தலைப்பைப் பார்த்ததும் இதுவும் நான் பார்த்த கோவில்களில் ஒண்ணுனு நினைக்க வேண்டாம். இது வேறே. எனக்கு இயல்பாவே கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு. என்னோட நட்சத்திரம், ராசி தான் காரணமோ என்னமோ தெரியலை. எப்பவுமே உண்டுங்கறார் என் கணவர். அதை எல்லாம் பொருட்படுத்தாதீங்க. என்னோட இயல்புப்படி ஒரு சீரியஸ் பதிவு போட்டா ஒரு நகைச்சுவைப்பதிவு போடணும். (அது நகைச்சுவைனு நானா நினைச்சாலும் சரி.) கொஞ்சம் கமல் பாட்டர்ன் அப்படினு வச்சுக்குங்க. கமல் ரசிகர்கள் திருப்தியா? அந்தப்படி பார்த்தா இப்போ 2 பதிவு சீரியஸ் போட்டாச்சு. ஒரு நகைச்சுவை போடணும். என்ன எழுதலாம்னு யோசிச்சேன்.
இப்படி யோசிக்கிறப்போ திடீர்னு ஒரு குரல், "மேடம், நான் தான் நாகை சிவா, எங்க ஊர் பத்தியும் எழுதச் சொன்னேனே? இங்கே வாங்க, சிட்டுக்குருவி எல்லாம் இருக்கு." என்றார். "நீங்க சூடானிலே இல்லே இருக்கீங்க? நாகப்பட்டினம் எப்போ வந்தீங்க? எதைப் பத்தி எழுதணும்? சூடாமணி விஹாரம் பத்தியா? அது பத்திக் கல்கி ஏற்கெனவே பொன்னியின் செல்வனிலே எழுதிட்டாரே? சிட்டுக் குருவிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? நீங்க "கன்னி" வெடி இல்ல வைப்பீங்க?" என்று கேட்கும்போதே இன்னொரு குரல் கேட்டது. இது என்ன இன்னிக்கு ஒரே குரலா வருது, நமக்கு என்ன ஆச்சுனு பார்த்தா யாருனு நினைக்கறீங்க? நம்ம கால்கரி சிவா தான்.
அவர் கேட்கறார், "என்னங்க கீதா சாம்பசிவம், என்னோட பதிவுப்பக்கம் ரொம்ப நாளா வரவே இல்லை? நீங்க வாங்க, நான் சால்னா, பரோட்டா செய்து தரச் சொல்றேன்." என்றார். "கடவுளே, நான் சுத்த சைவ உணவு சாப்பிடறவள்." அப்படின்னேன். "அதனால் என்ன பரவாயில்லை. நீங்களும் மதுரை தானே? அப்போ இந்த ஜிகிர்தண்டா பத்தித் தெரிஞ்சிருக்குமே? அது பத்தி நான் ஒரு பதிவு கூடப் போட்டேன்." என்க, நான் "தெரியும் சார், படிச்சிருக்கேன்." என்றேன். "இப்போ என்னங்கறீங்க", என்றபோது, "அது ஒண்ணும் இல்லங்க, நான் அரேபியாவில் இருந்தபோது," என்று அவர் ஆரம்பிக்க "வேண்டாம், சார், உங்க பதிவிலேயே படிச்சுக்கறேன்." என்று ஓட்டம் பிடித்தேன். அப்போ வந்து (சிவ) புராணம் சிவா வந்து, "மேடம், நீங்க எப்போவாவது தான் என் பதிவுக்கு வரீங்க. " என்று சொல்ல "புதுப்பதிவு ஒண்ணும் பார்க்கலியே" என்றேன் பரிதாபமாக. அப்போ சிவசங்கர் அஸ்ஸாமிலிருந்து chatting-ல் "கீதாம்மா, வணக்கம்" என்று கூப்பிட "இது என்ன
குழப்பம்? முத்தமிழ்க்குழுமத்தில் இருப்பவர் இங்கே எங்கே வந்தார்?" என்று என் தலை சுற்ற நெருப்பு சிவா வந்து "நான் தான் நெருப்பு சிவா. நீங்க ஏன் என் வலைப்பக்கம் வரதே இல்லை?" என்று நெருப்பு மாதிரி முழிக்க, நான் பயந்து "நெருப்பு, நெருப்பு, சிவா, சிவா" என்று கத்தினேன்.
