சித்திராபௌர்ணமி அன்று ஶ்ரீரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம். ஆகவே நம்பெருமாள் ஒவ்வொரு வருடமும் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து அன்று பகல் முழுவதும் தங்கி மாலை ஐந்து மணிக்கு மேல் கஜேந்திர மோக்ஷம் முடித்துக் கொண்டு ஆஸ்தானம் திரும்புவார். கோயிலிலிருந்து கிளம்பி வரும் வழியெல்லாம் மண்டகப்படி கண்டருளும் நம்பெருமாளுக்கு எங்கள் குடியிருப்பு வளாகத்தின் பக்கத்தில் உள்ள வீட்டிலும் மண்டகப்படி உண்டு. இந்தப் படங்கள் அங்கே எடுத்தவை. மேல் படத்தில் மண்டகப்படிக்குள் நுழையும் பெருமாள்.
வெயில் காலம் என்பதால் பட்டுத் துணியால் திரை போட்டு மறைத்த வண்ணம் வருகிறார். கூடவே விசிறி போட்டுக் கொண்டும் ஒருவர். மண்டகப்படிக்கு உள்ளே பெருமாள் பல்லக்கைக் கீழே வைக்காமல் தாங்கிப் பிடித்தவண்ணம் ஶ்ரீபாதம் தாங்கிகள் நிற்கின்றனர்.
இதோ பெருமாளின் இடப்பக்கம் தெரிகிறதா விசிறி போடுவது?
இப்போது இன்னமும் நன்றாகப் பார்க்கலாம். மேலே தூக்கி விசிறியால் விசுறுகிறார்.
திருவிழாக் காலங்கள். எஞ்சாய்.
ReplyDeleteம்ம்ம்ம்ம், சாயந்திரம் காவிரிக்கரைக்குப் போக முடியலை. கூட்டம்! :(
Deleteஅந்நியப்படையெடுப்பில் அங்கே, இங்கே ஓடி ஓடி ஒளிந்து கொண்டதில் ஏற்பட்டிருக்கும்.//
ReplyDeleteஅப்பாதுரை ஜி என்ன சொல்லப்போகிறாரோ என்று
எனக்கில்லை,
பெருமாளுக்கே பயமா இருக்கு.
சுப்பு தாத்தா.
இதுக்கும் அப்பாதுரைக்கும் என்ன சம்பந்தம் சூரி சார்? புரியலை எனக்கு! அந்நியப் படையெடுப்பில் நம்பெருமாளை ஒளித்து வைத்த இடங்கள் எப்படி எப்படியோ இருந்தன. ஆகையால் முகபாகத்தில் தேய்வு ஏற்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். இதில் அப்பாதுரை எங்கே வந்தார்?
Deletefrom that angle , I agree . u r very much correct.
Deletesubbu thatha.
ஹிஹி..மொதல் தடவை படிச்சதுமே எனக்கு புரிஞ்சுது.. நான் தான் ஜூட் வுட்டுகினேன்..😑
Deleteஅப்பாதுரை! :)))))))))
Deleteமனிதர்கள் பேராசை பிடித்து அலையும்போது இம்மாதிரி ஒளிச்சு வைக்கத் தானே வேண்டி இருக்கு! இவர் மட்டுமா? சிதம்பரம் நடராஜர், மதுரை மீனாக்ஷி எனப் பல கோயில்களின் விக்ரஹங்களும் ஒளித்து வைக்கப்பட்டன. பாதுகாத்துப் பராமரிப்பு எங்கே செய்தார்கள்? சிலைகளின் கைகள், கால்கள், தலை என உடைத்தார்களே! சோம்நாத் ஒண்ணு போதுமே! :(
Deleteதிவ்ய தரிசனம்
ReplyDeleteஉங்களைப் புரிஞ்சுக்க முடியலை! ஒரு பக்கம் கோயில்கள், விழாக்கள் தேவையா என்கிறீர்கள்! இன்னொரு பக்கம் திவ்ய தரிசனம் என்கிறீர்கள்! :))))) உள்ளிருக்கும் இறை உணர்வு உங்களையும் மீறிக்கொண்டு வெளி வருகிறது என நினைக்கிறேன்.
Deletenaanum athaiye thaan ninaichen.
Deletesubbu thatha
வணக்கம்
ReplyDeleteதரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteசிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்
நன்றி காசிராஜலிங்கம்
Deleteஅருமையான படங்கள் அம்மா...
ReplyDelete/உங்களைப் புரிஞ்சுக்க முடியலை! ஒரு பக்கம் கோயில்கள், விழாக்கள் தேவையா என்கிறீர்கள்! இன்னொரு பக்கம் திவ்ய தரிசனம் என்கிறீர்கள்! :))))) உள்ளிருக்கும் இறை உணர்வு உங்களையும் மீறிக்கொண்டு வெளி வருகிறது என நினைக்கிறேன்./ உங்கள் மனநிலையில் கிடைத்ததைக் கூறினேன் கோவில்களும் திருவிழாக்களும் கலாச்சாரத்தைக் காக்கின்றன அந்த வகையில் அவை தேவையே. ஆனால் அவையே பகுத்தறிவுக்கு மாறாக நடக்கும் போது தேவையா என்கிறேன் பல நேரங்களில் என் மனதில் தோன்றுபவைக் கேள்விகள் தாங்கிய பதிவுகளாக வரும் பிறரின் மனோபாவங்களை மதிக்கிறேன்
ReplyDelete