கவிநயா இந்த விருதை எனக்குக் கொடுத்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. இதோடு கொடுத்த மத்தவங்க எல்லாம் போஸ்ட் போட்டிருப்பாங்கனு நம்பறேன். நான் இதோட மூலத்தைக் கண்டு பிடிச்சுச் சின்னதா ஒரு பதிவு, சின்னதாத் தான் நம்புங்க, எழுதணும்னு இருந்தேன். அதுக்கு உட்கார்ந்து தேடமுடியலை. அதனால் கவிநயாவையே கேட்டேன். அவங்களுக்கும் தெரியலை. போகட்டும். விட்டுடலாம்னு விட்டுட்டேன்.
என்னமோ சொல்வாங்க, "தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்கிறியா?" அப்படினு. அது போல கவிநயா விருது கொடுத்ததைப் பேசாம வாங்கி வச்சுக்காம ஆராய்ச்சி செய்யப் போனால் என்னை விட அர்த்தமும், சுவாரசியமும் உள்ள பதிவுகள் கிடைச்சிருக்கும் தான். அதுக்கு யாருக்கும் கொடுத்துவைக்கலை. இப்போ இதை யாருக்குக் கொடுக்கிறது என்பது தலையாய கேள்வி. எல்லாருமே நல்லாத் தான் எழுதறாங்க. நிறையப் பேருக்குக் கொடுக்கவும் கொடுத்தாச்சு. சிலருக்கு இது இரண்டாம், மூன்றாம் முறையாகிடும். சிலரால் தொடரமுடியாமல் வேலைகள் இருக்கும். ஆகையால் அதனால் இதைத் தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள், சிநேகிதிகள் அனைவரும் சமமாய்ப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். யார் வேண்டுமானாலும் இந்த ஆட்டையை ஆடலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமும், அர்த்தமும் நிறைந்த பதிவுகளே. மனித மனத்தில் தோன்றும் எண்ண அலைகளின் வித்தியாசமான ஓட்டங்கள். ஆகவே அனைத்து நண்பர்களுக்கும் இதைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன். கண்ணன் பதிவுகள் கொஞ்சம் தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும். தவிர்க்கமுடியாத தாமதம். நன்றி.
வாழ்த்துக்கள் தலைவி...;))
ReplyDeleteநன்றி, கோபி, அது ஆச்சு ஒரு மாசத்துக்கு மேலே, நமக்குச் சொல்ல இன்னிக்குத் தான் நேரம் வந்தது! :))))))
ReplyDeleteபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
//கவிநயா விருது கொடுத்ததைப் பேசாம வாங்கி வச்சுக்காம ஆராய்ச்சி செய்யப் போனால் என்னை விட அர்த்தமும், சுவாரசியமும் உள்ள பதிவுகள் கிடைச்சிருக்கும் தான். அதுக்கு யாருக்கும் கொடுத்துவைக்கலை.//
ReplyDeleteஏன் அம்மா,, ஆராய்ய்ச்சிக்கு நேரம் கிடைக்கலயா? :)
பதிவிற்கு நன்றி அம்மா.
எனக்கும் விருதளித்தார் கவிக்கோ கவிநயாக்கா. நானும் யாருக்கு மீண்டும் தருவதுன்னு தெரியாததால போஸ்ட் போடல்லை. ஆகவே அக்காவுக்கு இங்கும் ஒரு நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். வாய்ப்பளித்த உங்களூக்கும் நன்றிகள்.
ReplyDeleteவாங்க உலவு. நல்லாத் தானே உலாத்தறீங்க? நன்றிப்பா. அடிக்கடி உலா வருவதற்கு! :D
ReplyDeleteவாங்க கவிநயா, ஒருவழியா உங்களை என்னோட பதிவுக்கு வர வச்சுட்டேன்! ஆமாம், ஆராய்ச்சிக்கு உட்கார முடியலை. நேரம் எடுக்குமே! அதனால் விட்டுட்டேன்! :))))))))
ReplyDeleteவாங்க மெளலி, உங்களுக்குக் கொடுக்கலைனாத் தான் ஆச்சரியமா இருந்திருக்கும். வாழ்த்துகள், சீக்கிரமா நீங்களும் அங்கீகாரம் கொடுத்துடுங்கப்பா! :D
ReplyDelete