ஹிஹிஹி இன்னிக்கும் ஒரு சமையல் குறிப்புத் தான் போடப் போறேன். ஆனால் அதைப்போடும் முன்னர் சில எண்ணங்கள்.
தில்லி மாநில அரசில் முதலமைச்சர் என்பவர் மேயர் பதவியில் உள்ள மேயருக்கு ஒப்பானவர். துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக நிர்வாக முடிவுகள் எடுக்கலாம். அவருக்கு அதற்கு அதிகாரம் உண்டு. கெஜ்ரிவால் தன்னுடைய பெயர் தினமும் ஊடகங்களில் வரணும் என்பதற்காக இப்படிப் பண்ணுகிறாரா அல்லது அவருக்கு உள்ளபடியே இதைக் குறித்துத் தெரியாதா என்பது தான் புரியவில்லை. முதலமைச்சராகப் பதவி ஏற்கும் முன்னரே இதைக் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் கவர்னர் செய்வதைத் தப்பென்று சொல்லலாம். ஆனால் டெல்லி மாநிலத்தைப் பொறுத்தவரை கவர்னர் முதலமைச்சரிடம் எதுவும் கேட்காமல் முடிவு எடுக்கலாம். முதலமைச்சர் துணை நிலை ஆளுநரைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது. இது தான் உள்ள நிலைமை!
ஆனால் கெஜ்ரிவால் புரிஞ்சுக்கற டைப் இல்லை. உடனே மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார். போகப் போகப்பார்க்கலாம் இது எப்படிப் போய் முடிகிறது என்று.
தமிழ்நாட்டில் +2, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதிலே முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலெல்லாம் வந்திருக்கிறது. இவ்வளவு மதிப்பெண்கள் எப்படிப் பெற முடிகிறது? அதுவும் மொழிப்பாடத்திலும், சோஷியல் சைன்ஸ் என்னும் பாடத்திலும் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியுமா? இத்தனை மதிப்பெண்கள் பெற்று நான் மருத்துவச் சேவை செய்யப் போகிறேன்; என்றோ அல்லது இஞ்சினியராகப் போகிறேன் என்றோ, அல்லது சி.ஏ. படிக்கப் போகிறேன் என்றோ சொல்லும்/சொன்ன மாணவ, மாணவிகள் அதை நிறைவேற்றினார்களா? தெரியலை. இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து என்ன பலன்? இதன் மூலம் அவர்கள் சுய கண்டுபிடிப்பாக எதையேனும் கண்டு பிடிக்க முடிந்ததா? அல்லது வேறு வழியில் அவர்கள் படிப்பு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ பலன் கொடுத்ததா? பின் இந்தப் படிப்பினாலும், மதிப்பெண்களினாலும் என்ன பலன்? வருடா வருடம் வெளிநாட்டு விஞ்ஞானிகளே புதிய கண்டுபிடிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து இன்னமும் ஏன் ஓர் விஞ்ஞானி கூட வரவில்லை?
ஹிஹிஹி, எல்லோரும் பாலபிஷேஹம் பண்ணுவாங்க, தயிர், சந்தனம், தேன் அப்படினு அபிஷேஹம் பண்ணுவாங்க. நாம காஃபி அபிஷேஹம் இல்ல பண்ணினோம். அதுவும் நம்ம மடிக்கணினிக்கு! இந்த மாதிரி யாரானும் செய்திருப்பீங்க? வாய்ப்பே இல்லை! :)))) இப்போ சமையல் குறிப்புக்குப் போகலாமா?
இந்த வெங்கடேஷ் பட் (விஜய் தொலைக்காட்சியில் தாங்க) சும்மா இருக்காமல் நாம வீட்டில் செய்து பார்க்கும்படியான பதார்த்தங்களையே செய்யறார். அந்த முறையில் நேற்று நான் செய்தது மங்களூர் பன் எனப்படும் வாழைப்பழ பூரி. செய்முறை பார்க்கலாமா?
நாங்க ரெண்டு பேர் தானே! அதனால் இரண்டே இரண்டு ஏலக்கி வாழைப்பழம், நன்கு கனிந்தது.
நான்கு அல்லது ஆறு டீஸ்பூன் சர்க்கரை
அதில் கொள்ளும் அளவுக்குக் கோதுமை மாவு
ரவை ஒரு சின்னக் கரண்டி(அவர் சொல்லலை, ஆனால் நான் சேர்த்தேன்)
உப்பு,
தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்
ஒரு சிட்டிகை சமையல் சோடா
முதலில் வாழைப்பழத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்தேன்.
