எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

ருக்மிணியின் காதல்!


மதுராபுரி இப்போது ஒரு நம்பிக்கை உள்ள நண்பர்களே இல்லாத இடமாக மாறிவிட்டதே? அதிலும் இந்த தநுர்யாகத்தின் போது அனைத்து நாட்டு இளவரசர்களுமாகச் சேர்ந்து ஜராசந்தனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள இருந்தோம். அதையும் இந்தக் கண்ணன் வந்து கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிவிட்டானே? ஹா, ஹா, யாதவர்கள் மாட்டிக் கொண்டனர் எப்படியோ! ஜராசந்தன் அவர்களை ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை. அதிருக்கட்டும், இனி யார் தலைவர்?? கிழவனான உக்ரசேனனால் இந்த ராஜ்யத்தைக் கட்டிக் காக்க முடியுமா? அவ்வளவு பலம் உள்ளவனாய்த் தெரியவில்லையே?? வேறு தலைவன் என்றால் அது யார்?? இந்தக் கிருஷ்ணனையோ அல்லது வசுதேவனையோ தலைவனாய்த் தேர்ந்தெடுப்பார்களோ?? தெரியவில்லை! கிருஷ்ணன் என்ன சொல்லி இருப்பானோ?? சே, அங்கே போய்விட்டு வந்திருக்கலாம் என்றால் யாதவத் தலைவர்கள் மட்டுமே அந்த மந்திராலோசனையில் கலந்து கொள்ளலாமாம். நாமோ விருந்தினர், அதுவும் கம்சன் அழைப்பில் வந்திருக்கும் விருந்தினர். அங்கே போகமுடியவில்லையே! மனம் நிறையக் குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும், வருத்தம் நீங்காமலும் விருந்தினர் மாளிகையில் தங்கள் குடும்பத்தினர் தங்கும் பகுதிக்கு வந்தான் ருக்மி. இங்கே வந்தால்????? அடக் கடவுளே! இது என்ன??? இப்படிக் கோபத்தில் கொந்தளிக்கும் இரு பெண்களையும் எப்படிச் சமாதானம் செய்யப் போகிறேன்?? என்ன நடந்ததோ??? ஒண்ணுமே புரியலையே???

முதலில் சுவ்ரதாவே ஆரம்பித்துவிட்டாள்:”பிரபு, நாதா, தங்கள் அருமைத் தங்கையை என்னால் சமாளிக்கமுடியவில்லை. தாங்கள் தான் அதற்குச் சரியான நபர்.”

“என்ன??? என்னால் தான் உங்கள் இருவரின் அட்டூழியத்தையும் தாங்கமுடியவில்லல,” ருக்மிணி கத்தினாள் கோபத்துடன். ருக்மிக்கு வந்த கோபத்திற்கு என்ன செய்யலாம் என்றே புரியவில்லை.

“என்ன நடந்தது??” கோபத்துடன் கேட்டான். மேலும், “சேச்சே, இந்தப் பெண்களே இப்படித் தான். தாங்களும் நிம்மதியாய் இருக்கமாட்டார்கள். மற்றவர்களையும் இருக்கவிடமாட்டார்கள். சண்டைபோட்டுக்கொள்ளாமல் இரு பெண்களால் வாழவே முடியாதா? ஏற்கெனவே தலை கொள்ளாப் பிரச்னைகளால் வெந்து தவிக்கிறேன் நான், ருக்மிணி, என்ன நடந்தது? நீயாவது சொல்!”

“எல்லாம் தான் நடந்தது. உன் மனைவியையே கேட்டுக் கொள். அவளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை.”

சுவ்ரதா குறுக்கிட்டாள்.”பிரபு, அவளுக்கு நம்மிருவரையும் கண்டாலே பிடிக்கவில்லை. நேற்றிலிருந்து பார்க்கிறேன். அந்த மல்யுத்தம் நடக்க ஆரம்பித்ததுமே ஒரு சாதாரணக் குடும்பத்துப் பெண்ணைப்போல் தன் அந்தஸ்தையும் தன் குடும்ப நிலையையும் மறந்துவிட்டு இவள் குதிப்பதும், கைதட்டுவதும், ஆடுவதும், பாடுவதுமாக! சேச்சே, விதர்ப்ப நாட்டு அரசகுமாரி இப்படியா நடந்து கொள்ளுவது?”

ஹா, ஹாஹா, அண்ணி?? நான் ஏன் குதிக்கக் கூடாது? உன் கால்களின் உதவியாலா குதிக்கிறேன்? என் கால்களின் உதவியோடுதானே குதிக்கிறேன்? அப்படித் தான் குதிப்பேன்.” குதிக்க ஆரம்பித்தாள் ருக்மிணி.

“எனக்குத் தெரியும், நீ ஏன் அப்படி எல்லாம் செய்தாய் என. அந்தப் பொல்லாத போக்கிரிப்பையன் உன்னைக்கவனிக்கவேண்டும் என்றுதான், இல்லையா?? என் நாதா, உங்களை எவ்வளவு மோசமாய் நடத்தினான் அந்தப்போக்கிரிப் பையன்??? நினவில் இருக்கிறதல்லவா?”

“அவன் ஒண்ணும் மோசமாய் நடக்கவில்லையே? அண்ணனைப் பிடித்துக் கொண்டுவந்து ரதத்தில் ஏற்றிவிட்டான். அவ்வளவுதான்! யமுனையிலா தூக்கி எறிந்தான்?”

“கம்சனை அவன் கொன்றபோது நீ நாட்டியமாடிக்கொண்டிருந்தாய்!” குற்றம் சாட்டினாள் சுவ்ரதா.

“அண்ணி, அண்ணி, எத்தனை சாதுர்யமாக, எவ்வளவு சாமர்த்தியமாகக்கண்ணன் அந்தக் கம்சனைக் கொன்றான் இல்லையா? ஒரே போடு! விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! கம்சன் தலை இரண்டு துண்டு!” மீண்டும் சிரித்தாள் ருக்மிணி.

ருக்மிக்குக் கோபம் அடங்காமல் வந்தது. “பெண்களே, வாயை மூடுகிறீர்களா இல்லையா? என்ன நடந்தது என்பதை இருவருமே சொல்லவில்லை இன்னமும்!”

“அப்புறமாய் இவள் மறைந்து போனாள்…….” சுவ்ரதா ஆரம்பிக்கும்போதே ருக்மிணி குறுக்கிட்டாள். “நான் மறைந்து எல்லாம் போகவில்லையே? நான் திரிவக்கரையோடு போனேன்.” என்றாள். “ஆமாம், அந்தக் கொலைகாரனைப் பார்க்கப் போனாய்!” ஏளனம் குறையாமல் சுவ்ரதா சொன்னாள்.

ருக்மிணி பாய்ந்து கொண்டு வந்தாள். “யார், யார்?? யார் கொலைகாரன்?? அவன் ஒண்ணும் கொலைகாரன் இல்லை. மேலும் நான் தேவகி அம்மாவைப் பார்க்கச் சென்றேன். மதுராபுரியில் அனைவரும் அந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கின்றனர், தெரியுமா உங்களுக்கு?? “”

“”இல்லை, இல்லை, இல்லவே இல்லை, நீ அந்தக் கிருஷ்ணனுக்கு அருகே செல்ல முயன்றிருக்கிறாய், அதற்குத் தான் போனாய்!” சுவ்ரதா சொன்னாள் அழுத்தம் திருத்தமாய்,

“இல்லை, நான் தேவகி அம்மாவுடன் தான் இருந்தேன். அப்போது….. அப்போது, அவனும், அங்கே இருக்க நேர்ந்தது.”

“என்றால் நீ வசுதேவரின் மாளிகைக்கா போனாய்?” சுவ்ரதா நிச்சயப் படுத்திக்கொள்ளக் கேட்டாள் மீண்டும்.

“இரண்டுபேரும் பேச்சை நிறுத்த மாட்டீர்களா?” ருக்மி கத்தினான் மீண்டும்.

“அண்ணா, என் அருமை அண்ணா, முதலில் உன் மனைவியை வாயை மூடச் சொல். அவள் வாயை மூடாட்டி நானும் மூட மாட்டேன்.” ருக்மிணி வெடுக்கென்று சொன்னாள்.

“எப்போவும் என்னைத் தான் குறை சொல்லுவீர்கள்” மனம் உடைந்தாற்போல் அழ ஆரம்பித்தாள் சுவ்ரதா. “அண்ணனும், தங்கையும் பேசி வைத்துக் கொண்டீர்களா?? எப்போவும் என்னைக் குறை சொல்ல?? நான் தான் எல்லாருக்கும் பொல்லாதவளாகிறேன்.” கண்களிலிருந்து கண்ணீர் பெருக அதைத் துடைத்த வண்ணமே பேசினாள் சுவ்ரதா. “அண்ணனும், தங்கையும் ஒற்றுமையாய் இருக்கக்கூடாதுனு சட்டமா என்ன?” என்றாள் ருக்மிணி மெதுவான குரலில்.

“ஆஹா, ஆஹா, மறுபடி ஆரம்பிக்காதீங்க இரண்டு பேரும். யாராவது ஒருத்தர் என்ன நடந்ததுனு சொல்லுங்க. மேலும் வசுதேவன் வீட்டில் என்ன நடந்தது? அது மிக முக்கியம்! எனக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவே இல்லை!”

“உங்கள் அருமைத் தங்கை சொல்லுவாள். நான் அங்கே எல்லாம் போகமாட்டேன்.”

“ஆமாம், என்ன இப்போ? நான் அங்கேதான் போயிருந்தேன். தேவகி அம்மா கிருஷ்ணனை இத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்ததும், அவன் அம்மானு கூப்பிட்ட குரல் கேட்டதுமே மயங்கிட்டாங்க. அவங்களுக்குப் பெண்துணைனு யாருமே இல்லை. அவங்க பிள்ளைதான் வசுதேவரின் மாளிகைக்கு அவங்களைத் தூக்கிட்டுப் போனது. ஆனாலும் நானும் திருவக்கரையும் கூடப் போனோம் துணைக்கு.”

“அவள் போகும்போது என்கிட்டே சொல்லவே இல்லை!’ சுவ்ரதா குற்றம் சாட்டினாள்.

“முதலில் அவள் என்ன சொல்லுகிறாள் என்பதைக் கேட்கலாம் சுவ்ரதா, அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு மிகவும் முக்கியம்,” என்றான் ருக்மி பொறுமையிழந்து. சுவ்ரதா ஆகாயத்திலிருந்து உதவி கேட்பவள் போல் மேலே நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அண்ணனும், தங்கையும் எப்படியோ போங்க! நீங்க அடிச்சுப்பீங்க, சேர்ந்துப்பீங்க, என்ன இருந்தாலும் நான் அந்நியம் தானே?” என்றாள். ‘வாயை மூடு! ருக்மிணி மேலே சொல்!” அதட்டினான் ருக்மி.

“மேலே என்ன? மேலே ஒண்ணுமே இல்லை! நானும் திரிவக்கரையும் அங்கே தேவகி அம்மா எழுந்திருக்கும்வரை உட்கார்ந்திருந்தோம். அம்மாவும், பிள்ளையும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதாங்க. பிள்ளை அம்மாவை எப்படியெல்லாமோ சமாதானம் செய்தான். ஆஹா, அந்த வாசுதேவனால் தான் அவ்வளவு அருமையான வார்த்தைகளால் ஒருவரை துக்கத்திலிருந்து மீட்கமுடியும். குரலில் எவ்வளவு நயம்?? எவ்வளவு கருணை?? ஆஹா, மிருதுவான, அதே சமயம் இனிமையான குரல்!” கடைசி வரியைத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போல் மெதுவாய்ச் சொன்னாள் ருக்மிணி.

“மேலே?? வேறு யாரெல்லாம் வந்தனர்??”” ருக்மியால் பொறுக்கமுடியவில்லை. மண்டையே வெடித்துவிடும்போல் இருந்தது.

7 comments:

  1. யாருப்பா அங்கே, புது வருஷம் பிறந்ததிலே இருந்து தமிழ்மணம் பாடாய்ப் படுத்துதே?? பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்குது கொடுத்தால் அந்தப்பெயரிலே யாருமே இல்லைனு சொல்லுதே?? சரினு என்னோட பெயரையும் கொடுத்துப் பார்த்தேன், இந்தப் பெயரிலே யாருமே எழுதறதில்லைங்குது, ஆனால் தானாய் தமிழ்மணத்திலே சேருதா??? எங்கேப்பா தொழில்நுட்ப நிபுணர்கள்?? சீக்கிரமாய் வாங்க, வந்து சந்தேகத்தைத் தீர்த்து வைங்க!

    ReplyDelete
  2. தமிழ்மணம் ஐடி கேக்கறதுமா.
    இந்த வோட்டிங் எல்லாம் நடக்கிறது இல்லையா
    அதனால் தான்.எனக்கும் இந்தத் தொந்தரவு வந்தது. அப்புறம் பேரும் ,
    கடவுச் சொல்லும் கொடுத்தாட்டு உள்ள விட்டது. இப்பொ தமிழ்மணம் திறக்கும் போதே ,வணக்கம் ரேவதி என்கிறது:)

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. ருக்மணியின் காதலும் ஆரம்பம் ஆகிவிட்டது. நன்றி. நான் பெண்கள் செல்ல முடியாத வெள்ளியங்கிரி மலை உச்சியில், ஒரு குகையில் உள்ள ஈசனை சூரிய பகவான் காலையில் அவர் மீது பட்டு, வழிபடும் அரிய காட்சியினைப் புகைப் படமாக வெளியிட்டு உள்ளேன். வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணத் தொடரின் நிறைவுப் பகுதியினைப் பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  4. அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்தான் சண்டையா?

    //ஆஹா, அந்த வாசுதேவனால் தான் அவ்வளவு அருமையான வார்த்தைகளால் ஒருவரை துக்கத்திலிருந்து மீட்கமுடியும்.//

    ஆமாமாம்! :-))

    ReplyDelete
  5. நன்றி ரேவதி, என்னோட அடையாளங்களையும் கொடுத்துட்டேன், ஏதோ தப்பா வருதோனு நினைச்சேன், நம்ம கணினிதான் வம்பு பண்ணுமே? :))))))))))))))))

    ReplyDelete
  6. வாங்க பித்தனின் வாக்கு, அருமையான பயணம் போயிட்டுப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பின்னூட்டம் கொடுக்கமுடியாட்டியும் படிச்சிட்டு வந்தேன். நன்றி.

    ReplyDelete
  7. @திவா,
    //அடக்கடவுளே! அந்த காலத்திலேந்தே இப்படித்தான் சண்டையா?//

    ஹிஹிஹிஹி!!!

    //ஆமாமாம்! :-))//

    :P:P:P:P

    ReplyDelete