எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 25, 2015

சூடான கொண்டைக்கடலை வடை! சாப்பிட வாங்க! :)


ஊற வைத்த கொண்டைக்கடலை


ஹூஸ்டனில் பையர் எங்கேயோ கொண்டைக்கடலையில் வடை சாப்பிட்டிருக்கார். அதிலிருந்து அதைப் பத்தியே சொல்லிட்டு இருப்பார். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைனாலும் ஒரு தரமாவது பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சுப்பேன். அதுக்கு இன்னிக்கு வேளை வந்தது. போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்பிக்க, சரிதான், இனியும் இதைக் காபந்து பண்ண  வேண்டாம், மத்த சாமான்களுக்கும் வண்டு வர ஆரம்பிச்சுடும்னு கொண்டைக்கடலையை நன்கு புடைத்து சுத்தம் செய்து விட்டு நிறைய நீர் விட்டு அலசினேன். பத்து நிமிஷத்துக்கும் மேல் அலசி அதிலே தூசி, தும்பு, வண்டு இருக்க வாய்ப்பில்லைன்னதும் அதிலே தேவையான நீரை விட்டு ஊற வைச்சேன். நேத்திக்கே ஊற வைச்சுட்டேன். ஊற வைக்கையில் வடை பண்ணும் எண்ணமே இல்லை. முளைக்கட்டி எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சப்பாத்திக்குக் கூட்டு அல்லது சுண்டல் என்று பண்ணிக்கலாம்னு தான் எண்ணம்.

இன்னிக்குக் காலம்பர மீண்டும் கழுவி நீரை வடிக்கையில் வடை செய்தால் என்னனு ஒரு எண்ணம்!  அதோடு நேத்திலிருந்து மழை பெய்துட்டு இருக்கா! சூடாகச் சாப்பிட நல்லா இருக்குமேனு ஒரு ஆசை! உடனே ரங்க்ஸிடம் கேட்டேன். அவருக்கு உள்ளுக்குள்ளே தான் சோதனை எலியாகி விட்டது குறித்து பயம் வந்ததோ என்னமோ! தெரியலை! இரண்டே இரண்டு வடை தான் எடுத்துப்பேன், சம்மதம்னா பண்ணு, இல்லைனா வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கா வடை பண்ணியே தீரணும்னு. தூக்கமே வராது போல இருந்தது.  ஆகவே கொஞ்சமாகக் கொண்டைக்கடலையை எடுத்து வடைக்குனு தனியா வைச்சேன். மிச்சத்தை முளைக்கட்ட விட்டுட்டேன்.  இப்போக் கொஞ்ச நேரம் முன்னால் அதிலே உப்பு, காரம் சேர்த்து அரைத்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டுக் கருகப்பிலை, கொ.மல்லி சேர்த்து வெங்காயம் நறுக்கிப் போட்டு வடையாகத் தட்டி விட்டேன்.

செய்முறை:

ஊறிய கொண்டைக்கடலை ஒரு கிண்ணம்

மி.வத்தல், ப.மிளகாய் வகைக்கு இரண்டு

ஒரு சின்னத் துண்டு இஞ்சி

பெருங்காயம், உப்பு தேவைக்கு.

வெங்காயம் பெரிது ஒன்று

இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உதிர் உதிராகத் தான் வருது. கொஞ்சம் உளுந்து சேர்த்திருக்கலாமோனு நினைச்சேன். அப்போத் தான் சேர்ந்து வரும். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன்.

சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதையை எடுத்துவிட்டுப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டேன். இஞ்சியும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். அப்போது தான் வாசனையாக இருக்கும். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து கொண்டு வடையாகத் தட்டினேன். எல்லோரும் வேணும்ங்கற வடைகளை எடுத்துக்குங்க!                                     வடைக்கு அரைத்த மாவு.

இதில் எல்லாமும் கலந்திருக்கேன்.
எண்ணெயில் வேகும் வடைகள்
சுடச் சுட வடைகள் சாப்பிட ரெடி!

