எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 12, 2015

அப்பு ஸ்பெஷல், சி.உ.கி. கறி! :)

அப்புவுக்குச் சின்ன உருளைக்கிழங்கு பிடிக்குது. ஆகவே இன்னிக்கும் அதைச் செய்தேன். கீழே படம் போட்டிருக்கேன், பாருங்க. கூடவே கல்சட்டியில் கொத்தவரைக்காய்ப் பொரிச்ச குழம்பும்! பொரிச்ச குழம்புன்னா எங்க மதுரைப் பக்கமெல்லாம் புளி விட்ட கீரை செய்வோம். இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு அப்படிச் செய்யலாம்னு நினைச்சால் அப்பு சி.உ.கி. தான் வேணும்னு சொல்லி விட்டது! அதோடு கீரை வாங்கி வர நேரம் வேறே ஆயிடுச்சு! ஆயந்து நறுக்க நேரம் ஆகும் என்பதால் கீரையை நாளைக்கு எடுத்து வைச்சாச்சு!


ஹிஹிஹி, தம்பி, வா.தி. வந்து இதெல்லாம் ஒரு போஸ்டானு கேட்கிறதுக்குள்ளே ஓட்டமா ஓடிடறேன். எல்லோரும் சி.உ.கி. கறி சாப்பிட்டுட்டு  இருங்க.காரம் கம்மியாத் தான் போட்டிருக்கேன். குழந்தை சாப்பிடணுமே! நாளைக்கு அநேகமா வேறே ஒண்ணு போடலாம். :) என்னனு ஊகம் செய்து வைங்க!


கல்சட்டியில் பொரிச்ச குழம்பு!







சின்ன உருளைக்கிழங்கு வதக்கல்! நிதானமாச் சாப்பிடுங்க, நாளைக்கு நேரம் இருந்தால் வருவேன். 

20 comments:

  1. நல்லா இருக்கு. கொத்தவரை பொரிச்ச குழம்பு செய்து கன நாளாச்சு. ஒருதடவை செய்யணும்

    ReplyDelete
    Replies
    1. கொத்தவரை அல்லது அவரை அல்லது புடலைப் பொரிச்ச குழம்பு வாரம் ஒரு நாள் இருக்கும். நானும் ஆனமட்டும் முருங்கைப் பொரிச்ச குழம்பு பண்ணணும்னு பார்க்கிறேன். ம்ஹூம், ரங்க்ஸ் அதுக்கு இடமே கொடுக்கிறதில்லை! :)

      Delete
    2. ஒரு வழியா முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு முந்தாநாள் பண்ணிட்டேன். ஜன்மம் சாபல்யம் ஆயிடுச்சு! :)

      Delete
  2. நான் தான் முதலில் வந்தேனா என்று நாளை வந்து பார்க்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரெண்டாவது! :)

      Delete
  3. கச்சட்டியைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. . உருளை சிவக்கிறது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. கல்சட்டியிலே தான் முதன் முதல் சமைக்கும்போதும் சமைக்க ஆரம்பித்தேன். 12,13 வயசிலே, ஆகவே அதோடு நெருங்கிய தொடர்பு உண்டு. கல்சட்டிப் பழையதும், கல்சட்டி மாவடும் இன்றைக்கும் மனம் தேடும். :)

      Delete
  4. புதுக்கச்சட்டி பழக்க வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கல்சட்டிப் பத்து வருஷத்துக்கும் மேலே இருக்கு அம்மா! புதுசு இல்லை! பாத்திரங்களை எல்லாம் நானே தேய்த்துக் கழுவுவதால் அதிகம் மங்காமல் இருக்கும்! :) வீட்டு வேலைக்கு எப்போதேனும் எனக்கு முடியலைனாத் தான் ஆள்! இல்லைனா நான் தான் ஆல்ரவுன்டர், சமையல், தோய்த்தல், வீடு பெருக்கித் துடைத்தல், பாத்திரம் கழுவுதல் எல்லாமும்! எத்தனை பேர் வந்தாலும்! :)

      Delete
  5. இதெல்லாம் ஒரு போஸ்டா!!

    ReplyDelete
    Replies
    1. அதானே, இதெல்லாம் ஒரு போஸ்டா? இதெல்லாம் ஒரு பதிவுனு சொல்லி இருக்கணும் இல்லையா வா.தி? :)))))))

      Delete
  6. நாளைக்கு அநேகமா வேறே ஒண்ணு போடலாம்.// ம்க்கும்! அப்புவுக்கு பிடிச்சதுன்னு திருப்பி இதையே பண்ணுவீங்க! தெரியாதாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தினம் தினம் சி.உ.கி. பண்ணினால் அப்பு தூக்கிப் போட்டுடும்! :) இன்னிக்கு வேறே! ஆனால் பாருங்க அதை முதல்லேயே படம் எடுக்கிறதுக்குள்ளே பாகப்பிரிவினை ஆயிடுச்சு. என் பங்குக்கு வந்ததை மட்டும் படம் எடுக்கணும் இப்போ! :)

      Delete
  7. Replies
    1. வாங்க வல்லி, நேத்து வெளியே போயிருந்தேன். நீங்க கூப்பிட்டதாச் சொன்னார். :) அப்புவுக்கு உ.கி. பிடிக்கிறது. அவ அக்காவுக்குப் பிடிக்காது. இப்போல்லாம் தங்கையைப் பார்த்துட்டு அவளும் சாப்பிடறா! :)

      Delete
  8. வா.தி மட்டும்தான் கேட்கணுமா.?

    ReplyDelete
    Replies
    1. அதானே ஜிஎம்பிசார், வா.தி.மட்டுமா கேட்கணும்? :))))))))) எல்லோரும் கேளுங்கப்பா! இதெல்லாம் ஒரு போஸ்டானு! :))))))))

      Delete
  9. சின்னவயதில் பாட்டி வீட்டில் கல்சட்டியில் சமைப்பார்கள்! உங்கள் வீட்டில் இன்றும் கல்சட்டி சமையல் ஆச்சர்யம் ஊட்டியது.! அதன் சுவையே தனி!

    ReplyDelete
    Replies
    1. எனக்குக் கல்சட்டிச் சமையல் ரொம்பப் பிடிக்கும் சுரேஷ். கல்சட்டிப் பழையதும், கல்சட்டி மாவடுவும், கல்சட்டியிலேயே ஊறிய துண்ட மாங்காய் ஊறுகாயும் ஆஹா! நினைக்கவே ஆனந்தம்! :)

      Delete
  10. கல்சட்டி.... நல்லா இருக்கு!

    ReplyDelete