எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 17, 2015

பொற்றாமரைக்குளத்தருகே அன்னை மீனாக்ஷி!

கோவிலுக்குப் போகும்போதும் நம்ம ரங்க்ஸ் மறுபடியும் அந்தக் கணக்காளரிடம் இப்போப் போனால் தரிசனம் கிடைக்குமா? குறுக்கு வழியில் போவதுனால் மேல கோபுர வாசல் வழி போனால் சரியானு எல்லாம் கேட்க, மறுபடியும் அவர் ஙே! எனக்கா ஒரே கோபம்.  தரதரனு அவரை இழுத்துட்டுப் போனேன். போகும்போதே எல்லா இடத்தையும் காட்டிட்டு, மேலகோபுரம் வழியாத் தெற்கு கோபுர வாசலுக்குப் போய்க் கீழே இறங்கும் இடத்தருகே இருந்த சீட்டு வாங்கும் இடத்தில் இருநூறு ரூபாய் செலுத்தி இருவருக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அம்மனுக்கு 50 ரூ சுவாமிக்கு 50 ரூ. சீட்டுக் கொடுக்கும்போதே அலுவலகத்தில் இப்போ சிறிது நேரத்துக்கெல்லாம் நடை சாத்திடுவாங்க. சீக்கிரமாய்ப் போங்கனு சொல்லித் தான் சீட்டே கொடுத்தாங்க. ஆகவே வேகமாய் நடையைக் கட்டினோம்.   விபூதிப் பிள்ளையார் பாவமாக உட்கார்ந்திருக்கக் கிளி மண்டபத்தில் கிளி இருப்பதாகவே தெரியலை. ஒரே அமைதி. ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் புதிதாகப் போட்டிருக்காங்க. அவற்றைத் தாண்டிக் கொண்டு போகிற போக்கிலேயே முக்குறுணிப் பிள்ளையாருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தோம்.

முன்னே எல்லாம் மயில் தோகையால் ஒரு தாத்தா விசிறிக் கொண்டு இருப்பார். இப்போ அவரைக் காணோம். அப்போவே வயசு ஆச்சு.  ஆனால் அந்தத் தொண்டை அதன் பின்னர் யாரும் தொடரலை போல. இதெல்லாம் கவனிக்க முடியாமல் அங்கிருந்த கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம்னு சொல்ல, பிரகாரத்தில் கொலு மண்டபம் செல்லும் வழியில் இருந்த வாசலை நோக்கி விரைந்தேன். முன்பக்கம் இலவச தரிசனக் காரர்கள். ஆகவே சீட்டு வாங்கினவங்க அந்த வாசல் வழியாகப் போகணும்.  மீனாக்ஷியைப் பார்க்கணும்னு ஒரே நோக்கத்தோடு நடந்தேன். வழக்கமாக விரைவாக நடக்கும் ரங்ஸ் தாமதமாக வர, மெதுவாக நடக்கும் நான் ஓட்டம் பிடித்தேன். அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்தும்மாக் கீழே விழுந்துடப் போறிங்கனு எச்சரிக்கும் அளவுக்கு வேகமாய்ப் போனேன். பின்னார் ரங்க்ஸும் வந்தார். உள்ளே நுழைந்து கருவறையில் மீனாக்ஷியைப் பார்த்தேனோ இல்லையோ, நெஞ்சம் விம்மியது; கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

இவ்வளவு பிகு பண்ணிக்கிறியே அம்மா, உன்னைப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு நீ பெரிய மனுஷியா ஆயிட்டியேனு மனசுக்குள்ளே மீனாளைக் கேட்டுக் கொண்டுக் கண் கொண்ட மட்டும் பார்த்தேன். அதிசயமாக எலுமிச்சை மாலை சார்த்தி இருந்தார்கள். எனக்குத் தெரிஞ்சு மீனாக்ஷிக்கு எலுமிச்சை மாலை சார்த்திப் பார்த்ததில்லை. பச்சைப் பட்டு உடுத்தி இருந்தாள். இடக்கையின் நெளிவும் வலக்கையின் கிளியும் அழகு கொஞ்ச சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை இடை உடுத்திக் காட்சி தந்தாள் அன்னை மீனாக்ஷி. கொண்டு போன மாலையைக் கொடுத்தோம். அபிஷேஹம் முடிஞ்சு அலங்காரம் பண்ணும்போது தான் சார்த்துவேன்னு சொல்லிட்டு பட்டர் எடுத்துட்டுப் போயிட்டார்.
மதுரை மீனாக்ஷி க்கான பட முடிவு

