அப்பாடி,
ஒரு வழியா யாரும் உதவி பண்ணாமல் என்னோட வலைப்பக்கம் திறந்து விட்டது. அதனாலே நான் என்னமோ தொழி நுட்பத்திலே சிறந்தவளா மாறிட்டேன்னு நினைக்கவேண்டாம். எல்லாம் இந்த tools.superhit, superhitஆ உதவி செய்தது. உதவியைக் கொடுத்த முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்த திரு நடேசன் அவர்களுக்கும், அதை வழி மொழிந்த சிவசங்கருக்கும் நன்றி. மற்ற URL எதுவும் அன்னியலோகம் உள்பட உபயோகித்ததில் என்னோட வலைப்பக்கத்தில் உள்ள நான் கடைசியாகப் பதிவிட்ட பதிவைப் படிக்க முடிந்ததே தவிர உள்ளே வர முடியவில்லை. நம்ம நாகை சிவா ஒரு அட்ரஸ் கொடுத்து இருக்கிறார். பின்னூட்டத்தில் வந்ததால் பார்க்க முடியவில்லை. அம்பி முந்தாநாளே எச்சரிக்கை செய்து விட்டு இரண்டு URL கொடுத்தும் அதில் ஒன்று non-existing. மற்றது வலைப்பக்கத்தில் உள்ள புதிய வலைப்பதிவு மட்டுமே வந்தது. நாம் தான் பைத்தியம் என்றால் அப்படி இல்லை வலை உலகிலே எல்லாருமே பைத்தியம் என்று இந்த விஷயத்தில் நிரூபணம் ஆகிவிட்டது. எல்லாருமே ஜகஜ்ஜோதியில் ஐக்கியம் ஆயாச்சு. வாழ்த்துக்கள். எல்லாருக்கும். நான் ஏன் இத்தனை நாள் பதிவு எழுதவில்லை என்று கேட்ட நாகை சிவாவிற்கு ஏற்கெனவே 20 தேதி வரை போயிட்டுப் போயிட்டுத்தான் வருவேன் என்று சொல்லி இருந்தேன். மறந்துட்டீங்க, போல இருக்கு. இன்னிக்கு இதுதான் பதிவு. தமிழ்மணம் திறக்குமா, இனிமேல் தான் பார்க்கணும். நீங்க யாரு படிக்கப் போறீங்க, அதுவும் தெரியாது. எல்லாருக்கும் சீக்கிரம் இந்தப் பிரச்னை சரியாகி முன் போல ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.
"கணபதிராயன் அவனிரு காலைப்
பிடித்திடுவோம்,
குணமுயர்ந்திடவே விடுதலை
கூடி மகிழ்ந்திடவே.
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்
பரா சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்"
TRC Sir, போலி கிலி யெல்லாம் ஒண்ணும் இல்லை. இதை எல்லாம் வச்சு நான் சின்னப் பொண்ணு இல்லைனு சொல்லப்போறீங்களா, அது மட்டும் நடக்காது சார். பதிவு போட்டுட்டேனே!பதிவு வெளியிட முடியாதுனு ப்ளாக்கர் சொல்லுது, என்ன நடக்குமோ தெரியாது.
ஈஸ்வரோ ரக்ஷது.
ஹையா ஜாலி,
ReplyDeleteபதிவு வெளி வந்து விட்டதே! இனிமேல் படிக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான். இது சோதனைப் பின்னூட்டம்.
வாழ்த்துக்கள்........ பதிவு போட்டதற்கு.
ReplyDelete//இது சோதனை பின்னூட்டம்//
எங்களுக்கு சோதனையான பின்னூட்டம் :-)
யாருக்கு சோதனை எங்களுக்குத்தானே அதான் கொஞ்சநாளா நடந்து கொண்டு இருக்கிறதே. 20ஆம் தேதிவரை இருக்காது என்று யாரோ ஜோஸ்யம் சொன்னார்கள்.ஜமாயுங்கள் தடைகளை கடந்த வீராங்கணையாக.
