ரொம்ப நாட்கள்/மாதங்கள் முன்னர் ஶ்ரீராம் கத்திரிக்காய் சாதம் பத்திக் கேட்டிருந்தார். இங்கே அதுக்குத் தடா இருந்ததாலே பண்ணவே இல்லை. இன்னிக்கு என்னமோ சட்டத்தை மீறணும்னு ஆசை. அதனால் கத்திரிக்காய் சாதம் தான் பண்ணினேன். அதற்குத் தேவையான பொருட்கள்:--
கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் பெரிது 2
இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.
பச்சை மிளகாய் 2 குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு
இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.
பச்சை மிளகாய் 2 குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு
நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு
தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய்
ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, ஜீரகம், வேர்க்கடலை தோல் நீக்கியது இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையானால் (நான் போட்டேன்)
பச்சைக் கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:
மி.வத்தல் நான்கு
தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு, உபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் இரண்டு டீஸ்பூன்
வேர்க்கடலை வறுத்துத் தோல் உரித்தது ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு
சோம்பு ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் பெரியது ஒன்று,
கிராம்பு ஒன்று.
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆற வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.
உதிரி உதிரியாக சாதம் வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதிலே கறிவேப்பிலை, பச்சைமிளகாயப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காயைச் சற்று நேரம் எண்ணெயிலே வதக்கவும். பாதி வெந்திருக்கும் நேரம் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். சற்று வதக்கவும். இப்போது வறுத்துப் பொடித்துள்ள பொடியை அளவாகச் சேர்க்கவும். பொடியைச் சேர்க்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். சற்று நேரம் கிளறவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டுக் கலக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பு சாதத்திற்கு மட்டும் தேவைப்படும்படி சேர்க்கவும். நன்கு கிளறவும். இன்னொரு வாணலியை அடுப்பில் ஏற்றி ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையை அந்த நெய்யில் போட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவும். இவற்றை அந்த சாதத்தின் மேலே போட்டுக் கொத்துமல்லியும் தூவிவிட்டுக் கிளறவும். இதற்குக் காரட் துருவல், வெங்காயத் துருவல் போட்ட தயிர்ப்பச்சடி தொட்டுக்கொளள நன்றாக இருக்கும்.
இதை முந்தாநாள் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணின அன்னிக்கே பண்ணிட்டேன். ஆனால் இப்போத் தான் போடறேன்.

எங்கே நான் கிளம்பி வந்து விடுவேனோ என்று பயந்துதானே வாங்கிபாத் தீர்ந்ததும் பதிவு போட்டிருக்கிறீர்கள்? ம்ம்....
ReplyDeleteலவங்கப் பட்டை, சோம்பு எல்லாம் போடாமல் செய்தால் எப்படி இருக்கும்? எப்போ சாப்பிட்டது? எங்க அம்மா காலத்துல!
வாங்க ஶ்ரீராம், நீங்க முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே எப்போவோ கேட்டீங்க! அதான் போட்டேன். லவங்கப்பட்டை, சோம்பு பிடிக்கலைனாப் போடாமலும் பண்ணலாம். ஆனால் வேர்க்கடலைக்கும், வெள்ளை எள்ளுக்கும் தடா இல்லையே? :)
Deletemmmm.NANRAka irunthathu. padaththil kaththirikkaay kaaNOme Geethaama.
ReplyDeleteநல்ல நாட்டுக் கத்திரிக்காய். குழைஞ்சு போச்சு ரேவதி! :) அதான் தெரியலை!
Deleteஆஹ்ஹா.. கத்தரிக்காய் தெரிஞ்சாத் தான் மவுசா?
Deleteஅப்படி எல்லாம் எதுவும் இல்லை அப்பாதுரை. :)
Deleteயப்பா...! இத்தனை பொருட்கள்...!
ReplyDeleteடிடி, இந்த மசாலாப்பொடியக் கொஞ்சம் சிரமப்பட்டாவது ஒரு தரம் பண்ணி வைத்துக் கொண்டால் கத்திரிக்காய் மசாலாப் பொடி அடைத்த கறிக்கும், சப்பாத்திக் கூட்டுகள், மற்றும் பைங்கன் பர்த்தா என்னும் பஞ்சாபி சைட் டிஷுக்கும் பயன்படுத்திக்கலாம். அதிகம் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.
Deleteரொம்ப சிரமம் போல் தோணுதே. (சாப்பிட சுளுவா இருக்கும்னு தெரியும்:)
ReplyDeleteசிரமமெல்லாம் இல்லை அப்பாதுரை. ரொம்ப சுலபம்.
DeleteWhere is my comment???
ReplyDeleteதெரியலையே? இதான் வந்திருக்கு எல்கே. :)
Delete