எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 31, 2015

இறைவன் இருக்கின்றான்!

கடவுள் தன்னோட இருப்பை மீண்டும் மீண்டும் காட்டி வருகிறார். பலமுறை உணர்ந்து அனுபவித்தாலும் முதல் முதல் மும்பை சென்றபோது அந்த அதிசயத்தை எங்கள் குடும்பமே உணர்ந்தது.

 இங்கே
 இங்கே
 இங்கே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். திக்குத் தெரியாத காட்டில் இருந்த எங்களை, வழி தெரியாமல் தொலைந்து போக இருந்த எங்களை அப்படியே சற்றும் அலுங்காமல், குலுங்காமல் குடும்பத்திடம் ஒப்படைத்தார் கடவுள்!  அதன் பின்னர் எங்கள் மகள் திருமணத்தின் போது பையருக்கு அடிபட்டுப் பிழைத்தது இன்னொரு அதிசயம்.
 இங்கே
இங்கே
இங்கே
மேற்கண்டசுட்டிகளில் பார்க்கலாம்.  அது போன்றதொரு நிகழ்வு இந்த வார ஆரம்பத்திலும் நடந்தது.   யு.எஸ்ஸில் இருக்கும் பையருக்குப் பக்கத்து மாநிலத்தின் நியூ ஆர்லியன்ஸில் ஒரு திட்ட நிறைவுக்காக வாராவாரம் நான்கு நாட்கள் போக வேண்டும். முதல்நாள் இரவிலிருந்தே மழை கொட்டிக் கொண்டு இருந்திருக்கிறது. மழை என்றால் அப்படி ஒரு மழை! என்றாலும் பையர்  எப்போதும் போல் இந்த வாரமும் செவ்வாய்க்கிழமை அதிகாலை கிளம்பி இருக்கிறார். வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள ஃப்ரீவே எனப்படும் நெடுஞ்சாலையை அடைகையில் ஒரு திருப்பத்தில் திரும்புகையில் அங்கே தேங்கி இருந்த தண்ணீரின் காரணத்தால் சறுக்கி இருக்கிறது. நெடுஞ்சாலையில் போக வேண்டிய குறைந்த பட்ச வேகத்தில் போய்க் கொண்டிருந்தவரால் வண்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. வண்டி சக்கரம் போலச் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. மிகவும் முயற்சி செய்து கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது அது கொஞ்சம் பின்னால் போய் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி இருக்கிறது.

மோதிய வேகத்தில் பின்பக்கம் முழுதும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. நல்லவேளையாக முன் பக்கமாய் ஏதும் ஆகவில்லை.  அப்படி ஆகி இருந்தால் பையர் பிழைத்திருப்பதே கஷ்டம்! அதோடு அந்த நேரம் அந்த வழியில் வேறு வண்டிகளும் ஏதும் வரவில்லை. வேறு வண்டி ஏதானும் அதே வேகத்தில் வந்திருந்தால் பெரிய மோதல் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக அப்போது வண்டி ஏதும் வரவில்லை.  இதுவும் இறை அருளே!  இது இன்னொரு அதிர்ஷ்டம். வண்டி சுக்கு நூறானதோடு போச்சேனு கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். பணம் போனால் சம்பாதிக்கலாம். உயிருக்கு ஹானி ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய முடியும்! கண்ணுக்குத் தெரியாத கடவுள் அங்கே பிரத்தியட்சமாக ஆகிப் பையரைக் காப்பாற்றி இருக்கிறார். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த எத்தனையோ அதிசயங்களில் மிகப் பெரிய அதிசயம் இது தான். தன் இருப்பை ஒவ்வொரு கணமும் இறைவன் நிரூபித்து வருகிறான். இறைவனுக்கு நன்றி.  எந்த உருவிலாவது வருவான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. 

