நேற்றுத் திடீரெனக் கற்பகாம்பாள் அழைப்பு வந்தது. காலை 10 மணி வரை நான் போகப் போவது எனக்கே தெரியாது. திடீரென ஒரு முடிவு. போகலாம் என. அதற்குப்பின் வேகமாக வேலைகளை முடித்துக் கொண்டுச் சற்று ஓய்வு எடுத்ததும், ரெயிலேயே போகலாம் என முடிவு எடுத்தோம். "மாநரகப் பேருந்து" பயணம் பல வருடங்களாகத் தவிர்த்து விட்டோம். அந்தக்கூட்டத்தில் நேரம் விரையம் ஆகிறது. ரெயிலில் போனாலும் செண்ட்ரலில் இருந்து வேறு ஊர்களுக்குப் போவதற்குப் போவதோடு சரி. முக்கால் வாசிப் பிரயாணங்கள் கோயம்பேடு 100 அடி சாலை வழியாகப் போய் விடுகிறது. இந்தப் பக்கம் எல்லாம் பார்த்து 4,5 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆகவே ரெயிலில் போய் செண்ட்ரலில் இறங்கி அங்கிருந்து "ஆட்டோ" வைத்துக் கொண்டு மைலாப்பூர் போனோம். பல வருடங்களுக்குப் பின் மவுண்ட் ரோடில் பிரயாணம். ஆச்சரியம் என்ன என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் பேரம் பேசவே இல்லை. நம்ம சென்னை ஆட்டோதானா என்று சந்தேகம் வந்தது. நாங்கள் போன வேலை முடிந்ததும் கோவிலுக்குப் போய்க் கற்பகாம்பாள் சமேதக் கபாலீஸ்வரர் தரிசனம் நல்லபடியாகக் கிடைத்தது. போகும் வழியிலேயே குளத்தைச் சுற்றிக் கொண்டு போனோம். புதியதாக வந்திருக்கும் விருந்தாளிகளைப் பற்றித் தினமும் பேப்பரில் படிப்பதால் அவற்றையும் பார்த்தோம். சிருங்கேரி துங்கா நதியில் இருக்கும் மீன்களை விட மிகச் சிறியவைதான். இருந்தாலும் குளத்தில் தண்ணீரையும், குளம் மற்றும் அதன் கரைகள் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருப்பதையும் பார்க்க மிகவும் மனம் நிறைவாக இருந்தது. முன் நாட்களில் அண்ணா ஆழ்வார்ப்பேட்டையில் ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்த சமயம் அடிக்கடி போவோம். அதற்குப் பின் சந்தர்ப்பமே வரவில்லை.
அம்பாள் மிகச் சிறிய பெண்ணாக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள். படியில் ஏறும்போதே பார்க்கும் வண்ணம் படிகள் மிக உயரமாக இருப்பதால் ஜாஸ்திக் கூட்டத்தில் அடிபடாமல் பார்க்கவும் முடிகிறது. கூட்டமும் அவ்வளவு இல்லை. அவள் கண்களின் கடைக்கண் பார்வையும், இதழ்களின் முறுவலும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டியது. எல்லா உயிருக்கும் ஆதாரமான அவளை நாம் நம்முடைய இஷ்டத்துக்கு அலங்கரித்துப் பார்க்கிறோம். நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அலங்கரித்துப் பார்ப்பதைப் போலத்தான் இதுவும். நிதானமாகத் தரிசனம் செய்து கொண்டு உள்பிரஹாரம் சுற்றிவிட்டுப் பின் ஸ்வாமி சன்னதி வந்து அங்கேயும் தரிசனம் செய்தோம். நடராஜருக்கு தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. அதற்குப் பின் உற்சவருக்குத் தீப ஆராதனை. எல்லாம் நன்றாகப் பார்க்க முடிந்தது. கோவிலும் வெளிப் பிரஹாரமும் சுற்றுப் புறங்களும் மிகத் தூய்மையாக இருந்தது. அம்பாள் மயில் வடிவில் தவம் செய்வதால் தான் மைலாப்பூர் என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தால் என்ன? சக்தியை எப்படி வழிபட்டாலும் சக்தி சக்தி தானே. இங்கே உள்ள கோலவிழி அம்மன் கோவில் சோழர் காலத்தியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வள்ளுவருக்கும் மைலாப்பூரில் கோவில் இருக்கிறது. எப்போவோ போனேன். இன்னொரு முறை போக வேண்டும். இப்போது ஒரு சக்திப்பாட்டு, நம்ம மீசைக்காரர் பாடியதுதான். சக்தியைப் பற்றி அவரைவிட வேறு யார் சொல்ல முடியும்?