ReplyDeleteசின்னக்குட்டி,
ReplyDeleteநிஜமாவே சோதனையாத்தான் இருக்கு. தமிழ்மணம் என்னோட அருமையான பதிவை ஏத்துக்க மாட்டேங்குதே! என்னோட பின்னூட்டம் கூட ஏத்துக்கலை வள்ளியோட வலைப்பக்கத்திலும், சிபியோட வலைப்பக்கத்திலும். ஒரு எழுத்தாளிக்கு வந்த சோதனை.
"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?"
தி.ரா.ச. சார்,
ReplyDeleteஎன்னத்தை வீராங்கனையோ போங்க, ஒண்ணுமே புரியலை. தமிழ் மணம் என்னோட புதுப் பதிவை ஏத்துக்கலை. அதோட மட்டுமில்லாமல் பின்னூட்டமும் கொடுக்க முடியலை. நீங்க ஊருக்குப் போறதுக்குள்ளே முடிஞ்ச வரை அறுக்க வேண்டாம்? இதுவே பாருங்க ஒரு பெரிய வாசகர் வட்டமே உருவாயிருக்கு. அங்கே அங்கே ஏன் எழுதலைனு கேட்கிறாங்க, என்ன சார், நீங்க?
தமிழ்மணத்திற்குள் போய்ப் பதிவைப் பதிக்கவே முடியவில்லை. யாராவது உதவ முடியுமா?
ReplyDeleteநான் சிங்கப்பூர் வந்து 5 நாள் ஆகிவிட்டது.கவலை வேண்டாம் நீங்கள் கடல் தாண்டியும் உங்கள் வேலையை செய்யலாம்.
ReplyDelete//தமிழ்மணத்திற்குள் போய்ப் பதிவைப் பதிக்கவே முடியவில்லை. யாராவது உதவ முடியுமா?//
ReplyDeleteகண்டிப்பாக என்னால் முடியும்...எவ்வளவு தருவீங்க... :-)
This comment has been removed by a blog administrator.
ReplyDeletecongrats!
ReplyDelete//எங்களுக்கு சோதனையான பின்னூட்டம் //
he heee, chinna kutti bayangarama kaalasi irukaanga!
intha mooka posta thamizhmanthula vera sekanumaa? ellaam neram! :)
:-)
ReplyDeleteதி.ரா.ச. சார்,
ReplyDeleteஅந்த இலவச விளம்பரம் பில் விஷயம் மறந்துடாதீங்க. எனக்கு சிங்கப்பூர் டாலர் வேண்டாம். யு.எஸ். டாலரிலேயே அனுப்பிடுங்க.
ச்யாம்,
ReplyDeleteபோனாப்போகுதுனு உங்க பதிவுக்கு வர முடிஞ்சதும் இலவசப் பின்னூட்டம் தரேன்.
நேத்திக்கு server down.Yahoo Mail, Gmail எதுவும் திறக்கலை. இன்னிக்கு மெயில் அனுப்பறேன். உங்க தொழில் நுட்பத்தைக் காட்டுங்க.
அம்பி,
ReplyDeleteவரவர உங்களோட ரசனைத்திறன் குறைஞ்சுகிட்டே வருது. எல்லாம் வயசான கோளாறுதான். எல்லாரும் எப்படி ரசிக்கிறாங்க. இது மொக்கைப் பதிவா? Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நன்மனம்,
ReplyDeleteஇப்படிச் சிரிச்சா என்ன அர்த்தம்? அதான் நான் வலைப்பக்கத்தை முன்கூட்டியே இழுத்து மூடிட்டேன் அப்படிங்கறீங்களா? நான் வீர, மறத் தமிழச்சி. இந்த தொந்திரவுக்கெல்லாம் பயப்படமாட்டேன். வெற்றி வேல், வீர வேல்!
'"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!"
ஒரு வழியா யாரும் உதவி பண்ணாமல் என்னோட வலைப்பக்கம் திறந்து விட்டது.
ReplyDeleteஉதவியைக் கொடுத்த முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்த திரு நடேசன் அவர்களுக்கும், அதை வழி மொழிந்த சிவசங்கருக்கும் நன்றி.
::))))))))))
அது என்னங்க, தலைப்பு ஒரு கஷ்டமான பதிவு...
ReplyDeleteஒரு கஷ்டப்படுத்தும் பதிவுனு வச்சு இருந்தா அருமையா இருக்கும். என்னமோ போங்க வர வர தலைப்பை ஒழுங்காவே வைக்க மாட்டேங்கிறீங்க.
