எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 20, 2015

பயணங்கள் முடிவதில்லை! 15

இங்கே



ராமேஸ்வரப் பயணம் குறித்துக் கடைசியா மேலுள்ள சுட்டியில் படிக்கலாம். ஆதி ஜகந்நாதரை தரிசித்துப் பாயசம் உண்ட பின்னர் அறைக்குத் திரும்பி வந்தோம். சற்று ஓய்வு எடுத்ததும் பதினோரு மணி அளவில் சாப்பாடு ஏற்பாடு பண்ணி இருந்த வீட்டிற்கு அனைவரும் வண்டியிலேயே போனோம். எல்லோருமே அங்கே சாப்பிட்டுவிட்டு அங்கிருந்தே கிளம்புவதாக ஏற்பாடு.  சாப்பிடப் போன வீடு கிட்டத்தட்ட ஒரு குடிசை. பழைய காலத்து வீடு. மிகவும் ஏழைகள் போல. காரட் கறி, சௌசௌ கூட்டு, சாம்பார், ரசம், மோர், சாதம், ஊறுகாய் இதுக்குத் தொண்ணூறு ரூபாய் வாங்கிட்டாங்க. அவங்க நிலைமையைப் பார்த்துட்டு நாங்களும் பேரம் பேசலை.  திருப்புல்லாணிக்காரரே ஒருத்தர் குழுமத்தில் இருக்கார்னு தமிழ்த் தேனீ அண்ணாவும், வா.தி.யும் சொன்னார்கள். எனக்கு நினைவிலும் இல்லை; அவரைப் பழக்கமும் இல்லை என்பதால் தொடர்பே கொள்ளவில்லை.

சாப்பிடப் போன வீட்டில்  சாப்பிட ரேழியில் தான் அமர வைத்தார்கள். சாப்பாடு போட்டது ஶ்ரீவைணவர்கள் என்பதாலோ என்னமோ தெரியலை. கூடத்துக்கு அழைத்து அங்கே வைத்துச் சாப்பாடு போடவில்லை.  சுவரில் சிலந்திக் கூடுகள் பெரிது, பெரிதாகக் காணப்பட்டன.  எப்போது அவை மேலே விழுமோனு பயத்திலேயே சாப்பிட்டு முடித்தேன். எனக்கு மட்டும் ஸ்டூல், ப்ளாஸ்டிக் நாற்காலி போட்டாங்க. எங்க மாட்டுப் பொண்ணுக்கு அருகே ஒரு பல்லி வந்துவிட அவளுக்குச் சாப்பிடவே பயம். பல்லியைப் பார்த்துக்கொண்டே கொரித்தாள். எப்போவும்  சப்பாத்தியாகச் சாப்பிடும் பையருக்கு இந்தச் சாப்பாடு ருசிக்கவில்லை. சாப்பாடு முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி நேரே மதுரை நோக்கிப் போனோம்.

பையருக்கு மீனாக்ஷியைப் பார்த்தே ஆகணும்னு ஆசை. ஆகையால் மதுரை வழியாகச் சென்றோம்.  இல்லைனா ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு மதுரை போகாமலே செல்ல முடியும். மதுரைக்கு இரண்டரை மணிக்கே போயிட்டோம். அங்கே ஒரே கூட்டம். நாலு மணிக்குத் தான் உள்ளே விடுவாங்கனு சொன்னாங்க. அதுக்கு பாதுகாப்பு சோதனைகளுக்கே பெரிய பெரிய வரிசைகளில் மக்கள் நாலு வாசலிலும் நின்று கொண்டிருந்தனர்.  இந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருக்க முடியாதுனு நாங்க ரெண்டு பேரும் மட்டும் வண்டிக்கே திரும்பினோம். அங்கே கோபு ஐயங்கார் கடைக்குப் போனதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.  படிச்சிருப்பீங்க.  அது இங்கே சீக்கிரமா முடிச்சுட்டேனோ? இ.கொ.வைத் தான் கேட்கணும். :)

அடுத்து விருத்தாசலம், ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம், திருவெண்காடு, பரவாக்கரை, கருவிலி, நாச்சியார் கோயில், திருக்கருகாவூர் ஆகிய ஊர்களுக்கு டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சென்றது குறித்து விரைவில் ஆரம்பிக்கிறேன்.

இ.கொ.ரெடியா?