"துன்பமிலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி.
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி.
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத்திருக்கும் எரியே சக்தி.
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி.
தீம்பழந்தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி.
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங்காக்கும் மதியே சக்தி.
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி.
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணையளக்கும் விரிவே சக்தி.
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத்தொளிரும் விளக்கேசக்தி."
இந்த உள்ளத்துள் ஒளிரும் விளக்கைப் பாரதி கண்டு உணர்ந்ததால் தான் இப்படி ஒரு பாட்டு வந்துள்ளது. எனக்குப் படித்து ஆச்சரியப்படத்தான் முடிகிறது.
தேன்கூடு போட்டியில் கலந்துக்கவில்லையா?
ReplyDeleteசொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்
ReplyDeleteவல்லமை செய்துடுவாள் பராசக்த்தி வாழி என்றே துதிப்போம்
இதுவும் மீசைக் கவிங்கர் படியதுதான்
நீயே மீனாட்ஷி,கமாக்ஷி நீலாயதாக்ஷி எனப்பல பெயருடன் எங்கும் நிறைந்தவள்
என் மனத்தோட்டத்தில் எழுந்தருளியே தாயே திரு மயிலை வளர்
உன்னை அல்லால் வேறெ கதி இல்லையம்மா
இது பாபநாசம் சிவன் பாடியது
கோவிலுக்கு போன புண்ணியம் பாதி வந்துவிட்டது எங்களுக்கும். நன்றி தி ரா ச
மின்னல் தாத்தா,
ReplyDeleteஇந்தக்கேலி தானே வேணாங்கிறது!என்னோட பதிவு எல்லாம் போட்டிக்கா? கடவுளே! தவிரத் தலைப்பு வேறே என்னமோ "மரணம்"னு வச்சிருக்காங்க. எல்லாருக்கும் ஒரு நாள் கிடைக்கப் போகுதுன்னாலும் ஏன் இப்போவே அதைப் பத்தி யோசிக்கணும்?
ரொம்ப நன்றி திரு தி.ரா.ச. அவர்களே! இப்போதான் உங்க பதிவைப் பார்த்துட்டு வந்தேன். பின்னூட்டமும் கொடுத்திருக்கேன்.
ReplyDelete$$
ReplyDeleteதலைப்பு வேறே என்னமோ "மரணம்"னு வச்சிருக்காங்க.
$$
அடுத்த மாசம் தலைப்பை மாத்துவாங்க எழுதுவீங்க தானே ??
(சிரிப்பான் போடல)
//சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்
ReplyDeleteவல்லமை செய்துடுவாள் பராசக்த்தி வாழி என்றே துதிப்போம்//
he hee, naan sollanumnu vanthaan, athukulla TRC sir sollitaar. yaaru sonna enna?
periyaava sonna perumaal sonna maathiri!
2 posts in a day..? Hhhmmm, nadathunga, nadathungaa..
மயிலை கோவிலோட அழகே தனி தான்.. மனசு ரொம்ப லேசாகிடும்..இல்லைங்கலா கீதா
ReplyDelete//நீயே மீனாட்ஷி,கமாக்ஷி நீலாயதாக்ஷி எனப்பல பெயருடன் எங்கும் //
ReplyDeleteதி.ரா.ச. சார், இதுல நீலாவுக்கு நம்ம ஊரு......:))))
அப்புறம் கபாலி நல்லா இருக்காருல. அவர நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றது. இந்த தடவை ஊருக்கு வரும் கண்டிப்பாக அவர பார்க்கனும்.
கேட்டத கொடுத்துட்டா அவர் ஏன் பேரம் பேசுறார்.நாம தான் பேசனும். என்ன இருந்தாலும் சென்னை ஆட்டோ அதிகம் தான் ஆந்திரா கேரளா பார்க்கும் போது.
ReplyDeleteநயன்தாரா பதிவா போடுறேன்னு திட்டினீங்க தானே. இப்ப பதிவ போய் பாருங்க.
