எங்க வீட்டிலே நானும் என் கணவரும் எல்லாத்திலேயும் நேர் எதிர்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். நாங்கள் செய்யும் வேலைகளும் அப்படித்தான், நேர் எதிராக இருக்கும். இப்போ நான் முன் தூங்கி, முன் எழும் பத்தினி என்றால் அவர் பின் தூங்கிப் பின் எழும் பத்தினன். என்னிக்காவது காலையில் சீக்கிரம் எழுந்துட்டார்னு வைங்க, எனக்கு வயித்தைக் கலக்கும்.அன்னிக்குப் பால்காரன் வரமாட்டான்.
அது என்னமோ தெரியலை, எங்க பால்காரப்பையன் என் கணவர் சீக்கிரம் எழுந்துட்டா எப்படியோ தெரிஞ்சுக்கறான். அன்னிக்கு ஒண்ணு வர மாட்டான். அல்லது நேரம் கழித்து வருவான். அதிலே ஆரம்பிக்கும் பாருங்க ஒரு விவாதம், சாலமன் பாப்பையா நடத்தும் பட்டி மன்றம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அப்படி நடக்கும். சரி, அப்படியே பால் வந்துடுச்சு வைங்க, (லேட்டாத்தான்), நான் காஃபி கலக்க உள்ளே போனதும், இங்கே ஆள் obscond. எங்கே போவார் தெரியாது. கண்டு பிடிக்கணும். இத்தனைக்கும் நான் காஃபி குடிச்சுட்டு எங்கே வேணாலும் போங்கனு சொல்லி இருப்பேன். அதெல்லாம் மனைவி சொல் தட்டும் புருஷனிடம் எங்கே எடுபடும்? நான் காஃபியைக் கலந்து கொண்டு வந்து கொல்லைப் பக்கம் தோட்டம், ஸைடில் தென்னை மரத்தடி,(அவருக்குப் பிடித்த இடங்கள்), வாசலில் மல்லிச் செடி என்று தேடினால் மொட்டை மாடியில் தலை தெரியும். அங்கே இருந்து கூப்பிட்டுக் காஃபியைக் கொடுப்பதற்குள் அப்போது தான் ஃபோனுக்கு அவசரம் வரும். அடிக்க ஆரம்பிக்கும். அத்தனை அவசரத்திலும் கணவரைக் கூப்பிட்டுக் (கடமை தவறாத மனைவி) காஃபியைக் கொடுத்து விட்டு ஃபோனை எடுத்தால் வாசலில் தென்னை மரம் சுத்தம் செய்பவரோ, அல்லது வேறு யாராவதோ அல்லது கீரைக்காரியோ தலை போகிற அவசரத்துடன் கூப்பிடுவார்கள். கையில் ஃபோனுடன் (அது தான் லேட்டஸ்ட் ஸ்டைல்) பேசிக் கொண்டே அவர்களைச் சமாளிப்பதற்குள் ஃபோனில் இருப்பவர் என் கணவருடன் தான் பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். சரி என்று அவரைக் கூப்பிடலாம் என்று பார்த்தால் மறுபடி ஆள் இருக்க மாட்டார். இந்த வீட்டில் எனக்கு மட்டும் சமையல் அறை, கூடம் என்று பகல் நேரத்தில் மாறி மாறி இடம் இருக்க இவர் மட்டும் எங்கேயோ போய் விடுகிறாரே என்ற எரிச்சலுடன் போய்ப் பார்த்தால் செடிகளுக்குத் தண்ணீர் காட்டுவார்.(எனக்கும் சேர்த்துத் தான்) ஃபோனை அவர் கையில் கொடுத்து விட்டு உள்ளே வந்து செடிக்குத் தண்ணீர் விடுகிறாரே என்று மேலே தொட்டியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டே மோட்டார் ஸ்விட்சைப் போடுவேன். ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்ம்ம்ம் என்று ஆரம்பிக்கும் மோட்டார் திடீரென நிற்கும். என்னடா இது மின்சாரம் கூடப் போகவில்லையே என மறுபடி போட்டால் மறுபடி போயிட்டுப் போயிட்டு வரும். அப்போதான் உரைக்கும் வெளியிலும் ஒரு ஸ்விட்ச் இருப்பது. இங்கே இருந்து நான் போட நான் போடுவது தெரியாமல் அவர் போட அது அணைய இப்படி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எதிராக வேலை செய்வோம். தொட்டி நிரம்பி வழியும் போதும் இதே கதை தான். இப்படித் தாங்க எல்லாத்திலேயும், நான் குளித்து விட்டு வந்து ஹாலில் மின் விசிறியைப் போட்டு விட்டு ஒரு நிமிஷம் சமையல் அறைக்குள் போய் விட்டு வருவேன். இங்கே மின் விசிறி அணைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள். இது என்ன இக்ஷிணி வேலையா என வியப்புடன் மறுபடி உட்கார்ந்து கொண்டு மின்விசிறியைப் போடுவேன். அப்புறம் பார்த்தால் அவர் அணைத்திருப்பார். ரேடியோவில் சங்கீதம் கேட்க ரேடியோவைப் போட்டாலும் சரி போட்டுவிட்டுக் கிட்டேயே உட்காரச் சொல்லுவார். நம்ம உடம்பு ஒரு இடத்தில் உட்காரும் உடம்பா? பள்ளி நாட்களிலேயே ஆசிரியைகளிடம் தண்ணி காட்டி இருக்கேன். இப்போது எப்படி ஒரே இடத்தில் உட்காருவது?
தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதும் அவர்தான். நான் போய் எப்போவாவது உட்காருவேன். அது அநேகமாக நான் சாப்பிடும் சமயமாக இருக்கும். "ஆனந்தம்' சீரியல் பார்க்கிறார் என்றால் எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும், அவர் வயித்தைக் கலக்கும். என் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியாமல். இப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் பாருங்க. அபிராமி என்ற பாத்திரத்தின் தம்பி மாமனார் இறந்து போகிறார். அவர் சாவை இந்த சீரியல் எடுத்தவங்க வழக்கமான முறையில் காட்டவே இல்லையா? எனக்கு ஒரே சந்தேகம் இது தமிழ் சீரியல் தானா வேறே ஏதாவதா என்று? என் கணவரைப் போட்டுத் துளைத்து எடுத்ததில் அவர் சொன்ன பதில், "எனக்கு வெளியே எதிரியே இல்லை. வீட்டுக்கு உள்ளேயே நீ ஒருத்தி போதும். என்னை ஆளை விடு இல்லாட்டா நீயே உனக்குப் பிடித்தமாதிரி சீரியல் எடுத்துக்கோ." என்றார். நான் பல்லைக் கடித்தேன்.
கீதா.. ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டு போடுறேன் பேர்வழின்னு எப்படி ஒரெதை ரெபீட்டு பண்ணுறது எல்லாம் ஓவர்...opposite poles are attract.. அது மாதிரி தான் நீங்களும் உங்களவரும்
ReplyDeleteரொம்ப நன்றிங்க,
ReplyDeleteதனி மனித சுதந்திரம் குறித்து திசைகளிக்கு ஏதாவது எழுதும்படி சொல்லியிருந்தார்கள். இதோ ஸ்பார்க் கிடைச்சிருச்சும் உங்க கதையப் படிச்சதும்!அடிக்கடி வந்து உங்ககிட்ட ஐடியா புடிச்சுக்கறேங்க!
கார்த்திக்,
ReplyDeleteஊட்டி எல்லாம் எப்படி இருந்தது? அது வந்துங்க, முதலில் இந்த blogger வேதாளம் publish செய்யவே ஒத்துக்கலை. Errorதான் காட்டுவேன்னு ஒரே பிடிவாதம். ஆனால் அது வந்து இருக்கு. அதைப் பார்க்காமல் நான் திரும்பப் போட்டிருக்கிறேன். இப்போ போய் எடுத்துடறேன். ஆனால் உங்க பின்னூட்டம் வந்திருக்கிறதை அது எடுக்காமல் இருக்கணும். ஏன்னா அதுவும் என் கணவர் மாதிரி தான் நான் என்ன சொல்றேனோ அதுக்கு எதிரா வேலை செய்யும்.
Aiii, ipdi ellaam poshtu pottu 100 adikaalam!nu thittamaa? nadakaathu! naanga correctaa ennuvom la!
ReplyDeleteapdi sollu pa karthik! (ippa asin matterla samarasam ayiduchu!)
btw, enna overaaa saambu mamavai vaari irukeenga! bnglre vanthaa karuppu kodi katrathuku thondar padai(gundar padai) erpaadu panniduven jakrathai.