இப்போத் தான் "இஷ்க்" படம் பார்த்துட்டே இதை எழுதி முடிச்சேன். படம் ஏற்கெனவே அரைகுறையாப் பார்த்திருக்கேன். இன்னிக்கும் அரைகுறை தான்! படம் ஆரம்பிக்கிறச்சே பார்க்கலை. :) ஆனால் தமிழிலே கூட இதே மாதிரிப் படம் ஒண்ணு வந்திருக்கு. என்னனு மண்டையைப் போட்டு உடைச்சுக்கறேன். நினைவில் வரலை.  பார்வதி மன்னி ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ, ஶ்ரீராம், உதவிக்கு வாங்க ரெண்டு பேரும். சின்ன க்ளூ, இந்தப் படம் 2012 ஆம் வருஷம் வந்த இஷ்க் இல்லை.  1997 ஆம் வருஷம் வந்தது. தமிழில் இதே மாதிரி வந்த படத்தோட பெயர் என்ன?

19 comments:

  1. ஒரு சந்தேகம். அப்றம் வயிறார எங்கே சாப்ட்டீங்க? ரொம்ப கவலியா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, "இ", சார், அதான் மதுரையிலே கோபு ஐயங்கார் கடையிலே வெள்ளையப்பம், பஜ்ஜி,காஃபினு சாப்பிட்டோமே. ஒரு வெள்ளையப்பம் எம்புட்டுப் பெரிசு தெரியுமா? சாத்துக்குடி அளவுக்குப் பெரிசு! :)

      Delete
  2. வணக்கம்
    தங்களின் தலயாத்திரை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே. நேரம் அமைகையில் உங்கள் பதிவுக்கும் வருகிறேன். பொறுத்துக் கொள்ளவும்.

      Delete
  3. பயணம் சுவாரசியமா போகுது. சாப்பாட்டு நேரம் பல்லி யும் சிலந்தியும் பாத்தா எப்படி சாப்பாடு இறங்கும்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்னு பேரு! ஆனால் ப்ரைஃபைல்லே பூவே இருக்கு! :) முதல் வருகை? சாப்பாடு இறங்கத் தான் இல்லை. வீடு சுத்தம் செய்து பல காலம் ஆகி இருக்கும் போல! என்ன செய்ய முடியும்! அங்கே சமைச்ச மாமி எங்களை விடவும் வயசானவங்க. வயிற்றுப் பிழைப்புக்கு இப்படி யாரானும் வந்தால் தான் அவங்களுக்குக் கட்டுப்படி ஆகும்! :(

      Delete
  4. தவணை முறையில் தலயாத்திரைக் கதை.

    தொடருங்கள்.

    இஷ்க் நான் பார்த்ததில்லை. கதை என்னவென்று தெரிந்தால் தமிழில் இருக்கா என்று சொல்லலாம். பழைய படங்கள்னா கொஞ்சம் சொல்வேன். புதுசுன்னா நான் அம்பேல்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, எப்போவும் கொஞ்சம் எழுதி வைச்சுப்பேன். இம்முறை என்னமோ முடியலை! கணினியில் உட்காருவதே பெரிய விஷயமாப் போச்சு இப்போல்லாம்! அடுத்தடுத்து விருந்தினர்கள். நாளைக்கு நாத்தனார் பெண் சென்னையிலிருந்து குடும்பத்தோடு வரா! :) இன்னும் சிலர் வரேன்னு சொல்லி இருக்காங்க. :))))

      Delete
    2. பழைய படம் தான் ஶ்ரீராம். ஒரு பணக்காரப் பையருக்கு ஏழைப் பையர் சிநேகிதர். என்றாலும் இருவரும் ஒன்றாகவே வளர்கின்றனர். ஒரு கட்டத்தில் பணக்காரப் பையரின் அப்பாவுக்கு இந்த சிநேகிதம் பிடிக்கவில்லை. தன் மகனுக்கு தன் தொழில் நண்பரின் மகளை மணமுடிக்க நினைக்க, பணக்காரப் பையரோ காதலிப்பது ஏழைப் பெண்ணை. அந்த ஏழைப்பெண் வழக்கம் போல் நண்பரின் மகளுக்கு சிநேகிதி. நண்பரின் மகள் காதலிப்பது ஏழைப்பையரை. பணக்கார அப்பாவும், அவர் நண்பரும் திட்டம் போட்டு நட்பைப் பிரிக்கிறார்கள். கடைசியில் எப்படிச் சேர்கிறார்கள் என்பதே கதைச் சுருக்கம். :))))

      இன்னொரு இஷ்க் வந்திருக்கு. அது சமீபத்தில் 2012 ஆம் வருஷம் வந்தது. தெலுங்குப் படம் ஹிந்தியில் டப்பிங்.

