பொதுவாக மதுரைப் பயணத்தில் மக்களிடம் அன்பும், கருணையும் இன்னமும் மிச்சம் இருப்பதைப் பல சமயம் புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற விஷயங்களில் , மதுரை மாறி இருந்தாலும் இந்த அடிப்படைக் குணம் மக்களிடம் இன்னமும் மிச்சம் இருக்கிறது. யாரைக் கேட்டாலும் வழி சொல்லுவது, கூடவே வந்து காட்டுவது, சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுப்பதுனு எல்லோரும் தங்கள் அன்பை தாராளமாகவே காட்டினாங்க. பொதுவாகக் கோபம் என்பதே இல்லை எனிலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் தன்மை மாறவும் இல்லை. சாப்பாடு மட்டும் சரியாகக் கிடைச்சால், தங்குமிடமும் வசதியாக இருந்தால் மதுரை சொர்க்கம் தான் இன்னமும்!
**************************************************************************************
இப்போது சில விஷயங்களைச் சொல்லணும்னு ஆசை! இணையத்தில் திருட்டு என்பது நடைமுறை ஆகி விட்டது. பலரும் மற்றவர்கள் எண்ணங்களை, சிந்தனைகளைத் தங்களுடையது போல் காட்டிக் கொள்கின்றனர். அப்படிச் செய்யாதீர்கள் என்றாலும் அலட்சியம் காட்டுகிறார்கள். மற்றவர் துணிகளை வேண்டுமானால் நம்முடையது என்று சொல்லலாம். சமையலைத் தன்னுடையது எனப் பெருமை அடித்துக் கொள்ளலாம். தப்பில்லை என்றாலும் இதிலும் உண்மையைக் கண்டு பிடித்தால் நமக்குத் தான் அவமானம். அப்படி இருக்கையில் மற்றவர்கள் எழுதினதைத் தன்னுடையது என்று போட்டுக் கொள்வது எவ்வகையில் நியாயம்?
இது வலைப்பக்கம் எழுதும் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டும் இல்லை. முகநூலிலும் பார்க்கிறேன். மற்றவர்களுடைய பதிவுகளை, அவர்கள் எழுதின விஷயங்களை, கவிதைகளை, கட்டுரைகளைத் தங்கள் பெயரில் போட்டுக் கொள்கிறார்கள். எங்கிருந்து எடுத்தது என்னும் விஷயத்தைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் மனம் இல்லாமல் இருக்கின்றனர். ஒரு படம் எடுத்தாலே கூகிள் மூலம் எடுத்தது எனக் குறிப்பிட வேண்டும். மற்றவர்கள் பதிவிலிருந்து எடுத்தாலும் இன்னார் பதிவிலிருந்து எடுத்தது என்பதைச் சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில் மற்றவரின் சிந்தனைகளை நம்முடையதாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம்!
இணையத்திலும் காப்பிரைட் உள்ள பதிவுகள், படங்கள், செய்திகள் உள்ளன. நாம் பாட்டுக்கு நம்முடையது எனப் போட்டுக் கொண்டால் காப்பிரைட் பிரச்னை வரும். ஆகவே நாம் எங்கிருந்து எடுத்தாலும் அதைக் குறிப்பிட்டு இந்த இடத்திலிருந்து எடுத்தது; அதைப் பகிர்கிறேன் என்று சொல்வதே சரியான முறை. பின்னால் பிரச்னை வராமல் இருக்கும். என்னுடைய பிள்ளையார் பதிவுகளும்(இதிலாவது பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது) சிதம்பர ரகசியம் பதிவுகளும், இன்னும் சில புராண நாயகர்கள் குறித்த பதிவுகளும், சுமங்கலிப் பிரார்த்தனை குறித்த பதிவும் மற்றவர்கள் வெட்டி, ஒட்டி இருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மனம் வேதனைப் பட்டது. அப்படித் தானே மற்றவர்களுக்கும் அவர்கள் பதிவுகள், படங்கள், கவிதைகள் வெட்டி, ஒட்டப்படுவதைப் பார்க்கையில் தோன்றும்!
