எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 24, 2019

கிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!


உம்மாச்சி அலமாரி கிட்டே இருந்து கோலம் போட ஆரம்பிச்சேன். காலை மட்டும் உள்ளே வரமாதிரி போட்டுக்கொண்டே பின்னால் போனேன். இது உம்மாச்சி அலமாரிக்கிட்டே போட்டிருப்பது. முன்னெல்லாம் கையை முஷ்டி மடக்கிக் கொண்டு கோலமாவில் தோய்த்துப் போட்டால் சின்னக் காலாக விழும். கீழே உட்கார்ந்து போடுவேன். இப்போவெல்லாம் கீழே எங்கே உட்காருகிறது! ஆகவே கையாலேயே குட்டிக்காலாகப் போட்டேன் முடிந்தவரை!
இது முன் கூடத்தில் வெளி வாசலுக்குச் செல்லும் வழி


இதுவும் அதைத் தொடர்ந்தது தான்



இது நிலைப்படியிலிருந்து வெளியே உள்ள சின்னத் தாழ்வாரத்தில் போட்டிருப்பது


இது நம்ம வீட்டுக் கோலம். ஹிஹிஹி, அங்கே தெரிவது என் கால் தான். காமிராவில் கவனிக்கவில்லை. அதனால் எல்லா இடங்களிலும் புடைவை மட்டும் தெரிகிறது! இஃகி,இஃகி,இஃகி!


அதோ தெரிவது எதிர்வீட்டுக் கோலம். எங்க வீடு இருக்கும் பகுதியில் எங்க வீடு மட்டும் தான். எதிர்வீட்டுக்குப் பக்கம் இன்னொரு எதிர் வீடு உண்டு. அவங்க போட்ட கோலம் கீழே!



இனிமே நம்ம வீட்டுக் கொண்டாட்டம். எப்போவும் பண்டிகைக்கு 2 நாட்கள் முன்னரே பக்ஷணம் செய்ய ஆரம்பிப்பேன். புழுங்கலரிசி முறுக்கும், தட்டையும் தின்பதற்காகவே கொஞ்சம் நிறையச் செய்து வைத்து விடுவேன். அப்புறமாப் பண்டிகை அன்று பச்சரிசியை மிஷினிலோ அல்லது மிக்சியிலோ மாவாக ஆக்கிக் கொண்டு நிவேதனத்துக்கு எனத் தனியாகச் செய்வேன். இந்த வருஷம் கிச்சாப் பயலுக்கு எதுவும் பண்ணலை. மருத்துவர் போட்டிருக்கும் கெடுபிடியாலும்  செப்டெம்பரில் அம்பேரிக்கா போகணும் என்பதாலும் அதிகப்படி வேலையை இழுத்துவிட்டுக்காதே எனக் கடுமையான எச்சரிக்கை! ஆகவே நேற்றுக் கிச்சாப்பயலுக்குப் பருப்புப் பாயசமும், வடையும் மட்டும் தான். கொஞ்சம் போல் பால் வாங்கித் திரட்டுப் பால் செய்தேன். எப்போவும் கிச்சாப் பயலின் பிறந்த நாளைக்குத் திரட்டுப் பால் உண்டு என்றாலும் சில வருஷங்களாகச் செய்யவில்லை. இந்த வருஷம் அதை மட்டும் பண்ணினேன். அதிக வேலை இல்லையே! ஆனால் கோலம் போட்டு நிமிர்வதற்குள் போதும் போதும்னு ஆகி விட்டது. உடம்பு சொகுசுக்கு இடம் கொடுத்துவிட்டது போலும்! :( 