      Delete
  5. பார்த்த ஸ்தலங்கள் பெற்ற பாடல்கள், அங்கு வாழ்ந்த அடியார் தகவல் போன்றவற்றை பொங்கலில் முந்திரி பருப்பு போல தூவி விடுங்களேன்...

    தொடருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. பாடல்களைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் பாடல் பெற்ற ஸ்தலம் என்றோ திவ்ய தேசங்களில் ஒன்று என்றோ சொல்கிறேன். நீங்கள் கேட்டிருப்பது போல் அடியார் தகவலும் கொடுப்பதில்லை. அதையும் கொடுக்க முயல்கிறேன். ஆனால் இதெல்லாம் ஆன்மிகப் பயணம் பதிவில் தான் சரியா இருக்கும். http://aanmiga-payanam.blogspot.in/2015/04/blog-post_6.html இங்கே சரியா வருமானு தெரியலை! :) அங்கே ரங்கநாதர் குறித்து எழுதி வருவதால் நடுவில் தடங்கல் வேண்டாம்னு ஸ்தல யாத்திரைக் கட்டுரைகளை இங்கே பகிரும்படி ஆயிற்று. :)

      Delete
  6. ஶ்ரீராம் சார்... உங்களின் பதிலை காண ஆவலுடன்...!

    ReplyDelete
    Replies
    1. அவர் தான் தெரியாதுனு சொல்லிட்டாரே டிடி! கதைச் சுருக்கம் கொடுத்திருக்கேன். பார்ப்போம்! :)

      Delete
  7. ஒரு முறை நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டார். ஏந்தான் போனோம் என்றாகி விட்டது. சாப்பிடக் கூப்பிட்டு அவர்களின் தாய் எங்களை உட்கார வைத்த இடம் நாங்கள் எங்களைத் தீண்டப் படாதவர்கள் மாதிரி உணர்ந்தோம் ஏன் சாப்பாடு போடவேண்டும் ஏன் அவமானப் படுத்த வேண்டும் இதுவும் அல்லாமல் எங்களுக்குச் சாப்பாடு போட்ட விஷயத்தை நண்பர்கள் சிலரிடம் கூறி பெருமை அடித்துக்கொண்டது வேறு.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீவைணவர்கள் வைணவர் அல்லாதாருக்கு உணவு படைக்கையில் தனியாகத் தான் அமர்த்துவார்கள். இப்போதெல்லாம் மாறிக் கொண்டு வருகிறது என்றாலும் திருப்புல்லாணி கிராமம் ஆச்சே. மனிதர்களும் பழமைவாதிகள். அதனால் என்ன? அவர்கள் வழக்கம் அது! :)

      Delete
  8. பழைய வீடு, பல்லியைப் பார்த்தபடியே சாப்பாடு......

    வித்தியாசமான அனுபவம் தான்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மாமா தலைக்கு நேரே பெரிய சிலந்திக்கூடு! :)

      Delete
  9. இப்பத்தான் கேள்வியையே பார்த்தேன் :))!!.. இணையப் பிரச்னையால் நடுவில் சில பதிவுகள் விட்டுப் போச் :((!. பணக்காரப் பையன், ஏழைப் பெண் அப்படின்னு கதைச் சுருக்கம் பார்த்தா, கிட்டத்தட்ட இதே மாடல்ல தான் 'அண்ணாமலை' படம் வந்துது!...அதானா தெரியலை..அதுல சரத்பாபுவையும் ரஜினியையும் பிரிக்கத் தான் அத்தனை திட்டங்களும் போடுவார் பணக்கார சரத்தின் அப்பா!.. சரத்பாபு மணப்பதும் வசதி குறைவான பெண் பாத்திரமேற்கும் வைஷ்ணவியை!.. ம்ம்ம் சரியா ?))!.

    ReplyDelete
    Replies
    1. பார்வதி மன்னி! நான் "அண்ணாமலை" சீரியல் தான் கொஞ்ச நாட்கள் பார்த்துட்டு போரடிச்சதுனு விட்டுட்டேன். படம்???ம்ஹூம், சான்ஸே இல்லையே! ரஜினியும் சரத்பாபுவுமா? நண்பர்களாவா? தெரியலை! இப்போக் கொஞ்ச மாதங்கள் முன்னர் பாட்ஷானு ஒரு படம் பார்த்தேன். "படையப்பா"வெல்லாம் பார்க்கலை. துண்டு துண்டாகப் போடுவாங்க இல்லை, அதிலே பார்க்கிறது தான். ஜன்மம் சாபல்யம் ஆயிடுமானு தெரியலை! :)

      Delete