நேற்றும், முந்தாநாளும் ஆண்டாள் கல்யாணம். எங்கே?? தொலைக்காட்சியில்! தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் எல்லாமே வடிவேலுவையும், விவேக்கையும் காட்டி மகிழ்ந்துகொண்டிருக்க, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தொலைக்காட்சியில் அமர்க்களமாய் ஆண்டாளுக்குக் கல்யாணம் செய்து மகிழ்ந்தார்கள். தினமும் மாலை ஆறேகால் மணிக்கு நாத நீராஜனம் என்ற பெயரில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியோ, அல்லது நாட்டிய நாடகமோ போடுவார்கள். நாட்டிய நாடகம் எப்போவோதான் வரும். இம்முறை தநுர்மாச முடிவு என்பதால் ஆண்டாள் கல்யாணம் நாட்டிய நாடகம். தினமும் மாலையில் திருப்பாவையைச் சொல்லியும் கொடுத்திட்டு இருந்தாங்க. தெலுங்கு உச்சரிப்போடு கூடிய திருப்பாவையைக் கேட்கவும் இனிமையாகவே இருந்தது.
13-ம் தேதி போகியன்று மாலை மகதி ம்யூசிக் அகாடமியினரால் ஆண்டாள் கல்யாணம் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. அருமையான நாட்டியம். அதிலும் சின்ன ஆண்டாளாக வந்த குட்டிப் பொண்ணுக்கு மூணு வயசு இருக்குமா?? நாலு இருக்குமா தெரியலையே?? அள்ளிக்கொண்டு போச்சு மனசை! அது குதிச்ச குதியும், கண்ணன் விக்ரஹத்தைக் கொஞ்சின கொஞ்சலும், கொடுத்த முத்தங்களும், திரும்ப முத்தம் கொடுனு கேட்ட அழகும், பாதங்கள் தாளம் தப்பாமல் ஆடின அழகும், என் கண்ணே பட்டிருக்கும். முதல்லே தோணலை, படம் எடுக்கணும்னு, அப்புறம் நினைவு வந்து ஓடிப் போய் காமிராவை எடுத்துட்டு வந்தால் அதுக்குள்ளே குட்டிப் பொண்ணு பெரிய பொண்ணாயிடுச்சு. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஏன்னா இந்தத் தொலைக்காட்சியிலே மறு ஒளிபரப்பும் கிடையாது. அதனால் ஏமாற்றமாய் இருந்தது.
இந்த நிகழ்ச்சி கிருஷ்ணதேவராயரின் ஆமுக்த மால்யதா வை அடிப்படையாகக் கொண்டோ, அல்லது அதன் பாடல்களேவானும் நினைக்கிறேன். அருமையான பாடல்கள். நல்லாவே அர்த்தம் புரிஞ்சது. பெரியாழ்வாரைப் பாண்டிய மன்னன் சபையில் கூப்பிட்டுக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் ஆரம்பிச்சது. அப்புறம் துளசிச்செடியில் குழந்தை ஆண்டாளைக் கண்டெடுத்ததுனு நல்லாவே எடுத்திருந்தாங்க. குழந்தை ஆண்டாள் தான் கண்ணிலேயே நிக்கிறா. பெரிய ஆண்டாளாக நடிச்ச பொண்ணும் சோடையில்லை. எவருமே சோடையில்லைதான். ஆண்டாள் கனவு காணும் காட்சியில் அந்த்ப் பொண்ணு (பதினைந்து வயசிருக்கும்னு நினைக்கிறேன்.) என்ன அருமையாக பாவங்கள், அபிந்யங்கள் காட்டி நடிச்சது. அப்புறம் பாவை நோன்பு பத்தியும் சொல்லிப் பாவை நோன்பும் இருந்து, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைப் பெரியாழ்வார் தூக்கிப் போட்டது, வடபத்ரசாயி அதான் வேணும்னு அடம் பிடிச்சதுனு (கிருஷ்ணனா நடிச்ச பொண்ணு நல்லாவே நடிச்சது) அப்புறமா ஆண்டாளைக் கொண்டு வந்து ஸ்ரீரங்கத்திலே விடச் சொன்னது.
அதுக்கப்புறம் ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருமணம் நடந்ததுனு எல்லா நிகழ்வுகளும் அருமையாக் காட்டினாங்க. என்ன அழகா நாட்டியத்திலேயே பூத்தொடுத்தது?? அப்பா! ஆச்சரியமா இருந்தது. பெரியாழ்வாரா நடிச்ச பெரியவரும், (அவர்தான் இயக்குநரோ) நல்லாவே ஆடினார்.
