//ராமன் மானுட தர்மங்களை உயர் லட்சியங்களைக் காட்டி நடந்தான் என்பதும் கேள்விக்குறி தான். ராமாயணம் முழுக்க உதாரணங்கள். வாலிவதம் முகத்தில் அடிக்கிறது. சூர்ப்பனகை அவமானம் அதன் பின்னலேயே. சீதையை நடத்திய விதம் அதைத் தொடர்ந்து. லவகுச உதாசீனம் அதைத் தொடர்ந்து. ஒரு வேளை இது எதுவும் ராமன் செய்யாதிருந்திருக்கலாம். அல்லது வாலி வதம் பற்றிய சப்பை கட்டுகளையும் ஏற்று ஆகா ராமன் உன்னத பிறவி எனலாம்.. அல்லது மனுஷ்ய அல்பத்தனத்தோடு நடந்து கொண்டான் ராமன் என்று மானுடனாகவும் ஏற்கலாம். லவகுச ராமாயணத்திலேயே இல்லை என்றும் சொல்லலாம்.
ராமாயணம் வெறும் கதை - சாத்திய உண்மைச் சம்பவங்களைக் கொண்டு திறமையாக எடுத்தாளப்பட்ட கதை. இதில் மானுடருக்கெல்லாம் எந்த உயர் லட்சியத்தையும் ராமன் சொல்லவில்லை; நடந்துகொள்ளவுமில்லை. அப்படி யாராவது நடந்து கொண்டதாகச் சொல்வதானால் குகன், பரதன், லட்சுமணனைச் சொல்லலாம்.//
இது மோகன் ஜியின் "அங்கிங்கெங்கினாதபடி" கதையில் பின்னூட்டத்தில் அப்பாதுரை சொன்னது.
//Amrita Gupta
A pregnant mother asked her daughter, “What do u want- A brother or a sister?“
Daughter:- Brother
Mother:- Like whom?
Daughter:- Like RAVAN
Mother:- What the hell are you saying? Are you out of your mind?
Daughter:- Why not Mom? He left all his Royalship &
Kingdom, all because his sister was disrespected.
Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would I do with a brother like Ram who left his pregnant wife after listening to a “Dhobi” though his wife always stood by his side like a shadow? After giving “Agni Pareeksha” & suffering 14 years of exile.
Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for a “RAM” as your son???
Mother was in tears…
Moral:- No one in the world is good or bad. It's just everyone's interpretation about someone. Change Ur perception..//
இது என் உறவினர் ஒருத்தர் முகநூலில் பகிர்ந்தது. இப்போதெல்லாம் பெண்ணீஈஈய வாதிகள் சொல்வது மேலே உள்ளது போல் தான். அநேகமாக இது பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் இதில் உள்ள உண்மைகளை யாராவது நினைத்துப் பார்த்தது உண்டா?
ராவணன் குபேரனிடமிருந்து லங்காபுரியைப் பறித்ததோ, அவனை விரட்டி விட்டு லங்காபுரியை ஆட்சி செய்ததோ, அவன் பெண்கள் மேல் கொண்டிருந்த மோகமோ, அந்த மோகத்தில் அனைத்துப் பெண்களையும் தன் அந்தப்புரத்தில் அடைத்து வைத்துப் பெண்டாள நினைத்ததோ, அப்படிப் பெண்டாள முடியாமல் போனதற்குக் காரணம் அவனுக்குக் கிடத்த சாபம் என்பதோ! அந்த சாபத்தை அவன் அண்ணன் குபேரன் மகனான நளகூபரன் மனைவி ரம்பையை அடைய நினைத்தபோது அவள் கொடுத்த சாபம் என்பதோ யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. கண்ணை மூடிக் கொண்டு ராவணன் மேல் புகழ்மாரியும், ஶ்ரீராமன் மேல் மண்மாரியும் பொழிகின்றனர்.
