எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 28, 2006

76.வேலையில் சேர்ந்தேன்.

பஸ்ஸுக்குள் கடுமையான வாக்குவாதம். எல்லாம் என்னை எங்கே இறக்கி விடுவது என்றுதான். பஸ்ஸில் இருந்த எல்லாரும் ஆட்சேபித்தார்கள், நான் காலரா ஆஸ்பத்திரியில் இறங்குவதற்கு. அந்தப் பொண்ணு ஊருக்குப் புதுசு போல இருக்கு. எங்கேயோ போய் எப்படி வழி தேடும்? என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவர் ஏதோ இடம் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்த சமயம் பஸ்ஸில் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு என்ன விஷயம்? என்று கேட்டார். .உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள் என்னைத் தவிர. அந்தப் பெண்மணி விவரம் புரியாமல் பேசாமல் உட்கார்ந்திருந்த என்னிடமே விவரம் கேட்க நான் அரை மனதுடன் என்னைப் பற்றிச் சொன்னேன். உடனேயே அந்தப் பெண்மணி, "அட, கரண்ட் ஆஃபீஸா? நாங்க அங்கே தான் பணம் கட்டுறோம். எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னாலே சந்திலே இருந்து மெயின் ரோடுக்குப் போகலாம். அந்தச் சந்து முனையிலேதான் இருக்கு ஆஃபீஸ். மெயின் ரோடிலே போனால் பணம் கட்டுமிடமும், சந்து முனையிலே ஆஃபீஸும் இருக்கு. ஆஃபீஸரைப் பார்க்கறதுனா அப்படித்தான் போகணும்."என்றாள். எனக்கு உயிர் வந்தது. "கொஞ்சம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப் சொன்னீங்கன்னா" நான் இழுத்தேன். அதுக்குள் அந்தப் பெண்மணி, "அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.

பஸ் கண்டக்டரில் இருந்து எல்லாருக்கும் நிம்மதி. நான் அந்தப் பெண்மணியுடன் இறங்கினேன். திருவொத்தியூர் ஹை ரோடுக்கு இணையாக அதன் பின்னால் உள்ள ஒரு ரோடில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு 10 நிமிஷ நடை. உடனே ஆஃபீஸ் வந்து விட்டது. அந்தப் பெண்மணி சொன்ன மாதிரி சந்து முனையில் ஆஃபீஸ் நுழையும் இடம். மெயின் ரோடில் பணம் கட்டும் கவுண்ட்டர் முதலியன இருந்தன. என்னை விட்டு விட்டு அந்தப் பெண்மணி போய் விட்டார். ஆஃபீஸில் நுழைந்ததும் உடனேயே முதலில் ஆஃபீஸர் அறை வந்ததால் நேரே அங்கே போய் என் கடிதத்தைக் காட்டியதும் அவர் பார்த்து விட்டு,"அப்போவே மெயின் ஆஃபீஸில் இருந்து நீங்கள் வரப் போகும் செய்தி வந்தது. ஏன் இத்தனை நாழி? திரும்ப அம்பத்தூர் போயிட்டு வரீங்களா?" என்றார். "இடம் தெரியவில்லை. அலைந்தேன்." என்று சொன்னதும், உடனே அவர்,"மெயின் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தால் உடனே அங்கேயே பஸ் நிற்குமே?" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "பக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டாப் தான் இருக்கிறது." என்றேன். "அங்கே இருந்துதான். திருவொத்தியூர் போகும் பஸ்ஸில் அங்கே ஏறினால் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கினால் நேரே ஆஃபீஸ்." என்றார். என் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்து போனேன். அங்கே நான் பார்க்கும் சமயம் பஸ் எதுவும் இல்லை. அதனாலும் அங்கே இருந்து பஸ் கிளம்பும் என்பது தெரியாத காரணத்தாலும் அங்கே கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. சரி, என்று என் கணவருக்கு போன் செய்யப் போனேன். அதற்குள் joining report டைப் செய்து வரவே அதில் கையெழுத்துப் போட்டேன். "கீதா சாம்பசிவம்" என்று. மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். 5 மணிக்கு ஆஃபீஸ் முடிகிறது. இவருக்கு ஆஃபீஸ் 3-30க்கே முடிந்து விடும். ஆகையால் எங்கே போன் செய்வது என்றும் புரியவில்லை. அதற்குள் மேலே என்னுடைய இடத்திற்கு அழைத்துப் போனார்கள். நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான்.

