எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 18, 2015

மதுரைக்குப் போகாதேடி! :(

சாப்பிட்டுவிட்டு மாடிக்கு எங்கள் அறைக்கு வந்து சற்று நேரம் தொலைக்காட்சி பார்த்தோம்.  அப்புறமா ஒரு ட்ராவல்ஸ் கம்பெனிக்குத் தொலைபேசி மறுநாள் காலை திருப்பரங்குன்றம், திருவேடகம், அழகர் கோயில் எல்லா இடமும் போக வண்டிக்கு ஏற்பாடு செய்தோம். காலை ஆறரைக்கு வண்டியை வரச் சொல்லி இருந்தோம்.  ஆகவே நான் சீக்கிரம் படுத்துட்டேன். நம்ம ரங்க்ஸ் சாதாரணமா அர்னாப் கோஸ்வாமியும், ராஜ்தீப் சர்தேசாயும், பர்க்கா தத்தும் தூங்கப் போயாச்சானு பார்த்துட்டுத் தான் வந்து படுப்பார். அன்னிக்கு என்னமோ தெரியலை அவரும் படுத்துட்டார். எனக்கு சாதாரணமாவே வெயில்காலத்தில் அகல் விளக்கு ஏற்றினாலே சூடாகத் தெரியும். இங்கே குழல் விளக்குச் சூடு ஒத்துக்கலை. அறையிலே இரவு விளக்கும் இல்லை. ரிசப்ஷனுக்குத் தொலைபேசிச் சொன்னால் பதிலே இல்லை. மீண்டும், மீண்டும் இருமுறை கேட்டும் சரியான பதில் வரவில்லை. அறையிலே விளக்கில்லாமல் ஒரே கும்மிருட்டில் எப்படித் தூங்கறது? ஜன்னல் இருந்தால் அதுவழியா வெளியே இருந்து கொஞ்சமானும் வெளிச்சம் வரும்.  யோசித்து மண்டையைக் குழப்பிக் கொண்டுவிட்டுக் கடைசியில் குளியலறை+கழிவறையின் விளக்கைப் போட்டு விட்டு அதன் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துவிட்டுப் படுத்தோம்.

அந்த வெளிச்சமே என் கண்ணில் படத் தூக்கமே வரவில்லை. அப்படி, இப்படிப் புரண்டு விட்டு ஒரு வழியாக் கண்ணசரலாம்னா திடீர்னு பக்கத்திலே ரங்க்ஸுக்கு ஒரே இருமல். எழுந்து கொண்டு என்ன வேண்டும்னு கேட்டேன். குடிக்கத் தண்ணீர் ஏதானும் எடுத்துத் தரலாமா என்னும் எண்ணத்தோடு. அதுக்கு என்னவோ பதில் சொன்னார். வாயிலிருந்து காற்றுத் தான் வருது! வார்த்தைகளே தெளிவாக இல்லை. ஒரு கணம் பயந்தே போனேன்.  சாதாரணமா இம்மாதிரி மாஜிக் வேலை எல்லாம் என்னைச் சேர்ந்தது. அவருக்கு எதுவும் பண்ணினதில்லை. இப்போப் பார்த்துப் பேச முடியலைனா! ஒரே பயம். மறுபடி பேச்சுக் கொடுத்தேன். சற்று நேரம் வரை பேச்சுக் கிசுகிசுப்பாகவே இருந்தது. அப்புறமும் குரல் சரியாக எழும்பவில்லை. உடனடியாக என்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நாளைக்கு நாம ஊர் திரும்பறோம்னு அறிவிப்புச் செய்துட்டுப் படுத்தேன். வீட்டில் இருந்தால் வெந்நீர் வைத்துக் கொடுக்கலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும். இங்கே என்ன செய்ய முடியும்?

