ரொம்ப நாளா இதைப்பத்தி எழுதணும்னு இருந்தேன். இது ஒண்ணு, ஐயப்பன் பத்தி ஒண்ணு இரண்டு பதிவும் போடணும்னு இருந்தேன். இது ஏற்கெனவே எழுத நினைச்சது. ரொம்ப நாளா தள்ளிப் போயிட்டே இருந்தது. இப்போ எழுத சரியான சமயம்னு நினைச்சு எழுதறேன்.
காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? "ஸ்ரீகுமரகுருபரஸ்வாமிகள்" தான் 17-வது நூற்றாண்டில் இதை ஸ்தாபித்தார். 1625-ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். திருச்செந்தூரிலேயே தங்கி முருகனை வழிபட்டு வந்த குமரகுருபரர் தல யாத்திரை கிளம்பும் சமயம், அசரீரியாக இறைவன், "நீ யாத்திரை செல்லும் சமயம் எந்த இடத்தில் உன் வாக்குத் தடை பெறுகிறதோ, அவரே உன் குரு. ஞான உபதேசம் அவரிடம் பெற்றுக்கொள்" என உத்தரவு வர மகிழ்ந்து தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் வந்து "கைலைக்கலம்பகம்" என்னும் நூலை இயற்றினார். இதன் ஒரு பகுதிதான் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பின் மதுரை வந்தார்,. திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம் அது. குமரகுருபரர் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்க நாயக்கர் கனவில் மீனாட்சி அம்மை வந்து, "திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கும் குமரகுருபரர் பெரிய மகான். புலமை மிகுந்தவரும் கூட.அவரை உரிய மரியாதையுடன் அழைத்து வந்து என் சந்நிதியில் அமர்த்தி என் பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்வாயாக." என்று கூறி மறைந்தாள். அம்மன் வாக்குப் படியே திருமலை மன்னர் குமரகுருபரரை அழைத்து வந்து சந்நிதியில் அமர்த்தி அரங்கேற்றம் நிகழச் செய்தார். அர்ச்சகரின் சிறு பெண் குழந்தை வடிவில் வந்த அன்னை மீனாட்சி மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்தாள். மதுரையில் இருந்து புறப்பட்ட குமரகுருபரர் திருவாரூரை அடைந்து தருமபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளைச் சந்தித்தார். ஆதீனத்தின் ஆதி முதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளுபதேசம் பெற்ற இந்த ஊரில் மாசிலாமணி தேசிகர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி வரும்போது திடீரென குமரகுருபரர் வாக்கு தடை பெற்றது. "இவரே தன் குரு" எனத் தெளிந்த குமரகுருபரர் அவரிடம் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைத்தார்.இப்போதும் தருமபுர ஆதீனத்துடன் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்கிறார்கள்.
மாசிலாமணி தேசிக ஸ்வாமிகள் குமரகுருபரரைக் காசி சென்று வருமாறு பணிக்க,முதலில் கொஞ்சம் தயங்கிய குமரகுருபரர், பின் குருவே துணை என்று நம்பிக் கிளம்பச் சம்மதித்தார். காடு, மலைகளையும், சிங்கம், புலி போன்ற மிருகங்களையும் எதிர்கொண்டு காசிக்குச் சென்று வரக் கிளம்பினார். வழியில் திருவேங்கட மலைவாழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த சிங்கத்தைத் தன் தவ வலிமையால் அடக்கி அதன் மீது அமர்ந்தார். ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் படம் பலர் வீட்டில் இருக்கும். பார்த்திருப்பீர்கள். காசி நகரை குமரகுருபரர் அடைந்த சமயம் டெல்லியை ஆண்டு வந்த பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்து காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை இவரின் சமயப்பணிக்குத் தருவதாய் ஒப்புக் கொண்டார். காசியில் தான் தனக்கு இந்துஸ்தானியில் புலமை வேண்டி ஸ்ரீகுமரகுருபரர் "சகலகலாவல்லி மாலை" பாடி இந்துஸ்தானியில் பேசும் திறன் பெற்றார்.
காசியில் "பூ மணக்காது, பிணம் எரியும்போது நாறாது, கருடன் வட்டமிடாது, பசுமாடு முட்டாது," என்பார்கள். இந்நிலையில் கருடன் எப்படிப் பறந்து இவருக்கு இடத்தைக் காட்டுவது என எல்லாரும் திகைக்க, முனிவரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. பாதுஷா தன் வாக்குறுதியை நிறைவேற்ற குமரகுருபரர் "ஸ்ரீகுமாரசாமி மடம்" என்ற பெயரில் ஒரு மடத்தை அங்கே நிறுவி ஆன்மீகப் பணி ஆற்றத் தொடங்கினார். கங்கைக் கரையில் பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோவிலைத் தென்னிந்திய முறைப்படிச் செப்பனிட்டுக் கும்பாபிஷேஹம் செய்வித்தார். இன்றைக்கும் "கேதார் காட்" டில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில் திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பூஜை செய்பவர்களும் தமிழர்கள் தாம்.
குருநாதரைப் பார்க்க வேண்டி பொன், பொருளோடு வந்த குமரகுருபரரை மாசிலாமணி தேசிகர் காசியிலேயே அவற்றை அறப்பணிகளுக்குச் செலவிடுமாறு சொல்லித் திரும்ப அனுப்பினார். 1688-ம் ஆண்டு தன் சீடர்களுள் ஒருவரான சொக்க நாதரைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பூரணத்தில் இணைந்தார். முதல் 5 பரம்பரையில் வந்தவர்கள் காசியிலேயே தங்கி இருந்தார்கள். 6-வது குரு பரம்பரையில் தான் திருப்பனந்தாளிலும் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது. காரணம் சரபோஜி மஹாராஜா. இவர் அன்னம் பாலிக்கக் கொடுத்த பல கிராமங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் திருப்பனந்தாளிலும் காசி மடம் ஏற்பட்டது. இதன் 20-வது மஹாசந்நிதானமாக இருந்த ஸ்ரீ அருள்நம்பித் தம்பிரான் காலத்தில் மடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள காசித் திருமடங்களின் அறப்பணிகள் இவர் காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டது. 21-வது பொறுப்பில் இப்போது இருப்பவர் காசிவாசி முத்துக்குமாரஸ்வாமித் தம்பிரான். ஸ்ரீகுமரகுருபரர் காலத்தில் இருந்து எல்லாப் பணிகளும் இன்றைக்கும் குறைவின்றி நடந்து வருகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேஹத்திற்குத் தேவையான "அஷ்டபந்தன மருந்து" இங்குக் குறைந்த அளவு தொகை செலுத்திப் பெறலாம். மருந்து தயாரிக்கும் செலவு அதிகம் என்றாலும் ஆலயப் பணிகளும் ஆன்மீகமும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் 1999 ஆகஸ்ட்டில் காசி போயிருந்த போது கேதார்காட் போய்க் காசி மடம், கேதார் நாத் கோவில், அங்கு சாயங்காலம் சூரியன் மறையும் சமயம் கங்கைக்கும், கேதாரீஸ்வரருக்கும் ஒரே சமயம் காட்டப்படும் ஆரத்தி எல்லாம் தரிசனம் செய்தோம். இதைத் தவிர சிவ மடம் என்ற பெயரிலும் வேறு மடம் ஒன்று இருக்கிறது. அதன் பூர்வீகம் பற்றித் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.
அடுத்த பதிவு இப்போதே தயாராகுங்கள்:
"ஸ்வாமியே சரணம் ஐயப்பா!" எப்போனு தெரியாது. நீங்க தயாராவே இருங்க.
நான் எழுதினதுக்கு ஆதாரம்:
ReplyDeleteபி.ஸ்வாமிநாதன். இதைக் குறிப்பிட மறந்து விட்டேன்.
கீதா சாம்பசிவம்,
ReplyDeleteஒரே பக்தி மயமா இருக்கு. வித்யாசமாக தொடர்ந்து ஆன்மீக தகவல்களை அள்ளி தெளிக்கறிங்க.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
தம்பி
Nice one. Thanks for the post. I also try to post on this topic along with photos.
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி, அடிக்கடி வாங்க,
ReplyDeleteரஜினி ராம்கி, முதல் வருகைக்கு நன்றி. உங்கள் போஸ்ட்டும் போடுங்கள். படத்துடன் நன்றாகவே இருக்கும்.
குமாரசாமி மடத்திற்கு நான் குழைந்தையாக இருந்த போது அப்பா கை பிடித்து போயிருக்கிறேன்.
ReplyDeleteபசுமையான காசி நினைவுகள்.
தங்கள் பதிவில் என் மன ஓட்டங்களை பார்த்தேன்.
படமும் போட்டிருக்கலாம். முடியவில்லை போல இருக்கிறது.
நன்றி
வேற ஒண்ணும் இல்ல கீதா. அபீஸ்ல வேலை பெண்டு நிமிருது.. அது தான் நேத்து பின்னூட்டம் போட முடியல
ReplyDeleteகாசி புராணம் அற்புதம். நான் காசியில் என் மனைவியின் தங்கை வீட்டில் 15 நாள் தங்கி இருந்தேன்.நாங்கள் இருந்த வீட்டுக்குக் பின்னால் தான் இந்த திருப்பனந்தால் மடம்.ஆனால் நாங்கள். தினமும் ஹனுமான் காட்டில் கங்கையில்; குளித்துவிட்டு,காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியை தரிசனம் செய்துவந்தோம்.சுத்தம் சற்றுகுறைவாக இருந்தாலும் மறக்கமுடியாத நாட்கள்.என் ஷட்டகருடைய தாத்தா சின்னசுவாமி காசி யுனிவர்சிடியில் மீமாசத்தில் சிறந்த விரிவுரையாளராக இருந்தவர். .
ReplyDeleteMmm, naan ennathaa solla..? history book ellam karachu kudichrukeengaa. neraya sarakku irukku othukaren. :)
ReplyDeleteoru meenakshi pillai thamizh padal ondu(ammanai, or Unchal) potrunthaa supperraa irunthrukkum.
//நான் எழுதினதுக்கு ஆதாரம்:
ReplyDeleteபி.ஸ்வாமிநாதன். //
தர்மபுரம் பி. சுவாமிநாதன் என்று வானொலியில் அடிக்கடி தமிழ்பதிகங்கள் பாடுபவரா ?
சொல்ல மறந்தேன்: சிறப்பான தகவல்கள். நன்றி உங்களுக்கும் சுவாமிநாதனுக்கும்.
ReplyDelete100 அடிக்க வாழ்த்துக்கள்
ReplyDelete(88 க்கு 3 பின்னுட்டம் இடுறேன் இப்ப எஸ்கேப்)
உலாவரும் ஒளிக்கதிர் மதிரி இருக்கு போங்க.
ReplyDeleteஅடுத்து அய்யப்பனா, பாவம் அவர் ரெம்ப சர்ச்சைல மாட்டிட்டு இருக்கார்க்கா...விட்டு வைங்க.
மறுபடியும் பக்தி படமா..ச்சே பதிவா.. இருங்க குளிச்சிட்டு வந்து படிக்கறேன்..அப்புறம் தினமும் காலைல 4.30 க்கு எழுந்துருவேன் சொன்னீங்கள்ல,சரி தான் வயசு ஆனா அதுக்கு மேல தூக்கம் வராது... :-)
ReplyDeleteநல்ல கட்டுரை.
ReplyDeleteஅது சரி இப்படி கோயில் கோயிலா சுத்தினா, பெரம்பூர்ல அங்கப்பிரதஷ்னம் பண்ற திருமதி கீதா சாம்பசிவம் கதி என்னாறது, சொல்லுங்கோ…………
வாருங்கள் ஜெயராமன்,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி. நான் உங்கள் பதிவுகளை எல்லாம் படிக்கிறேன். நன்றாக இருக்கிறது. படம் போடுவது சரியாக வரவேண்டும் அல்லவா? எனக்குச் சமயத்தில் பதிவு பப்ளிஷ் செய்யும்போதே தகராறு பண்ணுகிறது. அதான் ரிஸ்க் எடுப்பது இல்லை.
கார்த்திக், முடியலைனாலும் வந்ததுக்கு நன்றி. அது சரி, ஆஃபீஸிலே வேலை எல்லாம் கூடச் செய்வீங்களா என்ன? :-)
ReplyDeleteரொம்ப நன்றி தி.ரா.ச. சார்,
ReplyDeleteநாங்கள் இருந்தது ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டில். தனியாக ஒரு வீடே எங்களுக்குக் கொடுத்து விட்டார்.ஜெனெரேட்டர் போன்ற வசதிகளுடன் நன்றாகவே இருந்தது.
அம்பி,
ReplyDeleteசரித்திரம் வராதா? சொல்லவே இல்லையே? அசினையே நினைச்சுக்கிட்டருந்தா இப்படித்தான்.
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல் போட்டிருக்கலாம். தோன்றவில்லை.
மணியன்,
ReplyDeleteஇரண்டாவது முறை வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் ஞாபகம் சரியாக இருந்தால்.
தருமபுரம் ஸ்வாமிநாதன் தேவாரம், திருவாசகம் பாடுபவர் ரொம்ப வயதானவர் என்று நினைக்கிறேன். பொதிகையில் பார்த்திருக்கிறேன். இது அவர் இல்லை என நம்புகிறேன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
மின்னல் தாத்தா,
ReplyDeleteஎன்ன ஆன்மீகம்னதும் நழுவறீங்க? இந்த வயசிலே அதான் நல்லது.:-)வாங்க, வாங்க.
வேதா,
ReplyDeleteநாங்க போனபோதும் அப்படித்தான் பார்த்தோம். சுத்தமான கங்கையைப் பார்க்க வேண்டுமானால் ஹரித்வாரில் பார்க்கலாம். வேகம் தாங்காது. காசியை விட வேகம்.
மனசு,
ReplyDeleteரொம்ப நன்றி. உலா வரும் ஒளிக்கதிர் ரேஞ்சுக்கு உயர்த்தியதுக்கு.:-) ஐயப்பனைப் பத்தி ஹோம்வொர்க் செய்து கொண்டு இருக்கேன். சீக்கிரம் எழுதுவேன். அது வரை வழக்கமான அறுவைகள் தொடரும்.
ச்யாம்,
ReplyDeleteatleast என்னோட பதிவைப் படிக்கறதுக்காகவாவது குளிக்கிறீங்களே!
ஒரு சின்னப் பொண்ணு காலைல எழுந்து சுறுசுறுப்பா வேலை செய்யாமல் உங்களை மாதிரியா தூங்கிட்டு இருப்பாங்க? உங்களுக்கு வயசாச்சு, முடியலை, தூங்கறீங்க. நான் அப்படியா?
சின்னக்குட்டி,
ReplyDeleteமறந்துட்டீங்களோனு பார்த்தேன்,
அடுத்தது அதுதான். நாளைக்குப் பாருங்க. இன்னிக்கு முடியலை.
கீதா,
ReplyDeleteஹரித்வாரில் கங்கையில் குளித்திருக்கிறேன் இளையவனாய் 22வயதில் இன்றும் கங்கையில் நான் குளித்ததால் சிந்தனை, எண்ணம், செயல் சிறப்புற்றது என நம்புகிறேன்.
ரிஷிகேஷில் இமயமலையும் கங்கையும் என்று சூழல் காசியைவிட படு சுத்தமாக இருக்கும் காசி கங்கை மிக்க மாசுபட்டது.
என்றாலும் ஒருமுறையாவது காசிக்கு மத நம்பிக்கைக்காவது போக விருப்பம்.
இமயமலையும் ரிஷிகேஷும் "ஸ்ப்ரிச்சுவலி அண்ட் ஈகாலஜிகலி" சூப்பர் இடங்கள்.
ஹரிஹரன்,
ReplyDeleteநல்ல மழை முடிந்ததும், ஆகஸ்ட் இல்லாட்டி செப்டெம்பரில் போங்க. அப்போ தண்ணீர் நிறைய இர்க்கும் என்பதால் அசுத்தம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
ஆனால் இமயத்தில் அலக்நந்தாவின் வேகமும் ஓசையும், அதன் தூய்மையும் காணக்கிடைக்காத அற்புதம்.
கீதாம்மா...
ReplyDeleteஇந்தப் பதிவில் தானே பின்னூட்டணும் என்னைய வந்து நாலு அடி போட்டீங்க? :-)))
இது ஜூலை 2006, கீதாம்மா!
அப்பல்லாம் அடியேன் பொறக்கவே இல்ல!
இப்ப தான் ஏதோ ஓராண்டாய்த் தத்தித் தத்தி நடந்துக்கிட்டு இருக்கேன் பதிவுலகத்தில்!
சொல் அறியாக் குழந்தையில் இருந்து, இப்போது தான் தமிழறியாச் சிறுவனாய், இட்டும் தொட்டும் கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும், சிறு கை நீட்டிக் குறு குறு நடந்தும், நடை பழகிக்கிட்டு இருக்கேன்!
நீங்க திருப்பனந்தாள் காசி மடப் பதிவுக்கு குழந்தை நடந்து வரவில்லையே-ன்னு சொன்னால் எப்படி? :-))
இதோ சிறு கை நீட்டிக் குறு குறு நடந்து வந்துட்டேன் பாருங்க!