கண்குளிரப் பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தான் ஆசை. ஆனால் நடுவில் இந்தத் திரை போடுதல் வந்து விட்டது. திரை போட்டுட்டாங்க. திறக்க முக்கால் மணி ஆகும் என்று சொல்லி விட்டார்கள். ஆகவே சுவாமி சந்நிதி திறந்திருக்குமானு கேட்டுட்டு அங்கே போனோம். அதுவும் குறுக்கே தான். போற வழியில் இருக்கும் ஆஞ்சி நல்லா வளர்ந்துட்டார். தூணில் சின்ன உருவமாகப் பார்த்தவர் இப்போத் தூண் கொள்ளாமல் தூணை விட்டே எழுந்து வந்துடுவார் போல இருந்தார்.  இத்தனை வருடங்களில் நிறைய வெண்ணெயும், வடையும் கிடைச்சிருக்கும் போல! அவரை வணங்கிட்டு சுவாமி சந்நிதிக்குள் நுழைந்து சுவாமியைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். அதற்குள்ளாக இங்கேயும் திரை போட திறக்க எத்தனை நேரம் ஆகும்னு கேட்டோம். கால் மணி நேரம் தான்னு சொல்லவே அங்கேயே காத்திருந்தோம். மாலையையும் கொடுத்திருந்தோம். பத்து நிமிஷத்தில் திரை திறக்க மறுபடி சிறிது நேரம் சுந்தரேசரைப் பார்த்து மனதில் உள்வாங்கிக் கொண்டோம்.  மாலையைக் கொடுத்தோம். மற்றக் கோயில்களைப் போல் நாம் கொண்டு போகும் பூவையோ, மாலைகளையோ சுவாமிக்குச் சார்த்தாமல் தூக்கி எறிவதில்லை என்பது வரை மனம் சந்தோஷம் அடைந்தது.

பின்னர் வெளியே வந்து தக்ஷிணாமூர்த்தி, துர்கை, சித்தர் எல்லோரையும் பார்த்துவிட்டுக் கோயிலுக்கு வெளியே வர ஆயத்தமானோம். அப்போத் தான் கோயில் ஆனையார் அம்மன் சந்நிதியில் சாயரட்சை ட்யூடியை முடித்துக் கொண்டு ஸ்வாமி சந்நிதிக்கு வரக் கிளம்பிக் கொண்டிருந்தார். முக்குறுணிப் பிள்ளையாருக்கு எதிரே இருக்கும் வாயில் பெரிதுன்னாலும் அந்தப் படிகளில் எப்படி ஆனையார் ஏறுவார்னு குழப்பமா இருந்தது.  எப்படியோ ஏறிட்டார். ஏறி அவரும் குறுக்கே தான் போனார். சுவாமி சந்நிதியில் ட்யூடி முடிந்து அப்படியே கல்யாண மண்டபம் வழியா தன்னோட இடத்துக்குப் போயிடுவார் போல. காமிராவே எடுத்துச் செல்லாததால் படம் ஏதும் எடுக்கலை.  பின்னர் தெற்கு ஆடி வீதி வழியாக மேல ஆடி வீதிக்கு வந்து மேலக்கோபுரம் வழியாக வெளியேறினோம். நாகப்பட்டினம் கடை மறு நாள் உண்டானு கேட்டுக் கொண்டோம். பின்னர் மெல்ல நடந்து வடக்குச் சித்திரை வீதி வழியாக வடக்காவணி மூல வீதி போய் பூக்காரச் சந்தில் நுழைந்து தானப்ப முதலித் தெருவில் தங்கி இருந்த ஹோட்டலுக்குப் போனோம்.