29 comments:

  1. நம்பினால் நிச்சயம் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நம்பிக்கை உண்டு டிடி! :)

      Delete
  2. இறைவன் அருளால் உங்கள் பையனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதனை அறிந்தவுடன் ஒரு நிம்மதி. இறைவனுக்கு நன்றி. (நீங்கள் பையர் என்று குறிப்பிடுகிறீர்கள். பையன் என்று எழுதுவதே சரி.)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. "பையர்" என விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்து இப்போது அப்படித் தான் வருகிறது. அநேகமாக என்னைப் பார்த்துப் பலரும் இப்போது "பையர்" என்றே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். :)))))

      Delete
  3. பகிர்வின் கடைசி வரிகளில் சத்தியம் பிரகாசிக்கிறது!

    அம்மா!.முதல் செட் சுட்டிகள் எனக்கு ஏனோ திறக்கலை.. இரண்டாவது செட் சுட்டிகளில், முதலாவதில்,லிங்க் ஏனோ வேலை செய்யலை.. என் கணினியில் மட்டும் தான் இப்படியான்னு தெரிஞ்சுக்க கேக்கறேன்!...

    ReplyDelete
    Replies
    1. நேத்துப் பகிர்ந்தப்போ வேலை செய்தது. இப்போ எனக்கும் திறக்கலை, பார்வதி, சரி செய்யறேன். :)

      Delete
    2. இப்போ எனக்குச் சரியா இருக்கு. மத்தவங்களுக்கும் சரியா இருக்கானு பார்த்துட்டுச் சொல்லுங்க! நன்றி.

      Delete
    3. சரியா இருக்கு அம்மா!...நாம எவ்வளவு கவனமாயிருந்தாலும், சில சமயம் கூகுளார் இப்படி செய்துடறார்!.... ரொம்ப நன்றி அம்மா!

      Delete
  4. Thank God all is well. You must be anxious to see your son now . HE will take care of everything .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரெண்டு பேருக்கும் பார்க்கணும்னு தான் இருக்கு! ஆனால் எங்கேயோ இருக்கிறாங்களே! :( இறைவன் தான் காத்து ரக்ஷிக்க வேண்டும்.

      Delete
  5. ஆம் இறைவனின் கருணையிலே நம்மை அண்டுபவை எல்லாம் அதிகம் தாக்காமல் சென்றுவிடுகின்றன. என்றென்றும் நானும் நினைத்துக் கொள்வது இதுதான் கீதா மேம்.

    ReplyDelete
    Replies
    1. மலை போல் வந்தது பனி போல் விலகிற்று என்பார்கள். அது போலத் தான் தேனம்மை! இறைவனின் கருணை தான் என்றென்றும் காக்க வேண்டும்.

      Delete
  6. எந்த நிகழ்வுக்கும்காரணம் கற்பிக்க மனம் முனையும் கடவுளைக் காரணம் காண்பவர்களுக்கு அது திருப்தி தரும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை தான் ஐயா முக்கியம். அந்த நம்பிக்கை இருந்தாலே போதும். தானே இறைவன் வருவான். எந்த உருவிலாவது காட்சி தருவான்.

      Delete
  7. நல்லபடியாக இருக்கட்டும் உங்கள் பையர். அவருக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம். அவரைக் காத்தருளிய பெருமாளுக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி. உண்மையில் இது ஒரு அதிசயமே!

      Delete
  8. காரின் உள்ளே இருந்த அந்த நிமிடத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். (மனக்) கட்டுப்பாடு ஒரு நொடி தொலைந்திருந்தாலும் என்ன ஆகியிருக்கும்? செய்தி கேள்விப்பட்டபோது எப்படிப் பதறி இருப்பீர்கள் என்றும் உணர முடிகிறது. கடவுள் காப்பாற்றினார்.

    முந்தைய சுட்டிகள் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், முந்தைய சுட்டிகள் தெரியாதவர்களுக்காக மட்டுமே! :)

      Delete
  9. நம்பினார் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு. May God Bless.

    ReplyDelete
  10. எல்லாம் பெருமாள் க்ருபை! மகனுக்கு எங்கள் ஆசிகள் . நல்லா இருக்கணும்!