புராண, இதிகாசங்கள், தல புராணங்கள், கோயில் பற்றிய செய்திகள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் குறித்த தகவல்கள், சரித்திர வரலாற்றுச் செய்திகள் (இவை கூட இப்போது மாற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன.) பகவத் கீதை மற்றும் ஆன்மிகப் பெரியோரின் கருத்துகள் ஆகியவை வேண்டுமானல் பிறர் சொன்னதை நாமும் சொல்லும்படி ஆகலாம். அவற்றில் தவறில்லை. அதே போல் தமிழிலும் உள்ள பழைய இலக்கியங்களையும் சுட்டிக் காட்டலாம். அவை மாறாதவை. ஆனால் தனிப்பட்ட ஒருவர் எழுதின தனிப்பட்ட உணர்வு குறித்த பதிவையோ, கவிதையையோ, கட்டுரையையோ பகிரும்போது சம்பந்தப்பட்டவர்களின் பெயரைச் சொல்வது தான் சரியானது. நம்முடைய உணர்வுகளுக்கும் அது பொருந்தி வரலாம். நம் நிலைமைக்கும் பொருந்தி இருக்கலாம். என்றாலும் அப்போது அதைப் பகிரும்போது எனக்கும் இந்த உணர்வு பொருந்துவதால் இதைப் பகிர்கிறேன்; இன்னாரிடமிருந்து எடுத்தது என்று சொல்லிவிட்டுச் செய்தால் நல்லது. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். இது குறிப்பிட்டு யாரையும் சொல்வதில்லை.
கடந்த ஒரு மாதமாக இப்படியான பல பதிவுகளைப் பார்க்க நேர்ந்ததால் சொல்லும்படி ஆயிற்று.

மதுரை மக்களின் குணங்கள் பற்றிச் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteஇணையத்திருட்டு அவ்வப்போது நடப்பதுதான். இப்போது யாரைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
பொதுவாத் தான் சொல்றேன் ஶ்ரீராம். :)
Deleteஎல்லா ஊரிலும் சில இரக்க நெஞ்சங்கள் உண்டு! இணையத் திருட்டு அதிகரித்து விட்டது! அனுமதி பெற்றோ அல்லது நன்றி கூறலோ கூட இல்லாமல் பல பதிவுகள் வெட்டி ஒட்டபடுவது வேதனையான ஒன்றுதான்!
ReplyDeleteஆமாம், சுரேஷ், நான் பலமுறை வேதனை அனுபவித்திருக்கேன்.:(
Deleteதிருடர்கள் தானாக தான் திருந்த வேண்டும் அம்மா...
ReplyDeleteஆமாம், டிடி, அவர்களுக்கும் மனசாட்சினு ஒண்ணு இருக்கணுமே!
Deleteஇணையத் திருட்டு பற்றி நான் சொல்ல மாட்டேன் செய்பவர்களிடம் நேரிடையாகக் கேட்டிருக்கலாமே என்னும் கருத்து முன்பு வந்தது
ReplyDeleteஎன்னோட பதிவுத் திருட்டுகள் குறித்துப் பலமுறை நேரிடையாகக் கேட்டும், எனக்காகப் பலர் கேட்டும் திருடியவர்களிடமிருந்து பதில் இல்லை. இப்போது யாரைக் குறித்து எழுதி இருக்கேனோ அவர்களையும் தனி மடலில் சொல்லி விட்டேன். பதிலே இல்லை. என்ன செய்வது? :(
Deleteவருத்தம் தரும் விஷயம்!.. நானும் பல முறை பார்த்தாச்சு!.. கூகுள் க்ரூப்களில் எழுதியதை முகநூலில் அவர்கள் பெயரில் போட்டுக் கொண்டதை, அங்கேயே கமென்ட் போட்டுச் சொல்லியும் பிரயோஜனமில்லை.. 'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்' தான் நினைவு வருது!..