ஹோட்டலிலேயே இரவு உணவை முடிச்சுக்கலாம்னு நினைச்சோம். ஆகவே அவங்க கிட்டே என்ன இருக்குனு கேட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்றார்கள். சப்பாத்தி பூரிக்குத் தொட்டுக்க சாம்பார், சட்னியாம். விடிஞ்சது போனு நினைச்சுட்டு ஏழரைக்கு எங்களுக்கு இட்லி கொடுக்கும்படி சொல்லிவிட்டுக் காஃபி வேணும்னு கொண்டு வரச் சொல்லிட்டு அறைக்குப் போனோம். அப்போ ஐந்தரை மணி தான் ஆகி இருந்தது. சொல்லி அரை மணி வரை காஃபியே வரலை. ஐந்தேமுக்காலுக்கு ஃபோன் செய்தப்போ இப்போ வந்துடும்னு சொன்னாங்க. ஆறு மணி வரை வரலை.  ஆறு மணிக்கு மறுபடி கூப்பிட்டு ஆர்டரை கான்சல் பண்ணிடுங்கனு சொல்லலாம்னு பார்த்தா இதோ பத்து நிமிஷம்னாங்க. காஃபிக்கொட்டையை வறுத்து அரைத்துப் போடுவதுனால் கூட அதுக்குள்ளே போட்டிருக்கலாம். ஒரு வழியா ஆறரை மணிக்குக் காஃபி வந்தது. அவர் கிட்டே இரவு உணவுக்கும் இப்படித் தான் நேரம் ஆகுமானு கேட்டோம். நேரமே ஆகலைனு அவர் கட்சி. சரி, தொலையட்டும்னு இரவு உணவை அறைக்குக் கொண்டு வர வேண்டாம். ஏழரைக்குக் கீழே வரோம். அங்கேயே கொடுங்கனு சொன்னோம். தயாராவும் வைச்சிருக்கச் சொன்னோம்.

ஆனால் ஏழரைக்குப் போனால் அங்கே சமையல் நடைபெறுவதன் அறிகுறியே இல்லை. போய் நாங்க யாரிடம் சொன்னோமோ அவரைக் கூப்பிட்டு நாங்க வந்துட்டோம்னு தெரிவிச்சோம். இதோனு சொல்லிட்டு உள்ளே போனார். ஆளே வரலை. ரிசப்ஷனில் கேட்டதுக்கு, வருவார்னு மட்டும் பதில் வந்தது. சரி, சூடாப் பண்ணி எடுத்துட்டு வரப் போறார்னு பொறுமையா உட்கார்ந்திருந்தோம். எட்டேகால் மணிக்கு ஒரு வழியா ஐந்து இட்லிகள் கொண்ட இரு உணவுத் தட்டுகள் வந்தன. நாங்க கேட்டது 3 இட்லிகளே. ஆகவே இரண்டு இட்லிகளைச் சாப்பிடும் முன்னரே எடுக்கச் சொல்லிட்டோம். இட்லிகளைத் தொட்டுப் பார்த்தால் சில்லிட்டிருந்தது.  காலையிலேயே செய்தவை போலத் தெரிந்தன. சரி, சாம்பாராவது சூடா இருக்கானு பார்த்தால் அதுவும் இல்லை. சட்னியும் காலம்பர செய்த சட்னியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து விட்டு எடுத்து வந்திருக்காங்க போல! அத்தனை நேரத்துக்கு மேல் வெளியே போய்ச் சாப்பிட முடியாது; வேறு வழியில்லைனு சாப்பிட்டு வைச்சோம். காஃபி, பால் ஏதானும் வேணுமானு வந்து கேட்க பயத்தோடு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டோம். அதுவேறே அப்புறமா ராத்திரி ஒன்பது வரைக்கும் உட்கார்ந்திருக்கிறாப்போல் ஆயிடுமே! 