பின்னர் சாயந்திரமாப் பாயசம் வைத்து வடையும் தட்டினேன். எதுவும் பண்ணவில்லை என்பது தெரிந்து எதிர்வீட்டு மாமி அவங்க பண்ணி இருந்த கைமுறுக்கு, தேன்குழல், உப்பு, வெல்லச் சீடைகளைக் கொடுத்தாங்க நிவேதனம் செய்யவென்று. கொஞ்சம் மனசுக்கு சாந்தி வந்தது. பண்டிகைக்கு எதையும் குறைக்காமல் முறுக்கு சீடைகளும் வந்து விட்டனவே. அவங்க வீட்டிலே தட்டை செய்ய மாட்டாங்க போல! அதனால் பரவாயில்லை! தேன்குழல் வந்ததே! பின்னர் நாங்க வாங்கிய பழங்களும், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகியவற்றோடு அவல், வெல்லம், பால், தயிர், வெண்ணெய் பாயசம், திரட்டுப் பால், வடை ஆகியவற்றையும் வைத்துக் கிச்சாப்பயலுக்குக் காட்டியாச்சு. பல் முளைக்காததால் அவன் பாயசமும்,வடையும் போதும்னு சொல்லிட்டான்! :)))


ராமர் இல்லாமலா? ஒரு விளக்குக்கு 2 விளக்குப் போடவும் வெளிச்சம் அதிகம் ஆகி விட்டது. அது வராமல் எப்படி எடுப்பது என்று தெரியவும் இல்லை.



இதிலே வடை வைக்கவில்லை. பேசனில் ப்ளாஸ்டிக் கவரில் மாமி கொடுத்த பக்ஷணங்கள். பக்கத்தில் வெண்ணெய், பக்ஷணத்துக்கு வலப்பக்கம், பால், தயிர், முன்னால் பாயசம், அதன் பக்கம் அவல், வெல்லம், பின்னால் வெற்றிலை, பாக்கு, பழங்கள்


வடை சூடாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.


வடையும் தயார். தேங்காயும் உடைத்து வைத்தாயிற்று. எல்லாமாகக் கிச்சாப்பயலுக்குக் கொடுத்தாச்சு. பலகையில் உட்கார்ந்திருக்கான் கிச்சாப்பயல். பூக்கள் அவன் முகத்தை மறைக்குது! 



65 comments:

  1. அட! கிச்சாப் பயல் ஒரே காலில் வந்துவிட்டார் போல நேர்க்கோட்டில்!! ஹா ஹா ஹா

    பிறந்த வீட்டில் 8 போல போட்டு விரல் வைத்து முன் கால் பின் கால் என்று நாம் அடி எடுத்து வைப்பது போல வலத் இடமாக ஓரு அரை அடி இடைவெளி விட்டுப் பொடுவது. கல்யாணம் ஆன புதுசுல மாமியார் வீட்டில். அப்ப என் மாமனார் சொல்லிக் கொடுத்தார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு குத்துவது போன்று வைத்துக் கொண்டு மாவு கரைத்த பாத்திரத்தில் முக்கி தரையில் இடகை இடதுகாலுக்கு, வலது கை வலது காலுக்கு என்று பதித்து அதற்கு ஏற்றார் போல் கட்டை விரலை கொஞ்சம் பெரிதாக டாட் வைக்க வேண்டும் என்றும் கையை மாற்றி மாற்றி நாம் அடி எடுத்து வைப்பது போல ஒரு கால் அப்புற்ம் மற்றொரு கால் கொஞ்சம் ஒரு அரை அடி மேலெ இருப்பது போல போடுஅது எளிது என்று தெக்கினிக்கி சொல்லிக் கொடுத்தார். அதன் பின் அப்படியே...

    இந்தக் கால் போடுவதை வைத்து பிறந்த வீட்டில் சும்மா ஒவ்வொருவரும் கலாட்டா செய்வாஅர்கள். சிலர் இரு கால்களையும் அடுத்தடுத்து வரைந்திருந்தால்...என்ன உங்க வீட்டுல கிச்சா ரெண்டு காலையும் ஒரே நெரத்தில் தூக்கி ஜம்பி ஜம்பி வந்தாரா என்பார்க்ள். ஒரு கால் வடிவம் மட்டுமாக வரைந்திருந்தால் ஒத்தக் காலால் பாண்டி விளையாடிக் கொண்டே வந்தானா என்பார்கள் ஒரு அடி மேல் கேட் இருந்தால் கிச்சா ஓடீ வந்தானா என்பார்கள்...இதை வைத்துக் கலாய்த்தல் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்.. ஜாலியான நாட்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, கோலம் அதுவும் மாவு அரைத்துப் போடும் மாக்கோலம் போட்டாலே எனக்குக் கோடுகள் எல்லாம் கோணாமல் வந்து கொண்டிருந்தது ஒரு காலம்! இப்போல்லாம் நான் ஒரு பக்கம் இழுக்க, கை இன்னொரு பக்கம் போகிறது. இது போடுவதே பெரிய விஷயமாகப் போயிற்று. குட்டிக்கால்களை நானும் அப்படித் தான்முஷ்டியால் குத்துவது போல் வைப்பேன். அதைத் தான் மேலே பதிவிலும் சொல்லி இருக்கேன். ஆனால் அப்போல்லாம் உட்கார்ந்துக்க முடிந்தது. இப்போ உட்கார முடியாது.

