என்னங்க பார்க்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நிரந்தரமான விடுதலை கிடையாது. சும்மா தாற்காலிகமாத் தான். நான் ஒரு கல்யாணத்திற்குப் போறேன். அநேகமாச் செவ்வாய்க்கிழமை வந்துடுவேன். அது வரை உங்கள் எல்லாருக்கும் என்னிடமிருந்து விடுதலை. இதைக் கேட்டதும் யார், யார் என்ன நினைப்பாங்கனு என் மனசில் ஒரு ரீல் ஓடுகிறது. அது கீழே:
அம்பி: அப்பாடி, ஒரு ரெண்டு நாளாவது நாம பாட்டுக்கு ஐஸ் குட்டியையும், அசினையும் கனவு காணலாம். இவங்க ரோதனை தாங்க முடியலை.
நாகை சிவா: நல்லவேளையாப் போச்சு. இவங்க எப்போ எந்த மாதிரி மாஜிக் காட்டுவாங்கனு பயப்படவேண்டாம். ப்ளாக்கரும், கணினியும் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். நம்ம பாட்டுக்குக் குண்டு வைக்கப் போகலாம்.
ச்யாம்: இன்னும் 2 நாள் என்னைக் கவனிக்க மாட்டாங்களே! நம்ம பதிவிலே இவங்க பேரைக் கொடுத்தது சரியா தப்பா? தெரியலை. பார்க்கலாம்.
வேதா: இன்னும் 2 நாளாவது Tata Indicom காரங்க இவங்க கிட்டே இருந்து தப்பிச்சாங்க. பாவம் அவங்க.
trc Sir: அப்பாடி, நான் முன்னமே சிங்கப்பூர் போறதாச் சொன்னேனோ தப்பித்தேன். தெரியாத் தனமா சி.ஐ.டி. சந்துருவோட ஒப்பிட்டுப் பேசிட்டேன், இவங்க ரம்பம் தாங்க முடியலை, உமா, சீக்கிரம் மூட்டை கட்டு, அடுத்த விமானத்திலேயே நாம போறோம். மறக்காம மாத்திரை எடுத்து வச்சுக்கோ.
சின்னக்குட்டி: ஏதோ நம்ம பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுவாங்கனு கூப்பிட்டா தாங்கலையே, 2 நாள் நிம்மதி.
மனசு: நாம் பாட்டுக்கு 9தாரா, நமீதா, நவ்யா நாயர்னு "ந"விலே ஆரம்பிக்கிற பேராப் பார்த்து (வீட்டுக்குத் தெரியாமல்) கனவு காணலாம்.
நன்மனம்; நன்மனம்னு பேரை வச்சிக்கிட்டு இவங்களை ஒண்ணும் சொல்ல முடியலை. இப்போவாவது வயசைச் சொல்றாங்களா, பார்ப்போம்.
தேவ்: எப்போவாவது தான் தலை காட்டுவேன். அதனால் இரண்டு நாள் இல்லைனால் பரவாயில்லை.
பொன்ஸ்:சோறு வடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கிட்டு பிஸ்ஸா,, பர்கர்னு சாப்பிடற தொல்லை போதாதுனு இவங்க வேறே ஒரு வாரத்துக்கான பதிவை ஒரே நாள் போட்டுட்டுப் படிங்கறாங்க. முன்னேயே தெரிஞ்சா இன்னும் ஸ்கூலிலேயோ, காலேஜிலேயோ படிக்கிறேன்னு சொல்லித் தப்பிச்சிருப்பேன்.
கைப்புள்ள;ஆரம்பத்திலே இருந்து நம்மளை ஆதரிக்கிறாங்க. வலுவிலே வந்து நாந்தான் நிரந்தரத் தலைவலினு சொன்னாங்க. அதனாலே பரவாயில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்னு நான் இருக்கிற இடம் எல்லாம் வேறே தெரியுது. விட்டுப் பிடிப்போம்.
துளசி:யானையை என்ன செய்தாங்களோ தெரியலை. ஆனால் இவங்களுக்கும் யானைனா பிடிக்கும்னு சொல்றாங்க, பொறுத்துப் பார்ப்போம்.
மனு(வல்லி): (வல்லியா, வள்ளியா) இப்போ எல்லாம் மூணு ப்ளாக் வச்சிக்கிட்டு என்னாலே இவங்க ப்ளாக் படிக்க முடியலை. அதனாலெ இரண்டு நாள் வராட்டா பரவாயில்லை.
