எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 23, 2008

புல்லாகிப் பூண்டாகி-ரத்னேஷின் விமரிசனத்தில் என் கருத்தும் அவர் பதிலும்

//'கூடவே திரௌபதிக்கு ஒழுங்காகப் பாத்திரம் கழுவத் தெரியாது என்பதும் தெரிகிறது' என்று சொல்லிக் காது திருகு வாங்கியவன், தன் அடையாளங்களை மறந்து படிப்பது சாத்தியமல்லவே//

இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.

February 9, 2008 2:32 PM
கீதா சாம்பசிவம் said...
//ஒரு சார்பற்ற நாத்திகவாதி தான் ஆன்மீக விஷயங்களை சரியாக உள்வாங்க முடியும்.//

ஒத்துக்கவேண்டிய ஒரு விஷயம், ஏனெனில், இருக்கிறது என்று சொல்பவர்களை விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் நாத்திகவாதிகளே! உண்மையை அறிய அவர்கள் பாடுபடுவது போல் ஆத்திகவாதி பாடுபடுவது இல்லைதான்!

February 9, 2008 2:34 PM
கீதா சாம்பசிவம் said...
//தாத்தா என்பவர் ஒரு போலி சாமியார்; கந்தன் என்பவன் இலக்கிய மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஓர் அப்பாவி. அவனுடைய பள்ளிநாள் நண்பன் கேசவன், இடைப்பட்ட நாட்களில் - தொடர்பு விட்டுப் போயிருந்த நாட்களில் தாத்தாவுடைய கையாளாகி அவருடைய ஃப்ராடு வேலைகளுக்குத் துணை போகிறவன். அதனால் தான் அவன் அதிகம் பேசாதபடிக்குப் படைக்கப்பட்டிருக்கிறான்.//

ம்ம்ம்ம்ம்ம்ம்??????? ஒருவேளை இன்றைய போலி சாமியார்களையே பார்த்து உங்களுக்கு இம்மாதிரியான எண்ணம் தோணுதோ என்ற நினைப்புத் தவிர்க்க முடியலை. உண்மையான ஆன்மீக வாதிகள் இன்றும், இப்போதும் இருக்கின்றனர், சார், அதை மறக்காதீங்க! அதிகம் பேசவில்லை என்பதனாலேயே ஃப்ராடுக்குத் துணை என்று சொல்ல முடியுமா? குறைகுடம் தான் தளும்பும்.

February 9, 2008 2:36 PM
கீதா சாம்பசிவம் said...
//கந்தன் எந்த அளவுக்கு ஆழமாக ஆன்மீக விஷயங்களைப் படித்திருப்பவன்; ஆனால் தெளிவடையாதவன்; எல்லாவற்றையும் ஏட்டுச் சுரைக்காயாகவே, எண்ணத்தில் மேற்கோளுக்காகவும் அடுத்தவர்களைப் பிரமிக்க வைப்பதற்காகவும் மட்டுமே படித்திருப்பவன் என்பதைப் பல்வேறு அத்தியாயங்களில் ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார். இத்தகையோரைத்தான் ஈகோவைக் கிளறி குழப்பிஒரு வழி பண்ண முடியும்.//

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறாங்க? :)))))))))))

February 9, 2008 2:37 PM
கீதா சாம்பசிவம் said...
//அந்த அப்பாவியை திருவண்ணாமலைக்குக் கூட்டிப் போய் நன்கு நடக்கவிட்டுக் களைப்பாக்கி 'லாகிரி வஸ்து' கலந்த உணவை உண்ண வைத்து ஆன்மீக இலக்கிய விஷயங்களைப் பேச வைத்து முக்கால்தூக்கத்தில் டேப் ரெக்கார்டரில் எதையோ கேட்க வைத்தால், கிருஷ்ணன் என்ன;//