      Delete
    2. //முன்னெல்லாம் கையை முஷ்டி மடக்கிக் கொண்டு கோலமாவில் தோய்த்துப் போட்டால் சின்னக் காலாக விழும். கீழே உட்கார்ந்து போடுவேன். இப்போவெல்லாம் கீழே எங்கே உட்காருகிறது!// ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன். :) எட்டு மாதிரிப் போட்டுப் போடுவது இல்லை.

      Delete
  2. பல் முளைக்காதே இன்றுதானே பிறந்திருக்கார் எனவே உங்க நெய்வேத்தியமே போதும் என்றிருப்பான் கீதாக்கா...அது கரெக்டுதான் இல்லையா...

    வடை பொரிவது பார்க்கவே யும்மியா இருக்கு..

    கோலம் ரொம்ப நன்றாக இருக்கிறது அக்கா. விஷமக்கார கிச்சா ஒளிந்து ஒளிந்து காலை மெதுவா ஒரோரு காலா சத்தம் வராம அடி எடுத்து வைத்து கீதாக்காவுக்குத் தெரியாம உள்ள வந்தது போல இருக்கு...உங்கள் கோலம் அப்படித்தான் சொல்கிறது!!ஹா ஹா ஹா

    பதுங்கி பதுங்கி சத்தம் போடாமல் ரகசியமா வரும்போது நம் காலாடிகள் பெரும்பாலும் இப்படி நேர்க்கோட்டில் இருக்கும்..அது என்ன அழகு இல்லையா!!! பாருங்க பாட்டியிடம் எப்படி விளையாடுகிறான் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹி )கீதாக்கா என்னை அடிக்க ஓடி வராங்க..நானே குயந்தைனு சொல்லிக் கொண்டே...!!).

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, வடைக்கு நன்கு அரைத்துக் கொண்டு கொஞ்சம் போல் அரை உபருப்பைக் களைந்து பத்து நிமிஷம் ஊறவைத்துச் சேர்த்து மெலிதாகத் தட்டினால் வடை மொறுமொறுவென அந்த உபருப்பெல்லாம் பொரிந்து நன்றாக இருக்கும். நேற்று அப்படித் தான் தட்டினேன். தயிர்வடை எனில் மிருதுவாக!ஓட்டை போடாமல்

      Delete
    2. //பாட்டியிடம் எப்படி விளையாடுகிறான் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹி )// என்னாது, பாட்டியா? யாரு அது? :P:P :P

      Delete
    3. அதானே...

      ஒரு கொழந்தை..ந்னா சீரங்கத்..ல இருக்கறது!...

      Delete
    4. அது! அந்த பயம் இருக்கட்டும்! @துரை! :))))

      Delete
  3. பாத்தீங்களா பலகையில் கிச்சா யாருக்கும் தெரியாம ரகசியமா உக்காந்திருக்கான்!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கிச்சாப்பயல் பக்கத்திலும் விளக்கு வைச்சிருக்கணும். :( தோணலை.

      Delete
  4. சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்று ஓடி வந்தேன்... கோலங்கள் அருமை. தொடர்ச்சியாய் போட்டிருக்கிறீர்கள். பட்சணங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஹிஹிஹி, பக்ஷணங்கள்? வடையும், பாயசமும், திரட்டுப் பாலும் தான்! அப்புறம் பழங்கள், மற்ற பக்ஷணங்கள் எதிர்வீட்டு மாமி கொடுத்தாங்க.

