எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 14, 2008

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்!

மும்பையில், "ராக்கி சாவந்த்" என்னும் பெண்ணின் காதலன் அபிஷேக், காதலர்தின வாழ்த்துக்களோடு, அந்தப் பெண்ணிற்குக் கொடுக்க வந்த பூங்கொத்தை நிராகரித்ததோடு அல்லாமல், அபிஷேக்கை மாறி, மாறி அறைந்தார். இருவரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள் தான் என்பதோடு காதலர்களும் தான். ஆனால் அந்தப் பெண் என்ன காரணத்தால் நிராகரிக்கிறார் என்று தெளிவாய்ச் சொல்லவில்லை. இது அவர் காதலர் தினத்துக்குத் தன் காதலனுக்குக் கொடுத்த பரிசா? புரியவில்லை. அது தவிர, மிகவும் மனம் புண்படும்படியான வார்த்தைகளிலும் காதலனைத் திட்டினார். இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்) படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. காதலர்களின் அந்தரங்கத்துக்குள் தொலைக்காட்சி நுழைந்த விதமோ, அது படம் எடுப்பதின் உணர்வு அந்தக் காதலர்களுக்கு இல்லையா என்பதும் தெரியவில்லை. என்றாலும் அந்தப் பையன் கெஞ்சும் விதத்தைப் பார்த்தால், இப்படியாவது காதலுக்குக் கெஞ்சி அந்தப் பெண் ஏற்றுக் கொண்டாலும், அவனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை காத்திருக்கும்? இன்றைய காதலர்களே பதில் சொல்லுங்கள்! நாடு எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

20 comments:

  1. அடக் கடவுளே!
    இதை போயா சீரியஸா எடுத்துக்கிட்டீங்க? ரெண்டு நாள் லீவு எடுக்கப் போறதா சொன்னீங்களே? என்னாச்சு? அந்தப் பொண்ணு ராக்கி சாவந்த் இது மாதிரி பல பப்ளிசிட்டி ஸ்டண்ட்களின் ஒரு அங்கம். சமீபத்தில் நடந்த ஒரு நடனப் போட்டியில் கூட நடுவர்களின் மீது குற்றம் சாட்டினார். டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க அவர்களாலேயே நடத்தப் படும் ஒரு நாடகம். சீரியஸா எடுத்துக்காம டீவியை நிறுத்திட்டு அங்கிளுக்கு பஜ்ஜி செஞ்சி கொடுங்க.

    அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?
    :))

    ReplyDelete
  2. செய்தி பொய்யாகவே இருக்கட்டும்.ஆனால் என் சந்தேகம் என்னன்னா, நேத்திலே இருந்து ஏன் "பஜ்ஜி" கேட்டுக்கிட்டே இருக்கீங்கனே புரியலை! :P நீங்களே செஞ்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சோ? :P

    ReplyDelete
  3. //"கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?//

    சூப்பர்.... :-)

    ReplyDelete
  4. //அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?
    :))//

    ஜீனியஸ்!

    ReplyDelete
  5. //ஜோக்ஸ் அபார்ட் - ஊடகங்கள் ரொம்பவே வியாபரமா போயிகிட்டு இருக்கு. நிறைய செய்திகளை விலைக்கு வாங்கிடலாம். "கைப்புள்ளை பஜ்ஜி சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிடட்" அப்படின்னு செய்தி வரனும்னா கொஞ்சம் செலவழிச்சா போதும். அப்படி இருக்கு நிலைமை!

    ReplyDelete
  6. ஹா ஹா! நல்ல கேள்வி


    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  7. ஹாய் தலைவி,

    //இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்)..//

    ஆஹா....என்னதிது, நீங்க அந்த சானல்லாம் கூட பாக்கறீங்களா? நான் என்னாடான்னா நீங்க இங்க அழுதுவடியற சீரியல்களை மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சுட்டேன்.

    //டீவியை நிறுத்திட்டு அங்கிளுக்கு பஜ்ஜி செஞ்சி கொடுங்க...//

    // நேத்திலே இருந்து ஏன் "பஜ்ஜி" கேட்டுக்கிட்டே இருக்கீங்கனே..//

    ஓ நீங்களும் "பஜ்ஜி" செஞ்சு தரேன்னு சொல்லிட்டு டிமிக்கி குடுத்துட்டீங்களா அவருக்கு? அதான் அதே நினைப்பா இருக்காரு..வாய்விட்டு வேற சொல்லிட்டாரூ...