உங்க பதிவு தமிழ்மணத்தில் வருதே. அப்பறம் ஏன் வரல வரல ஊர கூட்டுறீங்க. யாமிருக்க பயன்மேன் ;)))
வாழ்த்துக்கள் கீதா.
ReplyDeleteஆழக்குழி தோண்டி அதிலொரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.. என்ற முதுமொழிக்கேற்ப பதிவிட்டிருக்கிறீர்கள்.
(உங்களுக்கு சரியான பதில் எப்படிக் கொடுக்கறதுன்னு முடிவெடுத்துட்டேன்)
ஒரு முக்காத அறிவிப்பு?:
ReplyDelete//what happened?
Silent for a long time?
//
இந்தப் பின்னூட்டத்தின் மூலம் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பிய நாகை சிவாவுக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
இனி வருவதெல்லாம் உண்மையான பொன்ஸ் என்றே அறிக ;)
மின்னல் தாத்தா,
ReplyDeleteகுத்தம் கண்டு பிடிக்கிறீங்க இந்த வயசிலேயும். அதெல்லாம் கண்டுக்கக்கூடாது. அவங்க கொடுத்த அட்ரஸை வச்சு நானே:-) தான் வந்தேன்.
வேதா, வேதா, வேதா,
ReplyDeleteஎனக்கு இப்படிப் பச்சைத் துரோகம் பண்ணலாமா? எவ்வளவு சின்னப் பொண்ணு நான்? என்னை போய் ம்,ம்,ம், ம்,ம்,ம்,,ம்,ம்,ம்,ம்,,ம்,ம்,ம்,
பூவொன்று புயலாகப் போகுது.
:):):)
ReplyDeleteசோதனைகள் பல வந்தாலும் அதை தூசி போல தட்டிவிட்டு வரும் வலைவித்தகியே(வீராங்கனைனு ஏற்கனவே யாரோ சொல்லிட்டாங்க!) மேன்மேலும் உங்கள் வலையுலக சேவை (?) விரிய வாழ்த்துக்கள்.
அன்புடன்
தம்பி
எங்க புயல் ஆகப்போவுது.
ReplyDeleteயாருக்கு பூ சுத்தப்பாக்குறீங்க.
//என்னங்க புகை வருதா? வாசனை வருதா? அது ஒண்ணுமில்லை.
என்னோட காது, மூக்கு இதிலிருந்துதான் வருது. //
பாத்துங்கக்கா, fire service க்கு யாராவது போன்,
யாராவது என்ன மாமாவே போன் போடப்போறார்.
இதப்போய் புயல் அதுகிதுன்னு ஒரே கறபனை பண்ணீகிட்டு
போங்கக்கா !
பெனாத்தல்,
ReplyDeleteஇப்போ இருக்கிற நிலைமயிலே வாழ்த்துக்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம், வச்சுக்கிறேன், உங்க பதிவிலே, புரியாத பின்னூட்டம் போட்டு.
யம்மா நிஜப் பொன்ஸ்,'
ReplyDeleteஎங்கேம்மா போனீங்க இத்தனை நாளா? தனியா நான் மாட்டிக்கிட்டாலும் தப்பிச்சு வந்ததையாவது பாராட்டுவீங்கனு பார்த்தா சிங்கம், புலிங்கறீங்களே?
சிவா,
ReplyDeleteஉங்க வேலைனு எனக்குத் தெரியாதா? என்ன செஞ்சீங்க?
தம்பி,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும், பட்டங்களுக்கும், ஏற்கெனவே உள்ள பட்டத்தை அங்கீகரிச்சதுக்கும் ரொம்ப டாங்ஸு. தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
பெரு(சு),
ReplyDeleteஎன்ன ரொம்ப நாள் கழிச்சு வரீங்கனு பார்த்தா என்ன ஒரேயடியா வாரறீங்க, கற்பனை அது இதுனு சொல்லிக்கிட்டு. நான் வேதா பதிவைப் பார்த்துட்டுக் கொதிச்சுப் போய்;-) போட்டிருக்கும் பின்னூட்டம் அது. இன்னிக்கு என்னோட பதிவைப் பாருங்க புரியும்.