ReplyDeleteவாங்க பார்வதி, இணையத் திருடர்கள் தாங்களாகவே திருந்தணும். வேறே வழியில்லை. போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே?
Deletehttp://sivamgss.blogspot.in/2015/04/15.html//
Deleteஇங்கே பாருங்க பார்வதி.:)
இணையத் திருட்டுக் குறித்துச் சில எண்ணங்கள்!
ReplyDeleteஇவையல்ல - இவை
இணையத் திருட்டுக் குறித்துச் சிந்திக்க வைக்கும் எண்ணங்கள்!
நன்றி காசிராஜலிங்கம்.
Deleteform of flattery?
ReplyDeleteஅப்பாதுரை, நீங்கள் பார்க்கும் கோணம் புரியலை எனக்கு!
Deleteஓஹோ. இன்னும் தொடருகிறதா. நல்ல வேளை என் பதிவில் படங்கள் காணாமல் போகிறதே எப்படி என்று நினைத்தேன். இதுதானா காரணம்.அநியாயாமாக இருக்கிறதே படங்களையாவது திருப்பிப் போட்டுக் கொள்ளலாம் ..கருத்தைத் திருடினால் என்ன செய்வது அதுவும் உங்கள் கடின உழைப்பு. இப்படி வீணாகலாமா. வருத்தமாக இருக்கிறது கீதா.
ReplyDeleteஆமாம், தொடர்கிறது வல்லி. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு காத்திருக்க வேண்டியது தான். :(
Deleteஇணையத்திலுள்ள படங்கள், சித்திரங்கள், ஆடியோ-விடியோக்கள், குறும்படங்கள், சுற்றுலா படப்பிடிப்புகள், யூட்யூப் சமாச்சாரங்கள் இதெல்லாம் கூட பிறர் உழைப்பில் பிறந்தது தானே? இன்னாரிடமிருந்து எடுத்தது இது என்று ஏன் போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? குறைந்தபட்சம் அவற்றை எடுத்ததற்கு ஒரு நன்றியாவது.. ஹூம்.. என் பதிவுலக அனுபவத்தில் பார்த்ததேயில்லை! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?..
ReplyDeleteபடங்கள், சித்திரங்களுக்கு கூகிளுக்கு நன்றி சொல்லிப் போட்டிருக்கேன். ஆடியோ, வீடியோக்கள் பகிர்வதில்லை. குறும்படங்களும் பகிர்ந்ததாய் நினைவில் இல்லை. சுற்றுலாப் படப்பிடிப்புகள், யூ ட்யூப் போன்றவையும் அரிதே! எப்போவானும் மற்றவர் பகிர்ந்ததை இங்கே சொன்னது உண்டு.
Deleteஎனக்கென்னவோ நீங்கள் திருடப்பட்டபதிவைச்சுட்டி எழுதினால் ஒரு அத்து இருக்கும்.
ReplyDeleteஎன்னைமாதிரி 'சுமார்பதிவு குமார்'களுக்கு இந்த விசனம் இல்லை.. என்னுதை யார் திருடப் போறாங்க ?!
ம்ம்ம்ம், பலமுறை திருடப்பட்ட பதிவின் சுட்டி கொடுத்து இருக்கேன். இம்முறை வேறே மாதிரிப் பிரச்னை. உங்க பதிவு சுமார்னா நானெல்லாம் எங்கே போக? என்னுடையது குறிப்புகள் தேடி எடுத்துப் போடுவது எனில் உங்களுடையது எல்லாம் அக்மார்க் ஒரிஜினல். அதைத் திருடினால் மாட்டிண்டு முழிக்கணுமே! :)
Deleteமதுரை....... உங்கள் ஊராயிற்றே.....
ReplyDeleteபதிவு திருட்டு..... தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆமாம், எத்தனை சொல்லியும் திருந்துவது இல்லை! :(
Deleteமதுரை, சொந்த ஊராக இருந்தாலும் அந்தப் பழைய வாழ்க்கை முறை இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. :)