
கலியுகமா, கலியுகமா என்று சந்தேகம் பட்டுக் கொண்டிருக்கோம் இல்லையா?? அந்தச் சந்தேகமே வேண்டாம். இது கலி யுகமே தான். அடித்துச் சொல்கின்றார் கிருஷ்ணன் பாகவதத்தில். கொஞ்சம் சாம்பிள் பார்ப்போமா???
கலியுகத்தில் மக்கள் பொய் அதிகம் சொல்லுவார்கள். வஞ்சனை, தூக்கம், சோம்பல், இம்சித்தல், மனவருத்தம், பயம், அறியாமை, அழுகை, கலக்கம் போன்றவை அதிகமாய் இருக்கும். அளவில்லாமல் சாப்பிடுவாங்களாமே?? அதான் ஃபாஸ்ட் ஃபுட் வந்துடுச்சேங்கறீங்களா?? அதுவே அளவுக்கு மேலே போனால் விஷம் தானே??? சத்தத்தை ரசிப்பார்களாம். அவரவர் ஆசைப் படிக்கு எதையும் அடைய நினைப்பார்கள். ஆனால் அதற்கேற்ற பணம் இருக்காது. வேதங்களுக்கும், மற்ற புராணங்களுக்கும் அவரவர் மனம் போன போக்கில் அர்த்தங்களைச் சொல்லுவார்கள். துறவிகள் பணத்தாசை பிடித்து அலைவார்கள். துறவிகளில் போலிகள் அதிகமாய்க் காணப்படுவதால் உரிய மரியாதையும் கிடைக்காமல் இருக்கும். தர்மம் செய்வது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பிக்கும். தாய், தந்தையர், உறவினருக்கு உரிய மரியாதை கிடைக்காது. உடன்பிறந்தோரிடையே ஒற்றுமை குறையும். மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களே மதிக்கப் படுவார்கள். பெற்றோர், உடன்பிறந்தோரைக் கலந்து ஆலோசிக்காமல் மனைவி வழி உறவினர்கள் ஆன மாமனார், மாமியார், மைத்துனன், மைத்துனி ஆகியோரைக் கலந்து ஆலோசிப்பார்கள். உதவிகளும், கட்டுப்படுதலும் அவர்களுக்கு மட்டுமே இருக்கும்.
நிலையாக எதிலும் மனம் நிலைத்து நிற்காமல் அலைபாய்வதோடு, உறவினர்கள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுத்து, சொத்து, சுகம், பணம் போன்றவற்றுக்காக ஒருவரை ஒருவர் கொன்றும் கொள்வார்கள். பெற்றோரைப் பிள்ளைகள் அலட்சியம் செய்வதோடு அல்லாமல், வயது முதிர்ந்த காலத்தில் கவனிப்பும் கிடைக்காது பெற்றோருக்குப் பிள்ளைகளிடம் இருந்து. அதிகப் பணக்காரனே மதிக்கப் படுவான். பணம் இருந்தால் எதையும் வாங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். முறையான திருமணங்கள் குறைந்து போய் முறையற்ற திருமணங்கள் அதிகரிக்கும். கோயில்கள் கவனிப்பாரின்றிக் காணப்படும். வெளிப் பகட்டுக்காக மட்டுமே கோயில்களுக்குச் செல்வது போன்ற பழக்கங்கள் இருக்கும். அதுவும் தொலை தூரத்தில் உள்ள கோயில்களை நாடிச் செல்லுவார்கள். ஆட்சி புரிபவர்களும் நல்லவர்கள் போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுவார்கள். இரக்கம் இல்லாமல் திருட்டுக் குணத்துடனும், பேராசையுடனும் காணப்படுவார்கள்.
என்றாலும் நாம சங்கீர்த்தனம் இருந்தாலே அதுவே காப்பாற்றும் என்றும் கண்ணன் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே அனைத்துப் பாவங்களும் விலகி விடும் என்றும் சொல்கின்றான் கண்ணன். கண்ணனையே நினைந்து, கண்ணனையே பாடி, கண்ணன் புகழே கேட்டு, கண்ணனையே அர்ச்சித்து, கண்ணனையே வழிபட்டு, கண்ணனுக்கே அடிமையாகி, கண்ணனுக்கே தோழனாகி, கண்ணனுக்கே எஜமானும் ஆகி கண்ணனுக்கே அனைத்தும் சமர்ப்பணம் செய்வதே அனைத்திலும் சிறந்ததாகவும் சொல்லப் படுகின்றது.
