அப்பாடி, ஒரு வழியாகப் பத்து நாள் கழிச்சு கணினி முன்னாலே தொந்திரவு ஒண்ணும் இல்லாமல் எழுத முடியுது. ஆனால் இது இன்னும் ஒரு வாரம் தான். அதுக்கு அப்புறம் ஒரு வாரம் கொஞ்சம் கஷ்டம் தான். சந்தோஷப்படுகிறவர்கள் இப்போவே எகிறிக் குதிக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியத்தின் ஒரு பொற்காலப் பதிவுகளை இழக்கிறீர்கள்.
என்னோட அருமையான (!!!!!!!!!!!!!)பதிவுகளைப் படிக்க ஆள் இருக்க மாட்டாங்கனால் வருத்தமாத் தான் இருக்கு! என்ன பண்ணறது? ஒண்ணும் புரியலை.வழக்கமான ஆட்கள் எல்லாம் இப்படி "Brutus" மாதிரி மாறுவாங்கனு நினைக்கலை. ஒருத்தர் என்னடானா "அந்த 2 நாட்கள்" திரும்பி வராதானு ஏங்கறார். அவரை ஆதரிச்சுச் சிலபேர். இன்னொருத்தர் கல்யாணம் ஏன் 5 நாள் வச்சுக்கலைனு கேட்கிறார். ஒரு இரண்டு நாள் போயிட்டு வந்தா இப்படியா மாறுவாங்க? :-)
இந்தப் பின்னூட்டம் வாங்கறதுக்கு என்ன வழினும் புரியலை. தங்கிலீஷ் எழுதற அம்பிக்கு எத்தனை பின்னூட்டம்? என்னோட ப்ளாக் ஆரம்பிச்ச மனு இன்னிக்கு எங்கேகேகேகேகேகேயோயோயோயோ போய் உயரத்தில் நிற்கிறார். நேத்திக்குப் பதிவு ஆரம்பிச்ச தி.ரா.ச. அவர்களுக்கு எத்தனை பின்னூட்டம்? ரொம்பப் பொறாறாறாறாறாமையாயாயா இருக்கு. என்னங்க புகை வருதா? வாசனை வருதா? அது ஒண்ணுமில்லை. என்னோட காது, மூக்கு இதிலிருந்துதான் வருது. இந்த வவ்வாலுக்கு நிறையப் பின்னூட்டம் வருதாம். அவர் மாதிரித் தலைகீழா நின்னா வருமோ என்னவோ? இல்லாட்டி அறிவுஜீவியா இருக்கணும். எனக்கு அறிவே இல்லைங்கறது எங்க வீட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. (அதான் என் கணவர்). இதிலே நான் எங்கே அறிவு ஜீவியாகிறது. நானும் தான் இ.கொ. மற்றும் ரஷ்ய மருத்துவர் ராமநாதனின் பின்னூட்டக் கோனார் நோட்ஸை விழுந்து விழுந்து படிச்சேன். என்ன பிரயோஜனம்? கீழே விழுந்ததிலே அடிபட்டது தான் மிச்சம். இதுக்காவது ஏதும் வருதா பார்க்கலாம்.
இப்படிக்குப் பெருமூச்சுடன் "சின்னப்பொண்ணு".
ஜில்லுனு இரண்டு டம்ளர் ஐஸ் வாட்டர் குடிங்கோ. காதிலே மூக்கிலே எல்லாம் புகை வராது. புகை உடலுக்கு பகை சிபி சொல்லியிருக்கார்.சின்னப்பொண்ணா லக்ஷணமா இதுமாதிரி எழுதுங்கள் பின்னூட்டம் பிச்சிகிட்டுப் போகும்.எங்களுகெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவதே.கஷ்டம். நீங்கள் இரண்டு பதிவு சூப்பரா போடுகிறீர்கள் அதுவும் வீட்டையும் (வீட்டுக்காரரையும்) பார்த்துகிட்டு அப்புறம் என்ன
ReplyDeleteஎல்லாம் நல்லாதான் இருக்கு.தி ரா ச
trc Sir,
ReplyDeleteஜில்லுனு ஐஸ் வாட்டர்? இன்னும் நல்லா வெறுப்பு ஏத்தாதீங்க சார்!சிபி எப்போலேருந்து இந்த மாதிரி நாரதர் வேலை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சார்? சங்கத்திலே இருந்து கொண்டு நிரந்தரத் தலைவலிக்கே தலைவலியா? இருக்கட்டும், பார்த்துக்கறேன்.
பகை உடலுக்கு புகை.
ReplyDeleteபுதிய தத்துவம் 1097.
இந்த வியாதி எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன் அங்கேயுமா?
ReplyDeleteஅன்புடன்
தம்பி
ஆமங்க கீதா.. இந்த பின்னூட்டம் வங்குரது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.. ஏதாவது டிப்ஸ் கொடுங்களேன்.
ReplyDeleteஅம்பியை பாத்து இந்த பொறாமையா.. அம்பி..எச்சரிக்கை..கீதா பாணம் எப்போ வேண்டுமானாலும் உங்களை தாக்கலாம்
வாங்க, வாங்க, அடுத்த பதிவை போட்டீங்க. அங்க போறேன்
ReplyDeleteமனசு,
ReplyDeleteஏற்கெனவே நொந்து போயிருக்கேன். இதிலே தத்துவம் வேறேயா? தத்துவம் பேசற வயசா எனக்கு?
வரும்போதே வியாதியுடன் வந்திருக்கும் தம்பியே? இது தேவைதான் எனக்கு.:-)
ReplyDeleteகார்த்திக்,
ReplyDeleteநீங்களுமா? அம்பிக்கு எச்சரிக்கையா? இருக்கட்டும். அசின் விஷயத்தில் இரண்டு பேரையும் சமரச்மாப் போகச் சொன்னதுக்குச் செய்யும் கைம்மாறா இது?
இதோ ஒரு எண்ணிக்கைக்காக...நானும் ஒன்னு போட்டுட்டு போறேன்... :-)
ReplyDelete