ஆனால் ஒரு விஷயம். சாதாரணமா நான் கிழக்குனா ரங்க்ஸ் மேற்கு என்பார். இன்னிக்கு என்னுடைய அறிவிப்புக்கு பதிலே இல்லை.  ஆகவே உண்மையாகவே உடல்நலம் சரியாக இல்லைனு எனக்குப் புரிந்தது. அந்த மூடிய அறைக்குள்ளே வெளிக்காற்றே கொஞ்சம் கூட இல்லாமல் தொடர்ந்து அறை விளக்கைப் போட்டுக் கொண்டு மின் விசிறியடியில் இருந்ததாலோ என்னவோ தெரியலை. உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது.  மறுநாள் காலை எழுந்ததும் முதல்வேலையாக ட்ராவல்ஸ் கம்பெனிக்குத் தொலைபேசி எங்கள் பயணத்தை ரத்து செய்தோம். பின்னர்  அன்றாடக் கடன்களைமுடித்துக் கொண்டு வடக்காவணி மூலவீதியின் முனைக்கடைக்குப் போய்க் காஃபி சாப்பிட்டு விட்டு வந்தோம். முதல்நாள் மாலையே ஹோட்டலில் காஃபி கொடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆச்சு. இப்போக் கேட்கவே வேண்டாம்.  ஆறரைக்குத் தான் ரெஸ்டாரன்ட் திறப்பாங்களாம். காஃபி கொடுக்கையில் ஏழரை ஆயிடும். நமக்குச் சரிப்படாது. வெளியிலே விற்பதை விட விலையும் ஒரு காஃபிக்கு  5 ரூ அதிகம்.

பின்னர் மீண்டும் அறைக்கு வந்து ரிசப்ஷனில் இருப்பவரிடம் நாங்கள் கிளம்புவதாய்ச் சொல்லி பில்லை ரெடி செய்யச் சொன்னோம். அவர் ஏன்னு கேட்டதுக்கு எங்கள் குறைகளைச் சொல்லிவிட்டோம். அவர் வாயே திறக்கலை. இரவு விளக்குக் கூடக் கேட்டும் கொடுக்காமல் இருக்கிறச்சே மறுநாளும் அங்கே எப்படித் தொடர்வது? இன்னொரு ஹோட்டலுக்குப் போகலாம்தான். ஆனால் திடீர்னு இப்படித் தொண்டை கட்டிக் குரல் வெளியே வராமல் இருக்கே! போகும் இடத்தில் குடிக்கும் தண்ணீரால் நிலைமை இன்னமும் மோசமானால் என்ன பண்ணுவது! அறைக்கு வந்து குளித்து விட்டு கோபு ஐயங்கார் கடைக்குப் போய்க் காலை ஆகாரம் சாப்பிடச் சென்றோம். இப்போவும் நம்ம ரங்க்ஸ் அந்தக் கணக்காளரிடம் மாவடு எங்கே கிடைக்கும்னு கேட்க, நான், யானைக்கல்லில் கிடைக்கும்; ஹோட்டலில் இருந்து அங்கே போய் மாவடு வாங்கிட்டு வரலாம்னு சொல்ல, அதை லக்ஷியமே செய்யாத ரங்க்ஸ் அந்த மனிதர் வாயையே பார்க்க அவரோ மாவடு என்னும் பெயரையே அன்று தான் கேள்விப் பட்டிருப்பார் போல! ரொம்ப யோசனைக்குப் பின்னர் ஒரு தலையாட்டல். அதுக்குள்ளே நான் படி இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

சூப்பர் டிஃபன் கோபு ஐயங்கார் கடையிலே. அருமையான சாம்பார், சட்னி வகையறாக்கள்.  காஃபி மட்டும் இப்போப் புதுசா சிகரி போட ஆரம்பிச்சிருக்காங்க போல!போகப் போக மற்றதும் மாறாமல் இருக்கணும்! :) பின்னர் அங்கிருந்து வடக்காவணி மூலவீதி வந்து ஒரு ஆட்டோ பிடித்து யானைக்கல்லுக்கு விடச் சொன்னோம். பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ. ஆகையால் சீக்கிரம் திரும்பணும்னு ஆட்டோக்காரர் சொல்ல நாங்களும் சீக்கிரமாய்த் திரும்பிடுவோம்னு சொல்லிட்டு ஏறிக் கொண்டோம். யானைக்கல்லில் இரண்டு, மூன்று இடங்களிலேயே மாவடு கிடைத்தது. அதில் ஒரு இடத்தில் மாவடு சுமாராக இருந்தது. கிலோ நூறு ரூபாய் சொல்ல மூன்று கிலோ வாங்கிக் கொண்டோம். ஆட்டோக்காரர் ரொம்ப உதவியாக இருந்தார். பேரம் பேசி விலையை நிர்ணயம் செய்தது அவரே. ஏனெனில் எங்களைப் பார்த்ததும் எல்லோரும் இருநூறு ரூபாய் வரை சொன்னார்கள். ஆகவே எங்களை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு அவர் போய் விலை பேசிவிட்டுப் பின்னர் அழைத்துச் சென்றார்.