இது கொஞ்சம் 2,3,4, மச்சா இருக்கோ?:(((((((

February 9, 2008 2:39 PM
கீதா சாம்பசிவம் said...
//உச்சகட்ட முயற்சி, கந்தனின் திருமணத்திற்கு முன் தாத்தாவைப் பார்க்க விடாமல் செய்து அவர் இறந்து விட்டார் என்று பொய் கூறி திருமணத்திற்கு வந்திருந்தார்; மறைந்து விட்டார்; அது கந்தனுக்கும் அவனுடைய நண்பனாக வேஷம் போடும் கேசவனுக்கும் மட்டுமே தெரியும் என்று சித்தரிக்க முயன்றது.//

கந்தனை வேண்டுமானால் ஏமாற்றலாம், திருவண்ணாமலையில் இருந்த அத்தனை பேருமா ஏமாற்றுகிறார்கள். கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லையே, இது? உண்மையிலேயே திருமணம் நிச்சயிக்கப் பட்டால், சாவு வீடுகளுக்குப் போவதற்குப் பையன், பெண் இருவருக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்குக் கூட அனுமதி மறுக்கப் படும், மிக மிக நெருங்கிய சொந்தமாய் இருந்தால் தவிர.

February 9, 2008 2:42 PM
கீதா சாம்பசிவம் said...
//பள்ளிநாள் முதலாக அளவுக்கு மீறிய கண்டிப்புடன் (சினிமா கூட சரஸ்வதி சபதம், தசாவதாரம் போன்ற படங்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு) வளர்க்கப்பட்ட ஒரு பையன் பொறியியல் கல்லூரி ஹாஸ்டலில் முதன்முறையாக கஞ்சா அடித்து விட்டு கதறி எழுந்து "நான் தான் இரண்ய கசிபு; எங்கப்பன் தான் என்னை மடியில் போட்டுக் கொன்ற நரசிம்மன்.அப்போதும் அப்படித் தான் செய்தான்; இப்போதும் அப்படித் தான் என்னை மடியில் போட்டே கொல்கிறான்" என்று இரவு முழுக்க புலம்பித் திரிந்தது எனக்குத் தெரியும்.(1983-ல்).//
நடந்திருக்கும், இல்லைனு சொல்லலை, ஆனால் அந்தப் பையன் நிலைமை வேறே, இன்னும் சிலர் கண்டிப்பாய் வளர்க்கப் பட்டதாலேயே ஒரு எல்லைக்குள் உட்பட்டு மிக மிகக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுயநினைப்பில் இருப்பார்கள். இரண்டும் நடக்கும், இல்லையா?

February 9, 2008 2:44 PM
கீதா சாம்பசிவம் said...
//நீங்கள் மட்டுமாவது)நான் எழுதிய உட்பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்" என்கிற பாணியில் குமரன் ஏதோ சொல்லப் போகிறார் என்று தான் எண்ணினேன். மற்றவர்கள் வருந்துவார்களே என்று மௌனம் சாதிக்கிறாரோ என்னவோ!//

அப்படி எதுவும் நிர்ப்பந்தம் குமரனுக்கு இருப்பதாய்த் தெரியலை, குமரனின் உள்நோக்கமும் நீங்கள் சொல்வது இல்லை, என்றாலும் வித்தியாசமாய் விமரிசனம் எதிர்பார்த்துத்தான் வந்தேன், ஆகவே எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை! :)))))))))

February 9, 2008 2:46 PM
G.Ragavan said...
உங்க விமர்சனத்தை இப்பத்தான் படிச்சேன். கதையின் நிறைவுப் பகுதியில் நான் இட்ட பின்னூட்டம் இது. நீங்க அத விரிச்சிச் சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அதான் குமரன் அதிர்ச்சியாயிட்டாரு.

