இன்னிக்கு ஒரு உபநயனத்துக்குப் போனதில் அங்கே தற்செயலாகத் திருப்பூர் கிருஷ்ணனைப் பார்க்க நேர்ந்தது. அதோடு இன்னொரு முக்கியஸ்தரையும் பார்த்தேன். இருவரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் மிக அன்பாகப் பேசினார். சென்னை வந்தால் அவரை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். அமுதசுரபியில் என்னைக் குறித்த அறிமுகம் கொடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார். எவ்வளவு பெரிய மனசு என வியந்து கொண்டேன்.
************************************************************************************
ராகுல் காந்தி புயல்வேகச் சுற்றுப் பிரயாணம் செய்து பஞ்சாப், மஹாராஷ்டிராவின் கிராமங்களையும் விவசாயிகளையும் சந்திக்கிறார். ஒரு வருஷம் முன்னர் அவருடைய கட்சியின் ஆட்சியில் தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குப் பத்து வருடங்கள் முன்னாலிருந்து மத்தியில் காங்கிரஸ் கட்சிதான். அப்போதும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்போதெல்லாம் எங்கே போனார்னு புரியலை! அதை எல்லாம் யாருமே கேட்க மாட்டாங்களா? ஊடகங்கள் கூட மோதி காரியத்தோடு வெளிநாடு செல்வதை விமரிசிக்கிறது. இப்போக் கிட்டத்தட்ட 2 மாசம் விடுமுறையில் போனாப்போல் அப்போவும் விடுமுறையில் போயிருப்பாரோ? இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் போன இடம் எதுவெனத் தெரியாமல் விடுமுறையில் செல்கிறவர் பிரதமராக வரணும்னு ஆசைப்படுகிறார். ஆனால் மோதி காரண, காரியங்களோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைக் கேலி செய்கிறாரே? இது என்ன நியாயம்னு புரியலை! ஊடகங்களும் ராகுல் காந்தி தும்மினால் கூடப்பெரிதாக சந்தோஷப் படுகிறது. மோதிக்கு இப்படித் தும்மத் தெரியலை; ராகுல் காந்தி விடுமுறையிலிருந்து வந்ததும் வராததுமா இப்படி ஆவேசத்தோடு தும்மிட்டாரேனு குதிக்கிறாங்க! :P :P :P :P
**************************************************************************************
பஞ்சாபில் தனியார் பேருந்தில் சென்ற பெண்மணிக்குப் பாலியல் தொல்லை; இதைத் தொடர்ந்து நடத்தும் நடத்திக் கொண்டிருக்கும் ஆண்கள் ஏன் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள்? பேருந்துப் பயணிகளுக்கெல்லாம் பாலியல் தொந்திரவு கொடுத்தால் சாமானிய மனுஷி என்னதான் பண்ணுவாள்? டெல்லியில் தான் நிர்பயா என்னும் அந்தப் பெண் தன் ஆண் நண்பனோடு இரவில் வந்தாள்னு காரணம் சொன்னாங்க. இப்போ ஒரு குடும்பமே தொந்திரவுக்கு ஆளாகி இருக்கு. அதிலே 13 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே இறந்து விட்டாள். பத்து வயதுப்பையரும், அவர் தாயும் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
*************************************************************************************
எங்கு பார்த்தாலும் வீடு புகுந்து திருட்டு, கொலை, கொள்ளை இத்யாதி, இத்யாதி! யாரும் எங்கேயும் எந்த விசேஷங்களுக்கும் அவங்க வீட்டைப் பூட்டிக் கொண்டு போக முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது! ஏன் இப்படினு தெரியவில்லை. ஒரு கணக்கெடுப்பில் மக்களுக்கு ஆடம்பர வாழ்க்கையின் மேல் ஆசை பெருகி விட்டதால் செலவுக்குச் சம்பாதிக்கும் பணம் போதாமல் இப்படிச் செய்வதாக முடிவு வந்திருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் ஆடம்பர வாழ்க்கையின் மேல் அனைவருக்கும் மோகம் இருக்கத் தான் செய்கிறது. சக்திக்கு மீறிக் கடன் வாங்கிப் பலரும் செலவழிக்கின்றனர். எது ஆடம்பரம், எது தேவை என்பதை முடிவு செய்வது நம் கைகளில் தான் இருக்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கு; எதிர்த்த வீட்டில் இருக்குனு ஒரு பொருளைத் தேவையோ இல்லையோ போட்டிக்கு வாங்கக் கூடாது. இதை நினைவில் வைத்துக் கொண்டாலே போதும்/