பின்னர் அதில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தேன்.
மீண்டும் நன்கு கலக்கினேன். தயிர் பதம் வந்தது.
இப்போது அதில் ரவையையும் தேவையான கோதுமை மாவையும் சேர்த்தேன். வாழைப்பழக் கலவையின் ஈரப்பதத்தைப் பொறுத்து கோதுமை மாவைச் சேர்க்கணும்.
உப்பு, சமையல் சோடா, தயிர் சேர்த்து நன்கு பிசைந்தேன்.
ஒரு மணி நேரம் ஊற வைத்தேன். இதுக்குத் தொட்டுக்கக் காரமான தேங்காய்ச் சட்னி பண்ணச் சொல்லி இருந்தார். ஆனால் நான் மத்தியானம் தான் காரமாகக் கொத்துமல்லி+சிவப்பு மிளகாய்ச் சட்னி அரைச்சிருந்தேன். ஆகையால் அதையே வைச்சுட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயை அடுப்பில் சூடாக்கிக் கொண்டு பின்னர் அடுப்பைத் தணித்துக் கொண்டு நிதானமான சூட்டில் பூரிகளைக் கொஞ்சம் கனமாகவே இட்டுப் போட்டு எடுக்க வேண்டும்.

பூரிகளை எண்ணெய் காயாமல் போட்டால் எண்ணெய் குடிக்கும். எண்ணெய் காய்ந்ததுமே போட வேண்டும். எண்ணெய் குடிப்பதில்லை. நான் குறைந்த அளவு எண்ணெயே வைத்துப் பொரித்து எடுக்கும் வழக்கம். ஏனெனில் சுட்ட எண்ணெய் மிஞ்சினால் பயன்படுத்துவதில்லை. நேற்றைய சுட்ட எண்ணெயை இன்றே காலியாக்கும்படியாக சமையல் திட்டம் போட்டுக் கொண்டு விடுவேன். அதற்கேற்பவே சமைப்பேன். ஆகவே நேற்று மிஞ்சிய சுட்ட எண்ணெய் இன்றைய கத்திரிக்காய்க் கறியில் தீர்ந்து விடும். வெகு நாட்கள் சுட்ட எண்ணெயை வைத்துக் கொண்டு மறுபடி மறுபடி சுட வைத்துப் பயன்படுத்துவது இல்லை. சர்க்கரை சேர்ப்பதால் ரொம்ப இனிப்பாக இருக்குமோ என்றே நினைத்தேன். அப்படி இல்லை. பூரியைப் பிய்த்தால் உள்ளே வெற்றிடத்தோடு இரு பக்கமும் உப்பலாக வரும். வரவேண்டும். அதுதான் சரியான பதம்.
வர வர வெங்கடேஷ் பட் புரோகிராம் பாத்து பாத்து ஒரே மங்களூர் ஐட்டம்ஸா ஓடுது ! அடுத்தது மங்களூர் போண்டாவா ? :)
ReplyDeleteவாங்க ஷோபா, இந்த மோசமான தொடர்களுக்கு எல்லாம் இது பரவாயில்லையே! மங்களூர் போண்டோவெல்லாம் அதுக்கு அதான் பெயர் தெரியறதுக்கு முன்னாடி இருந்தே பண்ணிட்டு இருக்கேன்! :) கல்யாணம் ஆகிச் சென்னை வந்ததும் தான் அதுக்கு மங்களூர் போண்டானு பேர் என்று தெரியும். :)
Deletekalyanathukku munnaadiye samaippela? !!! naan saadam kooda vachathillai :(
Deleteஆமாம், போன வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்சதுக்குத் "தங்க விழா" கூடக் கொண்டாடினேன். :) சமைச்சு வைச்சுட்டுப் பள்ளிக்குப் போன நாட்கள்! :) அதிலும் முதல் முதல் வத்தக்குழம்பு வைச்சது ஒரு காமெடி என்றால் அது நல்லா இருக்குனு வீட்டில் எல்லோரும் சொன்னது இன்னொரு காமெடி! :)
Delete/இக்காலத்தில் நிறைய மதிப்பெண்கள் வாங்குபவரைப் பற்றியே / தற்சமயம் நிலவி வரும் சூழ்நிலையில் கேக் ஊட்டப்பட்டு ஊக்கப்படுத்தப் படுபவர்கள் முகவரி தெரியாமல் போய்விடுகிறார்கள்/ என்று கல்வி இனி ஒரு விதி செய்வோம் பதிவில் எழுதி இருந்தேன் அரசியல்கருத்துக்கள் சொல்லும் போது சொல்வது சரியானதுதானா என்று தெரிந்திருக்க வேண்டும்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், நான் சொன்னது சரிதான் என்பதைப் பலமுறை உறுதி செய்து கொண்டபின்னரே எழுதி இருக்கேன். இன்றைய தமிழ் தினசரியிலும் இது தான் தலையங்கமாகவும் வந்திருக்கிறது. :))))
Deleteமதிப்பெண் பெற்றவர்கள் இத்தனை வருடங்களில் சொன்ன "ஏழைகளுக்குச் சேவை" பற்றி நானும் ஃபேஸ்புக்கிலாவது பகிர நினைத்த அதே எண்ணங்கள்!