20 comments:

  1. போகும் இடங்களின் பெயர்களெல்லாம் கேள்விப்பட்டது அல்லாமல் குறிப்பிட்டுத் தெரியாது. வலைப்பதிவர் விழாவுக்குச் சென்றபோது மீனாக்ஷியைத் தரிசித்தோம் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுந்தரேஸ்வரர் தரிசனம் கிடைக்கவில்லை. சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதம் மாதம் ஒரு முறை வருமாறு என் மனைவி ஏற்பாடு செய்திருக்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இந்தப் பதிவின் முதல் விருந்தாளியான உங்களுக்கு என் நன்றி. நான் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதோடு மேலே சொல்லி இருக்கும் இடங்களிலெல்லாம் ஒரு நாளைக்குப் பலமுறை போய் வந்து கொண்டு இருந்திருக்கேன். :) மீனாக்ஷியைப் பார்ப்பது தான் கஷ்டம் எனில் உங்களுக்கு சுந்தரேசரைப் பார்க்கக் கூடக் கஷ்டமாக இருந்திருக்கிறது! :(

      Delete
  2. கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள இடங்கள் எல்லாம் பெயரளவில்தான் தெரியும் குறிப்பிட்டுத்தெரியாது. மடுரை பதிவர் விழாவுக்குப்போன போது மீனாக்ஷியை தரிசித்தோம்கூட்டம் அதிகமாக இருந்ததால் சுந்தரேஸ்வரரை தரிசிக்க முடியவில்லை. சுவாமிகளுக்க் அர்ச்சனை செய்த பிரசாதங்கள் மாதம் ஒரு முறை வருமாறு என் மனைவி ஏற்பாடு செய்திருக்கிறாள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வருஷத்துக்குப் பணம் கட்டினால் பிரசாதம் தொடர்ந்து அனுப்புவார்கள். ஒரு வருஷம் ஆனதும் புதுப்பிக்க வேண்டும்.

      Delete
  3. மீனாடசி தரிசனம்ம கிடைத்ததே. ஏனபா இப்படி ஒரு ஓட்டல்ல போனரகள்ள

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே வல்லி, இணையத்தில் பார்த்து 4 நக்ஷத்திர ஓட்டல்னு தெரிஞ்சு போனதுக்குத் தான் இந்த அழகு!

      Delete
  4. ஏப்ரல் 3ந்தேதி மதுரை மீனாக்ஷி கோயில் போனேன், மிகுந்த கூட்டம் (பங்குனி உத்திரம்). மயிற்பீலி வீசுபவரிடம் இருந்து ஒரு தட்டலும் கிடைத்தது!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிடில்க்ளாஸ் மாதவி, கூட்டம் இருந்ததால் விசிறித் தாத்தா இருந்திருப்பார் போலே! :)

      Delete
  5. பத்து வருடங்கள் முன்பு தரிசித்தது! மீண்டும் ஒருமுறை தரிசிக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. போய்ப் பாருங்க சுரேஷ். அடுத்த மாதம் மட்டும் போயிடாதீங்க. சித்திரைத் திருவிழாக் கூட்டம் மே 5 தேதி வரை தாங்காது. :)

      Delete
  6. திவ்ய தரிசனம் அம்மா... - உங்கள் எழுத்தில் உணர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல தரிசனம் தான் டிடி. நன்றி.

      Delete
  7. மயில் தோகையால் விசிறும் தாத்தா அங்கேதான் இருக்கார், வருபவர்களை பக்தியுடன் பயமுறுத்திக் கொண்டு! நான் ஜனவரியில் பார்த்தேன்! முரட்டுத் தாத்தா... ஆனால் இது எங்கள் காலத்துத் தாத்தாவாயிருக்கும்! :))))

    //இவ்வளவு பிகு பண்ணிக்கிறியே அம்மா, உன்னைப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு நீ பெரிய மனுஷியா ஆயிட்டியேனு மனசுக்குள்ளே மீனாளைக் கேட்டு//

    ஆம்! உணர்சிகரமான அனுபவம். அங்கு இருக்கும் மனிதர்களின் அதிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறாள்!

    //ஆஞ்சி நல்லா வளர்ந்துட்டார். தூணில் சின்ன உருவமாகப் பார்த்தவர் இப்போத் தூண் கொள்ளாமல்//

    இது.... இதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை! எனக்கென்னவோ அன்று பார்த்த மாதிரியே....