பின்னர் அதே ஆட்டோவிலேயே மறுபடி ஹோட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்து கொண்டு கணக்கைத் தீர்த்துவிட்டு மாட்டுத்தாவணிக்கு அங்கேயே ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து மதுரை--திருச்சி விரைவு வண்டியில் ஏறித் திருச்சி வந்து அங்கிருந்து ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம். வீட்டுக்குப் பதினொன்றே கால் மணிக்கு வந்தாச்சு.  வந்து சாதம்,  மிளகு ரசம், கொத்தவரை வற்றல், அப்பளம், கருவடாம் பொரித்துக் கொண்டு மோர், ஊறுகாயோடு சாப்பிட்டுவிட்டு ஓய்வும் எடுத்துக்கொண்டோம். அப்பாடானு ஆயிடுச்சு மதுரைப் பயணம்! ::) சாயந்திரமா மாவடுவையும் உப்புக்காரம்,கடுகுப் பொடி, மஞ்சள் பொடியோடு சேர்த்து ஊறுகாய் போட்டு இப்போச்சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சு! :) என்ன இருந்தாலும் மதுரை மாவடு அதிலும் அழகர் கோயில் வடுவுக்கு ஈடு, இணை இல்லை தான்! :)

மாவடு க்கான பட முடிவு

நாங்க வாங்கின மாவடு இப்படித் தான் இருந்தது.  படத்துக்கு நன்றி கூகிளார்.

சும்மா ஒரு விளம்பரந்தேன்! இங்கே பார்க்கவும், மாவடு செய்முறை!

மாவடு செய்முறை

35 comments:

  1. ஏதோ மீனாட்சி அம்மனையாவது பார்க்க முடிந்ததே.... மாமா உடம்பு இப்போ பரவாயில்லையா?

    ReplyDelete
    Replies
    1. வந்ததுமே சாயந்திரமா மருந்துகள் எடுத்துக் கொண்டு பின்னர் சரியானது. ஆனாலும் இரண்டு நாட்கள் பேச முடியாமல் தான் கஷ்டப்பட்டார். ::) வீட்டிலே சத்தமே இல்லை! :)

      Delete
  2. சகவாச தோஷம். அவரும் மாஜிக் ஆரம்பிச்சுட்டாரா? அப்புறம் என்னாச்சுன்னு சொல்லவே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. என்ன இது? வா.தி. உங்களுக்குக் கொடுத்த பின்னூட்டத்தைக் காணோமே! நான் எழுதினது!

      ஹெஹெஹெ வா.தி. கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க! நான் தான் மு.ஜா.மு. அக்காவாச்சே! இப்போல்லாம் போற இடத்திலே தண்ணீரே குடிக்கிறதில்லை. அதுக்கு பதிலா ஶ்ரீரங்கம் தண்ணீரே இரண்டு பாட்டில் கொண்டு போயிடுவேன். இரண்டு நாளைக்கு மேல் தங்கறதில்லை என்பதால் அதுவே சரியா இருக்கும். அதுக்கு மேலே தங்கினால் அக்வாஃபினா அல்லது கொதிக்க வைத்த வெந்நீர்(இது போன முறை சொல்லலை)

      அவருக்கு உடம்பு சரியாப் போச்சு! மேலே ஶ்ரீராமுக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க. இரண்டு நாட்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

      Delete
    2. என்ன இது? வா.தி. உங்களுக்குக் கொடுத்த பின்னூட்டத்தைக் காணோமே! நான் எழுதினது!