23 comments:

 1. //"அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.//

  இது எப்ப "சமீபத்துல" 30 வருஷத்துக்கு முன்னாடியா? (யாருப்பா அது இவங்களுக்கு வயசே 16 தான் அதனால பொறக்கறத்துக்கு முன்னாடியானு கேளுனு சொல்றது...)

  //நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான்.//

  ஆகா.... அப்படி போகுதா கதை... சரி சரி அவரு ஒங்கலுக்காக காலையிலேயே வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டாரா அதான் 4.30 மணிக்கு வேலைல சேர அனுமதிச்சிருக்காங்க:-)

  ReplyDelete
 2. நன்மனம்,
  வலைப்பூவே இல்லாம இந்த மாதிரி வேலை எல்லாம் காட்டறீங்களே? இருங்க , சங்கத்துலே சொல்லி உங்களுக்கும் ஆஆஆஆப்ப்ப்ப்புபுபுபுபுபு வைக்கச் சொல்றேன்.

  ReplyDelete
 3. //வலைப்பூவே இல்லாம இந்த மாதிரி வேலை எல்லாம் காட்டறீங்களே? இருங்க , சங்கத்துலே சொல்லி உங்களுக்கும் ஆஆஆஆப்ப்ப்ப்புபுபுபுபுபு வைக்கச் சொல்றேன்.//

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, ஒரு வலைப்பு வெச்சுக்கிட்டு கலக்கிட்டிருக்கேன், என்ன பாத்து இப்படி சொல்லிட்டீங்க.

  சரி நான் சொன்னது எல்லாம் சும்மா விளையாட்டுக்கு தான் சீரியசா எடுத்துக்கலனு நெனக்கிறேன். உங்க பதில பாத்தா இரு இரு உன்ன அவங்க கிட்ட மாட்டி விடறேன்னு சொல்றா மாதிரி இருக்கு.:-(

  ReplyDelete
 4. appaadi, ippa thaan nimathiyaa irukku. chinna ponnu, (neenga thaaan, neenga thaan) epdi thaniyaa poga poguthoonu yest enakku thookamee varalai.

  ada! summa climaxla hero maathiri saambu mama vantudaaru!nu sollunga!

  ivara paathaa, "yen anba purinjikkalai!"nu munthaya post onnula sonningaa? i think he won't speak much, coz he is man of action. he hee..

  comment summa 18, 20 nu pichukittu poruthu polirukku! nalla boni aguthunu sollunga! ipadi thaan ezhuthanam, therinjathaa? summa saambarukku uppu podalai! cookerukku caskat podalai!nu ezhutha koodaathu! (thalaya Aatunga chinna ponnu!)

  ReplyDelete
 5. ஒரு வழியா கதாநாயகனும், கதாநாயகியும் சந்திசாச்சு, கரெக்டா இந்த இடத்துல வந்து இன்டெர்வல் விட்டுடீங்களே:)

  ReplyDelete
 6. அம்பி, இதுக்குப் பேர்தான் சேம் சைட் கோல்னு நினைக்கிறேன். பதிவு போடறது நான். பின்னூட்டம் கொடுக்கிறது நான். புகழ் எல்லாம் அவருக்கா? இருக்கட்டும். யானைக்கு ஒரு காலம்னா இந்தப் பூனைக்கும் ஒரு காலம் வரும். உங்க மனைவி கிட்டே வச்சுக்கறேன்.(வந்ததும்).

  ReplyDelete
 7. வேதா, தமிழ் சினிமா பாரக்கறீங்க இல்ல, அப்போ இடைவேளை உண்டுதானே?

  ReplyDelete
 8. நன்மனம்,
  உங்க வலைப்பூவிலே வந்து பின்னூட்டம் போட்டாச்சு. இப்போ சரியா? அடிக்கடி வாங்க என் வலைபூவிற்கும்.

  ReplyDelete
 9. அப்புறம், நன்மனம்,
  முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் பிறக்கவே இல்லை.

  ReplyDelete
 10. //முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் பிறக்கவே இல்லை.//

  // நன்மனம் said

  (யாருப்பா அது இவங்களுக்கு வயசே 16 தான் அதனால பொறக்கறத்துக்கு முன்னாடியானு கேளுனு சொல்றது...)//

  நான் எழுதறப்பவே யாரோ சொன்னாங்க நாந்தேன் ஆர்வக்கோளாருல கேட்டுபுட்டேன், சரி இப்பவாவது சொல்லுங்க எவ்வளவு வருஷம் முன்னாடி இப்படி நல்லவங்க இருந்தாங்கனு.