வக்கிரமான காதல்கள் அரங்கேறுகின்றன. அதை அந்தக் காதலர்களின் படங்களோடு வெளியிட்டுப் பத்திரிகைகளும் மகிழ்கின்றன. முகநூல் போன்ற தளங்களிலும் வெளியிடுகின்றனர். கலியுகத்தில் இப்படி இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தாலும் இதன் மூலம் சமூகம் மிகவும் மோசமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவதற்கு யார் காரணம் என ஆராய்ந்தால் டாஸ்மாக் தான் காரணம் என்பது தெரியவருகிறது. பள்ளி மாணவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கின்றனர். இப்போது எல்லாம் பெண்களும் ஆரம்பித்து விட்டார்கள். சென்னையில் சர்வ சகஜமாகத் தெருக்களில் விழுந்து கிடக்கும் பெண்களைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் இலவசத்தை நிறுத்திவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடி மக்களை உழைக்கத் தயார் செய்வது தான் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்.

தற்கொலையே கோழைத்தனமாகத் தான் நம் நாட்டில் கருதப்பட்டு வந்தது. பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துவிட்டுத் தன் குடும்பத்து மற்ற அங்கத்தினரைப் பொறுப்பைச் சுமக்கச் செய்து தற்கொலை செய்து கொள்பவர் மட்டும் மரணத்தின் மூலம் தப்பிப்பதை ஒரு காலத்தில் அவமானமாகவே கருதி வந்தோம். இப்போது தற்கொலைக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுத்திருப்பதாலோ என்னமோ தற்கொலைகள் பெருகி விட்டன. இதற்காக 5 லக்ஷத்திலிருந்து பத்து லக்ஷம் வரை அரசாங்கம் தன் வரிப்பணத்தையும் செலவழிக்கிறது. நாட்டில் அனைவரும் இப்படித் தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் தற்கொலைக்கு எனத் தனித் துறையைத் திறந்து வரப் போகும் வரவு செலவுக் கணக்கில் அதற்காகவும் நிதி ஒதுக்க வேண்டியது தான் பாக்கி!

இதை மறந்துட்டேனே! இன்று கமலஹாசனின் "உத்தமவில்லன்" திரையிடப் பட இருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் திரையிடப் படவில்லை. அதைக் குறித்துத் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் விளம்பரங்கள், செய்திகள். திரும்பத் திரும்ப ரசிகர்களின் பேட்டிகள். அதிலே ஒரு ரசிகர் காலை 5 மணிக்கே சினிமாத் தியேட்டருக்கு வந்துவிட்டதாகவும், இன்னும் தலைவரைப் பார்க்க முடியலை; பார்த்து ரெண்டு வருஷமாச்சு: இன்னிக்கும் பார்க்க முடியலைனா தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான் என்கிறார். சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா எனத் தோன்றியது. இவங்களுக்கெல்லாம் வேறே வேலை இல்லையா? குடும்பம், குழந்தை, குட்டினு இல்லையா? ஒரு சினிமாப் படத்துக்கு நூற்றுக் கணக்கில் செலவு செய்பவர்கள் அந்தச் செலவை வீட்டில் காய்கறிகள் வாங்கிப் போடுவதில் செய்வார்களா? அப்படியானும் படம் வந்த அன்னிக்கே பார்த்தால் என்ன அவார்டா கொடுக்கப் போறாங்க? வெட்கமாக இருக்கிறது. :(

ஏகப்பட்ட எண்ணங்களை அடுக்கி விட்டீர்கள்.