    போனவாரம், மகளின் கார் விபத்துக்குள்ளாகிருச்சு. ரவுண்டபௌட்டில் வரும்போது ஒரு ட்ரக்குடன் பக்கவாட்டில் ட்ரைவர் ஸைடில் மோதல். வண்டிமுன் & பின் நல்ல அடி. நசுங்கிப்போச்சு. நல்லவேளை பெருமாளனுக்ரஹத்தால் இவளுக்கு அடிஒன்னும் இல்லை. நல்ல ஷாக் மட்டும். சேதி கேட்டமுதல் தூக்கமேவரலைப்பா:(

    வண்டியை ரிப்பேருக்கு அனுப்பினால் ரைட் ஆஃப் பண்ணிட்டாங்க. வேறவண்டிக்கான அலைச்சல் இந்த வீக் எண்டில். இன்னிக்கு இங்கே அரசு விடுமுறை என்பதால் நாளைக்குப் ஃபைனலைஸ் செஞ்சு பணம்கட்டணும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையாய் இங்கே வாகனங்கள் பின்னால் வரவில்லை என்பதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது! சாதாரணமாகப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை! அங்கேயும் வண்டியை ரைட் ஆஃப் பண்ணிட்டாங்க. இன்ஷூரன்ஸ் காரங்க கூடப் பார்த்துட்டுத் தலையை ஆட்டிட்டாங்க. ஏதோ கொஞ்சம் போல் வரும் போல! புது வண்டியோட டயருக்குக் கூட அது வராது! :( புதுசு தான் பார்த்துட்டு இருக்கார் பையர். இன்னொரு வண்டி இருக்குன்னாலும் அது மருமகள் அலுவலகம் செல்ல வேணும். இப்போதைக்கு வாடகை வண்டியில் தான் போயிட்டு இருக்கார். என்னவோ போங்க! வெளியே போனவங்க, வெளிநாட்டில் இருக்கிறவங்க எல்லாம் எப்படி இருக்காங்களோனு இங்கே உட்கார்ந்து தவிக்கிறதைப் போல் கொடுமை வேறே இல்லை! :(

      Delete
  11. கடவுள் துணை என்றும் உண்டு. நாங்களும் பிரார்த்திக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி. உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      Delete
  12. நம்பினோர் கைவிட படார் கீதாம்மா (அக்கா ) :) . சில விஷயங்கள் உணர்வுபூர்வமானவை .. வெளியில் சொல்லும் போது இது சாதரணமாகவே தெரியும் ஆனால் அந்த நொடி அந்த நிமிடம் நம் உள்ளம் கொண்ட அனுபவம் நமக்கும் அவனு(ளு )க்குமே வெளிச்சம் ...

    ReplyDelete
    Replies
    1. கண்ணன், என்னை விடப் பெரியவங்க எல்லாம் என்னை அம்மானு அழைக்கிறாங்க. நீங்க தாராளமா கீதாம்மானு சொல்லலாம். தப்பில்லை. :)))) ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றிப்பா. உண்மையில் இப்போ நினைச்சாலும் திக் திக் திக் தான். :(

      Delete
  13. வண்டியை நிதானமாக ஓட்டிச்சென்ற உங்கள் பையரின் கட்டுப்பாட்டுக்குப் பாராட்டுக்கள். விபத்தில் அதிகமாக அடிபடவில்லையே? வண்டி போனால் போகிறது. பையருக்கு வாழ்த்துக்கள்.

    (சில சமயம் கடவுள் ப்ரேக் ஷூக்களில் தண்ணீர் தேக்கத்தை உண்டாக்கி திடீரென்று இது போல் வண்டி சுழலச் செய்து விடுவார்.)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, பையர் கட்டுப்பாட்டுடன் இருந்ததோடு அல்லாமல் நல்ல நிதானமாகவும் செயல்பட்டிருக்கிறார். மற்றபடி காரின் மெகானிசம் எனக்குத் தெரியாது/புரியாது என்பதால் உங்கள் கடவுள் குறித்த விமரிசனத்துக்குப் பதில் சொல்ல இயலவில்லை. தெருவில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது என்றும் அடர்த்தியாகப் பெய்த மழையில் தெளிவாக ஏதும் தெரியவில்லை என்றுமே பையர் சொன்னார்.

      Delete
  14. ஜீஎம்பி ஐயா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
    http://drbjambulingam.blogspot.com
    http://ponnibuddha.blogspot.com

    ReplyDelete