எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 07, 2015

திருச்செங்கோட்டில் சில மணித்துளிகள்!

இப்போத் திருச்செங்கோடு பத்திப் பார்க்கலாமா? நாமக்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருச்செங்கோடு. மலை அடிவாரத்திலும் கோயில் இருக்கிறது. அதைக் கைலாச நாதர் கோயில் என்கின்றனர். ஆனால் நாங்க அங்கே போகலை. நாங்க போனது பிரபலமான அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு மட்டுமே. இது மலை மேல் அமைந்துள்ள கோயில். மலை சிவந்த நிறமுள்ளது என்பதால் செங்கோட்டு மலை எனவும், செங்குத்தாக இருப்பதாலும் செங்கோட்டு மலை எனவும் அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். மேலே செல்லப் படிகள் உள்ளன. படிகளில் ஏற விரும்புவோர் படிகளில் ஏறியும் மேலே வரலாம். மொத்தம் 1206 படிகள். அதைத் தவிர மலைப்பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையின் உயரம் சுமார் எழுநூறு அடி ஆகும். படிகளில் நடந்து செல்லும் பாதையும் பக்தர்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நாங்க அந்தப் பக்கமே போகவில்லை. ஏற்கெனவே காலையில் நரசுவைப் பார்க்கப் போயிட்டுச் சில, பல படிகள் ஏறியாச்சு! :)



படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் வாயிலாக!

மலைப்பாதையிலேயே எங்கள் வண்டியில் சென்றோம். கொண்டை ஊசி வளைவெல்லாம் ஒண்ணுமே இல்லை! ஒரே வளைவு, வளைவு, வளைவு தான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஹிஹிஹி, அப்போ என் மனதில் தோன்றிய எண்ணம், திருக்கயிலைக்கே போயிட்டு வந்தாச்சு, இதைப் பார்த்துப் பயப்படறதானு தோணிச்சு! வண்டி ஓட்டி நிதானமாகவே சென்றார். குறைந்த பட்சம் அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரத்துக்குள்ளாக மேலே போய் விட்டோம். அங்கே வண்டியிலிருந்து இறங்கியது முக்கிய வாயில் இல்லை. பக்கவாட்டு வாயில் ஒன்று. ஹிஹிஹி, அங்கேயும் படிகள்! சுமார் 20,30 படிகள் இருக்கலாம். மேலே ஒரு மண்டபம்.  அங்கே சிலர் நின்று கொண்டிருந்தனர். புதுசாக் கல்யாணம் ஆனவங்க மாதிரி இருந்தது. அவங்களிடம் உள்ளே கருவறை செல்ல இது வழி தானே எனக் கேட்டோம். இப்படியும் போகலாம் என்றனர். படிகள் ஏறி மேலே சென்றோம். உள்ளே நுழைந்தோம். சிறிது நேரத்தில்  இன்னொரு படிக்கட்டுகள் கொண்ட வாயிலுக்கு அது கொண்டு விட்டது. அந்தப்படிக்கட்டுகள் சுமார் ஐம்பது அல்லது அதற்கும் மேலே இருக்கலாம். என்னடா இது சோதனைனு நினைச்சுப் பார்த்தால் படிக்கட்டுகளுக்குப் பக்கமாகவே சுமார் 60 அடி நீளத்தில் நாகத்தின் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே நாகவழிபாடு செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

பக்கத்தில் காணப்பட்டப் படிக்கட்டுகளைச் சத்தியப்படிக்கட்டுகள் என்று அழைப்பார்களாம். (படம் எடுப்பதற்குத் தடை!) இந்தப் படிக்கட்டுகளில் தான் கணவன், மனைவிக்குள் உள்ள பிணக்குகள், மற்றப் பல வழக்குகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் சொல்கின்றனர். அங்கிருந்து முக்கியக் கருவறைக்குச் செல்லத் திரும்பினோம். ஒரு ஆமை மண்டபம் வந்தது. அந்த ஆமை அங்கே செதுக்கப்பட்டிருக்கும் கல்லால் ஆன தேரைச் சுமந்து இழுத்துச் செல்வது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. சிவன் கோயிலில் ஆமையைப் பார்ப்பது இதுவே முதல்முறை. அந்த மண்டபத்தின் பின்னால் தான் செங்கோட்டு வேலவர் சந்நிதி. செங்கோட்டு வேலவர் அருணகிரிநாதரால் பாடப்பட்டிருக்கிறார். அருணகிரிநாதர் இந்தச் சத்தியப்படிக்கட்டுகளை வெட்டியவர்கள் அங்குள்ள காடுகளில் வாழ்ந்த வேடுவர்கள் என்பதை இந்தக் குறிப்பிட்ட திருப்புகழில் தெரியப்படுத்தி உள்ளார்.
பாடல் 601 - திருச்செங்கோடு

தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் ...... தனதான


அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் ...... தமராயன்

பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் ...... றியவோடும்

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் ...... திணிதாய

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் ...... கரசாய

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் ...... குமரேசா

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் ...... திடமேவும்

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் ...... பெருமாளே.

மலையிலிருந்து கீழே பார்த்தால் தெரியும் ஒரு காட்சியை மட்டும் வெளியே வந்ததும் படமாக்கினேன். அந்தப் படம் இங்கே!


மேலே மண்டபத்தில் நின்ற வண்ணம் எடுத்த படம். கொஞ்சம் மங்கலாகத் தெரியறது தான் கீழே உள்ள திருச்செங்கோடு ஊர். இந்த வழியே தான் நாங்கள் உள்ளே சென்றோம். 

திருச்செங்கோட்டுப் புராணம் தொடரும்!

17 comments:

  1. கைலாசநாதர் கோவில் மிக அருமையாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. போக முடியலை! நேரப்பற்றாக்குறை, சீக்கிரம் சத்திரம் திரும்பணுமே! எங்களோடு வந்த நாத்தனார் பெண்ணுக்கு அதோடு மாலை ஐந்து மணிக்குள்ளாக வீடு திரும்பியாகணும்.

      Delete
  2. எத்தனை படிகள்? இங்கெல்லாம் நான் போனதேயில்லையே....

    ReplyDelete
    Replies
    1. //படிகளில் ஏற விரும்புவோர் படிகளில் ஏறியும் மேலே வரலாம். மொத்தம் 1206 படிகள். அதைத் தவிர மலைப்பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. //

      ஹிஹிஹி, முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கேன் ஶ்ரீராம், ஒழுங்காப் படிக்கணும். தேர்வு வைச்சாத்தான் பயம் வரும் போல! :)

      Delete
  3. இதுவரை நான் போனதில்லை தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை போயிட்டு நிதானமா எல்லாத்தையும் பார்த்துட்டு வாங்க! :)

      Delete
  4. திருச்செங்கோடு சென்றது இல்லை செல்ல வேண்டும்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி கோமதி அரசு!

      Delete
  5. படிப்படியா முன்னேற சொல்றாரோ இறைவன்! திருச்செங்கோட்டில் எங்கள் உறவினர் இருந்தும் இன்னும் தரிசனம் செய்யவில்லை! ஒரு முறை செல்ல வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அப்புறமா என்ன? தங்க இடம் இருக்கு இல்லை? போயிட்டு வாங்க!

      Delete
  6. திருச்செங்கோடு என்றதும் எனக்கு நாவல் ஆசிரியர் பெருமாள் முருகன் தான் நினைவுக்கு வந்தது. சென்றுள்ளேன்.

    ஜெயகுமார்

    ReplyDelete
    Replies
    1. அதற்கு முன்பிருந்தே இந்த ஊருக்குப் போகணும்னு ஆவல்!

      Delete
  7. திருச்செங்கோடு சென்றதில்லை. படிகள் வழியே செல்லத் தோன்றுகிறது. பார்க்கலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. போய்ப் பாருங்க, ஶ்ரீரங்கத்தில் இருந்து இரண்டே மணி நேரப் பயணம்! :)

      Delete
  8. இத்தனை நாள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேரை, வித்தியாசமா இருக்கே என்று நினைத்துவந்துள்ளேன். இப்போதுதான் தோன்றுகிறது அது சிவனின் பெயர். செங்கோட்டு ஐயன்.

    ReplyDelete