அப்போது எங்கேயோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் "கீதா, கீதா, என்ன ஆச்சு? ஏன் சிவா, சிவானு கத்தறே? என் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டியே?" என்று கேட்டது. "யாரு நீங்க? ஏன் உங்க பேர் சொல்லக்கூடாது?" என்று நான் கேட்டேன். "என்னடி இது? ஏதாவது சொப்பனம் கண்டியா? நான் தான் உன் புருஷன்." என்று குரல் சொல்ல "புருஷனா? யார் புருஷன்? யாருக்குப் புருஷன்?" என்று நான் கேட்க, "சரியாப்போச்சு, போ, நான் தான் உன்னோட புருஷன் சாம்பசிவம். எழுந்திரு." என்று குரல் சொல்ல, நான் திடுக்கிட்டுப் போய் "சாம்பசிவமா? யாரது?" என்று கண் விழித்தேன். நான் படுக்கையில் படுத்திருக்க இரவு மணி 2 ஆகி இருந்தது. அத்தனையும் சொப்பனம். வலைப்பூவிலும், முத்தமிழிலும் எத்தனை சிவா என்று கணக்குப் போட்டுக் கொண்டே தூங்கிப் போனதின் விளைவு. அசடு வழிந்தேன்.
அய்ய்! எழுத ஒன்னும் இல்லை, அதை சமாளிக்க இப்படி ஒரு பதிவா?
ReplyDeleteசம்போ மகாதேவா! சிவ சிவா! இப்படி ஒரு மொக்கை பதிவு எல்லாம் படிக்க வேண்டி இருக்கே!
ஐயோ பாவம் சாம்பு சார், வ.வா.ச மாதிரி வருத்தப் படாத கணவர் சங்கம் ஒண்ணு ஆரம்பிக்கனும்.
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteரொம்ப எரியுது போல் இருக்கு. புகை வாசனை பங்களூரில் இருந்து இங்கே வருது.
மனசு,
அதுக்குத் தலைவர் யாரு? நீங்களா? இல்லாட்டி என்னோட கணவரா?
வேதா,
என்னைப் பார்த்தா பொய் சொல்றேனு சொல்றீங்க? இதுக்குத் தண்டனை நீங்க இன்னொரு பின்னூட்டம் போட்டால் தான் சரியாகும்.
என் அருமைத் தம்பி நாகை சிவாவை கேலி செய்ததற்கு ...அதே ஊர்காரரின் கண்டனம்.
ReplyDeleteகண்டனம். சர்வம் கிருஷ்ணார்பனம் ( எல்லாம் சிவமயம் என்பதற்கு மாற்றுதான்) :)))))
//''நான் சின்னப் பொண்ணு, சின்னப் பொண்ணு'
ReplyDeleteஎல்லாருக்கும் தெரிஞ்ச பொய்யைப் பிரகடனம் செஞ்சோமா
//
ரெண்டாவதாவோ மூனாவதாவோ பிறந்துதிருந்தால் எப்பவும் சின்ன பெண் தான் அவங்க அப்பாவுக்கு ! !
(என்ன அப்பாவுக்கு வயசு 90 ஆனாலும் சின்ன பெண்தான் சரிதனே ::_)))
வாங்க கோவி. கண்ணன்,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி. தம்பியைக் கேலி செய்ததுக்கு வக்காலத்து வாங்க அண்ணன் இருப்பது தெரியாது. எல்லாம் சிவமயம். நாகை சிவா இல்லை அந்த சிவன்.
மின்னல் தாத்தா,
ReplyDeleteஇத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க? உங்களுக்குத்தான் எழுத முடியலை, கை நடுங்குது, நான் எழுதறேன் இல்லை, பார்த்துப் புகையாதீங்க, இந்தச் சின்னப்பொண்ணைப்பார்த்து.
நான் உங்களை அக்கா என்று அடிக்கடி சொல்வது எதற்காகனு புரியல !!!
ReplyDeleteமின்னல் தாத்தா(104)
பரவாயில்லங்க உங்க கனவில் முதல வந்த சிவா நான் தான் என்ற பெருமை கொடுத்து இருக்கீங்க.... அத நினைக்கும் போது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஅப்புறம் மயிலாடுதுறை சிவானு ஒருத்தர் இருக்காரு. நெல்லை சிவா, (வெறும்) சிவா இருக்காங்க.
//சம்போ மகாதேவா! சிவ சிவா! இப்படி ஒரு மொக்கை பதிவு//
ReplyDelete//சிவனேன்னு இருக்கற்த விட்டுட்டு கணக்கெல்லாம் போட்டா இப்படித் தான் கனவு வரும். //
அம்பி, வேதா இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் இம்புட்டு பொறாமை கூடாதுங்க... நம்மக்கு ஒரு விளம்பரம் கிடைக்க விட மாட்டீங்களே.
//என் அருமைத் தம்பி நாகை சிவாவை கேலி செய்ததற்கு ...அதே ஊர்காரரின் கண்டனம்.