ReplyDeleteபூரி செய்து பார்க்க ஆவலாக உள்ளது. ஏலக்கி? சட்னி விவரம்?
வாங்க ஶ்ரீராம், உங்க எண்ணங்களை நீங்களும் பகிருங்கள்! நான் மதுரையில் படிச்சப்போ எனக்கு சீனியர் ஆன ஒரு பெண் மாநில அளவில் எஸ் எஸ் எல்சி (அப்போல்லாம் பதினோராம் வகுப்பு) தேர்ச்சி பெற்று தினத்தந்தி பரிசு பெற்றுப் படமெல்லாம் கூட வந்தது. (அப்போல்லாம் தினத்தந்தி மட்டுமே இதெல்லாம் வெளியிட்ட ஒரே பத்திரிகை) நான் எஸ் எஸ் எல் சி முடிக்கிறதுக்குள்ளே அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகி கர்ப்பமாக இருந்தாள்! :) நான் மருத்துவர் ஆகப் போறேன் என்பது தான் அவங்க சொன்னதும்!
Deleteசென்னையில் "ஏலக்கி" வாழைப்பழத்தை "பெங்களூரா" என்றும் அழைக்கின்றனர். சின்னதாகத் தான் இருக்கும். தோல் மெல்லிது. சுவை நன்றாக இருக்கும். சாதாரணமா என்னைப் பழம் சாப்பிட வைக்கக் கஷ்டப்படும் ரங்க்ஸ் இந்தப் பழம் வாங்கினால் தனக்கு இல்லையேனு நினைச்சுப்பார். அவ்வளவு பிடிக்கும் இந்தப் பழம் எனக்கு! :))))
Deleteசட்னி சாதாரணமாக நாம் அரைக்கும் தேங்காய்ச்சட்னியையே பச்சை மிளகாய் கூட வைத்து அரைக்கச் சொன்னார். அவர் பூண்டும் சேர்த்தார் சட்னியில். தேங்காய்ச் சட்னியில் பூண்டு எங்களுக்குப் பிடிக்காது. பூண்டே பிடிக்காது! :) கொத்துமல்லிச் சட்னி நான் எப்போவும் போல் மி.வத்தல், பெருங்காயம், உப்பு, புளி வைத்து அரைத்து கடுகு, உபருப்பு தாளித்தேன்.
Deleteபூரி உப்பலா வருது ஆனா உள்ள வெற்றிடம் இருக்கா, பரவா இல்லியே : )
ReplyDeleteஹிஹிஹி, தம்பி, நமக்கு உள்ளே மசாலா ஏதும் இருந்தால் தானே! அதைத் தான் சிம்பாலிக்கா சொல்லி இருக்கேன். புரிஞ்சுண்டதுக்கு நன்னி ஹை! :)
Deleteஇந்த bun episode நான் பாக்கல. நீங்க பண்ணிருக்கிறது பார்க்கவே நன்னா இருக்கு. try பண்ணிட வேண்டியதுதான்! பழைய டிபனல்லாம் பண்றதுக்கு இப்படி புதுசா பண்ணி பார்த்தா போச்சு!
ReplyDeleteவாங்க ராதா பாலு, பண்ணிப் பாருங்க. ரொம்பவே சுலபம் தான்!
Deleteஎங்க வீட்டுல டீ அபிஷேகம் நடந்தது. என் பிள்ளை செய்தான்.
ReplyDeleteநிறைய மதிப்பெண்கள் பெற்று வெளிநாடு போய்விடுகிறார்கள். இங்கு யார் இருக்கிறார்கள்? நீங்கள் சொல்லியிருக்கும் பாயிண்ட் ரொம்பவும் யோசிக்க வேண்டிய ஒன்று. எப்படி இத்தனை மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பது விடை தெரியாத வினா தான்.
வாழைப்பழ பூரி குறித்துக் கொண்டேன்.
பல்சுவை தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.