  //அடிக்கடி வாங்க என் வலைபூவிற்கும். //

  என்ன இப்படி சொல்லிட்டீங்க அட்டெண்டன்ஸ் கொடுக்கறது இல்ல அவ்வளவு தான். இல்லனா உங்க வயசு 16, தேவன் கூட போட்டி போட்ட எழுத்தாளர் இதெல்லாம் எப்படி தெரியும்:-)

  ReplyDelete
 11. // என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான். //
  என்ன பண்ணுறது. அது அவர் தலையெழுத்து, அத யாரல மாத்த முடியும், வந்து நின்னு தான் ஆவனும்.

  ஆங் அப்புறம்........

  ReplyDelete
 12. //யானைக்கு ஒரு காலம்னா இந்தப் பூனைக்கும் ஒரு காலம் வரும்...//

  நம்ம 'யானை, பூனை'களை இங்கே ச்சும்மா இழுக்கறது சரியில்லே.... ஆமாம்:-)))))

  ReplyDelete
 13. //மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்.//

  அடுத்த நாள் 4.45 ஆ??

  ReplyDelete
 14. Congrajulations... Velaiyilley sernthaacchu appuram enna aacchu?

  ReplyDelete
 15. நன்மனம்,
  வந்தா வருகைப்பேரேட்டிலே கையெழுத்துப் போட வேண்டாம்ங்கிறது அரசு ஊழியர்களுக்குத்தான். வலைப்பதிவிலே கையெழுத்துப் பின்னூட்டம்கிற பேரிலே போட்டாகணும்.

  ReplyDelete
 16. சிவா,
  இது நல்லா இல்லே சொல்லிட்டேன். மறுபடி சொல்றேன், யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.
  துளசி, உங்க யானை, உங்க பூனை தான். :-)

  ReplyDelete
 17. அதெல்லாம் பரவாயில்லை, துளசி, யானையும் பூனையும் நம்ம எப்போக்கூப்பிட்டாலும் வரும்.

  ReplyDelete
 18. நீங்க வேறே மனசு, அடுத்த நாள்லேருந்து ஒரு மாசக்கதையைச் சொன்னதுக்கு அப்புறம் பாருங்க. நான் வேலைக்குப் போனது ஒரு வரலாறுனு உலகம் புரிஞ்சுக்கும்.

  ReplyDelete
 19. தேவ், இப்போவாவது வந்து வாழ்த்தறீங்களே? வேலைக்குப் போய் அப்புறம் சம்பளம் வாங்கினேன். அதை எங்காவது சங்க நிதிலே சேர்த்துடப் போறீங்கனுதான் சொல்லலை. சொல்லவே மாட்டேனே.:-)

  ReplyDelete
 20. நான் மாமின்னு கூப்பிட கூடாதுன்னா நீங்க என்னை -ங்க போட்டு கூப்பிட கூடாது.

  என்ன ஆனாலும் முதல் நாளே வேளையில் சேர்வேன் என்ற உங்கள் ஆர்வத்தை(பிடிவாதத்தை) பாராட்டுகிறேன்.

  மெகா தொடரின் தலைப்பு "வாழ்கை பயணம்".

  நல்லாருக்கா....

  ReplyDelete
 21. //மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்.//

  திஸ் இஸ் த சீக்ரட் ஆஃப் govt ஆபீஸ் எனர்ஜினு இப்போ தான் தெரியுது... :-)

  ReplyDelete
 22. சின்னக்குட்டி,
  நேத்திக்கு நீங்கனு நினச்சு வேறே ஒரு பதிவுக்குப் போய் விட்டேன். பார்த்தா அது யாரோ ஈழத்துச் Chinnakuddy. நீங்க எந்த ஊரு? இந்த வலை உலகிலே யாரை வேணாக் கேட்டுப் பாருங்க, நம்மளைச் சின்னப் பொண்ணுனு சொல்லுவாங்க. அதான் மாமினு கூப்பிடாதீங்கனு சொன்னேன்.

  ReplyDelete
 23. ஹா, ஹா, ஹா, ச்யாம்,
  இப்போ புரிஞ்சுதா? நான் ஏன் 4-30-க்கு வேலையிலே சேர்ந்தேன்னு.

  ReplyDelete