      ஹெஹெஹெ வா.தி. கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க! நான் தான் மு.ஜா.மு. அக்காவாச்சே! இப்போல்லாம் போற இடத்திலே தண்ணீரே குடிக்கிறதில்லை. அதுக்கு பதிலா ஶ்ரீரங்கம் தண்ணீரே இரண்டு பாட்டில் கொண்டு போயிடுவேன். இரண்டு நாளைக்கு மேல் தங்கறதில்லை என்பதால் அதுவே சரியா இருக்கும். அதுக்கு மேலே தங்கினால் அக்வாஃபினா அல்லது கொதிக்க வைத்த வெந்நீர்(இது போன முறை சொல்லலை)

      அவருக்கு உடம்பு சரியாப் போச்சு! மேலே ஶ்ரீராமுக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க. இரண்டு நாட்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

      Delete
    3. வா.தி. இரண்டாம் முறையும் ப்ளாகர்/கூகிளார் மாஜிக் வேலை! போகலை, மூணாவது முறையாக் கொடுத்திருக்கேன். நல்லவேளையா இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணி வைச்சிருந்தேன். வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

      Delete
    4. ஹிஹிஹி, ரெண்டு தரமும் வந்திருக்கே! ஹை!!!!!! :))))

      Delete
  3. கணவருக்கு உடல் நலம் சரியாயிற்றா.?

    ReplyDelete
    Replies
    1. சரியாப் போச்சு ஜிஎம்பி சார். இரண்டு நாட்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

      Delete
  4. Ahha....naanum march-la Madurai poonappo mavadu vanginen......enna velai jasthi, kg 150₹.

    ReplyDelete
    Replies
    1. யாருங்க அது? மௌலி, மதுரையம்பதினு? புதுசா? மாவடு நாங்களும் மார்ச்லே தான் வாங்கினோமாக்கும்.

      Delete
  5. அடடா! புனிதப் பயணம் பாதியில் ரத்தாகிவிட்டதே! ஆனாலும் சுவையாக எழுதிய உங்களின் நகைச்சுவை உணர்வு ரசிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், இதுக்கு முன்னாலும் ஒரு முறை எட்டுக்குடியில் ரங்க்ஸ் கீழே விழுந்து பயணம் பாதியில் ரத்தாகி ஊர் திரும்பினோம். ஒரு மாசம் பிசியோதெரபி எடுத்துண்டார். சில நேரம் அப்படி ஆகி விடுகிறது. :)

      Delete
  6. மாவடுப் பதிவாக இருப்பதால் ருசியோ ருசியாக உள்ளது. மாவடு விலை சென்னையில் கம்மியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஜோரான சுவையான வடு .... கிலோ ரூ. 60 தானாம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார்! மாவடு விலை சென்னையில் கிலோ 60? ஆச்சரியமா இருக்கே! பொறுக்கின வடுவாக இருக்கும். பறிச்சதா இருக்காது. :) ஏன்னா என் வலை உலக நண்பர் கிலோ 250 ரூ கொடுத்து மைலாப்பூரில் வாங்கிப் போட்டதாகப் பகிர்ந்திருந்தார். மாம்பலத்தில் நீள வடு 150 ரூபாய்க்கும், உருண்டை வடு 200 ரூபாய்க்கும் விற்பதாகச் சொல்கிறார்கள். :)

      Delete
    2. எனக்குத்தகவல் சொன்னவர் சென்னை. பெரம்பூர், ICF Colony பக்கம் சமீபத்தில் போய் வந்தவர்கள். ஆனால் அங்கு மாவடு வாங்கி திருச்சிவரை தூக்கிக்கொண்டுவர சோம்பல்பட்டு, இங்கு திருச்சிக்கு திரும்பி வந்து, இங்கு ஒரு கிலோவுக்கு ரூ. 100-120 வீதம் கொடுத்து 2-3 கிலோ வாங்கிக்கொண்டு, சிங்கப்பூரில் உள்ள தங்கள் பெண் வீட்டுக்கு சென்ற வாரம் புறப்பட்டுப் போய் உள்ளார்கள்.

