ஹி,ஹி,ஹி,ஹி, எக்கச்சக்க வரவேற்பு. நாம் ஊருக்குப் போறதிலே எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்? (பின்னே நீ எழுதறதைப் படிக்கிறதே ஜாஸ்தி, இதிலே சந்தோஷம் இல்லாமல் என்ன?) அடைப்புக் குறிக்குள் வரது எல்லாம் என்னோட மனசாட்சி பேசறது. அது இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா உளறும் கண்டுக்காதீங்க. இப்போ வ.வா.சங்கத்தின் அறிக்கை: (அதெல்லாம் அவங்க ஒண்ணும் கண்டுக்கலை. இவங்களாவேதான் தலைவினு சொல்லிக்கிறாங்க.) இந்தா சும்மா இரு. எனக்குத் தலைவரோட ஆதரவே இருக்கு தெரியுமா? இது நான். இப்போ மறுபடி சங்க அறிக்கை:
வ.வா.சங்கத்தின் கண்மணியும், ஒப்பற்ற தலைவருமான திரு கைப்புள்ள அவர்களால் ஏக மனதுடன் ஆதரிக்கப் பட்டவரானவரும், சங்கத்தின் நிரந்தரத் தலைவலியாகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டவரும், சங்கத்துக்காகச் சளைக்காமல் களப் பணி ஆற்றுபவரும், புரட்சித் தலைவியும்
ஆன திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் பத்து நாள் சங்கத்திற்காகக் களப்பணி ஆற்றச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுகிறார். அவர் ஏற்கெனவே இம்மாதிரி சுற்றுப் பயணம் மேற்கொண்டு சங்கத்தை வளர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. நடுவில் பொன்ஸ் புதரகம் போகும்போது பொற்குவியலை மறைத்து விட்டதால் அவர்தம் களப்பணி ஆற்ற முடியாமல் தடுமாறினார். அவர் தம் செலவுகளை சங்கத்தின் சார்பாக ஐ.நா. வினால் நியமிக்கப் பட்டிருக்கும் சூடான் நாட்டுத் தூதுவர் திரு நாகை சிவா பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கெனவே தலைவியின் பணியில் நாகை சிவா ஆற்றியுள்ள பணிகள் குறிப்பிடத் தக்கது. தலைவி இங்கே "எள்" என்று சொல்லி முடிப்பதற்குள் சிவா அங்கே இருந்து மெயில் அனுப்பி "தலைவி, எண்ணெய் அனுப்பி விட்டேன். வந்து விட்டதா?" என்று கேட்கும் தங்கமான உள்ளம் படைத்தவர். அவர் தம் சேவையில் பூரிப்படைந்த தலைவி அவர் இந்தியா வரும்போது அவர் பதிவு எழுத விஷயம் வேண்டுமே எனக் காட்ட இரண்டு பழைய போஸ்டர்களும், மூன்று மைனாக்களும் அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்கள்.
கீழே உள்ளவை எனக்கும் மனசாட்சிக்கும் நடந்த பேச்சு வார்த்தை:
(இதுக்கே எத்தனை பின்னூட்டம், நூத்துக் கணக்கில் போகுது, நீயும் எழுதறியே,) (நான்: அது சும்மா வயித்தெரிச்சலில் சொல்றது. எனக்கு என்ன? நான் எழுதறது கல்கி, தேவன் (ம.சா. இது கொஞ்சம் ஓவராயில்லை) ரேஞ்சுக்குப் புகழப்படுது உனக்கு என்ன பேசாமல் இரு. இப்போ இந்த தேவ், பாரு, இத்தனை நாள் குழந்தை பிறந்திருக்குதுனு வராமல் இருந்தார், நான் சுற்று பயணம் போறது தெரிஞ்சதும் வந்து வணக்கம் சொல்லிட்டுப் போறார். தலைவர் கைபுள்ள "கைபுள்ள" மாதிரி இல்லாமல் அப்போ அப்போ வந்து "நான் இருக்கேன்" அப்படிங்கிறார். இந்த பொன்ஸும் இனி இல்லை போலி பயம் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. இந்த யானை மேலே அம்பாரி ஏறினதும் ரொம்ப ஸ்பீடுப்பா அவங்க. இந்த விவசாய அணித் தலைவர் வேறே வந்து "எப்படி இந்த மாதிரி எல்லாம் எழுதறீங்க?"னு பாராட்டிட்டுப் போறார்.) (ம.சா.ஆமாம், இதுக்கெல்லாம் மகிழ்ந்திடுவியே, உன்னோட படம் போடறேன்னு சொன்னாரே போட்டாரா?)