டிஸ்கி: டாகுமெண்டில் சேகரிச்சு வச்சிருப்பதைப் பார்வையிடும்போது வேறே ஒரு பதிவுக்காக எழுதி வச்ச இது கிடைச்சது. பதிவு போட்டு நாளாயிடுச்சுனு ஜி3 பண்ணிட்டேன். சும்மா இருக்க முடியலை! என்றாலும் இது எல்லாமே இன்றைக்கு நடக்குது என்பது உண்மை. இன்னும் இருந்தது. நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதறேனேனு ஒரு புகார் இருக்கே, அதான் பாதியிலேயே நிறுத்திட்டேன்!!!!!!
அதிசயம் ஆனால் உண்மை, could not connected to blogger, saving and publishing may fail அப்படினு மெசேஜ் வரச்சே பப்ளிஷ் பண்ணினால் எந்தத் தகராறும் இல்லாமல் உடனேயே பப்ளிஷ் ஆயிடுது. இது தெரியாமல் இத்தனை நாள்!!!! :P:P:P:P
ReplyDelete\\அந்தச் சந்தேகமே வேண்டாம். இது கலி யுகமே தான்.\\
ReplyDeleteஎப்படியோ சந்தேகம் தீர்ந்துடுச்சி ;)
could not connected to blogger, saving and publishing may fail அப்படினு மெசேஜ் வரச்சே பப்ளிஷ் பண்ணினால் எந்தத் தகராறும் இல்லாமல் உடனேயே பப்ளிஷ் ஆயிடுது. இது தெரியாமல் இத்தனை நாள்!!!!//
ReplyDeleteஅதான் கலியுகம் என்கிறது!
//கலியுகமா, கலியுகமா என்று சந்தேகம் பட்டுக் கொண்டிருக்கோம் இல்லையா??//
ReplyDeleteஆமா, யாருக்கு அந்த சந்தேகம் வந்ததாம்?
@கோபி, அதானே!! நேத்திக்கு வந்த மெயில் செஞ்ச வேலை தான் இந்த போஸ்ட்! :P
ReplyDelete@திவா, அது தெரிஞ்சு தானே எழுதி இருக்கேன்! :))))
ReplyDelete@கவிநயா, யாருக்கு வரலை? எனக்கு வந்துச்சே, நேத்திலேருந்து, அதான் எழுதினேன், அப்புறமா பப்ளிஷ் ஆனதும் சந்தேகமே இல்லை! :))))))))
இது கலியுகம் தான், கழிய(முடிய)ப் போகிற யுகம் கூட.
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான்.
பொய் உண்மையாகவும், உண்மை பொய்யாகவும் தெரியும். போர் செய்வதை விட சாட்சியாக இருந்து பார்பதையே கிருஷ்ணனும் விரும்புவான். உண்மைகள் தன்னை நிருபனம் செய்ய மிகவும் கடினத்தை எதிர்நோக்கும், பல சமயம் தோற்றும் போகும். ஆனால் இவையெல்லாம் நீடிக்காது.
கீதா அம்மா ! தீபாவளி வாழ்த்துக்கள் !
ஹரே ராம ஹரே ராம
ReplyDeleteராமா ராமா ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே!!
கலியுகத்தையும் படைச்சான்,கலி தீர மந்திரங்களும் சொல்லியிருக்கான்.
திபாவளி நல் வாழ்த்துக்கள்!!
ரொம்பவே ரசித்துப் படித்தேன் கீதாம்மா. போன வாரம் சனி-ஞாயிறு நாமசங்கீர்த்தனத்துக்குச் செல்லும் வாய்ப்பினை அருளினார் தம்பி கணேசன். ரொம்ப வருடங்கள் கழித்து மிக நீண்ட தீபப்பிரதக்ஷணமும், ராதா கல்யாணமும் பார்க்க/கேட்க வாய்ப்புக் கிடத்தது.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கை முழுவதுமாக சரியான பின் ஒக்காரை செய்து சாப்பிடுங்கள், அப்படியே ஒரு பார்சலும் அனுப்பவும் :)
@கோவி, வாங்க, வாங்க, தாமதமான தீபாவளி வாழ்த்துகள், பார்க்கிறீங்களா இல்லையா தெரியலை, இருந்தாலும் சொல்லிக்கறேன்,
ReplyDeleteவாங்க நடேசன் சார், ரொம்ப நாளாச்சு பார்த்து, வருகைக்கு நன்றி.
@மெளலி, உக்காரை நீங்க சென்னை வரச்சே பண்ணி எடுத்துண்டு வந்து எனக்கும் கொடுங்க! யார் கிளறுவாங்க??? :P:P:P:P