ஹாஹா, இத்தனை வருடங்களாக மடிக்கணினியை வைச்சுட்டுத் தான் காஃபி, டீ குடிக்கிறேன். இன்னிக்கு என்னமோ அபிஷேஹம்! :))) எப்படினே புரியலை. வாயிலே விட்டுக்க வேண்டியது அதன் மேலே விழுந்துடுத்துனு நினைக்கிறேன்.
Deleteரஞ்சனி, நிறைய மதிப்பெண்கள் பெற்றதிலேயே எனக்கு சந்தேகம். முக்கியமாப் பாடத்திட்டத்திலும் தேர்வுக் கேள்விகளிலும். அதிலும் ஏதானும் கஷ்டமான கேள்வி என்றால் உடனே கருணை அடிப்படையில் அந்தக் கேள்விக்கான முழு மதிப்பெண்களையும் கொடுத்துடறாங்க. குழந்தைகளைக் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறது வேறே! இப்படி மதிப்பெண்களை அள்ளிப் போட்டு அவங்களோட படிப்பின் தரத்தைக் குறைப்பது என்பது வேறே. சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டமே சரியில்லையோனு தோணுது! அடுத்த வருஷம் ஆயிரம் பேருக்கும் மேல் முதல் மதிப்பெண்கள் பெறுவார்களா? இது யோசிக்க வைக்கும் கல்வித் திட்டமா?
Deleteநிறைய மதிப்பெண்கள் பெற்றதினால் வெளிநாடு போயிட முடியாது ரஞ்சனி. அடுத்து +2 விலும் அவங்க தங்களோட திறமையைக் காட்டணும். கல்லூரிப் படிப்பிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் கற்பதைப் புரிந்து கொண்டு செயல்படத் தெரிய வேண்டும். இங்கே புரிதலுடன் கூடிய கல்வி பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறதா?
Deleteஎனக்குத் தெரிந்த இரு பெண்கள் பத்தாம் வகுப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுப் பள்ளியில் விருதுகள் எல்லாம் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் +2 தேர்வில் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியவில்லை. அதன் பின்னர் கல்லூரிப் படிப்புக் கேட்கவே வேண்டாம். பி.காம் எடுத்துவிட்டு மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி! ஆனால் Dr/Cr. கேட்டால் சொல்லத் தெரியாது. அவ்வளவு ஏன்? அவங்க குழந்தைகளுக்கே பாடத்தில் உதவ முடியலை! இது தான் நம் கல்வியின் லட்சணம்.
நமக்குள இருக்கறதுக்கு எங்க மசாலா?. அது தேமேன்ன ஒரு சுத்த சத்துவ வஸ்து. மசாலா நம்ப மனசுக்கு த்தான். மணம் குணம் நிறைந்தது:) வாழைப்பழ பூரி இங்க கொஞ்சம் அனுப்பறது. குளிருக்கு படிச்சே சாப்பிட்டுட்டேன்.will try once :))).
ReplyDeleteஎங்கே தேமேனு இருக்கு. கண்டதையும் நினைச்சுட்டு இருக்கே! மசாலா இருந்தால் அப்படி எல்லாம் நினைக்கச் சொல்லாது! :)
Deleteஎனது உறவினர் பெண் ஒருத்தி வரும் வருடம் +2. SAT பரீட்சை எழுதி வெளிநாட்டில்தான் படிப்பேன் என்று ஒரே பிடிவாதம். முதல் முறை எழுதியதில் அவ்வளவு நல்ல ராங்க் வரவில்லை. மறுபடி எழுதியிருக்கிறாள். இந்தியாவில் எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை என்று அடம். இங்கே எந்த யூனிவர்சிட்டியிலும் அட்மிஷன் பார்க்காதே என்று அம்மாவிடம் சொல்லுகிறாள். இதை மனதில் வைத்துத்தான் நல்ல மதிப்பெண் எடுத்தால் வெளிநாடு சென்று விடுகிறார்கள் என்று எழுதினேன்.
ReplyDeleteபாடங்களைப் புரிந்துகொண்ட படிக்கிறார்களா என்பது புரியாத புதிர் தான். பள்ளிக்கல்வி வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கிறதா என்பது இன்னொரு கேள்வி. தோல்வி என்றவுடன் தற்கொலைக்கு போய்விடுகிறார்களே!