கண்டனம்.//
அண்ணனே! என் மேல இப்படி பாசத்தை காட்டி அப்ப அப்ப என்ன அந்த பாசத்துல வழுக்கி விழ வச்சுகீறிங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மின்னல் தாத்தா,
ReplyDeleteஉங்களுக்கோ பதிவே எழுத முடியலை. கை நடுங்குது, இதிலே நான் உங்களுக்கு அக்காவா? வேணும் எனக்கு நல்லா. உங்க 104 எங்கே என்னோட 16 எங்கே? அப்பாடி ஒரு நூற்றாண்டு கடந்தவருக்கு நான் அக்காவா?
ஏன் சிவமுருகன் கூட இருக்காரே? இருந்தாலும் அவங்களை எல்லாம் வம்புக்கு இழுக்க வேண்டாமேனு தான் கொஞ்சம் நாம் போற வலைப்பதிவா இருக்கட்டுமேனு.
ReplyDeleteநல்லாக் கேளுங்க இரண்டு பேரையும், இதுதான் சங்கத்துச் சிங்கம்கிறது. சங்க ஆளுங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்ல.
ReplyDeleteசரி சிவாங்கற பேரை மட்டும் யோசிச்சு பார்த்துட்டு படுத்தீங்க...இல்லனா காலைல ஒரு 8 மணி ஆகி இருக்கும்... :-)
ReplyDeleteநல்ல வேளை தலைப்ப பார்த்த் உடனே படிக்கறதுக்கு முன்னாடியே சாமி வந்துடுச்சு..அப்புறம் இது காமெடினு தெறிஞ்ச அப்புறம் தான் சாமி மலை ஏறுச்சு... :-)
ReplyDeleteஅம்பி உனக்கு பொறுமையின் பூஷணம் என்ற பட்டத்தை அளிக்கிறேன்.தி ரா ச
ReplyDeleteஎன்னத்த சொல்ல பொம்பளைங்க கிட்ட பொறந்த வருசம் கேக்க கூடாதுனு எங்க தாத்தா சொல்லுவாரு ஹும் நடத்துங்க !!!
ReplyDeleteநல்ல வேளை சாம்பு சார் தப்பிச்சார்,
ReplyDeleteகனவ சாக்கா வச்சி “யாரு புருசன்னு” அடிக்காம விட்டீங்களே.
சாம்பு சார் கவனமா இருங்க.
என்ன ச்யாம்,
ReplyDeleteஅதெல்லாம் ராத்திரி எப்போ படுத்தாலும் காலைல 4-30 மணிக்கு டாண்ணுனு முழிச்சுட மாட்டேன்?
ஒருவழியா சாமி மலை ஏறிடுச்சா? இன்னிக்குத் திரும்ப வரும் பாருங்க.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபட்டமளிப்பு விழா எங்கே சார்? சொல்லுங்க, கலந்துக்கறோம்.
ReplyDelete@ அம்பி, இந்தப் பதிவைப் படிச்சதாலே பட்டம் வந்திருக்கு, இல்லாட்டி?
மின்னல் தாத்தா,
ReplyDeleteஉங்களுக்கே தாத்தாவா? அது சரி, இனிமேலே கேட்காதீங்க!
சின்னக்குட்டி,
ReplyDeleteமானத்தை வாங்காதீங்க.:-)
என்னங்க கீதா..ஒரே கடவுள் பற்றிய பதிவுகளாய் இருக்கு சில நாட்களாய்.. ஏதேனும் சாமி உள்ளார புகுந்து விட்டதா.. சொன்னால் வந்து ஆசிர்வாதம் வாங்க வசதியாய் இருக்கும்...
ReplyDeleteஅப்பாடா.. நான் மட்டுமே இப்படி எல்லாம் கனவு காண்கிறேன்னு பயந்துகிட்டு இருந்தேன்.. நல்ல வேலை துணைக்கு ஆள் இருக்கு..
ReplyDeleteசந்தடி சாக்குல புருசன் பேரை சொல்லிட்டு இப்படியொரு பதிவு வேற.. சிவசிவா.. அம்பி, சிவபுராணம் பாடுறதுல மட்டும் நான் உங்க கூட சேர்ந்துக்கிறேன்.. அசின் புராணம் தனியாத்தான்..
கார்த்திக்,
ReplyDeleteசும்மா ஜனரஞ்சகமா எழுதறேன்னு நாலு பேர் சொல்வாங்க இல்ல அதான், எல்லா விஷயமும் தொட்டுக்கறேன். இன்னும் நிறைய விஷயம் இருக்கு.
முத்தி விட்டது! முக்தி கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை!
ReplyDelete-சுவாமி பித்தானந்தா.
தளபதி,
ReplyDeleteநீங்க மட்டும் போர் வாளைத் தூக்கி இருந்தால் இப்படி முத்தி இருக்காது. நீங்க தான் தூங்கிட்டீங்களே, அதான் இப்படி நானே போராடிட்டு இருக்கேன்.:-)