சூர்ப்பநகையை அவமானம் செய்தார்கள் என்பதற்காக ராவணன் தன்னுடைய அரசாட்சி உரிமையையோ, மற்ற எந்த உரிமைகளையோ இழக்கவில்லை. பார்க்கப் போனால் சூர்ப்பநகையின் தூண்டுதல் தான் இந்தப் போருக்கே அடிப்படை! சூர்ப்பனகைக்கும் ராவணன் மேல் பழிவாங்கும் உணர்ச்சி உண்டென்பதோ, அதற்காகவே அவள் திட்டமிட்டு சீதையைத் தூக்கிவரச் செய்தாள் என்பதோ எத்தனை பேருக்குத் தெரியும்? சூர்ப்பனகையின் கணவன் ராவணனால் கொல்லப்பட்டு, மகனும் இருப்பது தெரியாமல் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டு, இருவரையும் இழந்த சூர்ப்பநகை இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ள வேண்டிச் செய்வதே சீதையை ராவணன் தூக்கி வருவது. தூண்டி விடுவது சூர்ப்பநகை தான். அதன் பின் அவள் ராமாயணத்தில் எங்கும் வர மாட்டாள். ஆகவே ராவணன் பிறன் மனைவியைத் தூக்கி வந்த குற்றத்துக்காகவே தண்டிக்கப்படுகிறான். பத்துத் தலை என்றால் நிஜம்மாவே பத்துத் தலைகள் இரண்டு பக்கமும் இருக்குனு அர்த்தம் இல்லை. அதை எல்லாம் விரிவாகச் சொல்லணும். சொன்னாலும் ஏத்துக்கறவங்க தான் ஏத்துப்பாங்க. மத்தவங்க ஏத்துக்கறது சந்தேகமே! என்றாலும் சொல்லுவோமுல்ல! :))))
மற்றதுக்கும் பதில் விரைவில்!

இதெல்லாம் அப்பாதுரைக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? உங்களைத் தூண்டி விடுகிறார், அவ்வளவுதான்! :))))
ReplyDeleteஅப்பாதுரை தூண்டுகிறார் என்பது தெரியும். ஆனால் என் உறவினர்? அவங்க முகநூலில் போட்டிருந்த இந்த ஸ்டேடஸைப் பார்த்து நொந்து நூலாகிட்டேன். :(
Deleteகொஞ்சம் கடுமையாகத் தான் எழுத ஆரம்பித்தேன். அப்புறமாக் கடுமையை நீக்கி விட்டேன். :)
Deleteஅப்பாடா!...இப்படி ஒரு பதிவுக்கு தவம் தான் இருந்தேன்.... தொடருங்க அம்மா!..வாட்ஸ் அப்பிலும், ஆங்கிலத்தில் தாங்கள் குறிப்பிட்ட செய்தி வலம் வந்து, வெறுப்படித்தது...ஸ்ரீராமரின் குணநலன்களை கைகேயியும் குறைவாகச் சொன்னதில்லை. ஆனால் இப்போதோ!. தங்களின் அடுத்த பகுதிக்காக, ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteவாங்க பார்வதி, மின் தமிழிலும் படிப்பீர்களே! இப்படித் தான் இப்போதைய மனோநிலை இருந்து வருகிறது! :)
Deleteவிவரமறியா வயதிலிருந்து ராமரை எனக்கு மிகவும் பிடிக்கும், எந்தக் கோயிலுக்குப் போனாலும் ராமா என்று தான் கும்பிடுவேன்! கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, தான் தீக்குளிக்காமல் மனைவியை மட்டும் தீக்குளிக்க வைப்பது என்ன நியாயம் என்று கோபம்!! பின்னர், அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டுவிட்டேன்!!
ReplyDeleteநீங்க மேலே சொல்லுங்க! நீங்கள் சொன்ன பதிவையும் இப்போது தான் படித்தேன்! சுவாரஸ்யம்!!
// தான் தீக்குளிக்காமல் மனைவியை மட்டும் தீக்குளிக்க வைப்பது என்ன நியாயம் என்று கோபம்!! பின்னர், அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டுவிட்டேன்!! //
Deleteஇந்தக்காலத்தில் இது வேறுமாதிரி தொடர்கிறது! கு.க ஆபரேஷன் ஆண்களும் செய்து கொள்ளலாம் என்றாலும் அவர்கள் அதைச் செய்துகொள்வதில்லை. பெண்களிடம் தள்ளி விட்டு விடுகிறார்கள்.
:))))))))))
வாங்க மிடில்க்ளாஸ் மாதவி, பலரும் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் மேலோட்டமாக அதுவும் இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி நினைப்பதாலேயே இந்தப் பிரச்னைகள். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக விளக்க முயல்கிறேன்.
Deleteஉங்கள் மனம் எந்த அளவுக்கு நொந்து உள்ளது என
ReplyDeleteஎன்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
சுப்பு தாத்தா.