// G.Ragavan said...
என்ன மோகன் கதைய அதுக்குள்ள முடிச்சிட்டீங்க :)

ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)

January 03, 2008 3:33 PM //

February 9, 2008 3:38 PM
RATHNESH said...
மரியாதைக்குரிய கீதா மேடம்,

எத்தனை கணைகள்! அடடா! ஒரு படைப்பாளியாக குமரனின் வெற்றிக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

//உண்மையான ஆன்மீக வாதிகள் இன்றும், இப்போதும் இருக்கின்றனர், சார், அதை மறக்காதீங்க! அதிகம் பேசவில்லை என்பதனாலேயே ஃப்ராடுக்குத் துணை என்று சொல்ல முடியுமா? குறைகுடம் தான் தளும்பும் //

நான் சொன்னது தாத்தா பற்றி மட்டும் தானே ஒழிய ஆன்மீகவாதிகள் என்கிற பொதுத் தலைப்பிலானவர்களை அல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். கேசவனின் படைப்பிற்கு என்னுடைய இலக்கணமும் பொருந்திப் போகிறதா இல்லையா?

// இது கொஞ்சம் 2,3,4, மச்சா இருக்கோ?:((((((( //

இல்லை. அதற்கான விளக்கமாகத் தான் என் கல்லூரிநாள் காட்சி ஒன்றினையும் கொடுத்தேன். அது சாத்தியமே என்று இன்னொரு கணையில் தாங்களும் (பாதியளவாவது) ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.

// கந்தனை வேண்டுமானால் ஏமாற்றலாம், திருவண்ணாமலையில் இருந்த அத்தனை பேருமா ஏமாறுகிறார்கள். கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லையே, இது?//

திருமணத்தில் தாத்தா பற்றிய தகவல் பரிமாற்றமே அந்த இரண்டுபேருக்குள் மட்டும் தானே நடக்கிறது? கல்யாண வீடியோவில் க்ராஸ்செக் பண்ணிப் பார்த்தார்கள் என்றெல்லாம் விளக்கங்கள் கதையில் இல்லையே.

//குமரனின் உள்நோக்கமும் நீங்கள் சொல்வது இல்லை//

ஒரு படைப்பாளியாக குமரன் இது ஓர் ஆன்மீகக் கதை என்று சொல்லி இருந்தால் ராமகிருஷ்ணவிஜயத்துக்கு அனுப்புங்கள் என்று சொன்ன கையோடு விமர்சனத்தையே தவிர்த்திருக்கலாம். தன்னை நாத்திக சிந்தனாவாதி என்று சொல்லிக் கொள்பவர் இப்படி எழுதுகிறார் என்றால் என்ன உட்பொருள் சொல்லவருகிறார் என்று தானே ஆராயச் சொல்லும்?

// வித்தியாசமாய் விமரிசனம் எதிர்பார்த்துத்தான் வந்தேன், ஆகவே எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை! :)))))))))//

இந்த வாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
நன்றியை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.

February 9, 2008 4:39 PM
RATHNESH said...
ராகவன்,

// கதையின் நிறைவுப் பகுதியில் நான் இட்ட பின்னூட்டம் இது. நீங்க அத விரிச்சிச் சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அதான் குமரன் அதிர்ச்சியாயிட்டாரு.//

ராகவன், ஊருக்குப் போகும் முன் முதல் ஐந்து அத்தியாயங்கள் வரைதான் பின்னூட்டங்களுடன் படித்திருந்தேன். வந்த பிறகு நேரடியாக கதையினை முழுதும் உள்வாங்கவேண்டும் என்கிற முடிவில் அவருடைய பதிவு முகவரியில் சென்று கதையை மட்டுமே முதல் அத்தியாயத்திலிருந்து இறுதிவரை படித்தேன். என்னுடைய விமர்சனத்தை எழுதிய பிறகுதான் மற்றவர்களின் விமர்சனங்களைத் தொகுத்து அவர் போட்டிருந்த பதிவுகளையும் படித்தேன். கூறியது கூறல் வந்து விட வேண்டாம் என்று சிலவற்றை என்னுடையதில் நீக்கி விட்டு பதிவிட்டேன்.

தாங்கள் இதே கோணத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று அறிய சந்தோஷமாக இருக்கிறது. எந்த சந்தோஷம் என்றால் முதன்முதலில் KRS அவர்களின் ஒரு பதிவில், நான் சுமத்ரை பற்றி எழுதியிருந்த பின்னூட்டத்திற்கு நீங்கள் ஊய் என்று விசில் அடித்துத் தெரிவித்த வாழ்த்து தந்த சந்தோஷம். ஒத்த சிந்தனையாளர்களை எதிர்கொள்கையில் வருகின்ற சந்தோஷம்.

