

மூன்றாம் நாளான இன்று கோலம் பூக்களாகப் போடவேண்டும். மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.
துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்
செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

ஸ்ரீ லலிதையின் படம் மேலே. திரு விக்னேஷ் அவர்களின் வேண்டுகோளை ஒட்டி மூன்றாம் நாளுக்கான விபரங்கள் இன்றே அளிக்கப் படுகிறது.
லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!
முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.
ஒரு நாள் முன்னலேயெ வரது எனக்கும் வசதி .எங்களுக்கு சூர்யன் 6 1/2 மணி நேரம் முன்னாடி ஆச்சே! முதலில் தெரிஞ்சா ஆயத்தபடுத்திக்கலம் இல்லையா? நார்த்ல யும் இத மாதிரி ஷைலபுத்ரி -1,ப்ரஹ்மசாரிணி -2, சந்த்ரகாந்தி -3,குஷ்மாண்டா -4, ஸ்கந்தமதா -5, காத்யாயனி -6, காலரத்ரை - 7 , மஹாகௌரி -8, சித்தாத்ரி -9 ந்னு 9 நாள் 9 துர்கா உண்டானதா சொல்வார்கள்.
ReplyDeleteஎங்க ஊர்ல சாரதா மணி தேவியார் சங்கம் நு ஒரு சங்கம் இருந்தது. அதை ஆர்ம்பித்த அம்மா வும் அதன் செயலாளரும் நவராத்ரி ஒவொரு நாளும் இந்த நவரத்தின மாலை பாடுவா. சிம்ப்ள் வாய்ஸ். மனசுல பக்தி. கேக்க அருமையா இருக்கும். எழுதியிருக்கும் வரிசையை படிச்சு பாடும் போது அவா ரெண்டுபெரும் நியாபகத்துக்கு வந்தா. the secretary lady is the mother of a popular jounalist cum blogger amidst you guys:)).)
கொலு வைக்கும் போது உடல் நலத்தை
ReplyDeleteகொடு தாயே என்று தான் வேண்டுவேன்.
//உடல் நலம் பாதிக்கப் பட்டோர் வணங்கக் கூடிய தெய்வம் இவள்//
மகாகௌரி நல்ல உடல் பலத்தை
கொடுக்கட்டும்.
கீதா எத்தனை நவம்கள்.
ReplyDeleteநவமான விஷயங்கள்.
நவதுர்காம், மஹாகாளீம் என்பதை இப்போது உண்மையாகவே படிக்கிறேன்.
நன்றிமா.
முதல் நாளே போடுவது உதவியாய் இருக்கிறது அம்மா. மகாகௌரி அனைவருக்கும் ஆரோக்கியத்தை அருளட்டும்.
ReplyDeleteஜய ஓம் லலிதாம்பிகையே!
ReplyDeleteஜய ஜய!
அனைவருக்கும் நன்றி. விடாமல் வந்து பின்னூட்டம் கொடுக்கும் ஜெயஸ்ரீ, கோமதி அரசு இருவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
ReplyDelete