    ReplyDelete
  8. அதெல்லாம் டிவி ஷோக்காக எடுத்ததாய் இருக்கும்ங்க மேடம்.. எல்லாக் காலங்களிலும் இது போல காதல்கள் இருந்தன என்பதும் உண்மை தான்.. இப்போது மீடியாக்களால் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன... அவ்வளவு தான்

    ReplyDelete
  9. கைப்பு அண்ணாச்சி, பஜ்ஜி என்ன பஜ்ஜி, வீட்டு சமையலே தினமும் சாம்பு அங்கிள் தான் செய்யனும். அப்ப தான் மேடம் இப்படி மொக்கை பதிவு போட முடியும். :)))

    ReplyDelete
  10. திவா...வலைப்பூ அகராதி வேணும் வேணும்னு கேட்டுக்கிட்டே இருப்பீங்களே. உங்களுக்கு இன்னிக்கு ஒரு ப்ராக்டிகல் எக்சாம்பிள் தரேன்.

    //நிறைய செய்திகளை விலைக்கு வாங்கிடலாம். "கைப்புள்ளை பஜ்ஜி சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிடட்" அப்படின்னு செய்தி வரனும்னா கொஞ்சம் செலவழிச்சா போதும். அப்படி இருக்கு நிலைமை!//

    திவா...தலைவி செஞ்ச பஜ்ஜியைச் சாப்பிட்டா ஆஸ்பத்திரியில தான் அட்மிட் ஆகனும்னு சொல்ல வர்றீங்க...என்னா உள்குத்துடா சாமீ???

    கவனிக்க - இன்று நீங்கள் வலைப்பூ அகராதியில் இருந்து கற்றுக் கொண்ட சொல் - உள்குத்து.

    ReplyDelete
  11. //கவனிக்க - இன்று நீங்கள் வலைப்பூ அகராதியில் இருந்து கற்றுக் கொண்ட சொல் - உள்குத்து.//
    கொஞ்சம் புரியலை.
    இது என் பதில்ல உள்குத்தா?
    இல்லை உங்க பதில்ல உள்குத்தா?

    உள்குத்து, ஆணி, கடப்பாறை, மொக்கை, ரிபிடேய், போன்ற பொதுவான "கலைசொற்கள்" மேலும் நற நற க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போன்ற காப்பிரைட் சொற்கள் எல்லாம் சேத்து ஒரு அகராதி பண்ணலாம். ரொம்ப நால் முன்ன குமுதத்துல அரை டிக்கட் அகராதி ன்னு படிச்ச ஞாபகம்.

    ReplyDelete
  12. //வரனும்னா கொஞ்சம்//

    //ரொம்ப நால்//


    ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹாஆ ஹாஹாஆ, விளக்கெண்ணெயோ விளக்கெண்ணெய், "சாட்"டிங்கிலே வராத விளக்கெண்ணெய், நல்லா ஜாலியாவே இருக்கு!

    ReplyDelete
  13. //கொஞ்சம் புரியலை.
    இது என் பதில்ல உள்குத்தா?
    இல்லை உங்க பதில்ல உள்குத்தா?//

    கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...
    :)))

    ReplyDelete
  14. //ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹாஆ ஹாஹாஆ, விளக்கெண்ணெயோ விளக்கெண்ணெய், "சாட்"டிங்கிலே வராத விளக்கெண்ணெய், நல்லா ஜாலியாவே இருக்கு!//

    எப்படியோ எல்லாரும் ஜாலியா இருந்தா சரிதான்.

    //அது சரி பதிவுல தப்பு இன்னும் இருக்கே?
    தப்பாக இன்னும் ஒண்ணு கூட இருக்கு.
    கண்டு பிடிங்க பாக்கலாம்!//
    இதுக்கு பதிலே காணோம் ன்னு பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  15. /கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...
    :)))//

    :-)
    புரிந்து கொண்டேன் குருவே!
    வணக்கங்கள் பல!

    ReplyDelete
  16. //அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?//

    கைப்புள்ள, வருஷத்துல அன்னிக்கு ஒரு நாளாச்சும் அங்கிளை அழுக வைக்காம இருக்கலாம்ல.. அன்னிக்குமா..?

    ஏன்யா உனக்கு இப்படியொரு கொலை வெறி..?

    ReplyDelete
  17. @உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க? சரியான கு.வி. தான் போங்க! :P

    ReplyDelete
  18. //உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க? சரியான கு.வி. தான் போங்க! :P//

    என்ன செய்றது மேடம்..? இன்னிக்குத்தான என் கண்ல பட்டுச்சு..

    அதென்ன மேடம் 'கு.வி.தான் போங்க!' புரியல..

    அதென்ன மேடம் கடைசீல 'P'-ன்னு ஒரு எழுத்து..? புரியல..

    ReplyDelete
  19. //கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...
    :)))//

    @உ.த. சரியாப் போச்சுப் போங்க, அதான் உங்க நண்பர் ஆசானாக மாறி உபதேசிக்க ஆரம்பிச்சிருக்காரே, அவர் கிட்டே கேளுங்க சொல்லுவார்! :)))))))))))))))

    ReplyDelete