மின்னல் தாத்தா, அது என்ன டாலர் சைன் போட்டிருக்கீங்க? ஏதும் டாலரில் எனக்கு அனுப்பப்போறீங்களா?
ReplyDeleteஅடுத்த மாசம் கூட சந்தேகம் தான். எனக்குத் தேன்கூட்டில் யாரையும் தெரியாது. எப்படி approach செய்வது? தேன் கூட்டில் போய்க் கையை வைக்க முடியுமா?
வட இந்தியாவில் எங்கே எல்லாம் போயிருக்கிறீர்கள்? கொஞ்சம் உங்கள் பதிவிலே அதை எல்லாம் எழுதுங்களேன். நானும் போயிருக்கிறேன், ஓரளவு. அதையும் எழுதணும். உங்க அடுத்த கேள்விக்குப் பதில் ஆமாம்.
ReplyDeleteஅம்பி, இந்த சமாளிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. நாளைக்கு மறுபடி வெளியிலே போனாலும் போவேன். அதான் இன்னிக்கு சேர்த்துப் போட்டு விட்டேன். ஜூலை 20 தேதி வரை உங்களுக்குக் கொஞ்சம் freeயாக இருக்கும். அதுக்கு அப்புறம் தொடர்ந்து ரம்பம் போடுவேன். தயாரா இருங்க.
ReplyDeleteஆமாம் கார்த்திக், சின்னக் கோவிலா இருந்தாலும் மனதை அள்ளுகிறது.
ReplyDeleteநாகை சிவா,
ReplyDeleteகபாலிக்கு என்ன? நல்லாவே இருக்காரு. நீங்க வாங்க, வரும்போது வந்து பார்த்து செளக்கியமானு கேளுங்க.
மனசு, கேட்டதைக் கொடுத்ததாலே மட்டும் சொல்லலை. behaviourனு ஒண்ணு இருக்கு. அதைச் சொன்னேன். அது கொஞ்சம் மாறி வருது. முன்னே மாதிரி இல்லை. மத்தபடி ரேட் பார்த்தால் குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகாவில் எல்லாம் இங்கே விட ரொம்பக்கம்மிதான்.
ReplyDeleteசாமி மேட்டர் இதுல நான் சொல்லரதுக்கு ஒன்னும் இல்ல... :-)
ReplyDeleteஉங்களை மடலைப் பார்க்கிறேன் என்றால்??
ReplyDeleteஎன்ன கீதாக்கா.. புரியல.
ஹைய்யா............ ஜாலி................. 20வதாம் தேதி வரை. அதுக்கப்பறமும் ஜாலிதான் திரா ச ஊருக்கு போறாறே......
ReplyDeleteஎன்ன ச்யாம்,
ReplyDeleteசாமி பத்தி உங்க அபிப்பிராயத்தைச் சொல்லலாமே?
மனசு,
ReplyDeleteதப்பு, தப்பு நடந்து போச்சு. வெளியிலே போற அவசரம். உங்களுக்கு என்னோட மெயில் அனுப்பறேன். எங்கே, எப்படி அனுப்பணும்னு தகவல் கொடுங்க.
TRC Sir,
ReplyDeleteஇது கொஞ்சம் கூட நல்லா இல்லே. நான் எழுதலைனதும் இவ்வளவு சந்தோஷமா? O.K. enjoy!
TRC Sir,
ReplyDeleteBon Voyage!
கீதா, பின்னூட்டம் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?:-))?
ReplyDeleteபாடம் எடுத்தால் பீஃஸ் கொடுக்க நான் ரெடி.தூங்காமல் கேட்கவும் தயார்.
முருகனை,சிங்காரவேலனையும் துர்கையயும் பார்க்கலியா? எங்க மைலப்பூரில் இன்னும் எத்தனையோ அதிசயம் இருக்கே!
மனு,
ReplyDeleteஒண்ணும் கேட்காதீங்க. ரொம்ப நொந்து போயிருக்கேன். அப்புறம் திடீர்னு வந்ததாலே கற்பகத்தை மட்டும் பார்த்தேன். மத்தவங்க அப்புறம். ஆழ்வார்ப்பேட்டையிலே இருந்தப்போ எல்லாம் பலமுறை போயாச்சு. அப்போ ப்ளாக் எழுதலை.