ஹி,ஹி,ஹி, மேலே உள்ளதைக் கண்டுக்காதீங்க. சுற்றுப் பயணம் போகும் வழியில் தோரணம், அலங்கார வளைவு, தொண்டர் படைக் கூடிக் கோஷம் எழுப்புதல், தொண்டர்களைக் கூட்டிவர லாரி, பஸ் ஏற்பாடு செய்தல் போன்றவை விவசாய அணித் தலைவர் இளா ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளிக் குழந்தைகளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் தாயுள்ளத்தோடு ஒரு மூன்று மணி நேரம் மட்டும் காத்திருக்கும்படித் தலைவி ஏற்பாடு செய்திருக்கிறார். தலைவிக்கு எடைக்கு எடை பொன், பொருள், பணம், வெள்ளி போன்றவை கொடுப்போரின் வேண்டுகோளுக்கு இணங்கி தலைவி தன் எடையை 30 முதல் 40 கிலோ வரை ஏற்றி விட்டதாகப் பெரு மகிழ்வுடன் கூறினார். தலைவி ஓய்வு எடுக்கும் நேரமும், நேர் காணலுக்கான நேரமும் தலைவி அந்த அந்த ஊர்களுக்கு வந்ததும் மாவட்டத் தலைவர்களுக்கு அறிவிக்கப்படும். (ஒரு பயல் எட்டிக்கூடப் பார்க்க மாட்டான். சொல்லாமலே ஓடிடுவாங்க.)
இதன் இடையில் தலைவி கொடி நாட்டி உள்ள முத்தமிழ்க்குழுமம் மற்றும் தமிழ்மகள் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏற்பாடுகளைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறார்கள்.
தலைவி முத்தமிழ்க்குழுமத்திலும், தமிழ்மகள் குழுமத்திலும் கொடி நாட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே.
மறுபடி மனசாட்சித் தொந்தரவு:
(ம.சா. இது தெரிஞ்சு தான் சிபி, நீ இருக்கும்போதே தலை காட்டுவதில்லையா?) நான்: அது ஒண்ணும் இல்லை. அவரோட கனவில் கூட நான் குமாரகாவியத்தைப் பத்திக் கேட்டேனா? அதிலே அவர் பித்தாகிப் பித்தானந்தாவாகிட்டார்! தெரியாதா உனக்கு?
முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்த தொண்டர் படை மிகவும் உணர்ச்சிவசப்பட்டுத் தலைவிக்காகத் தீக்குளிக்கிற ரேஞ்சுக்குப் போயிட்டாங்க. தலைவியைப் பார்த்து, "இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" னு கேட்கிறாங்க. தலைவி அரண்டு போய், "வேண்டாம், இதுக்கு மேலே போனால் அரிப்புத் தாங்காது, ஏற்கெனவே கொசுத் தொல்லை" னு சொல்லிட்டாங்க. அவங்க அரிக்காதுனு உத்தரவாதம் கொடுத்திருக்கிறாங்க . வரவேற்பில் அவங்களும் சேர்ந்துப்பாங்க. ஆகவே நண்பர்களே, நண்பிகளே இம்முறை தலைவி பதிவு ஒண்ணும் போடாமல் பத்து நாள் விடுமுறையில் செல்வது எல்லாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிய வருகிறது.
கீதா பயணத்திற்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎங்கே போறேனு சொல்லாமலேயே இவ்வளவு பில்டப்பா?
சாரையும் கண்டுக்கோங்க. கிழக்கு மேற்கு ஆக நிற்கவேண்டாம்.:-)0
innaathu vidumurai ya.. (sss..appada..) kandukatheenga bracket-la irukkirathu en manasatchi thaan..app appo ippadi ethavathu sollum..
ReplyDeleteஎல்லோரையும் தன்னைக் கட்டி,ஐஸ் வைத்து ஒரு சிறப்பான் 100க்கு ரெடியாகிவிட்டது.மாலை,மரியாதை,பரிவட்டம்,போஸ்டர் எல்லாம் எடுத்து வையுங்க.ரசிகர்கள் ஒரே ஓட்டமாக ஓடி வரப்போகிறார்கள். அம்பி கொஞ்சம் போலீஸ் பந்தோபஸ்த்துக்கும் சொல்லி விடு.சாம்பு சாருக்கு ஸ்பெஷல் ஸ்வீட். பெரியமனிதர்கள் எல்லாம் வரப்போகும் அந்த கூட்டத்தில் நம்மை எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது. அதான் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிடறேன்.
ReplyDeletebuild-up thaanga mudiyalai paa saaamiiiiii!
ReplyDeletepaathu! bnglre stn!nu solli saambu maama ungalai Oosurla kazhatti vitrura porraaar! (dear saambu maam! noted the idea?)
சத்தியமா உங்க அறிவுக்கு படம் வலையில கிடைக்கல அக்கா, நம்புங்க. அப்படியே தேடினாலும் தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன் அப்படின்னும் ஆம்பளைப்பசங்கதான் கிடைக்கிறாங்க. படம் கிடைச்சா போட்டுதாக்கிருவோம்.
ReplyDelete:::சங்கம் இந்த பதிவை பரிந்துரைக்குது. இன்னும் விவரத்துக்கு சங்கம் பக்கம் பார்க்க:::
eppaa..intha alavu build up vera engeyum paththathillai geetha..
