விருப்பன் திருநாள் சுட்டி இங்கே!
ஒரு வழியா சாயந்திரமாக் கிளம்பிப் போய்ப் பார்த்துட்டு வந்தோம். செல்லில் முடிந்தவரை படங்கள் எடுத்தேன். மார்பில் நீலக்கல் ஆபரணம் அணிந்திருக்கிறார். தாயார் இருப்பதாக ஐதீகமாம். கிரீடம் சூட்டிக் கொண்டு நின்ற திருக்கோலம். நன்றாக நிதானமாகப் பார்த்தோம்.நிறைய மண்டகப்படி போயிருக்கார் நம்ம ரங்கு. ஆனாலும் இந்த கிரீடம் காரணமாகவோ என்னமோ தெரியலை, ஒல்லியாய் இளைச்சுப் போய்க் காட்சி அளித்தார். பார்த்தாலே பாவமா இருந்தது. சாயங்காலம் ஆறுமணிக்கு கற்பக விருக்ஷம் வாஹனம்னு நினைக்கிறேன். அலங்கரித்த பல்லக்கு வெளியே நிற்கிறது. நான் நினைத்தபடி கூட்டம் அதிகம் இல்லை. நல்ல சுவாமி தரிசனம் ஆனதோடு துளசி, தீர்த்தம், சடாரிப் பிரசாதங்களும் கிடைத்தன. அடுத்த சனிக்கிழமை தேர். பார்ப்போம் இந்தத் தேராவது பார்க்க முடியுமானு! தெரியலை!
தேரத்திரு நாளுக்குக்காலங்காரத்தாலே போயவிடுங்கோ.விருப்பன நாளைப்போயப பாரக்கிறேன.
ReplyDeleteம்ம்ம்ம், 18 ஆம் தேதி தேர்னு சொல்றாங்க. அன்னிக்கு அமாவாசை! பித்ரு தர்ப்பணம் முடியும் முன்னே போக முடியாது! பார்ப்போம், நமக்கு என்ன கொடுக்கணும்னு ரங்குவுக்குத் தெரியுமே! :)
Deleteதிருவிழா! கொண்டாடுங்கள்.
ReplyDeleteஅடேடே! அந்தத் திருமண மண்டபமா? ஆம். இதுபோல மண்டகப்படி நடத்தும் அளவுதான் இருக்கும் அந்த மண்டபம்.
இங்கே மாசாமாசம் திருவிழா தான்! :) அதிலும் தை மாசம் ஒரு தேர், மாசியிலே தெப்பம், பங்குனியிலே ஒரு தேர், சித்திரையிலே சித்திரைத் தேர்னு மார்கழி மாசத்திலே வைகுண்ட ஏகாதசியிலே இருந்து அமர்க்களப்படும். மண்டகப்படி நடத்தும் மண்டபங்கள் பெரிதாகவும் இருக்குமே! :)))) பணம் கட்டி அழைத்தால் ரங்கு நம்ம வீட்டுக்குக் கூட வருவார். இந்த வருஷம் சித்ரா பௌர்ணமிக்கு அழைக்கலாமோனு ஒரு எண்ணம். குடியிருப்பு வளாகத்திலே எல்லோரும் ஒத்துக்கணும். பக்கத்திலேயே ஒரு வீட்டில் மண்டகப்படிக்கு வரார். ரங்குவைக் கிட்டே நின்னு பார்க்கலாம். நேத்தியும் அப்படித் தான் பார்த்தோம்.
Deleteநேற்று கற்பக விருக்ஷம் மாமி.
ReplyDeleteஇங்கே வீதியில் ஒரு மட்டை... அதனால் புறப்பாடு இல்லை என்று கேள்விப்பட்டேன்.
ஆமாம், கற்பக விருக்ஷம் தான். யாரோ சேஷ வாஹனம்னு சொல்லிட்டிருந்தாங்க. ஆனால் அங்கே கற்பக விருக்ஷம் தான் வைச்சிருந்தது. :)))) புறப்பாடு இல்லையா? :( அப்புறமா எப்போ எப்படி ரங்கு உள்ளே வந்தார்?
Deleteதேரை பார்த்து விட்டு பதிவு செய்யுங்கள்... காத்திருக்கிறோம்...
ReplyDeleteபார்க்கலாம் டிடி, தேர் பார்க்க ரங்கு அழைக்கணுமே! :)
Deleteவிருப்பன் திருநாள்......
ReplyDeleteசித்திரைத் தேர் ஓரிரு முறை பார்த்ததுண்டு....
ம்ம்ம்ம்ம், இந்த வருஷமாவது பார்க்கணும்!
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete