கூஷ்மாண்டா: வெள்ளிக்கிழமையின் தேவி இவள். கூஷ்மம் என்றால் முட்டை, அண்டம் என்றால் பிரபஞ்சம். பிரபஞ்சத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்தத் தேவியிடம் இருந்தே. பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்று சொல்லுவார்கள். திருஷ்டியைப் போக்கப் பூஷணிக்காயில் சிவப்புக் குங்குமத்தைத் தடவி நடுரோட்டில் போட்டு எல்லார் காலையும் உடைக்கிறோம். தேவி அப்படிச் செய்யச் சொல்லவில்லை. பூஷணிக்காயே உடைக்கவேண்டாம், அப்படியே உடைச்சாலும் திருஷ்டிப் பூஷணிக்காயை உடைச்சு ஒரு ஓரமாகவே போடலாம். இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளைப் போக்கிக் கண் திருஷ்டியைப் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றாள். சுக்கிரதசை, சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். அசுர குருவான சுக்கிரன் அள்ளித் தருவார் இவளை வணங்கினால். நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவியான இவள் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து இனிமையான நல்வாழ்வை அளிப்பாள். இந்த நவராத்திரி அனைவர் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பரப்பட்டும் என அன்னையை வேண்டிக் கொள்கின்றேன். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் ஸப்த ஒலிக்கோலம். அல்லது ஸந்தியா தாண்டவம். இந்த ஸந்தியா தாண்டவத்தில் இருந்து தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.
ஏழாம் நாளான இன்று திட்டாணிக் கோலம் போடவேண்டும். இன்றைய அலங்காரமாக தங்க சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சாம்பவியாக அலங்கரிக்கலாம். தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பாள் இவள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகவும், இடையில் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியது எனவும் சொல்லுவார்கள். ஆகவே இன்றிலிருந்து வெண்ணிற மலர்களாலேயே அர்ச்சித்தல் நன்று. வெண்தாமரைப் பூ, முல்லை, மல்லிகை போன்ற மலர்கள் ஏற்றவை. எட்டு வயதுள்ள பெண் குழந்தையை சாம்பவியாக வழிபடவேண்டும். இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் இவளிடமிருந்தே தோன்றியவை. இவளாலேயே மழை பொழிந்து நீர்வளம், நிலவளம் ஏற்படுகிறது என்பதால் இன்று அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள் மிகச் சிலர்.
இன்றைய நிவேதனம் வெண்பொங்கல். நன்கு குழைய வேகவைத்த வெண்பொங்கலைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்றைய சுண்டல் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்.
இனி துர்காஷ்டகம்.
ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தின் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீ மேலிடினும் ஜயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய் ஓம் லலிதாம்பிகையே!
" தீ மேல் இடினும் ஜெயசக்தி என திடமாய் அடியேன் மொழியும் திறனும்"அந்த நம்பிக்கை வர ஆசிர்வாதம் தெய்வம் எல்லாருக்கும் தரணும்.The Penitent Man will pass
ReplyDeleteஎல்லா மதங்களும் சொல்லற சந்தேகம் என்பது கொஞ்சமும் இல்லாத நம்பிக்கை. அதுக்கு ஆண்டவன் அருள் வேண்டும்
இன்னிக்கு ஒரு மஹானோட டிஸ்கோர்ஸ் படிச்சேன்.குஷ்மாண்டா தேவி , அஷ்ட புஜ துர்கையோட இடம் அனாஹத ச்க்ரமாம். ஹெல்த், ஸ்ட்ரெங்க்த் தரும் தேவி. எனக்கு மிஸெஸ் கோமதி அரசு அவங்க எழுதி இருந்தது ந்யாபகத்துக்கு வந்தது.
ReplyDelete//இந்த நவராத்திரி அனைவர் உள்ளத்திலும்,இல்லத்திலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பரப்பட்டும்//
ReplyDeleteஅன்னை உங்கள் மூலம் மகிழ்ச்சியையும்,ஒளியையும் பரப்பிவிட்டார்.
நன்றி கீதா.
நீர் வளம், நிலவளம் பெருகட்டும்.
வாழ்க வளமுடன்.
நன்றி இருவருக்கும்.
ReplyDelete