இன்னிக்கு வடைனு முடிவு பண்ணினதுமே படம் எடுக்கணும்னு நினைவா எடுத்துட்டோமாக்கும்!  அதுவும் சுடச் சுட!  என்னங்கறீங்க நம்மளை! :))))

29 comments:

 1. கவர்ந்திழுக்கும் வடைகள்! அரைக்கற லிஸ்ட்லயும் வெங்காயம் உண்டா? ஊறவைக்கும்போதே ரெண்டு டேபிள் ஸ்பூன் உளுந்தும் ஊற வைச்சு சேர்த்து அரைச்சுடலாம் இல்லை? படங்கள் ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து ஒரு கிண்ணம் ஊறிய கொ.கடலைக்குப் போதும். இந்தக் கணக்கில் வைச்சுக்குங்க. நான் நல்லா உருட்டி வைச்சுக் கடலைமாவு தொட்டுக் கொண்டு தட்டி எடுத்துட்டேன். இனிமேல் பண்ணினால் உளுந்து சேர்த்துப் பண்ணணும். வெங்காயம் அரைக்கும்போது நான் சேர்க்கலை. அப்புறம் தான் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். :)

   Delete
 2. ஆஹா, முதல் வடையை நான் சாப்பிடக் கொடுத்துவைக்காமல் நம் ஸ்ரீராம் தட்டிக்கொண்டு போய் விட்டாரே ! :)

  அருமையான ருசியான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வைகோ சார், வடை கிடைச்சது இல்லையா? :)

   Delete
  2. //போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்பிக்க,//

   ஒரே நேரத்தில் பல வண்டுகளுக்குத் தங்கள் திருக்கரங்களால், திருவரங்கத்தில் மோட்சம் கிடைத்துள்ளதே ! :) ஆச்சர்யம் தான்.

   Delete
  3. இங்கே என்னமோ எல்லா சாமான்களுக்கும் விரைவில் வண்டு வந்துடுது. சென்னையில் கொசுத் தொல்லை தான் ஜாஸ்தி. இந்த வண்டுகள் வந்து ஓட்டி விட்டால் பின்னர் வராது! :)

   Delete
  4. நான் இத்தனைக்கும் அதிகம் போனால் இந்தக் கொண்டைக்கடலை எல்லாம் நூறு கிராமிலிருந்து கால்கிலோவுக்குள் தான் வாங்குவேன். நிறைய வாங்கி வைச்சுக்கறதில்லை.

   Delete
 3. பாக்குறதுக்கு பிரமாதமா இருக்கு? டேஸ்ட் எப்டி இருக்குனு சொல்லலியே?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, டேஸ்ட் நல்லாவே இருந்தது. சூடாவும் சாப்பிட்டுப் பார்த்தேன். ஆறியதையும் சாப்பிட்டுப் பார்த்தேன். கரகர!

   Delete
 4. proof ரங்க்ஸ் எத்தனை வடை சாப்பிட்டார் என்பதில்?

  ReplyDelete
  Replies
  1. ரங்க்ஸ் 3 வடைகள் சாப்பிட்டார் அப்பாதுரை. இது ஃபலாஃபல் என்று கிடைக்குமே அதை முயற்சிக்க எண்ணிக் கடைசியில் நம்ம பாரம்பரிய வழக்கப்படி பண்ணிட்டென். ஃபலாஃபலும் முயன்று பார்க்கணும். :)

   Delete
  2. ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கணுமாமே! :) நமக்கு ஒத்து வராது! விட்டுட வேண்டியது தான். :)

   Delete
  3. ஃபலாஃபல் மாதிரி இருக்கேனு நினைச்சேன்.. அதானா? வடை இன்னும் டேஸ்டியா இருக்கும்னு நினைக்கிறேன் தட்டையா இருக்குறதாலே.
   முட்டை போடுவாங்களா தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு அது சுத்த சைவப் பொருள்.
   நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு லெபனான்காரர் அடிக்கடி கீரை வறுத்தரைத்த falafel செய்து கொண்டு வருவார். கீரையை ஏன்/எப்படி வறுப்பாங்கனு தெரியாது. பிட்டா உள்ளுக்குள்ள பச்சையாவும் மேலாக நல்ல மொறமொறப்பாகவும்.. காரமாவும் சுவையாவும் இருக்கும். எனக்காக ஒரு டசன் தனியா கட்டிக் கொடுத்துவிடுவார். மோர் சாதத்துக்கு நல்ல காம்பினேசன்.

   Delete
  4. யூ ட்யூபிலே ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கிறாங்க. அதான் சொன்னேன். எதுக்கும் எங்க பையரைக் கேட்கணும். முட்டை இருந்தால் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அதிலே அரைக்கும் கீரை பார்ஸ்லி கீரை. இங்கே இந்தியாவுக்கு ஏற்றாற்போல் பார்ஸ்லியோட கொத்துமல்லிக்கீரையும் சேர்த்து அரைக்கிறாங்க. ஒரு முறை செய்து பார்த்துடறேன். :) வடை நல்லா ருசியாவே இருந்தது.