      Delete
    3. அப்படியா? :)

      Delete
  7. கலவரத்தை கலாட்டாவாக எழுத முடிகிறதே.. அதான் உங்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நடந்தது நடந்தாச்சு! அடுத்தது தானே இனிமேல்! :)

      Delete
    2. இதில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரஸித்து ருசித்து அருமையாகவே எழுதியிருக்காங்கோ ! :) எனக்கென்னவோ பல பதிவுகள் கொடுக்க வேண்டிய ஆவலிலேயே பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வந்திருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம் உள்ளது. :)

      Delete
    3. ஹிஹிஹி, வைகோ சார், அப்படி எல்லாம் இல்லை. :)

      Delete
  8. மதுரை போனால் கோபு ஐயங்கார் கடையைத் தேட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தேட வேண்டாம் அப்பாதுரை, மேலச் சித்திரை வீதிக்கோ வடக்குச் சித்திரை வீதிக்கோ போனீங்கன்னா கேட்டாலே காட்டுவாங்க. இரண்டும் இணையும் முனையில் வடமேற்கே வடக்கு கோபுரத்தைப் பார்த்த வண்ணம் கடை இருக்கிறது. சின்னதாய் ஒரு கூடம். உள்ளே சமையலறை. ஒரு நேரத்தில் பத்துப் பேருக்கு மேல் சாப்பிட முடியாது. அதிகப் பேர் போனால் காத்திருக்கணும். பொதுவாக இன்னொரு விஷயம் காஃபி, டீ போன்றவை மதுரையில் எப்போவுமே நல்லா இருக்கும். இப்போவும் நன்றாகவே இருக்கிறது. கோபு ஐயங்கார் கடையில் சிகரி சேர்த்திருக்காங்க என்பது என் சந்தேகம். :)

      Delete
    2. அதானே ! முழு விலாசம் எழுத மாட்டாங்களோ !

      எனக்கு சொந்தமான கடை அங்கு மதுரையில் எங்கே இருக்கிறது என எனக்கே தெரியலையே :(

      - கோபு (ஐயர்)

      Delete
    3. தேடவே வேண்டாம். சித்திரை வீதியில் கேட்டாலே சொல்வாங்க. கிட்டத்தட்ட 75 வருஷங்களாகவோ என்னமோ அந்தக் கடை இருக்கு.இப்போத் தான் இதன் கிளை ஒன்று பைபாஸ் ரோடில் திறக்கப் போவதாக ஶ்ரீராம் முகநூலில் பகிர்ந்திருந்தார். மதுரையிலேயே பிறந்து வளர்ந்து நாலு மாசி வீதிக்குள் இருந்தவங்க எல்லோருக்குமே இந்தக் கடை பத்தித் தெரிஞ்சிருக்கும். :)

      Delete
  9. ஆற அமர இப்பதான் படிச்சேன் . இப்ப தேவலையா மிஸ்டர் சிவத்திற்கு? அடாது மழை பெஞ்சாலும் விடாது பள்ளிக்கூடம் மாதிரி அடாது ஜுரம்னாலும் விடாது மாவடு தேடு! மாவடு வாசனையே சரியாக்கிருக்கும்:) மாவடு வா வாங்கறது!
    ம்ஹ:( எங்க !முன்ன வந்த படேகர் கூட வரதில்லை .வந்தாலும் இப்போ காரம் ஒத்துக்க மாட்டேங்கறது ! மிளகாயை உப்புல கசக்கி மோருஞ்சாதத்துக்கு சாபிடறவ நான். இப்ப நம்ப நிலைமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெயஶ்ரீ, மாவடு வாசம் எல்லோரையும் இழுத்துட்டு வந்திருக்கு பாருங்க. இப்போத் தேவலை. எனக்கும் பல வருஷங்களாக ஊறுகாய்க்கு எல்லாம் தடா தான். மாவடு மட்டும் கொஞ்சமாக் காரம் போட்டு அப்போ அப்போத் தொட்டுப்பேன். அதே போல் பிசறின மாங்காயும்! :)

      Delete
  10. நான் இந்தப்பதிவுக்கு நேற்றே கமெண்ட்ஸ் எழுதினேனே ... என்ன ஆச்சு? வெளியிடவே இல்லையே ! :(

    ReplyDelete
    Replies
    1. நேத்து ராத்திரி கொடுத்திருப்பீங்க. நான் அநேகமா ஏழு மணிக்கு அப்புறமா கணினியில் உட்காருவதில்லை. இதை ஒரு கட்டாயமான பழக்கமாவே வைச்சிருக்கேன். எப்போதாவது வேலை இருந்தால் தான் உட்காருவேன். அதனால் இப்போக் காலையில் தான் பார்த்தேன். பின்னூட்டம் வெளியிட்டு பதிலும் கொடுத்திருக்கேன். வந்திருக்கும், பாருங்க. :))))

