ஹாஹாஹா, இது என்ன வில்லி சிரிப்புனு பார்க்கிறீங்களா? கொஞ்ச நாட்களாகப் புதுசு புதுசா ஏதேனும் சமைக்கும் எண்ணம் வந்திருக்கா! நம்ம ரங்ஸுக்குத் தான் கஷ்டமா இருக்கு. பின்னே? சோதனை எலியே அவர் தானே! பயந்து நடுங்கிட்டு இருக்கார்னா பாருங்களேன்! அந்த பயம் இருக்கணுமில்ல! :)))))
இன்னிக்குப் பாருங்க, அன்னிக்கு ஊற வைச்சேனே அந்தக் கொ.கடலையை எப்படியேனும் செலவழிக்கும் எண்ணத்தோடு நேத்து ராத்திரி ஒரு கிண்ணம் ஊறி முளைகட்டிய கடலையை எடுத்துக் கழுவி மறுபடி நல்ல நீரில் ஊற வைத்தேன். அப்படியே ஒரு கரண்டி தயிர், அரை டீஸ்பூன் உப்பில் ஒரு கரண்டி மைதா மாவைக் கலந்து நன்கு ஸ்பூனால் அடித்துத் தனியாக வைத்தேன். இது சமீபத்தில் கண்டு பிடித்த ஒரு முறை.
தயிர், உப்புக்கலந்து கலக்கிய மைதாமாவுக்கலவை
(சாதாரணமாக பட்டுராவை மைதாவிலேயே தான் பண்ணுவோம். இங்கே பாருங்க. நான் முன்னர் செய்த பட்டூரா வோட குறிப்பு. ஆனால் இணையத்திலே ஒரு நாள் தற்செயலாக இந்தத் தகவல் கிடைத்தது. ஆகவே பாராட்டறவங்க யாரானாலும் அவங்களைத் தான் பாராட்டணும். என்னைப் பாராட்ட வேண்டாம்.)
இன்று காலை ஊறிய கொ.கடலையை குக்கரில் வேக வைத்து விட்டு கோதுமை மாவு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு தேவையான உப்புச் சேர்த்து வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் போட்டு ஐந்து நிமிடம் போலக் கலந்து கொண்டேன்.
கோதுமை மாவில் மைதாக் கலவையைச் சேர்த்திருக்கேன்.
பின்னர் அந்தக் கலந்த மாவில் முதல் நாள் கலந்து வைத்த மைதாமாவுக் கலவையைச் சேர்த்தேன். அது நேற்றே கலந்து விட்டதால் இன்று நன்கு பொங்கிக் கொண்டு மேலே குமிழியிட்டிருந்தது. அதை கோதுமை மாவில் போட்டுக் கலந்து கொண்டு தேவையான நீர் மட்டுமே விட்டுக் கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து கொண்டேன்.
பிசைந்து வைத்திருக்கும் மாவு.
சனாவைத் தயார் செய்தேன். சனா செய்முறையும் மேலுள்ள சுட்டியில் காணலாம். பின்னர் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு பூரிகளைப் போட்டு எடுத்தேன் பூரி நன்கு உப்பிக் கொண்டும் மிருதுவாகவும் அதே சமயம் மொறமொறப்புக் குறையாமலும் வந்தது. ஆனால் அந்தச் சனா தான் ரங்க்ஸுக்குப் பிடிக்காது. அவருக்குப் பூரி என்றால் உ.கி. தான் பண்ணணும். ஆகவே சோகமாகவே சாப்பிட்டார். நீங்கல்லாமும் முயற்சி பண்ணுங்க. உங்க வீடுகளில் கலவரம் ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை. :))))) பூரி நல்லாவே வந்தது.

எண்ணெயில் பொரியும் பூரி
பொரித்து வைத்திருக்கும் பூரிகள்
வணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தல்... செய்து பார்க்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். சனாவில் சைட் டிஷ் பிடிக்கும் என்பவர்கள் தாராளமாகப் பண்ணலாம். நம்ம வீட்டில் சனா என்றால் சுண்டல் தான். அல்லது பிட்லை, கூட்டு போன்றவற்றிற்குப் போடலாம். :)
Deleteமைதா மாசவை ஸ்பூனால் அடிச்சதைப் படிச்சதும் தள்ளியிருக்கிற நானே பயந்துட்டேன்...
ReplyDeleteஹிஹிஹி, நான் அடிக்கும்போது பயத்தில் கத்தியது நீங்கதானா? ரொம்பநாளாச்சா/வருஷம்? உங்க குரல் அடையாளம் தெரியலை! :P :P :P
Deleteதலைப்புக்காகவே பதிவு சூப்பர் ஹிட் ஆகும்.
ReplyDeleteஎனக்கும் சனா பிடிக்காது, பூரி பிடிக்கும்.
நீங்க வேறே ஶ்ரீராம், பதிவு சூப்பர் ஹிட் ஆகவா நாம எழுதறோம்! எல்லாம் கடமை! கடமை உணர்ச்சி! தமிழ்த்தாய்க்குச் செய்யும் சேவை! :))))
Deleteஅவங்களுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க வாதி நன்றி எவங்களுக்கு? உங்களுக்குப் பிடிச்சிருந்தால் தான் ஆச்சரியம்! :P :P :P :P :P
Deleteaaha நல்லாவே வந்திருக்கு. நல்ல முறை சொல்லிக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. கீதாமா.
ReplyDelete@ Durai ha ha.
ஆமாம், பூரி நல்லாவே வந்தது வல்லி. அப்பாதுரைக்கு வேலை என்ன? என்னை வம்பிழுக்கணும்! :)
Deleteஈஸ்ட் டுக்கு பதில் இந்த மைதாமாவு+தயிர்+உப்பு கலவையா?
ReplyDeleteபுதுசு புதுசா சமையல் முயற்சி பண்ணுகிற ஆர்வம் உள்ள உங்களை ரொம்பவும் பாராட்டணும்.
பாராட்டுக்கள்!
வாங்க ரஞ்சனி, நீண்ட நாட்கள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம். ஆமாம் ஈஸ்ட் எல்லாம் வேண்டாம். முதல்நாளே இப்படிக் கலந்து வைச்சுட்டா அது தானே புளிப்பு வந்துடும். எதிலும் இயற்கையான முறை இருக்கணுமில்ல! :))) அதான்!
Deleteசூப்பர்!.. முயற்சி பண்ணிட வேண்டியது தான்!..'முந்தின நாள் மைதா மாவு கலவை' நல்ல டிப்ஸ்!...
ReplyDeleteசெய்து பார்த்துட்டுச் சொல்லுங்க பார்வதி.
Deletesuper. seythu paarkiren..
ReplyDeleteமுயற்சி பண்ணுங்க.
Deleteஇன்றைக்கு செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...
ReplyDeleteடிடி, செய்தீங்களா? நல்லா இருந்ததா?
Deleteபூரி நன்றாகத்தானே வரவேண்டும் வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.
ReplyDeleteபூரி உப்பிக் கொண்டு வருவது மாவைப் பிசைவதில் இருக்கு ஜிஎம்பி ஐயா. ஆகவே கொஞ்சம் யோசனையாத் தான் இருந்தது. :)
Deleteசுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
ReplyDeleteஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
நன்றி ஐயா! உங்களுக்கும் உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
Deleteசன்னா பட்டூரா..... - இங்கே இது பிரபலம்! அதனால் வீட்டில் செய்வதே இல்லை :) எப்போதாவது வெளியே சாப்பிடுவதுண்டு!
ReplyDelete