நுனிப்புல் உஷா:எத்தனை தரம் சொல்றது இவங்களை எடிட் செய்யுங்க, பத்தி பிரிச்சு எழுதுங்கனு. இன்னும் பழக்கம் ஆகலை. போயிட்டு வந்து எழுதும்போது பார்க்கிறேன். எனக்கு இந்த வகுப்பு எடுக்கிறதா, என் ப்ளாக் எழுதறதா? சிறப்பு ஆசிரியர் பதவி வகிக்கிறதா? ஒண்ணும் புரியலை. நல்லவேளை இரண்டு நாள் கிடைச்சுது.
மின்னுது மின்னல்: ம்ம்ம்ம், இவங்க பின்னுட்டமாவது வரும்னு நினைச்சேன். பரவாயில்லை. 2 நாளில் வந்துடறாங்களே.
இளா(விவசாயி):நேத்திக்குத் தான் இவங்க பதிவையே பார்த்தேன். அதுவும் கூப்பிட்டாங்களேனு. தெரியாத்தனமா "புதுமைப்பெண்"பட்டமெல்லாம் கொடுத்துட்டேனோ? சரி, பரவாயில்லை. 2 நாளைக்கு அப்புறம் பார்த்துக்குவோம்.
பெனாத்தல் சுரேஷ்:இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் முன்னேயே இவங்க பின்னூட்டமே புரியலைனு சொல்லிட்டேன். இப்போ படிக்க வேண்டாம் பாருங்க. எப்படி என் ஐடியா?
எல்லாரும் "என் முதலிலேயே சொல்லலைனு சுரேஷை நோக்கிப் பாய்கிறார்கள்.
**********************
கவலை வேண்டாம், தோழர்களே, தோழியர்களே,
செவ்வாய்க்கிழமை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவேன்.
//நாம பாட்டுக்கு ஐஸ் குட்டியையும், அசினையும் கனவு காணலாம்.//
ReplyDeleteha haaa.. summa ellaraiyum kalaasi irukeenga!
வணக்கம் மேடம்!
ReplyDeleteஉங்கள் வலைப்பூ புதுப் பொலிவுடன் அழகாய் இருக்கிறது. அப்படியே தமிழ்மணத்துலயும் சேர்த்து விட்டுடுங்களேன். நன்றாக எழுதுகிறீர்கள். இன்னும் சிலர் அதன் மூலம் தங்கள் எழுத்துகளைப் படிக்க முடியும் அல்லவா?
அசின்,ஸ்நேகாவெல்லாம் என்ன பண்றது.
ReplyDeleteநாங்க தப்பிச்சோம், பாவம் கல்யாணப் பொண்ணு!?!?
//கவலை வேண்டாம், தோழர்களே, தோழியர்களே,
ReplyDeleteசெவ்வாய்க்கிழமை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவேன். //
எங்க கவலையே அதானே.........
//கைப்புள்ள said...
ReplyDeleteஅப்படியே தமிழ்மணத்துலயும் சேர்த்து விட்டுடுங்களேன்//
சேர்த்துட்டாங்கள்ள.... இனி வ.வா.ச வின் நி.த பதவி கூட அடிசனல் போஸ்டிங் தமிழ்மணம் நி.த :-))
அம்பி,
ReplyDeleteஏன்? நமீதா, சிநேகா, த்ரிஷா, பூஜாவெல்லாம் விட்டுட்டேன்னு பார்க்கறீங்களா?
என்னைக்கேட்டால் உங்களுக்கு ஐஸ் மட்டும் போதும். இருக்கிறதிலேயே வயசானவங்க அவங்கதான்.
கைப்புள்ள, தமிழ்மணத்திலே ஏற்கெனவே சேர்த்தாச்சு. என்ன? அடிக்கடி புதுப்பிக்கிறதில்லை. இதோ நீங்க சொன்னதும் அதுவும் செஞ்சாச்சு.
ReplyDeleteமனசு, மனசு, மனசு பூராவும் இவங்க தானா? இருக்கட்டும். ஒரு நாளைக்கு உங்க வீட்டிலே வத்தி வைக்கிறேன்.
ReplyDeleteகல்யாணப்பொண்ணுக்கு என்ன மனசு? நல்லாவே ரசிப்பா.
ReplyDeleteநாகை சிவா,
ReplyDeleteet tou Brute?(You too Brutus?)
ஹா, ஹா, ஹா,
ReplyDeleteநன்மனம், நான் எப்போவோ சேர்ந்தாச்சு. புதுப்பிக்காமல் இருந்தேன். என்னோட பதிவுகளைக் காக்காய் கொண்டு போனதில் எழுதினதை என்ன படிச்சீங்க நீங்க? இவ்வளவு கஷ்டப்பட்டு நான் என்னத்தை எழுதி, என்னத்தை நீங்க படிச்சு?