      Delete
    2. புரிகிறது. நேத்து ராத்திரிதான் [ வழக்கம்போலவே எனக்குத் தூக்கம் வராததால் ] நானும் கமெண்ட்ஸ் கொடுத்த ஞாபகம் உள்ளது. இருப்பினும் தாங்கள் இன்று வெளியிடும் போது நம் திரு. அப்பாதுரை சார் அவர்களின் 2 கமெண்ட்ஸ்களை மட்டும் வெளியிட்டிருந்தீர்கள். ஆனால் என்னுடையது வெளியிடப்படவில்லை. அதனால் எனக்கு, என்னுடையது ஒருவேளை’காக்கா ஊஷ்’ ஆகியிருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்தது. பிறகு இப்போது வெளியிட்டு விட்டீர்கள். திரு. அப்பாதுரை சாருக்கு முன்பே நான் கமெண்ட்ஸ் கொடுத்துள்ளேன் என்பதும் இப்போது தெரியவருகிறது. அதனால் என்ன, முன்னே பின்னே வெளியிட்டாலும் இப்போ அது இடம்பெற்றுவிட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

      Delete
    3. வைகோ சார், நான் பின்னூட்டங்களைப் படிப்பது ஜிமெயில் இன் பாக்ஸில் இருந்து. அதில் ப்ரைமரி, சோஷியல், ப்ரமோஷன்ஸ் என்னும் மூன்று பகுதிகளிலும் பின்னூட்டங்கள் வருகின்றன. இது என்ன கணக்கு வைத்துக் கொண்டு கூகிளார் அனுப்புகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. முதலில் ப்ரைமரியில் இருக்கும் பின்னூட்டங்களில் மேலிருந்து கீழாக பப்ளிஷ் கொடுப்பேன். ஆனால் அந்த வரிசையில் கீழே இருக்கும் பின்னூட்டம் தான் மற்றவற்றை விட முன் கூட்டிய நேரம் வந்திருக்கும். ஆனால் நாம் பப்ளிஷ் கொடுக்கையில் தாமதமாக வந்ததை முதலில் கொடுப்பதால் அது முதலில் பப்ளிஷ் ஆகிறது. மற்றவையும் அடுத்தடுத்து பப்ளிஷ் கொடுத்து பப்ளிஷ் ஆனதும் அந்த அந்த வரிசைப்படியே பின்னூட்டப் பெட்டிக்குப் போகும். ஆகவே உங்களோடதை நான் கடைசியில் பப்ளிஷ் கொடுத்தாலும் நீங்கள் அப்பாதுரைக்கு முன்னாலேயே கமென்ட் போட்டிருந்ததால் அது அதற்கென உரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. இது கணினியின் ஏற்பாடு தானே தவிர எனக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

      அதே போல் சோஷியல் பகுதியிலோ, ப்ரமோஷன்ஸ் பகுதியிலோ பின்னூட்டங்கள் வந்திருந்து அதையும் நான் பப்ளிஷ் செய்கையில் அந்தப் பின்னூட்டங்கள் உங்கள் பின்னூட்டத்துக்கு முன்னால் வந்திருந்தால் அங்கே தான் போய் உட்காரும். இதைப் பல முறை கவனித்திருக்கிறேன். நானாக எவ்வித மாற்றமும் செய்வதில்லை. :)))))

      Delete
  11. சுவாரஸ்யமான பயணம்... அதை சொன்ன விதம் அருமை அம்மா ...

    ReplyDelete
  12. அடடா... பாதியிலேயே திரும்ப வேண்டியதா போச்சே.....

    அடாது மழை பெய்தாலும்..... விடாது மாவடு!

    பயணங்களில் உடல் நிலை சரியில்லாது போனால் கஷ்டம் தான். ......

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட்,
      மாவடுக்காகவே மதுரை பயணம்னு வைச்சுக்க வேண்டியது தான்!

      Delete
  13. உங்கள் கணவர் உடம்பு சரியாகி விட்டதல்லவா? சுவைபட எழுதியிருக்கீங்க. மாவடுக்க நான் இடக்கை சின்னவிரலை,அப்பாதுரையின் கிலட்டினுக்கு தருவேன்.
    வடுவாம்ருதம் !

    ReplyDelete