      Delete
  5. என்னடா கிச்சா பயல் வந்திருப்பானே கீதாக்கா அது பத்தி ஒன்றும் சொல்லலையே என்று நினைத்தேன்..பார்த்தா வந்தாச்சு...

    அம்பேரிக்கா பயணத்துக்கு வாழ்த்துகள்..குஞ்சுலு, பெண்ணின் குட்டீஸ் எல்லாருடனும் எஞ்சாய்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நேத்திக்குப் போட நினைச்சு முடியலை. இன்னிக்கும் காலையில் இருந்து ஏதேதோ வேலைகள். அதான் தாமதம்.

      Delete
  6. திரட்டுப்பால் எப்படி செய்தீர்கள் என்று சிறுகுறிப்பு வரையுங்கள்.எதிர்வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கோலம் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. திரட்டுப்பால் செய்வது கஷ்டமே இல்லை. பாலை எவ்வளவு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஓர் பெரிய பாத்திரத்தில் விட்டு அடியில் ஓர் ஒரு ரூபாய்க் காசு அல்லது சின்னத் தட்டைப் போட்டுவிட்டுக் கரண்டியைப் போட்டு அடுப்பைத் தணித்து வைக்கணும். கொஞ்ச நேரத்துக்கு ஒருதரம் பாலைக் கிளறி விடணும். சுமார் ஒரு மணி நேரத்தில் பால் நன்றாகச் சுண்டிச் சேறு மாதிரி வரும். அப்போ வெல்லமோ, சர்க்கரையோ உங்க விருப்பத்துக்குச் சேர்த்துச் சிறிது நேரம் கிளறிவிட்டு ஏலப்பொடி போட்டு வைக்கவேண்டும். அவ்வளவு தான். நேற்று நான் வெல்லம் தான் போட்டேன்.

      Delete
  7. வடை அழகாய் நல்ல ஷேப்பாய் வந்திருக்கிறது. இங்கு அப்படி வருவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், மாவு நல்ல கெட்டியாக உருட்டும் பதத்தில் இருக்கணும். இலையில் தட்டிப் போடணும். நான் ப்ளாஸ்டிக் பேப்பரிலோ, கையினாலோ தட்டுவதில்லை. பாரம்பரிய முறை தான் எப்போவும்.

      Delete
  8. கிச்சாவோட புண்ணியத்தில் எங்களுக்கும் கிடைத்தது பாக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி! நன்றி.

      Delete
  9. எதிர்வீட்டுக் கோலம் நல்லா இருக்கு. உங்க வீட்டுக் கோலப் படங்களை நீங்க நல்லா எடுக்கலை என்று சொன்னால் நீங்க கோச்சுக்கப்போறீங்க. எதுக்கு வம்பு

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, நீங்க பாராட்டிச் சொன்னால் தான் அதிர்ச்சி வரும். மற்றபடி உங்கள் குறைகளை நான் கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அவங்க போட்டிருப்பது ஒற்றை இழை. நான் போட்டிருப்பது இரட்டை இழை. இரண்டும் சேர்த்தே போடுவது. அப்போது கொஞ்சம் மாவு கூடக் குறையப் போகும். அது படத்தில் அப்படியே!நாங்க பொதுவாக ஒற்றை இழைக்கோலம் போட மாட்டோம். இரட்டை இழைதான். அதுவும் ஒரே சமயத்தில் 2 இழையும் விழவேண்டும்.

      Delete
  10. வடை பண்ணும்போது, படம் எடுப்பதற்காக மிகுதி உள்ள மாவை வைத்து 3 வடையையும் போட்டுட்டு படம் எடுத்ததனால், முதலில் போட்ட இரண்டு வடை கொஞ்சம் சிவப்பாகவும் கடைசியில் போட்ட 3 வடை இன்னும் வேகாமலும் இருக்கோ?