ReplyDeleteபஞ்சாப் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கமல் படம் பார்க்க முடியாத ரசிகர் பேட்டி பார்த்து நானும் நொந்து போனேன். அதிகாலையில் வேலைகளை விட்டுவிட்டு குடும்பத்துடன்! அதுவும் முதல் நாள் முதல் ஷோ எல்லாம் யானை விலை, குதிரை விலை! தேவையா?
வாங்க ஶ்ரீராம், நேத்து ஜி+ இல் பழமைபேசி பகிர்ந்திருந்த செய்தியைப் படிச்சதும் இன்னமும் மனசு நொந்து நூலாயிடுச்சு. ஒரு இளம்பெண் க்ளெப்டோமேனியா உள்ளவள். அவள் திருட்டை பக்கத்து வீட்டுச சிறுவனின் பாட்டி கண்டு பிடித்துக் கண்டித்ததோடு இல்லாமல் அந்தப் பெண்ணின் பெற்றோரிடமும் புகார் செய்திருக்கிறாள். இந்தப் பெண் பழிவாங்குவதற்காக அந்தச் சிறுவன் அபிஷேக் என்பவனை மீன் காட்டுவதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றுக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறாள். இதை அவளே ஒத்துக் கொண்டும் இருக்கிறாள். அந்தப் பெண்ணின் வயது 14 அல்லது 15க்குள் தான். :(
Deleteதிருப்பூர கிருஷணனவரகளைச சந்தித்து மிக மகிழச்சி.பெணகள்ள விழுந்து கிடக்கிறாரகளா.
ReplyDeleteவாங்க வல்லி, அவரை அங்கே சந்திப்போம் என்றே எதிர்பார்க்கவில்லை. :) ஆம், பெண்கள் விழுந்து கிடக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் தினசரிகளில் வந்தன.
Deleteபெணகள சாலையில வி ழுந்து கிடப்பது மிக வருத்தம.
ReplyDeleteஒரு பெண் தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான நகைக்கடை ஒன்றின் எதிரில் விழுந்து கிடந்தாள். பனகல்பார்க் பக்கம் உள்ள கடை. இளம்பெண். கணினித் துறையில் வேலை பார்ப்பவள். வார இறுதியை நண்பர்களோடு கழித்துவிட்டு வீட்டுக்குச் செல்கையில் நடக்கவோ, நிற்கவோ முடியாமல் கீழே விழுந்திருக்கிறாள். போலீஸ் வந்து பார்த்துவிட்டு அவள் கைப்பையின் அடையாள அட்டையின் மூலம் விபரங்கள் கண்டு பிடித்து வீட்டில் சேர்த்தனர்.
Deleteஇன்னொரு பெண் இதேமாதிரி கணினித் துறையில் வேலை பார்ப்பவள் தான். மாம்பலத்தில் எப்படியோ வீட்டு வாசல் வரை வந்து விட்டு வீட்டின் வாசலில் விழுந்து விட்டாள். பெற்றோர் என்னவோ ஏதோ எனப் பதறப் பின் பார்த்ததில் பெண் குடித்து விட்டு வந்திருக்கிறாள் எனத் தெரிந்து நொந்து போய் விட்டனர். பள்ளி மாணவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புகைப்படங்கள் நிறையவே வருகின்றன.
திருப்பூர் கிருஷ்ணனை சந்தித்ததுதான் பெரிய விஷயம். கூடிய விரைவில் உங்களை அமுதசுரபியில் பார்க்க ஆவல்.
ReplyDeleteதற்கொலை பற்றிய செய்தி படித்து முடித்து கீழே வந்தால், நடிகரைப் பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் ரசிகர்! எங்கே போகிறோம்? காங்கிரஸ் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதோ கோமாளி மாதிரி செய்து கொண்டிருக்கிறது. விட்டுத் தள்ளுங்கள்.
பஞ்சாப் சம்பவம் கவலை கொடுக்கிறது.
இன்னொரு முக்கியஸ்தர் யாரு?