   Delete
 5. வாவ்...! நீங்க எதிலும் கில்லாடி அம்மா...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி,இது கொஞ்சம் ஓவரா இருக்கோ? :)

   Delete
  2. ஆஹா, முட்டை இல்லாமலும் கண்டு பிடிச்சாச்சு! பூண்டு சேர்க்கச் சொல்றாங்க. அதுவும் வேணாம். நம்ம ருசிக்கு ஏத்தாப்போல் மாத்திக்க வேண்டியது தான். :)

   Delete
  3. முட்டை சேர்த்தா மொறமொறப்பா வறுபடும்.. அரைத்த மாவைக் கெட்டியாகவும் பிடிக்கும். அதுக்காக இருக்கலாம்.

   Delete
 6. இந்தக் கொண்டைக்கடலைக்குப்பதில் காபூல் எனப்படும் வெள்ளைக்கடலையில் செய்தால் ....? செய்து பார்க்க வேண்டும் உளுந்து தேவைப் படாது என்று நினைக்கிறேன் சற்று நன்றாகவே அரைத்தால் உண்ண சுவை குறையாது என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வெள்ளைக் கடலையிலும் செய்யலாம் ஐயா. உளுந்து தேவைப்படாவிட்டால் கூட மாவு ஏதானும் கலக்க வேண்டும் என்றே தெரிகிறது. அது மைதா மாவு அல்லது கடலைமாவு. மேலும் கடலையை வேக வைத்து அரைக்கின்றனர். இதைக் காலையில் இணையத் தேடலில் தெரிந்து கொண்டேன். பூண்டு சேர்க்கின்றனர். காரத்துக்கு எல்லாம் பொடி வகைகள் தான்.

   Delete
 7. வித்தியாசமான வடைதான்! மொறு மொறு வடை மிகவும் பிடித்த ஒன்று! செய்து பார்க்க வேண்டும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஊற வைச்சு அரைச்ச வடை நல்லாவே மொறுமொறுனு இருக்கும் சுரேஷ். ஆனால் நான் மேலே சொன்ன ஃபலாஃபல் ஊற வைச்சதை வேக வைச்சுச் செய்யச் சொல்றாங்க. அதோடு கொண்டைக்கடலையும், மொச்சையும் சரிபாதியாக் கலந்தும் செய்வாங்களாம். எகிப்தில் மொச்சையை மட்டும் தனியாக ஊறப்போட்டு வேக வைத்துச் செய்வாங்களாம். ஒரு முறை கொ.கடலையை வேக வைச்சுச் செய்து பார்க்கணும். :)

   Delete
 8. சூப்பர்!.. செஞ்சுட வேண்டியது தான்!.. கொஞ்ச நாள் முன்னாடி, பட்டாணியையும் இதே மாதிரி ஒருத்தர் வீட்டில் வடை செய்திருந்தாங்க... சாப்பிட்டுப் பார்த்தேன்.. இப்போ கொண்டைக்கடலையையும் செய்யலாம்னு தெரியுது!..அழகான தென்மதுரைல திருநாள் பாக்க வந்திருக்கேன்..மழை நேரத்துல செஞ்சு ருசிக்கறேன்!.

  ReplyDelete
  Replies
  1. கொ.க. மொச்சை, பட்டாணினு எல்லாத்திலேயும் செய்யலாம் போல! ஆனால் பட்டாணி வடை ஒண்ணும் புதுசு இல்லை. ரெயிலில் மற்றும் சில ஹோட்டல்களில் கடலைப்பருப்பில் மசால்வடை செய்யறதில்லை. பட்டாணிப் பருப்பிலே தான் செய்யறாங்க. எங்க குடியிருப்பு வளாகத்தின் கீழுள்ள வணிக வளாகத்தில் பட்டாணிப்பருப்பு அங்கேயே உள்ள ஹோட்டலுக்கு மூட்டையாக வாங்கறாங்க! :) நாம அதை மசால் வடைனு சாப்பிட்டுட்டு இருக்கோம். :)

   Delete
 9. நல்லாவே இருக்கு கொண்டக்கடலை வடை....

  இங்கே தான் வகை வகையா கொண்டக்கடலை கிடைக்குதே.... செஞ்சு பார்த்துடலாம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ரொம்ப தாமதமா வந்திருக்கீங்க! அதனால் வடை கிடைச்சிருக்காது. செய்து சாப்பிட்டுடுங்க! :)

   Delete
 10. அருமை, பார்சல் அனுப்பிடுங்க.

  ReplyDelete
 11. ஏற்கனவே இந்த பதிவு பார்த்து இருக்கேன்! :)

  ReplyDelete
  Replies
  1. அதான் நானும் நினைச்சேன். :)))))

   Delete