நேத்திக்கு சத்யநாராயணாவின் நாட்டியநாடகம். இது கொஞ்சம் வேறே மாதிரியாய் இருந்தது. சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி எல்லாருமே வந்து ஆண்டாளின் கனவில் வந்தாப்போல் கல்யாணத்தை நடத்தி வைச்சாங்க. என்றாலும் போகியன்னிக்கு ரசிச்சாப்போல் நேத்திக்கு இல்லை. படமும் எடுக்கலை. எல்லாருமே பெரியவங்க வேறே. அதனாலோ என்னமோ????
படங்கள் எல்லாம் இணைச்சுட்டு, இணைப்புக் கொடுக்கிறேன். பாருங்க.
ஆண்டாள் கல்யாணம்
SVBC CHANNEL?
ReplyDeleteஇல்லை ரேவதி, TTD Tirumala Tirupathi Devasthanam Channel, one of the best! SVBC என்னனு தெரியலையே??? நான் அதிகம் பார்ப்பது பொதிகை காலையில், மாலையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடி ஒளிபரப்பில் நாத நீராஜனம் நிகழ்ச்சி. கச்சேரியாக இருந்தால் போட்டுட்டு ஏதானும் வேலை செய்துண்டே கேட்கலாம், இம்மாதிரி நிகழ்ச்சினால் உட்கார்ந்துடுவேன்! :)))))))))))))))) பொதிகையில் சிதம்பரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளும் தவறாமல் பார்ப்பேன்.
ReplyDeleteஆஆஆஆஆஹா.......
ReplyDeleteஜஸ்ட் மிஸ்டு(-:
TTD Channel என்றுமே அருமை தான். இந்த தடவை மார்கழியில் திருப்பதி விசிட் அருமையோ அருமை.சென்னைல மாலை RMKV , காலை பக்தி CHANNELS ல அப்பப்போ கேட்டது Well !! இருந்த நாளில்.திருப்பதில சாயந்திரம் கார்த்தாலை என்றில்லாமல் நீங்க சொன்னமாதிரி தெலுஙகு வாசனையோட திருப்பாவையும், தவிர அன்னமாச்சாரியாவும் எம். எஸ் அம்மாவும் சதா மனதை சந்தோஷமா ஆக்கறாங்க. Climate ம் கூல் தான், திருமலை அப்பனின் கல்யாணமே வைபோகமே!!வெண் பட்டு, நிலை மாலை, கொண்டை, பெத்த மாங்கல்யம்... ஒய்யாரிதான் !!செய்தவரின் புண்ணீயத்தில் நாங்கள் பிள்ளை வீட்டார்!!பெற்றோம் அவளை!! அட்டகாசம். சாமி வாசனை, தாயார் வாசனை, கோதை நாச்சியார் வாசனை.நம்ப ஊரு நம்ப கலாசாரம் தனி தான் இல்லையா.இப்ப திரும்ப வந்து சோகமா குளிரிண்டிருக்கேன்:(((
ReplyDeleteவாங்க துளசி, அதான் கண்ணனின் ராஜ்யத்திலே இருந்துட்டு வந்திருக்கீங்களே?? அப்புறம் என்ன??? நேரிலேயே நிறையப் பார்த்திருக்கலாமே??
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, நேரில் பார்க்கமுடியாத வருத்தம் இன்னமும் இருக்கு! :( பார்ப்போம், அப்புறம்?? அங்கே போய் மீண்டும் வாழ்க்கை பழையபடி ரெகுலருக்கு வந்திருக்கும். இப்போ திருமலா திருப்பதி சானலில் கல்யாண உற்சவம் தான் நேரடி ஒளிபரப்புப் பண்ணிட்டு இருக்காங்க. அதிலே ஒரு கண்ணும், இங்கே ஒரு கண்ணுமா இருக்கேன்! :)))))))))))
ReplyDeleteஸ்ரீ வெங்கடாசல் பக்தி சானல்னு நினைக்கிறேன் கீதா.
ReplyDeleteரெண்டு பேரும் ஒண்ணையே பேசறோமோ என்னவோ:)
ஹிஹிஹி, ரேவதி, அ.வ.சி. நேத்திக்குத் தான் மல்லாடியோட கச்சேரி கேக்கறச்சே கவனிச்சேன் svbc channel அப்படினும் போட்டிருந்ததை. நான் லோகோவிலே டிடிடினு போட்டதை மட்டும் கவனிச்சிருக்கேன், ரெண்டுபேரும் ஒரே விஷயத்தைத் தான் சொல்லி இருக்கோம். அ.வ.சி. நான் தான். சரியா கவனிக்கலை, கண்ணாடி போட்டாலே கண்ணு தெரியாது, கண்ணாடி போடாமல் பார்க்கிறேனில்ல அதான்! :P:P:P:P இது எனக்கு! :D இது உங்களுக்கு!
ReplyDelete