சூரி சார், வருகைக்கு நன்றி. நொந்தெல்லாம் போகலை! :)))) நேற்றைய தொலைபேசிப் பேச்சிலேயே அதைத் தெளிவாக்கினேன் என நினைக்கிறேன். மற்றபடி இது அப்பாதுரை சொன்னதால் மட்டும் எழுதவில்லை. எங்கள் தமிழ்மரபு அறக்கட்டளையின் மின் தமிழ்க் குழுமத்திலும் இப்படி ஒரு வாத விவாதம் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. :)))) எல்லாம் சேர்ந்து தான் இந்தப் பதிவுக்குக் காரணமே! மற்றபடி அப்பாதுரை அவர் வழக்கப்படி என்னைச் சீண்டுகிறார்! அவ்வளவு தான். இது எங்களுக்குள் அடிக்கடி நிகழும் ஒன்று.
Deleteநான் ராமாயணத் தொடர் எழுதி வந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பை விடவும், அப்போது வந்த கருத்துக்களின் கடுமையையும் விட இப்போது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். இதை எல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டு போகும் மனோபாவம் எப்போதுமே உண்டு. எங்க வீட்டிலேயே ஒரு சிலர் ஒரு காலத்தில் பஜனை, கந்தசஷ்டி கவசம் படிப்பது என்று இருந்த என்னைக் கேலி செய்தது உண்டு. இப்போது அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதோடு அவர்களே சஷ்டி கவசம் படிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே சின்ன வயசில் இருந்தே எதிர்ப்பையும் மாறுபட்ட கருத்தையும் தாண்டிக் கொண்டு தான் வளர்ந்திருக்கிறேன்.
Deleteஇது இப்போது ஆரம்பித்ததில்லை கீதா. அன்றே மனோகர் மயில் இராவணன் நாடகம் போட்டு ராவணனை நல்லவனாகக் காண்பிக்கவில்லையா? கெட்டவர்களை நல்லவர்களாகக் காண்பிக்கும் பழக்கம் மேல்நாட்டிலிருந்து வந்தது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கெட்டவர்கள் தான் நாயகர்களாக இருப்பார்கள்.
ReplyDeleteஉண்மை தான் ரஞ்சனி. மனோகர் "லங்கேஸ்வரன்" நாடகம் போட்டதில் இருந்து தான் ஆரம்பம். அதே போல் கர்ணனையும் சிவாஜியை வைத்து உயர்வாகக் காட்டியதில் மாறுபட்ட கருத்துகள் வலம் வருகின்றன. :)ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களையும் நான் படித்தது இல்லை. :)
Deleteசூர்ப்பனகை மூக்கறுபடும் முன்னர் ராம லட்சுமணருடன் நடத்திய உரையாடலைப் படித்தால் நான் சொன்னது தெளிவாகும். ஆனால் அதற்கும் வேறே சாபம் வரம் என்றும் கட்டிவிடலாம்.
ReplyDelete//ஆனால் அதற்கும் வேறே சாபம் வரம் என்றும் கட்டிவிடலாம்.//
Deleteஅப்பாதுரை, கட்டி எல்லாம் விடலை. இவை எல்லாம் அனைவரும் சொல்வதே! அவ்வளவு ஏன்? ராமர் பிறப்புக்கே சாபம் தான் காரணம். அவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்ததற்கும் சாபம் தான் காரணம். சூர்ப்பநகை மூக்கறுபடும் முன்னர் நடத்திய உரையாடலையும் விரிவாகவே சொல்ல வேண்டும். அண்ணன், தம்பி இருவரும் முதலில் இதை ஒரு நகைச்சுவையாகக் கருதிக் கொண்டு கேலி செய்தனர் என்பதும் பின்னர் விஷயத்தின் முக்கியத்துவமும் சீதையை அவள் கொல்ல விரும்பியதுமே அவள் மேல் தாக்குதல் நடத்தக் காரணம் என்பதும் அறிந்திருப்பீர்கள். அவள் அரக்கி என்று தெரிந்து தான் அவளை மூக்கை மட்டும் அறுத்து அனுப்புகின்றனர்.
ஒரு புராணக் கதை படிச்ச நினைவு.
Deleteபரமனின் பாதங்களில் எப்பவும் இருக்க வேண்டி மூவர் விரும்ப, அவர்களோ இன்னும் பல பிறவிகள் எடுத்தபின்பு தான் அது சாத்தியம் என்று உணர,
அவர்களுக்கு ஒரு சாய்ஸ் கிடைத்ததாம்.