நல்லாப் படிப்பாளா இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கல்வி முறை சுத்தமாகச் சரியில்லை. :( தொலைக்காட்சியில் கீழே ஓடும் செய்திகளைப் படித்தால் எத்தனை எழுத்துப் பிழைகள் கண்களிலே படுகிறது! அதோட இப்போ எல்லோரும் அழாதே என்றே சொல்வதில்லை. "அழுகாதே!" என்கிறார்கள். அழுகுவதற்கு என்ன மனிதர்கள் பழமா? வர மாட்டாங்க என்பதற்கு வரமாட்றாங்க என்கிறார்கள். :( உச்சரிப்பும் மோசம், எழுத்தும் மோசம்!
Deleteமாட்றான் என்பதன் அர்த்தமே மாறுபடுமே! :(
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன்அசத்தல் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன், கட்டாயமா வந்து பார்க்கிறேன் உங்க பதிவை.
Deleteதொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னது போல், மனப்பாடம் செய்ததை பரிட்சையில் அப்படியே கொட்டினால்,இந்த நிலைமை தான்! தொலைக்காட்சி பேட்டியில் ஒரு பெண், 'புரிந்து படித்தேன்' என்று அழுத்திச் சொன்ன போது ரசித்தேன்!! ப்ளூ பிரிண்ட்படி, இந்தப் பாடத்தில் இத்தனை ஒரு மார்க், இந்தப் பாடத்தில் நெடுவினா என்று கொடுத்து விட்டு, மைனசை பிளஸ்ஸா மாத்திக் கேட்டால் கூட பேப்பரில் அதை ஒரு ந்யூசாகப் போடுகிறார்கள்! இந்த ரேட்டில் அடுத்த வருஷம் ஆயிரம் பேர் முதல் மதிப்பெண் வாங்க கட்டாயம் சான்ஸ் இருக்கு!
ReplyDeleteஎன் மகன்களுடன் தொடர்ந்து 10வதும் +2வும் படித்த அனுபவத்திலேயே என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்! நல்ல வேளையாக, என் மக்கள் ப்ளூ பிரிண்ட் பார்க்காமல், மனப்பாடம் செய்யாமல்,புரிந்து கொண்டே படித்தார்கள்! என் இளைய மகன் தற்போது ப்ளஸ் டூவில் மிக நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருக்கிறான்!
ஆமாம், முன் கூட்டித் தயாரிக்கப்பட்ட கேள்வி, பதில்கள். திரும்பத் திரும்ப அதில் உள்ளவை தான் வரும். ஹிந்தி பிரசார சபா சார்பில் நடத்தப்படும் தேர்வுகளிலும் இப்படித் தான் கேள்வி--பதில்கள் அடங்கிய புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு படித்து "ப்ரவீன் ப்ரசாரக்" வரை தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகின்றனர். இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அவங்களாலே இலக்கணப் பிழை இல்லாமல் ஹிந்தி பேசவோ, எழுதவோ முடியாது. ஆனால் ப்ரவீன் படிச்சதாகச் சொல்லிப்பாங்க! :( வட மாநிலம் போனால் தான் அவங்க படிச்ச ஹிந்திக்கும், அங்கே உள்ள ஹிந்திக்கும் உள்ள வேறுபாடுகள் புரியும். அது போல இம்மாதிரித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கும் வெளி மாநிலம் சென்றாலோ அல்லது கல்லூரிக் காலத்திலோ அவங்க படிச்சதுக்கும் இப்போப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் புரிய வரும். பலரும் மன அழுத்தம் தாங்காமல் படிப்பை மேல்கொண்டு தொடரமுடியாமல் தவிக்கின்றனர். :(
DeleteHa Ha ! Athu pakkarathu:) Ninaikkala! Manasu thaan kandathaiyum ninaikkiRathu!!
ReplyDeleteஎது பார்க்கிறதுங்கறீங்க?
Delete// அவர்கள் படிப்பு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ பலன் கொடுத்ததா...? // அப்படி கேளுங்க அம்மா...
ReplyDeleteவாழைப்பழ பூரி செய்து பார்க்கிறோம்...
செய்து பாருங்க டிடி. நல்லாவே இருக்கு. குழந்தைகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாகச் செய்து கொடுக்கலாம்.
Deleteவாழைப்பழம் எனக்கு ஒத்துக் கொள்ளுமா தெரியவில்லை.
ReplyDeleteபூரி நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்குச் செய்யச் சொல்லுகிறேன் கீதாமா.
ஆமாம் வல்லி, வாழைப்பழம் மட்டுமில்லை. அதிலே சர்க்கரையும் சேர்க்கணும். பரவாயில்லைனா ஒரு பாதி பூரி ருசி பாருங்கள்! :( அதிகம் சாப்பிட்டால் அப்புறமா நீங்க தான் கஷ்டப்படணும்.
Delete