    ReplyDelete
    Replies
    1. வடைகளைப் பண்ணி இருந்தால் படத்தில் அதுவும் முன்னாடியே இடம் பெற்றிருக்கும். வடை தட்டிக் கொண்டே தான் படங்கள் எடுத்தேன். அதனால் முதலில் செய்த வடைகள் படத்தில் இடம் பெறவில்லை. அவை தான் அடுப்பில். உங்கள் கற்பனை வளம் வாழ்க! வளர்க! :))))))

      Delete
  11. இடுகையும், கிருஷ்ணனின் பாதங்களும் மனதை நெகிழவைத்தது. சரியான சமயத்தில் இடுகையை வெளியிட்டிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழரே!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    கிருஷ்ண ஜெயந்தி விழா நல்லபடியாக கழிந்தது குறித்து சந்தோஷம். கிருஷ்ணன் நம்ம வீட்டு குழந்தை. எது கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிப்பான். நீங்கள் தந்த வடை, பாயாசத்தில் குதித்து குதித்து வந்திருக்கிறான் பாருங்கள். பூஜை முறைகள்,கோலங்கள், கிருஷ்ணன் கால் அனைத்தும் அழகாக இருந்தது. தங்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மகன, மகளுடன் குழந்தைகளுடன் பொழுதை ஜாலியாக கழித்து விட்டு வாருங்கள். அவ்வப்போது எங்களையும் மறவாமல் எட்டிப்பாருங்கள். நாங்களும் உங்கள் நினைவுகளோடுதான் இருப்போம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நானும் அங்கே இருந்தாலும் இங்கே தான் மனமும் நினைவுகளும் இருக்கும். குழந்தையைப்பார்க்கப் போவது தான் மன மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணம். வாராது வந்த மாமணி.

      Delete
  13. வணக்கம் சகோதரி

    கிருஷ்ண ஜெயந்தி விழா நல்லபடியாக கழிந்தது குறித்து சந்தோஷம். கிருஷ்ணன் நம்ம வீட்டு குழந்தை. எது கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிப்பான். நீங்கள் தந்த வடை, பாயாசத்தில் குதித்து குதித்து வந்திருக்கிறான் பாருங்கள். பூஜை முறைகள்,கோலங்கள், கிருஷ்ணன் கால் அனைத்தும் அழகாக இருந்தது. தங்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மகன, மகளுடன் குழந்தைகளுடன் பொழுதை ஜாலியாக கழித்து விட்டு வாருங்கள். அவ்வப்போது எங்களையும் மறவாமல் எட்டிப்பாருங்கள். நாங்களும் உங்கள் நினைவுகளோடுதான் இருப்போம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. இங்கு சிலருக்கு அய்யங்கார்களுக்கு கிருஷ்ணஜய்ந்தி இன்றாம் கிருஷ்ணஜயந்தி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வைணவர்களில் சிலருக்கு வெள்ளிக்கிழமை. பாஞ்சராத்திர ஆகமக்காரர்களுக்கு நேற்று என நினைக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் அரங்கன் நேற்றுத் தான் விழாக் கொண்டாடினான்.

      Delete
  15. நேர்மறையாகச் சிந்திக்க வைக்கும் வல்லமை கொண்ட அனைத்து கோலங்களும் அழகு அம்மா... அதில் இன்னொரு எதிர் வீடு கோலம் சிறப்பு...

    (மண்ணை குழைத்து, சரியாக கொடுக்காவிட்டால்... இது சொந்தக் கதை...!)

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. அந்த இன்னொருஎதிர்வீட்டுப் பெண்ணுக்கு 26, அல்லது 27 வயதுக்குள் தான். ஆகவே கோலம் சிறப்பாக வருவதில் வியப்பு இல்லை. இப்போதெல்லாம் எனக்குக் குனிந்து கோலம் போடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த கோகுலாஷ்டமிக்கு வீடு வீடாகச் சென்று கோலம் போட்டுக்கொடுத்த நினைவுகள் வருகின்றன. :))))) இப்போது இரண்டு இழை விழுந்தாலே போதும் என்னும் நினைப்பு.

      Delete
  16. // இந்த வருஷம் கிச்சாப் பயலுக்கு எதுவும் பண்ணலை...//

    இப்படி சொல்லிவிட்டு, உங்களால் முடிந்தவற்றை செய்து விட்டீர்கள்... அந்த பயல் உங்களுடன்...

    இந்தவொரு பந்தம் + உரிமை + பக்தி
    சிலரிடம் கண்டுள்ளேன்...