Avar evloo poruppa "vallalar" maathiri vaadiya payirai kandathum vaadi, water ellam viduraar. 9.30 ku phone pannina thoongarathu yaarungaa? :)
ஆஹா, ஆஹா, இந்த மாதிரி ஒரு பின்னூட்டத்திற்குத் தானே தவம் கிடந்தேன். நான் ஒருத்தருக்கு inspiration ஆக (collars up) இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வராதீங்க, தினமும் வாங்க, உங்களை மாதிரி ரசிகர் தான் நம்மளுக்குத் தேவை. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,.
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteவயசு ஆயிடுச்சு இல்ல, அதான் ஒண்ணும் புரியலை. நான் தான் என்னை முன் தூங்கி, முன் எழும் பத்தினி என்றும் அவர் பின் தூங்கிப் பின் எழும் பத்தினன் என்றும் சொல்லி இருக்கேனே பார்க்கலை? பாவம், அம்பித்தாத்தாவுக்கு வயசு ஆயிடுச்சு, அதான் கார்த்திக்குக்கு விட்டுக் கொடுத்துட்டு ஒரு சமாளிப்பு வேறே. கறுப்புக் கொடி என்ன நானே கொண்டு வரேன், அம்பி, அசினுக்குத் தம்பினு மெஜஸ்டிக் சர்க்கிளிலே போஸ்டர் ஒட்டப் போறேனே!
கீதா,
ReplyDeleteபாவம் அக்கறையா மோட்டார், பேன் எல்லாம் கரண்ட் வீணாகமல் ஆப் செய்கிறார் மனிதர், பின்ன ஆனந்தம் சீரியல்ல சீன் கண்டிநியூட்டி எல்லாம் சாப்பாட்டு மேஜையில் வைத்து நச்சுப்பண்ணும்போது கூட நீயே சீரியல் எடுத்துக்கொள் எனும் பண்பாளர் அவரைப் போய் "மனைவி சொல் தட்டும் புருஷன்" என்பதெல்லாம் டூ டூ மச்.
என் வீட்டில் எனக்குப் பெயர் ஹிட்லர். எனது ஒன் பாயிண்ட் அஜெண்டாவே சீரியல் வர்ற தமிழ்ச் சானல் வீட்டுக்குள்ள வரவே கூடாது. நியூஸ் மற்றும் குழந்தைகள் சானல் தான்.
குழந்தைகள் why always BBC?ன்னு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை டயலாக்குகிறார்கள். டிஷ்ஷ வேறபக்கம் திருப்பிவைக்கணும். என்ன பண்றது சீரியல் நிஜமாவே ரொம்ப சீரியஸ் விஷயம்தாங்க!
ஹரிஹரன்,
ReplyDeleteஅக்கறையாச் செஞ்சாப் பரவாயில்லையே, நான் இங்கே இருந்து போட அவர் வெளியே இருந்து போட அது ஆஃப் ஆகி விடும். ஒருத்தர் போடறது இன்னொருத்தர் பார்க்க முடியாது. அவ்வளவு ரகசியமா இருக்கும். மத்தபடி சீரியல் எல்லாம் அவர்கிட்டேயே விட்டுக் கொடுத்துட்டேன்.
Grrrrrrrrrrrrrrrrr.வேதா, நீங்களுமா? இப்படி? (you too Brutus?)னு படிச்சுக்கவும். அநேகமா இதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteகீதா,என்ன ஒரு ஒத்துமை.நான் பாடும் பாடல் நீ பாட வேண்டும்னு சொல்லற ஆட்களுக்கு மத்தியிலே இந்த மாதிரி ஒரு பொருத்தமான சினேகிதி கிடைத்தாரே.
ReplyDeleteகாப்பியை வைத்துக் கொண்டு நான் அலைவேன். இது ஒரு பரம்பரை வியாதி.எங்க மாமனாரும் இதையே செய்வாராம்!!
வள்ளி,
ReplyDeleteஎனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அடிக்கடி வாங்க. கடோத்கஜனைப் போட்டுப் பயமுறுத்தறீங்களே! :-)
நேர் எதிராக இருந்தா தாங்க இல்லறம் நல்லா இருக்கும்.
ReplyDeleteஉங்கள் இல்லறம் போல.
நான் சென்னைக்கு வரும் போது கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வர வேண்டும். உங்கள் கணவர், இல்ல இல்ல அந்த மனிதருள் மாணிக்கத்தை நேரில் கண்டு அவரை பாராட்ட வேண்டும். எதுக்குனு கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
கேவலம் ஒரு காபி தானங்க காலையில் கேட்குறார், அதைக் கூட அவருக்கு சரியான நேரத்தில் போட்டுக் கொடுக்க முடியவில்லை உங்களால்.
