான் சொல்லலையா! OK OK No problem ]

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  12. நீங்க அசத்துங்க அம்மா... வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete

  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாங்க ஶ்ரீராம், எல்லாமும் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
  15. தமிழ் இளங்கோ ஐயா, நன்றி.

    ReplyDelete
  16. நன்றி பார்வதி! கொஞ்சம் ஓவராத் தெரிஞ்சாலும் கலக்கிட்டீங்க! :))))

    ReplyDelete
  17. நன்றி வல்லி.

    ReplyDelete
  18. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  19. நன்றி வெங்கட் மீண்டும் வந்து வாழ்த்துச் சொன்னதுக்கு.

    ReplyDelete
  20. ஜீவி சார், ஆசிகளுக்கு மிக்க நன்றி. :)

    ReplyDelete
  21. வைகோ சார், பிறந்த நாள் கொண்டாட்டமே இணையத்துக்கு வந்தப்புறமாத் தான். அதனாலே நோ பால் பாயசம். கொண்டாடிப் பழக்கமே இல்லை. :)))

    ReplyDelete
  22. நன்றி ராஜலக்ஷ்மி

    ReplyDelete
  23. நன்றி டிடி.

    ReplyDelete
  24. நன்றி ஜிஎம்பி சார்.

    ReplyDelete
  25. மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

    ReplyDelete
  26. பால் பாயசம் கூடக் கிடையாதா? வொய்யுன்னேன்..

    ReplyDelete
  27. வாங்க அப்பாதுரை, திடீர்னு காணாமப்போயிடறீங்க! மெயில் கொடுத்தாலும் பதில் வரதில்லை! :( நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  28. பால் பாயசம்??

    ஹிஹிஹி, அதெல்ல்லாம் வழக்கமே வைச்சுக்கலை. குழந்தைங்க இருந்தப்போ அவங்க பிறந்த நாளைக் கொண்டாடுவோம். எங்க கல்யாண நாளைக் கூட இப்போத் தான் இணையம் மூலமா எல்லோருக்கும் தெரிய வந்தது. நாங்க அப்படி எல்லாம் கொண்டாடியது இல்லை. சில சமயம் கல்யாண நாளுக்கு மட்டும் குழந்தைங்க கேட்பாங்கனு பாயசம் வைச்சிருக்கேன். சேமியா பாயசம் தான். மத்தபடி ஸ்பெஷலா எதுவும் கிடையாது எப்போவுமே! :)))) அன்னிக்குனு கோயிலுக்குக் கூடப் போக முடியாது. :) வேறே வேலை ஏதாவது வரும்.

    ReplyDelete
  29. எங்கம்மா எங்க பிறந்த நாளன்னிக்கு ஒரு பாயசம் செய்வாங்க. பிரமாதம் ஒண்ணுமில்லே. பால் சாதத்தை நல்லா குழையவிட்டு பாயசம். அவ்வளவு தான் எங்கம்மாவால முடிஞ்சுது.. ஆனா அது ஒரு மரபாட்டம் அமைஞ்சு போனது இப்போ தான் புரியுது. செயலை விட எண்ணம் புனிதமானது இல்லையா?

    ப்லாக் எழுதணும். உங்க இமெயிலை நேத்து தான் கவனிச்சேன். மன்னிக்கணும்.

    ReplyDelete
  30. வாங்க அப்பாதுரை, மன்னிப்பெல்லாம் எதுக்கு?? காணோமேனு கொஞ்சம் கவலை! அதான் கேட்டேன். :))))

    ReplyDelete