    1) சின்னப்ப தேவர்...
    2)

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. யார் என்ன கொடுத்தாலும் துளசி ஜலமாக இருந்தால் கூட ஏற்பான் கண்ணன். அடியார்களை அவன் சிரமப்படுத்துவதில்லை. மற்றபடி உங்கள் தகவலுக்கு நன்றி.

      Delete
  17. மன்னிக்கவும்... பிறகு பேசுகிறேன் Amma...

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன? பரவாயில்லை டிடி.

      Delete
  18. அழகான கோலங்கள். என் வீட்டில் நேற்றும், இன்றும் எளிமையாக அவல் வறுத்து பொடித்து வெல்லம் போட்டு நெய் விட்டு நிவேதனம்.இன்று சுவாமிமலை கொய்யா பழம்,(சிவப்பு) பால் வைத்து கும்பிட்டாச்சு.
    நேற்று கும்பகோணம் பயணம் அவசர பூஜை. வந்து மறு முறை வணங்கியாச்சு.

    பேத்தியை பார்க்க போவது மனதுக்கு மகிழ்ச்சி.
    அங்கு போய் குட்டி செல்லத்திற்கு பிடித்ததை செய்து கொடுங்கள், இப்போது உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
    எதிர் வீட்டு மாமிக்கு வாழ்த்துக்கள். அன்புடன் கிச்சாவுக்கு கொடுத்து இருக்கிறார், கீதா மாமி வீட்டில் வந்து ஏமாந்து போக கூடாது கிச்சா என்று.(கிச்சாவுக்கு தெரியும் முன்பு தன் பிறந்த நாளுக்கு நீங்கள் எல்லாம் செய்தீர்கள் என்று) நல்ல பலத்தை கொடுக்கட்டும் கிச்சா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, கும்பகோணம் கோயில் உலா நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி இருப்பீர்கள். எங்கே இருந்தால் என்ன? மனமெல்லாம் அவன் நினைப்பாக இருக்கும்போது தினம் தினம் பண்டிகை தான். குட்டிக்குஞ்சுலு சாப்பிடவே படுத்துகிறது. இன்னமும் அதற்குப் பிடித்தது என எந்த உணவும் அமையவில்லை. பாலும், வெண்ணெயும் தவிர்த்து. ப்ரெட்டில் வெண்ணெய் தடவிக் கொடுத்தால் வெண்ணெயைச் சாப்பிட்டுவிட்டு ப்ரெடைத் தூக்கிப் போடுகிறது. :))))))

      Delete
  19. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அருமையான படைப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன்!

      Delete
  21. //இது நம்ம வீட்டுக் கோலம். ஹிஹிஹி, அங்கே தெரிவது என் கால் தான்//
    ஆதாரத்தோடு நிரூபிக்கிறீங்க ஆனாலும் மீ நம்பமாட்டேன்ன்:)) கால் எங்கே தெரியுது?:)).. சாறிக்கலர் எனக்கும் பிடிச்ச சாணிப்பச்சைக்கலர்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, அது சாணிப்பச்சைக்கலரே இல்லை. கிளிப்பச்சைக்கலர் அல்லது எலுமிச்சங்காய் உங்க மொழியிலே தேசிக்காய்க் கலர். :)))) கோலாப்பூர்ப் பதிவைப் போய்ப் பாருங்க! அதிலே இருக்கும் 2 புடைவையில் ஒன்று இது!

      Delete
  22. //அதோ தெரிவது எதிர்வீட்டுக் கோலம்//
    ம்ஹூம்ம்.. எதிர்வீட்டுக் கோலத்தை மட்டும் நல்ல கிளியராகப் படமெடுக்கத் தெரியுது:)).. அதுசரி கிச்சாப்பயல் எண்டதும்.. உங்கள் பேரன் என நினைச்சிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பேரப்பிள்ளைகளத்தானே செல்லமாக அப்படிக் கூப்பிடுவினம்.

    ஏன் ஒரு கால் மட்டும் போட்டீங்க.. 2 கால் போட்டிருக்கோணுமாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. ஏங்க... கிருஷ்ணன் என்ன தவ்வித் தவ்வியா வரப்போறான்? ஒவ்வொரு காலா வைத்துத்தானே வரப்போறான். இதெல்லாம் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லையா? அங்க முழு சைவர்கள்தானோ?

