எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 04, 2015

திருமோகூர் காளமேகப் பெருமாள் கருணை மழை!

ஒரு வாரமாக சோதனை தான். மத்தியான நேரம் இணைய இணைப்பு வரதில்லை என்பதோடு அப்படியே வந்தாலும் பல சமயங்களிலும் ஜிமெயில் உள்பெட்டியை மட்டும் பார்க்க முடிகிறது. அங்கிருந்து ஜி+க்கோ, பதிவுகளுக்கோ போக முடியலை. யாரோட பதிவும் திறக்கலை! முகநூல் திறக்கவே  மறுக்கிறது. நேத்திக்கு ஒரு அரை மணி நேரம் முகநூல் வந்தது அவ்வளவு தான்! தமிழ் இந்து தளம், எங்கள் ப்ளாக் வலைப்பக்கம், அப்பாதுரையின் வலைப்பக்கம், மற்றும் சில நண்பர்களின் வலைப்பக்கங்கள் திறக்கலை.  இரண்டு நாட்களாகப் பதிவு போட முயன்று விட்டுப் போட முடியலை.  இன்னிக்காவது போடணும்னு நினைக்கிறேன். பார்ப்போம். :)
**************************************************************************************

யோகநரசிம்மர் கோயிலில் இருந்து திருமோகூர் சென்றோம். அங்கே வண்டியை நிறுத்துகையில் ஏற்பட்ட வாத விவாதத்தில் காமிராவை வண்டியிலேயே விட்டிருக்கேன்! படமே எடுக்கலை.  திரும்ப வந்து வண்டியை எங்கேனு தேடினால் அவர் எங்கோ தள்ளி நிறுத்தி இருந்திருக்கார்.  கண்ணிலேயே படலை! சரினு கோயிலுக்கு வந்துட்டேன்.

108 திவ்ய தேசங்களில் இது 46 ஆவது என்று சிலரும், 94 ஆவது என்று சிலரும் சொல்கின்றனர். நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இந்தக் கோயிலுக்கு மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். மூலவர் பெயர் காளமேகப் பெருமாள்.  உற்சவர் திருமோகூர் ஆப்தன். அனைவருக்கும் ஆப்தன் இவர். தேவர்கள் தங்களைக் காத்தருள வேண்டும் என மஹாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொள்ளச் சென்ற போது அறிதுயிலில் இருந்த மஹாவிஷ்ணு கண்களைத் திறக்கவே இல்லை. ஆகையால் பெருமானின் அருகிலிருந்த ஶ்ரீதேவி, பூதேவியிடம் முறையிட்டனர் தேவர்கள். அவர்களும் பெருமாளின் தூக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொள்ள, மனம் நெகிழ்ந்த பரந்தாமன் மோகினி வடிவெடுத்துச் சென்று அருள் புரிந்தார்.

இதன் அடிப்படையிலேயே இங்கே சந்ந்தி அமைக்கப்பட்டிருக்கிறது. சயனக் கோலத்தில் பெருமாள் காணப்படுகிறார். அருகே தங்கள் கைகளை வைத்துப் பிரார்த்தித்த வண்ணம் காணப்படுகின்றனர் தேவியர் இருவரும். இந்த சந்நிதிக்குக் கீழே பாற்கடல் இருப்பதாக் ஐதீகம். தாயார் சந்நிதி தனியாக இருக்கிறது.  என்றாலும் தாயார் படிதாண்டாப் பத்தினி.மோகனவல்லி என்னும் தாயார் பெருமாள் பெண் வடிவமெடுத்த தலம் என்பதால் அவருக்கு மரியாதை தரும் வண்ணம் படி தாண்டுவதில்லை என்கின்றனர். தனியாகத் திருவிழாவும் தாயாருக்குக் கிடையாது.  பிரசாதங்களும் தருவதில்லை. நவராத்திரி உற்சவம் மட்டும் நடைபெறுகிறது., மற்றபடி பங்குனி உத்திரத்தன்று  திருமோகூர் ஆப்தன் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி தாயாருடன் சேர்ந்து "சேர்த்தி" உற்சவமாக மூன்று மணி நேரம் காட்சி தருகிறார்.

ஆனால் அதே சமயம் ஆண்டாள் பெருமாளுடன் புறப்பாடு கண்டருளுகிறாள்.  வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து அவளுடன் சேர்ந்து காட்சி தருகிறார் திருமோகூர் ஆப்தன். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளன்றும், மாசி மகத்தன்றும் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார் பெருமாள்.  மாசி மகத்தன்று ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலுக்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார் திருமோகூர் பெருமாள். அன்றிரவு கருடசேவை நடந்து கஜேந்திர மோக்ஷமும் நடைபெறும். அதிசயமாக இங்கு வில்வமே தல விருக்ஷமாக உள்ளது.  தாயாருக்கும் வில்வார்ச்சனை நடைபெறும்
இங்கே சக்கரத்தாழ்வார் சந்நிதி விசேஷமான ஒன்று.  அது குறித்து அடுத்துப் பார்ப்போம். 

17 comments:

 1. வணக்கம்
  பதிவை படித்த போது இறை தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன் நன்றி.

   Delete
 2. திருமோகூர் காளமேகப் பெருமாள் தரிசனம் - உங்கள் பதிவு மூலம்..... நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட், உங்க பதிவுக்கும் வர முடியலை. வரணும்! :)

   Delete
 3. நானும் தரிசனம் செய்தேன்.

  மேல்தளத்துக்குச் செல்ல வழி இருந்தது. பூட்டியிருந்தது. முயற்சித்திருந்தால் சென்றிருக்கலாம். நேரமில்லாமல் ஓடி விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. இப்போல்லாம் எந்தக் கோயிலிலும் மேலே ஏறுவதில்லை! :( உடல்நலம் குறித்த பயம் தான் காரணம். ஆகையால் அந்த எண்ணமோ தோணலை! :(

   Delete
 4. மதுரையிலோ அருகிலோ பார்க்காத கோவில்கள் ஏராளம் என்று தெரிகிறது சோதனை வெற்றி பெற்றதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஐயா, நாங்களும் பார்க்காத பல கோயில்கள் உள்ளன. பார்க்கணும்னு நினைச்சுட்டுப் போனவற்றையே தரிசிக்க முடியலை! :( பாதியிலே திரும்பிட்டோம்.

   Delete
 5. Aaprhanukku oru namaskaram....aamam, anga oru kulam ondae, innum irukka?...nalla thamarai pushpangal irukkum andha kalathula....I got dharshan of maha periyava those days

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுரையம்பதி. தாமரைக்குளம் இருப்பதாய்த் தெரியலை! :( குளமே கண்ணில் படலை!

   Delete
 6. அப்பாடா...!

  தரிசனத்திற்கு நன்றி அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, நன்றி.

   Delete
 7. காளமேக வண்ணன் நம் எல்லோருக்கும் அருள் புரியட்டும். பெருமாள் கோவில்களில் எல்லாவற்றிலும் தாயார் படிதாண்டா பத்தினி தான் என்று கேள்விபட்டிருக்கிறேன். இந்தக் கோவிலில் மட்டும் தானோ?

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஶ்ரீரங்கத்திலும் தாயார் படிதாண்டாப் பத்தினிதான் ராஜலக்ஷ்மி!

   Delete
 8. காளமேகப் பெருமாள் பற்றிய அருமையான தகவல்கள். சிறப்பான பதிவு.
  கக்கரத்தாழ்வார் பற்றிய தகவல்களுக்கு காத்திருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்வி, விரைவில் எழுதறேன்.

   Delete