குமரன் அதிர்ச்சி அடைவதில் அர்த்தம் இருக்கிறது. (இந்தவரி குமரனைச் சீண்டுவதற்கு மட்டுமே).

February 9, 2008 4:49 PM
கீதா சாம்பசிவம் said...
//இந்த வாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
நன்றியை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.//

:)))))))))))))


//இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.//
இதுக்கு பதில் சொல்லலையே? :))))))))

February 9, 2008 6:46 PM
RATHNESH said...
மேடம்,

// //இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.//
இதுக்கு பதில் சொல்லலையே? :)))))))) //

கட்டாயம் ஏற்படும் என்று சொல்லி விட்டீர்கள். ஏற்படாமலா போய் விடும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு குறிப்பிட்ட தப்புக்கு டீச்சர் கூப்பிட்டுக் கொட்டினால் வலியைத் தாண்டி ஒரு வித அற்ப சந்தோஷம் எப்போது ஏற்படும் தெரியுமா மேடம்? அதே தப்பைச் செய்து விட்டு இன்னொரு சகா கொட்டுக்குக் காத்திருக்கும் போது. எனக்கும் இப்போது அதே மாதிரியான சந்தோஷம் தான்; இந்த வார்த்தைகள் இந்தப் பதிவுக்கு முதலில் பின்னூட்டம் எழுதிய துளசி மேடத்துக்கும் சேர்த்துத் தானே?

(// அப்புறம் திரௌபதி இருக்கும் ஒரே ஒரு பாத்திரத்தைக்கூடச் சரியா தேய்ச்சு வைக்கலைன்னு சொல்லி பாட்டியிடம் மொத்து வாங்கி இருக்கேன் நான்//)

4 comments:

  1. விவாதம் நல்லாத்தான் இருக்கு. கதைதான் என்னனு தெரியலை.
    படித்துவிட்டு வருகிறேன்.
    கீதா , ரொம்பப் பொறுமையும் நிதானமும் வாக்சாதுர்யமும் விளங்கப் பெற்றூள்ளீர்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. mmmmmm??????? தெரியலை வல்லி, ஆனால் கொஞ்சம் இன்னும் விளக்கமாய்க் கொடுக்க எண்ணிய பதிலைக் கொடுக்க முடியலை.கொஞ்சம் ஹோம்வொர்க் செய்திருக்கணும், ஆனல் பல காரணங்களால் முடியலை. :( தாமதம் ஆகிறதுனு முடிந்த வரையில் இன்னிக்கு எழுதிக் கொடுத்திருக்கேன், அதையும் பாருங்கள். என்றாலும் என் வரையில் நான் அளித்திருக்கும் பதிலில் மனத் திருப்தி இல்லை. அல்லது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. :((((((((((

    ReplyDelete
  3. //ஒத்துக்கவேண்டிய ஒரு விஷயம், ஏனெனில், இருக்கிறது என்று சொல்பவர்களை விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் நாத்திகவாதிகளே! உண்மையை அறிய அவர்கள் பாடுபடுவது போல் ஆத்திகவாதி பாடுபடுவது இல்லைதான்//

    நான் ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆத்திகம் தொடர்பான கேள்விகளுக்கு ஒரு ஆத்திகருக்கு எளிதாக பதில் அளித்து விடமுடியும். ஆனால் நாத்திகர்களின் பல கேள்விகள் பதிலை எதிர்நோக்கிக் கேட்கப் படுவன அல்ல. அவை கேள்விகளுக்காகவே கேட்கப்படுவன. இதையும் மீறி வெல்லும் பதில்களை சொல்ல முயற்சிக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஓகை சரியாக சொல்கிறார். நான் நாத்திகர்களுடன் விவாதிப்பது இல்லை. தேவையானால் அவர்களிடம் "நான் ஏன் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கனும்? நீ இல்லை என்று நிரூபி" என்று சொல்லிவிடுவேன்.

    ReplyDelete