      Delete
    2. எதிர்வீட்டுக் கோலத்தை ரொம்ப அலட்சியமாக எடுத்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கிச்சாப்பயல் உங்களுக்கும் பேரன் தான்! இஃகி,இஃகி! இரண்டு காலும் மாற்றி மாற்றிப் போட்டிருக்கேன். அப்படித் தானே நடப்போம்! நீங்க வேணா தவ்வித் தவ்வி வருவீங்க போல!

      Delete
    3. நெல்லைத்தமிழனுக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      //இதெல்லாம் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லையா? அங்க முழு சைவர்கள்தானோ?//
      இல்லை இந்த விரதம் கொண்டாடுவதில்லை.. அப்படி எனில் நான் கூவியிருப்பேன் எல்லோ.. இன்று அது பண்ணினேன் இது பண்ணினேன் என:)).

      //அங்க முழு சைவர்கள்தானோ?///
      கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ தான் மட்டும்தான் சைவம் எனும் நினைப்பு கர்:)) நாங்கள் பிடிக்கும் கந்தசஷ்டி போல நீங்க பிடிச்சதுண்டோ விரதம்? சதுர்த்திபோல பிடிச்சதுண்டோ?.. ஏன் எங்களைப்போல கெளரி, பிள்ளையார் கதை பிடிச்சதுண்டோ:)).. ஜொள்ளுங்கோ பார்ப்பம்.. ச்ச்ச்சும்மா றூமைப்பூட்டிப் போட்டு நல்லா குண்டா சுவீட்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கொமெண்ட் போடுறார் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சரி சரி ஓடாதீங்கோ:))

      Delete
    4. கீசாக்கா நான் ஒரு கால் என ஏன் சொன்னேன் தெரியுமோ.. ஒரு கோட்டில கோலம் போட்டிருக்கிறீங்க.. ரெண்டு பாதமும் எனில் கொஞ்சம் இந்தப்பக்கம் அந்தப்பக்கமுமாகத்தான் போடுவார்கள்.. இது தெரியாம கர்:)) அடுத்தமுறை ஒழுங்காப் போடுங்கோ ஓகே:))

      Delete
  23. //செப்டெம்பரில் அம்பேரிக்கா போகணும் என்பதாலும்///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் உண்மையாவோ கீசாக்கா... வாழ்த்துக்கள்.. ரம் அங்கிளிடன் எனக்கான ஒரு சூட்கேஸ் இருக்கு.. அது அவர் தந்த கிவ்ட்.. தூக்கி வர முடியாமல் விட்டுவிட்டேன்ன்.. வெள்ளை மாளிகையில் றூம் நம்பர் 4 இல், 2ம் கபேர்ட்டின் மேல் தட்டில இருக்கு.. கொஞ்சம் வாங்கி வாங்கோ கீசாக்கா பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
    Replies
    1. பின்னே பொய்யா என்ன அதிரடி? இப்போ அங்கே இருந்திருக்கணும். ஒரு சில எதிர்பாராப் பிரச்னைகளால் போக முடியலை! வெள்ளை மாளிகைக்குப் போனால் உங்களோட பொருளை எடுத்து நான் வைச்சுக்கறேன் உங்க நினைவா!

      Delete
  24. குட்டிக் குட்டிச் சிலைகளோடு பட ஏரியா அழகு.

    அப்போ 2ம் திகதி சதுர்த்திக்கு எங்கு நிற்கப்போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, சதுர்த்தி எல்லாம் இங்கே தான்! பிள்ளையாருக்கு எல்லாம் பண்ணிட்டுத் தான் போவோம்!

      Delete
  25. நல்லா எண்ணெயில பொரிச்சு, இனிப்புப்போட்டு பாயாசமும் செய்து சாப்பிடுங்கோ.. பின்பு முழங்கால் முடியேல்லை.. தலைசுத்துது என மூக்கால அழுதுகொண்டு கர்ர்ர்ர்ர்:)).. அவர் என்ன கேட்டவரோ இப்படி எல்லாம் தரச்சொல்லி.. பிளேன் ரொட்டி பனைவெல்லம் போட்டுச் சுட்டுக் குடுத்திருக்கலாம்.. ஹா ஹா ஹா.. சரி விடுங்கோ..