    சுவாமி சன்னதி, மீனாட்சி சன்னதி பிரதட்சணம் செய்ய முடிந்ததோ?

    ஜனவரியில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி மேல் விதானத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். மூடி விட்டார்களா?

    மட்டமான ஹோட்டலாக இருக்கும் போலேருக்கு!

    ReplyDelete
    Replies
    1. விசிறித்தாத்தா நிச்சயம் புதுசாத் தான் இருப்பார். :) உங்கள் காலத்தவராய்க் கூட இருக்க முடியாது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறுபடி இங்கே என்னை வயசானவளாச் சொல்றீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) மீனாக்ஷி மனிதர்களின் அதிகாரத்தைப் பார்த்துக் கொண்டு மனதிற்குள் சிரிக்கிறாள்னு நினைக்கிறேன். ஆஞ்சி வளர்ந்திருப்பது இம்முறைதான் என்னாலும் உணர முடிந்தது. :)

      சுவாமி சந்நிதி, பாதிப் பிரதக்ஷிணம். மீனாக்ஷி சந்நிதியும் அப்படியே! பொற்றாமரைக்குளம் விதானம்? அப்படி ஏதும் இல்லையே? குளத்தின் மேல் பாகம் திறந்தேதான் இருந்தது.

      நீங்க வேறே ஸ்டார் ஹோட்டல்னு பேர். அறை வாடகை ஆயிரத்துக்கும் மேல்! :( இத்தனைக்கும் ஏசி வேண்டாம்னு சொல்லிட்டோம்.

      Delete
    2. பொற்றாமரைக் குளம் திறந்தேதான் இருக்கும். சுற்று மண்டபத்தைச் சொல்கிறேன். :))))

      Delete
    3. ஹெஹெஹெஹெ, தெரியும், வேணும்னு தான் அப்படி பதில் போட்டேன். சுற்று மண்டபம் புதிய ஓவியங்கள் வரைந்து மூடப்பட்டு விட்டது. :) நான் 2012-13 லே போகையில் மூடி இருந்தார்கள். ஓவியம் வரைவதற்காக மூடப்பட்டு விட்டதாக அறிவிப்பு இருந்தது. விபூதிப் பிள்ளையார் கிட்டே இருந்து அப்பிரதக்ஷிணமாச் சுத்திண்டு அம்மன் சந்நிதி வாசலுக்கு வெளியே போகணும். உள்ளே வரச்சே நேரே வர முடியாது. சுத்திண்டு விபூதிப் பிள்ளையார் வழியா வரணும். இப்போத் திறந்திருக்கு.

      Delete
  8. வரும் மாதத்தில் மதுரை செல்லும் வாய்ப்பிருக்கிறது. கோவில் போக வேண்டும். பார்க்கலாம்.

    அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. போய்ப் பாருங்க வெங்கட். வாழ்த்துகள். கட்டாயமாய் ஒரு வேளையானும் கோபு ஐயங்கார் கடையில் சாப்பிடுங்க. மத்தியானமா இரண்டு மணியிலே இருந்து வெள்ளை அப்பம், பஜ்ஜி கிடைக்கும். வியாழனன்று தவலை வடை போடுவாங்க. திங்கட்கிழமை வார விடுமுறை நாள். சாயந்திரமாப் போனால் மசால் தோசை அருமையா இருக்கும். :) ரவா தோசையும் இங்கே பிரபலம். மிளகாய்ச் சட்னி முன்னெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கும். இப்போக் கொஞ்சம் சுவை மாறுதல். எனக்குத் தெரிந்து இவங்க தான் இரண்டு , மூணு சட்னி வகையறாக்களை நான் பள்ளிமாணவியாக இருக்கும்போதே அறிமுகம் செய்தாங்க. தக்காளிச் சட்னியும், மல்லிகைப்பூ இட்லியும் மதுரையிலிருந்து தான் வெளி ஊர்களுக்குப் போச்சு! :)

      Delete
  9. Replies
    1. வாங்க கண்ணன், ரொம்ப நாளாச்சு பார்த்து! வருகைக்கு நன்றி,

      Delete