சீரியல், உங்க கொடுமை தாங்க முடியாமல் தான் அவர் சீரியல் கொடுமையே மேல் என்று நினைத்து சீரியல் பார்க்கின்றரோ, யாரு கண்டா....
உங்கள தட்டிக் கேட்க ஆள் இல்ல....
அட அங்கேயும் எதிர் துருவங்கள் தானா? கொஞ்சம் திருப்தி. எப்படிங்க இப்படியெல்லாம் எழுத தோணுது, சொல்லி குடுங்க..
ReplyDeleteகாலைல எழுந்து டைமுக்கு காப்பி போட்டு குடுக்க தெரியல சப்போட்டுக்கு ஆள் சேர்கரீங்களா...:-)
ReplyDeleteஆனா நல்லா interesting ஆ எழுதி இருக்கீங்க...
கீதா உங்க சித்தப்பா இன்னிக்கு 'பொதிகையில்" சிறப்பு விருந்தினர். இப்போ பாத்துட்டு இருக்கேன். 7.45 காலை செவ்வாய்.25ஆம் தேதி.
ReplyDelete//நானும் என் கணவரும் எல்லாத்திலேயும் நேர் எதிர்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.//
ReplyDeleteசாம்பு சாருக்கு அறிவு ஜாஸ்தின்னு சொன்னாங்க.
சம்சாரம் அது மின்சாரம் இரண்டுமே எப்போ ஷாக் அடிக்குன்னு தெரியாது.பாவம் உங்கள் கணவர்.
ReplyDeleteகீதா மேடம் வாசலில் யாரே வந்திருக்கிறார் பாருங்கள் யாரும் தெரியவில்லையே
சித்தப்பா அசோகமித்தரன் இருக்காறோ பாருங்கள் " இலலை தெரியவில்லயே." பின்னே என்னதான் தெரியது. '100,நூறு அதன் தெரியரது."வாழ்த்துக்கள்
நாகை சிவா,
ReplyDeleteகடைசிலே ஆண்குலம் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து என்னைப் போட்டுத் தாக்குறீங்களே!!!!!!!!!!!!!!!ஒழிக உங்கள் ஆணாதிக்க மனப்பான்மை! சேருங்க பெண்குலமெல்லாம் ஒண்ணாய்ப் போய் ஆண்களுக்கு எதிராக் கொடி பிடிப்போம். இந்த வேதா சமயம் தெரியாமல் சேம்சைட் கோல் அடிக்கிறாங்களே!
ஹி,ஹி,ஹி, விவசாயி,
ReplyDeleteஇதெல்லாம் சங்கத்தோட அடிப்படைப் பாடம். அது எப்படி சங்கத்திலே சுறுசுறுப்பான உறுப்பினரா இருந்துக்கிட்டு இது தெரியலை? :-)
இதுக்குத் தான் என்னை மாதிரி நிரந்தரத் தலைவலி வேணும். நீங்க தான் ஓரம் கட்டறீங்களே! :-)
ச்யாம்,
ReplyDeleteவாங்க, லீவ் முடிஞ்சு வலைப்பக்கம் திறந்தாச்சா?
அது சரி, அங்கே வாஷிங்டனில் காஃபி போடறது மட்டும் இல்லை சமையல் கூட நீங்க தான்னு கேள்விப்பட்டேனே? :-)
வள்ளி,
ReplyDeleteமறு ஒளிபரப்பு வரும்போது தான் பார்க்கணும். காலை வேளையில் யோகா, தியானம் முடிந்து வீட்டு வேலை முடிந்து கணினி கிட்டே வரவே 12 அல்லது 1 மணி ஆகும். இன்னிக்குக் கொஞ்சம் வேலை சீக்க்ரம் முடிஞ்சதாலே உங்க பின்னூட்டம் பார்க்க முடிந்தது. இல்லாட்டி மத்தியானம் தான். பொதுவாகக் கச்சேரிகள் மட்டும் தான் டி.வி.யிலோ, ரேடியோவிலோ காலையில் போடுவோம். மற்றபடி உட்கார நேரம் இருக்காது.
தி.ரா.ச. சார்,
ReplyDeleteமறுபடி ஒரு சப்போர்ட்டா அவருக்கு? எதிர்பார்த்தது தான்.
முன்கூட்டிய வாழ்த்துக்களுக்கு நன்றி. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. அந்த இலவச விளம்பர பில் விஷயம் மறந்துடாதீங்க. யு.எஸ்.டாலரில் அனுப்புங்க. சிங்கப்பூர் டாலர் வேண்டாம். :-)