    தனி ஆளா இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீங்க அதுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எதை எண்ணெயில் போட்டுப் பொரிச்சு இனிப்புப்போட்டுப் பாயாசமாய்ச் செய்யணும்? விம் போட்டு விளக்குங்க! நான் எங்கே அழறேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      Delete
  26. அன்பு கீதா மா. அமெரிக்க வருகைக்கு வாழ்த்துகள்.
    சிரமப்பட்டுக் கோலமேல்லாம் போட்டு இருக்கிறீர்கள்.
    வடையும் பார்க்க பிரமாதமாக இருக்கிறது.
    நம் கண்ணனுக்கு வேண்டுவது வெண்ணெயும், திரட்டுப் பாலும் தான்.

    உங்கள் கோலமும் அழகு. எதிர் வீட்டுக் கோலமும் அழகு.
    நாங்களும் இரட்டை இழைக் கோலம் தான்.
    ஒற்றை போட்டதே கிடையாது.
    எதிர் வீட்டு மாமி நல்லவர். என்ன கரிசனம் மா.
    நீங்க வந்தால் குஞ்சுலு எல்லாம் சாப்பிடும்.பாருங்கோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. உண்மையாகவே இப்போல்லாம் கோலம் போடச் சிரமமாகத் தான் இருக்கிறது. செய்ய யாரும் இல்லையே! :( எதிர் வீட்டு மாமி பக்ஷணங்கள் கொடுத்ததும் தான் எனக்கும் கொஞ்சம் சமாதானம் ஆச்சு! குஞ்சுலுவுக்கு 2 நாளாக ஜுரம். இன்னிக்கு ப்ளே ஸ்கூல் போயிருக்கோ இல்லையோ!

      Delete
  27. கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் சிறப்பு, கொண்டாட்டமே தனிதான். கிருஷ்ணனே சிறுவயதில் மாடு மேய்த்து காடுகளில் எல்லாம் திரிந்த, தீராத விளையாட்டுப்பிள்ளைதானே. அவனுக்கு எதைக் கொடுத்தாலும் வாங்கி உள்ளே தள்ளிவிடுவான் எனும் நம்பிக்கை நமக்குண்டு!

    கிராமத்திலிருக்கையில் அவனுக்காக க்ளாக்காய், புளியம்பிஞ்சு, நவ்வாப்பழம் எல்லாம் பறித்துக்கொண்டு வருவோம். மற்ற பழங்கள், பட்சணங்களோடு உள்ளூர்க்காட்டு சமாச்சாரங்களையும் அலம்பி, தட்டில் வைத்து அவனுக்கு நைவேத்யம் செய்வோம். அவனும் குறுகுறு கண்களுடன் ஆனந்தமாகத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து, சமர்த்தாகச் சாப்பிடுவான். அது ஒரு காலம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன். களாக்காய் எங்க அப்பா வாங்க மாட்டார். புளியம்பிஞ்சும்! ஆனால் தாத்தா வீட்டில் (அம்மாவோட அப்பா) இதெல்லாம் இருக்கும். நவ்வாப்பழம் கூட நாங்க சாப்பிட முடியாது! அக்கம்பக்கம் வீட்டுக்காரங்களுக்குக் கொடுத்துடுவார். பள்ளியில் தெரியாமல் வாங்கிச் சாப்பிட்டது தான். தொண்டைகட்டிக் கொண்டு காட்டிக் கொடுத்து துரோகம் செய்யும். :))))

      Delete
  28. கிச்சா...எங்களின் பள்ளி நாள்களை நினைவுபடுத்திய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  29. அனைவருடைய இல்லத்திலும் கண்ணன்.. சின்னக் கண்ணன்...

    ஹரே க்ருஷ்ண....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இன்னும் ஒரு வாரத்தில் நம்ம ஆளு வந்துடுவார். அப்புறமா அவரோட கொண்டாட்டங்கள் தான்.

      Delete