ஆஹா - என்னை கேரக்டர் அஸாசினேட் பண்ணிட்டீங்களே கீதா! பின்னூட்டம் புரியாதவனா நான்? உங்கள் பின்னூட்டம் புரியும் அளவுக்கு இன்னும் வளராத சிறுவன்.. அவ்வளவுதான்.
ReplyDeleteமத்தபடி நான் மத்தவங்ககிட்டே சொன்னதையெல்லாம் எப்போ கேட்டீங்க?:-))
ஆனாலும் மோசம் கீதா. இப்படியா காலை வாரரது.
ReplyDeleteமை தாட்ஸ் வரவெயில்லை. அப்புறம் பார்த்தால் எண்ணங்கள்னு வரது.
ஊரு கெட்டுக் கிடக்கு. பார்த்து சாப்பிடுங்க.
ஆமா கல்யாணம் ஒரு நாள் தானே நடக்கும்.
ReplyDeleteபின்ன எதுக்கு ரெண்டு நாளு லீவு !!!.
ஒரு நாள் கல்யாணத்துக்கு போக வேண்டியது.
பாக்கி ஒரு நாள்ல நாலஞ்சு டாப்பிக்கு எழுதி வச்சு ஒரே நாள்ல போடபிடாது சொல்லிபிட்டேன்....(என்ன சரியா சொன்னனா ??? )
ஹி ஹி ஹி
யக்கா ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வரதுக்குள்ள..எங்கள நினைச்சு இவ்வளவு வருத்தபட்டுட்டு போறீகளே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete(மனசுக்குள்ல...யப்பாடி ஒரு ரெண்டு நாளு தப்பிச்சோமா...)
இப்போ மாத்திரையே தேவயே இருக்காது.மெடிகல் டெச்டில் நான் எல்லாவறிலும் நான் பாஸ் செய்துவிட்டேன்.பாவம் அம்மாதான் பெயில்.இதைவிட்டு விட்டீர்களே சின்ன போண்ணு: செவ்வாய்க் கிழமை முதல் என்க்கு வயது 15தான். தி ரா ச
ReplyDeleteஆஹா..நீங்களும் கல்யணாதிற்கா? நல்லது..
ReplyDeleteபெனாத்தல்,
ReplyDeleteஎன்ன இது? எனக்குப் போட்டியாச் சின்னப்பையன், சின்னப்பொண்ணு எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க? இந்த வலை உலகிலே போட்டி இல்லாத சின்னப் பொண்ணு நான் தான், தெரியுமா?
நீங்க மத்தவங்ககிட்டே சொன்னது நான் கேட்டேனே?
மனு,
ReplyDeleteஅது மாறினது எல்லாம் புதுப்பித்தலில் போடவே இல்லை. அதான் உங்களுக்குத் தெரியலை.மத்தபடி இந்த மாதிரி சமயத்திலேதானே காலை வார முடியும், அதான் வாரினேன், அடி ஒண்ணும் படலையே?
மின்னல்,
ReplyDeleteகல்யாணம் மூன்று நாள். ஒரே நாளிலே பதிவு போட்டா என்ன? படிங்களேன். உங்க பின்னூட்டத்தையும் போடணும். வயசு தான் 104-க்கு மேலே ஆனதாலே கொஞ்சம் கஷ்டம்தான். பரவாயில்லை, சமாளிங்க தாத்தா!
ச்யாம், இருக்கட்டும், இருக்கட்டும்,கவனிச்சுக்கறேன் உங்களை! நற நற நற நற நற
ReplyDeletetrc Sir,
ReplyDeleteHearty Congratulations for passing medical test. அப்புறம் போட்டிக்கு வராதீங்க. உங்க வலைப்பதிவு பார்த்தேன். நல்லா இருக்கு.
வேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteவேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்னோட குரலும் அதோட எதிரொலியும் கேட்டதா? ஒரு Brutus போதாதுனு எத்தனை?
ஹெல்லோ, கார்த்திக், வாங்க, தங்கச்சி கல்யாணம் நல்லா முடிஞ்சுதா? அடுத்தது உங்களுக்கு லைன் க்ளியர் ஆயிடுச்சு, வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க சத்யா,
ReplyDeleteநான் மண்ணின் புதல்விதான். அதான் நீங்க மதுரையைப் பத்தி எழுதினதைப் படிச்சது கோபம் வந்தது. பார்க்கலாம். மத்தபடி புதிசா ஒண்ணும் எழுதலையா?
இதோ கீதாக்கா இஸ் பேக்...இனி start music தான்...
ReplyDeleteகீதா, தங்கை கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. அடுத்து நாந்தான்.. இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. பாக்கலாம் யார் அந்த புண்ணியவதின்னு..
ReplyDelete