ஒன்று வழக்கம் போல, பற்பல பிறவிகள் எடுத்து கடைசியில் வேங்கடவன் பாதங்களை அடைவது.
ஒரு ஷார்ட் கட் ரூட்டாக மூன்றே பிறவிகள். ஆனால், அந்த மூன்று பிறவிகளிலும் ஒரு அரக்கனாக பிறந்து பெருமாளுக்கு எதிரியாக அவர் கைப்பட இறக்கவேண்டும்.
எது வேண்டும் என்ற போது அம்மூவருமே மூன்று பிறவிகளில் உங்களுக்கு எதிரியாக, பிறந்து உங்களை எதிர்த்து, பின் இறக்கிறோம். அது எங்களுக்குத் தாருங்கள் என்ற வரம் கேட்டார்களாம்.
ஒன்று இரண்யகசிபு. நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்ட அரக்கன்.
இரண்டாவது இராவணன். இராம அவதாரத்திலே வில்லன்.
மூன்றாவது யாரு யாரு அப்படின்னு ஞாபகம் வரவில்லை.
இப்ப தெரிஞ்சு போச்சு.
சுப்பு தாத்தா.
அந்த மூன்றாவது , அது நானே தான் சுப்பு தாத்தா! வேறே யாரும் இல்லை! :))))))
Deleteநகைச்சுவை என்று நினைத்தார்களா?!! ராமன் எதைப் பண்ணிலாலும் சரிதான் போல!
Deleteஹிஹி.. இதை ஒரு பதிவாவே போட்டு.. விடாதீங்க, ஒரு பிடி பிடிங்க சொல்றேன்.
Deleteஅப்பாதுரை, வயதில் மூத்தவள் ஆன சூர்ப்பநகை ராம, லக்ஷ்மணர்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டதைப் பார்த்துச் சிரிக்காமல் என்ன செய்வாங்க? ராமன் பண்ணினான் என்பதற்காகவெல்லாம் சரினு சொல்லலை! எப்போவுமே அப்படித் தான் நடக்கும். அதுதான் மனித சுபாவம். இப்போது வேணும்னா வயதில் மூத்த பெண்கள் தங்களை விட மிக இளைய வயதான ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது சகஜமாக இருந்திருக்கலாம். ராமர் காலத்தையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்.
Deleteநிச்சயமா சூர்ப்பநகை குறித்து எழுதும்போது எல்லா விஷயங்களையும் விரிவாகவே தருவேன். இப்போதைய நிலையோடு ராமர் காலத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல.
Deleteஒரு பத்தாண்டுகள் முன்னர் திருமணம் கசந்தது எனில் விவாகரத்து என்பது இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அபூர்வமாக இருந்ததோடு அதைக் குற்றம் சொல்பவர்களும் அதிகம் இருந்தனர். இப்போதோ? திருமணம் ஆகி ஒரு வருஷத்துக்குள் விவாகரத்து செய்து கொள்ளாமல் கடந்தார்களானால் அவர்களைப் பாராட்டி விருந்து வைக்க வேண்டும். 20 லக்ஷம், 25 லக்ஷம் செலவு செய்து நடக்கும் பல திருமணங்கள் ஆறு மாதத்திலேயே முறிகின்றன. பத்து வருஷங்களுக்குள்ளாக இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாமும் பார்த்து வருகிறோம். எப்போவோ புராதன காலத்தில் இருந்த ராமரின் காலத்தோடு இப்போதைய நடைமுறையை ஒத்துப் பார்க்க முடியுமா?
Delete//வயதில் மூத்தவள் ஆன சூர்ப்பநகை ராம, லக்ஷ்மணர்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டதைப் பார்த்துச் சிரிக்காமல் என்ன செய்வாங்க?// - அப்படியா? நான் படித்தவரை, அரக்கி, அழகியாக வேடம் பூண்டுவந்து, திருமணம் செய்துகொள்ள ப்ரொபோஸ் செய்வதாகத்தான். அவர்கள் சிரித்தது, 'தாங்கள் கொண்டிருந்த ஒரு மனைவி விரதம்' என்பதால், நடக்கமுடியாத ஒன்றைக் கேட்டு, நகைத்தனர்.