வாங்க ரஞ்சனி, அமுதசுரபியில் எழுதும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்ன? அவர் என்னை ஊக்குவிக்கும் முறையில் சொல்லி இருக்கார். இன்னொரு முக்கியஸ்தர் என்னைப் பொறுத்தவரை முக்கியஸ்தர். எல்லோருக்கும் அப்படியானு தெரியாது. என் அருமைச் சகோதரர், கடலூரில் வசிக்கும் திருமூர்த்தி வாசுதேவனின் பிள்ளை ஶ்ரீரமண சர்மாவும் தன் மனைவி,மகனோடு அங்கே வந்திருந்தார். உண்மையில் அவரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி அரிய மனிதர்களைப் பார்க்க நேர்ந்ததில் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
Deleteநாட்டு நடப்பைப் பற்றி நல்லதொரு அலசல்.
ReplyDeleteதங்கள் மேலான கருத்தையும் சொல்லி இருக்கலாம் ஐயா.
Deleteதிருப்பூர் கணேஷ் கேள்விப்பட்டிருக்கிறேன், கிருஷ்ணன் யாருன்னு கேட்க நினைச்சேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதற்கொலையை அரசாங்கமே அங்கீகரிக்குதா, பரவாயில்லையே!!
வாங்க அப்பாதுரை, திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அமுதசுரபி ஆசிரியர் ஆவதற்கு முன்னேயே கல்கி பத்திரிகை வாயிலாகவே அறிவேன். அதற்கும் முன்னால் அவர் எழுத்துக்கள் பரிச்சயம்.
Deleteஆமாம், தற்கொலையைக் குற்றமாக இருந்த சட்டத்தை மாற்றி விட்டார்கள். இப்போ எடுத்ததுக்கெல்லாம் தற்கொலைனு ஆரம்பிச்சுடறாங்க. எல்லாம் பணம் செய்யும் கோலம் தான். டெல்லியில் மத்திய அரசைப் பயமுறுத்த வேண்டி டிராமா போடப் போனது கடைசியில் வினையாக முடிந்தது. இப்போ எல்லா விவசாயிகளும் இப்படி ஆரம்பிக்கிறாங்க. அதான் போச்சுன்னா கமல் படம் பார்க்க முடியலைனா தற்கொலை பண்ணிக்குவேனு ஒரு ரசிகர் சொல்றார். கேவலம், மகா கேவலம்!
கமல் படம் பாக்குறதும் தற்கொலை தான்.
ReplyDelete:)))) ஆமாம்.
Deleteவெறியர்களை ஒன்னும் செய்ய முடியாது... தானாக திருந்தினால் தான் உண்டு...
ReplyDeleteமற்ற அலசல்கள் அருமை...
தானாக எங்கே திருந்தப் போறாங்க? வாய்ப்பே இல்லை! :(
Deleteசின்ன சின்னதாய் நிறைய செய்திகள்! முட்டாள் ரசிகரை நொந்துகொள்வதைவிட வேறு வழியில்லை! பஞ்சாப் சம்பவம் மிகவும் துயரமானது!
ReplyDeleteவாங்க சுரேஷ், ரசிகர்கள் பண்ணும் அமர்க்களம் தாங்க முடியலை! இவ்வளவு சினிமா வெறியானு நினைச்சால் ஆச்சரியமா இருக்கு! :(
Deleteஅப்பாதுரையின் வலைத்தளத்திலிருந்து பிரதி எடுத்து உங்களைப் பற்றிய எனது கவிதையை கைவசம் (கணினி வசம்) வைத்துக்கொள்ளவும். திருப்பூர் கிருஷ்ணனுக்கு உங்களைப் பற்றி மேட்டர் கொடுக்கும் பொழுது உபயோகமாக இருக்கும்.
ReplyDeleteகடவுளே!!!!!!!!!!!!! ஜீவி சார்! என்னதான் செல்ஃப் அப்ரைசல் தேவைன்னாலும் இது கொஞ்சம் ஓவரா இருக்கும்னு தோணுது! :)))) நீங்கல்லாம் புகழ்ந்திருக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியை இன்னமும் வளர்த்துக்கணும் நான்.
Delete