ReplyDeletenadaththunga nadathunga
வேதா,
ReplyDelete30-ம்தேதி தான் போகப் போறேன். ஆனால் ஒரு தலைவி போறதுன்னா சும்மாவா? அதான் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கேன். எரியுது போலிருக்கு! :D
மனு,
ReplyDeleteவாழ்க்கை பூரா கிழக்கு மேற்குதானே! :D 30-ம் தேதி போறேன். வந்து விவரம். அப்புறம் இந்த அம்பி அதை வச்சு ஏதாவது மொக்கைப் பதிவு போட்டுடுவார்.
கார்த்திக்,
ReplyDeleteபோஸ்டர் போட்டதாலே தாயுள்ளத்தோடு மன்னிச்சு விட்டுடறேன். உங்க மனசாட்சியும் காப்பி அடிக்குதே! :D
y blood? same blood?
ReplyDeleteகீதா இது உங்களுக்கு இல்ல...
சாம்பு சார் கொஞ்சம் மகாபலிபுரம் வர முடியுமா, உங்களுக்கு சிலை செய்ய ஆர்டர் குடுக்கனும்.
ஹி,ஹி,ஹி,ஹி, தி.ரா.ச. சார், வாழ்த்துக்களுக்கும் மாலை, மரியாதை ஏற்பாடு செஞ்சதுக்கும் நன்றி. செலவை நீங்களே ஏத்துக்கறேன்னு சொன்னது உங்க பெருந்தன்மையைக் காட்டுது. நன்றி. சங்கத்திலே உங்களைச் சேரச் சொன்னாங்களே> எப்போ சேரப் போறீங்க?
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteஒரே பொறாமையா இருக்கா? அதான் நேத்திலேருந்து இணைய இணைப்பு வரவே இல்லை. இப்போதான் வந்தது. அப்புறம், பூகோளம் தெரியாத அம்பியே, சென்னையில் இருந்து வரும்போது ஹோஸூர் வரவே வராது. இது எப்படி இருக்கு?
விவசாயி,
ReplyDeleteபடம் போடுங்க, ஆனால் சின்னப் பொண்ணுப் படமாப் பார்த்துப் போடுங்க. நம்ம இமேஜ் என்ன ஆகிறது?
சின்னக்குட்டி,
ReplyDeleteஅது என்ன கேள்வி புரியலியே? சிலைக்கு ஆர்டர் எடுக்கும்போது டெண்டர் விட எனக்குத் தெரிஞ்ச ஆள் இருக்காங்க சொல்றேன்.
இருந்தாலும் நம்மள அநியாயத்துக்கு புகழ்ந்து இருக்கீங்க. உங்க புகழ்ச்சிய பாத்தா கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பயமா இருக்கு.
ReplyDeleteஅது என்னங்க பழைய போஸ்டரும், மைனாவும், பதிவுனா எல்லாத்தையும் தான் போடனும். நீங்க உங்க சொந்த கதை, சோக கதையை போடலயா, அத நாங்க கேட்கலயா... அது போல தான் இதுவும். இந்த பின்னூட்டம் எல்லாம் நம்ம மக்கள் நம்ம மேல உள்ள பாசத்தில் போடுவது. அதுக்கு எல்லாம் ரொம்ப பெரிய நல்ல மனசு வேண்டும். உங்களுக்கு சின்ன நல்ல மனசு தான் இருக்கு. அதுக்கு இந்த பின்னூட்டங்களே அதிகம்.
ஊருக்கு நல்லபடியா போயிட்டு சீக்கிரம் வாங்க. அது வரை உங்க அறுவையில் இருந்து விடுதலை அடைந்து இருக்கும் நாகை சிவா
:))))
புதரகத்தின் நிரந்தர தலைவனா (தொண்டன்னு சொன்னீங்களா காதுல விழல) என்னை அறிவித்த வ.வா.சங்கத்தின் நிறந்தர தலைவி,புரட்ச்சி திருமதி,வீட்டுக்காரரை சீரியல் பார்க்க விடாமல் டிரியல் ஆக்கும் விடி வியாழன் (எல்லோரும் வெள்ளி னு சொல்ராங்க ஒரு சேஞ்சுக்கு)
ReplyDeleteஅவர்களின் சுற்று பயனம் இனிதே நிறைவேர புதரகத்தின் அனைத்து தொண்டர்களின் சார்பிலும் வாழ்த்தி வழி அனுப்புகிறோம் (திரும்பி வர மாட்டீங்க தான) :-)
//
ReplyDeleteவிவசாயி,
படம் போடுங்க, ஆனால் சின்னப் பொண்ணுப் படமாப் பார்த்துப் போடுங்க. நம்ம இமேஜ் என்ன ஆகிறது?
//
பார்த்து போடுங்க குழந்தை படம் போட்டாலும் ஓக்கே தான்
ரெண்டு நாள் முன்னாடி என் யானை ஏன் கொஞ்ச நேரம் நின்னு போச்சுன்னு இப்போ தான் புரியுது.. ஒரு இனம் தெரியாத நிம்மதி வேற.. ம்ம்ம்
ReplyDelete