Deleteசிறந்த கற்பனை வளம் நிறைந்த கதைகள் பல பேராலும் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ற படி திருத்தியோ மாற்றியோ எழுதப் பட்டது இதில் வாதம் செய்வது சரியாகத் தோன்றவில்லை. அண்மைக் காலத்தில் ஆர். எஸ் .மனோகர் இலங்கேஸ்வரன் என்னும் நாடகம் எழுதி மேடை யேற்றி இருந்தார். அது ஏனோ தெரியவில்லை சில கற்பனா பாத்திரங்களை விமரிசித்தால் ஐலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. வானவில்லில் ஜுகல் பந்தி இன்னும் தொடர்கிறதா. நானும் ஓரிரு கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்
ReplyDeleteகற்பனை என்றெல்லாம் எதுவும் இல்லை. ராமாயண காலத்துக்கு கால நிர்ணயம் இருக்கிறது. ராமரின் ஜாதகத்தை வைத்து அவர் பிறந்த சரியான தேதியையும் கணித்திருக்கிறார்கள். அதோடு பல்வேறு சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. என்ன ஒரு விஷயம் தான் காலப்போக்கில் ஶ்ரீராமன் கடவுளாக ஆக்கப்பட்டான். கடவுளாகக் கருதப் பட்டான். அதற்கும் சான்று இப்போதைய காலத்திலேயே கிடைக்கும். திரு எம்ஜிஆர் அவர்களுக்குக் கோயில் கட்டி வணங்கி வருகிறார்கள். அவர் சினிமா நடிகர் என்பதும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதும் நமக்குத் தெரியும். வரும் காலத்துக்கு? சினிமாவில் நடித்தாலும் அவர் கடவுள் என்பதாகவே அறியப் படலாம் அல்லவா? அது போல் ஶ்ரீராமனும் நாளடைவில் கடவுளின் ஸ்தானத்துக்கு வந்திருக்கலாம். கர்ணன், ராவணன் ஆகியோரின் பூர்வ கதை தெரியாமல் அவர்களைப் புகழ்ந்து எழுதுபவர்களைக் கண்டிக்காமல் என்ன செய்வது? கர்ணன் அர்ஜுனனின் மரணத்துக்காகவே வாழ்ந்தான். ராவணனோ எல்லாக் கொடுமைகளையும் பண்ணியதோடு அல்லாமல் பல பெண்களைத் தன் அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருந்தான். இதெல்லாம் நியாயமா? அல்லது மனைவியைத் துறந்தாலும் வேறொரு பெண்ணை நினைத்துக் கூடப் பார்க்காமல் கடைசிவரை ஆட்சி செய்து தன் உயிர்ச் சகோதரன் லக்ஷ்மணனைக் கூடத் துறந்த ஶ்ரீராமன் செய்தது நியாயமா என்பது தெரியவில்லை. :(
Deleteசிலர் (பலர்?), இராமாயணமும் மஹாபாரதமும் கற்பனைக் கதைகள் என்று சொல்கின்றனர். அதில் வருகின்ற இடங்கள் எல்லாமும் இப்போதும் இருக்கின்றதே, அகண்ட இந்தியா முழுவதும் அந்த இடங்கள் பரவிக்கிடக்கின்றனவே, மஹாபாரதத்தில், எல்லாப் பாத்திரங்களின் குறை நிறைகள் (கண்ணன் முதற்கொண்டு, அவர்களது உறவு போன்ற பல) சொல்லப்பட்டிருக்கின்றனவே, கற்பனை நாவல் என்றால் இப்படி யாராகிலும் எழுதுவாங்களா என்றெல்லாம் கேட்டால், பதில் கூறாமல், தாங்கள் சொன்னதையே சொல்லுவர். அதில் உள்ள சில நிகழ்வுகள், சிதைந்திருக்கலாம் அல்லது சிறிது மசாலா சேர்ப்பிக்கப்பட்டிருக்கலாம் (காலப்போக்கில்). நம் கண் முன்னால் வாழ்ந்து மறைந்த எம்ஜியாரைப் பற்றி எத்தனை அதீதமாகச் சொல்கின்றனர் (உண்மையை, கொஞ்சம் அதீதமாக எழுதுவது).
Deleteநம்புபவர்களுக்கு PROOF தேவையில்லை. நம்பாதவர்களுக்கு PROOF கொடுத்துப் பிரயோசனமில்லை.