எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 24, 2010

ரயில் பயணமா??? வேண்டவே வேண்டாம்!

இம்முறை குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும்போதும் சரி, சென்று அங்கே இருந்த நாலு நாட்களிலும் சரி பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. கிளம்பற அன்னிக்கே கொஞ்சம் மனம் யோசனைதான் செய்தது. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை. என்னதான் தை மாசம் கிளம்பவேண்டும் என்ற திட்டம் முன் கூட்டியே போட்டாலும், மூணு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. திடீர்னு எடுத்துட்டுத் தான் போக முடியுது. முன்பெல்லாம் ஒரு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு தாராளமாக் கிடைச்சு வந்தது. இப்போ தத்காலில் கூட முன் பதிவே கிடைக்கிறதில்லை. அதுவும் கும்பகோணம் போக ரயில் வசதியும் இப்போ இல்லை. ராத்திரி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்ப்ரஸ் ஒண்ணுதான். அதுக்கு சென்னை கல்யாண மண்டபங்களைப் பதிவு செய்யறாப்போல் எல்லாரும் ஒரு வருஷம், இரண்டு வருஷம் முன்னாடியே பண்ணிடுவாங்க போல. நாங்க முன்பதிவுக்குப் பார்த்தப்போ இடமே இல்லை. திருச்சி போய் அங்கிருந்து போகலாம்னு முடிவு பண்ணினா பல்லவன் பல்லை இளிக்குது, மதுரை செல்லும் வைகையோ மாயமாய் மறைஞ்சு போச்சு! வேறே வண்டிகள் கிளம்பும் நேரம் செளகரியமாய் இல்லை. குருவாயூர் எக்ஸ்ப்ரஸில் சென்றமுறை போனப்போ குளிரூட்டப் பட்ட பெட்டியில் முன்பதிவு செய்யப் பட்ட பயணச்சீட்டு அமர்ந்து செல்லும் வசதியில் கிடைச்சது. இப்போ அந்த வசதியையே எடுத்துட்டாங்களாம். குளிரூட்டப் பட்ட பெட்டிகளில் எல்லாம் படுக்கை வசதிதான். அதிலே திருச்சி வரை அமர்ந்து செல்லும் வசதியில் கிடையாது. சரினு சேர் கார் என அழைக்கப் படும் பெட்டியில் கிடைச்ச வசதியில் சீட்டு எடுத்தாச்சு. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சில பிரச்னைகள். என்றாலும் மனசைத் தேத்திக்கொண்டு கிளம்பினோம்.

அங்கே போய் எங்க இடத்தைக் கண்டுபிடிச்சு உட்கார்ந்தும் ஆச்சு. அப்புறமாப் பார்த்தா கூட்டமோ கூட்டம் திபு,திபுனு. எங்கே இருந்து வந்தாங்க?? மூணு பேர் உட்காருமிடத்தில் நெருக்கி அடித்துக் கொண்டு, 4,5 பேரா?? இது என்ன முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியா? இல்லைனா எல்லாரும் ஏறும் பொதுப் பெட்டியானு திகைச்சுப் போயிட்டோம். அதிலே எல்லாரும் எங்க கிட்டே சண்டை வேறே. நாங்க இரண்டு பேரும் எங்களுக்கு அனுமதிக்கப் பட்ட இடத்திலே உட்கார்ந்துட்டு இருந்தும், அவங்களுக்கும் இடம் விடணும், விட்டுட்டு உட்காரணும், நீங்க என்ன ரயிலையே விலைக்கா வாங்கி இருக்கீங்க?? இந்த சீட் என்ன உங்களுக்குச் சொந்தமானதா?? யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உட்காரலாம். அப்படினு ஒரே சத்தம், சண்டை. கூச்சல். நாராசமா இருந்தது. திருச்சி வரைக்கும் இந்த இடத்தை 35ரூ கொடுத்து நாங்க விலைக்குத் தான் வாங்கி இருக்கோம்னு சொல்லலாம்னு வாயெடுத்தால், நம்ம ம.பா. என்னிடம் கடுமையான ஆக்ஷேபணை பண்ணிட்டு, சீட்டிலிருந்து எழுந்துட்டு, நாங்க நின்னுட்டு வரோம், நீங்க உட்காருங்கனு சொல்லி வெள்ளைக்கொடி ஏத்திட்டார். என்னத்தைச் சொல்றது? அப்போ பார்த்து டிக்கெட் பரிசோதகர் வந்தாரோ, அவங்க கப் சிப்னு அடங்கிப் போனாங்களோ! ஆனாலும் அதிலும் ஒரு அநியாயம், கொடுமை என்னவென்றால், எங்களைப் போல் முன்பதிவு செய்துட்டு அவங்க அவங்களுக்குனு ஒதுக்கப்பட்ட இடத்திலே அமர்ந்திருக்கிறவங்க பயணச் சீட்டை மாத்திரம் பரிசோதகர் வாங்கி அவரோட அட்டவணையோட சரிபார்த்துட்டுத் திருப்பிக் கொடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டு கொள்ளவும் இல்லை, அவங்க கிட்டே இருந்து பயணச் சீட்டை வாங்கிக் கூடப் பார்க்கவில்லை.

பயணச்சீட்டு இல்லாமலேயே பிரயாணம் செய்யலாம்போல. இப்போ புதுசா மக்களுக்கு இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பாங்கபோல! முன்பெல்லாம் ஐம்பது காசுகள் கொடுத்து முன்பதிவு செய்த இடத்திலே ஒரு நாய்க்குட்டி வந்தால் கூட அப்போதைய பரிசோதகர்கள் விரட்டி அடிப்பாங்க. இப்போ??? நாடு முன்னேறி இருக்கே? எவ்வளவு முன்னேற்றம்??? முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் யார்வேண்டுமானாலும் ஏறி ஏற்கெனவே வசதியாய்ப் பிரயாணம் செய்யனு பதிவு செய்துட்டுப் போறவங்களோட சண்டை போட்டுட்டுப் போகலாம்னு ரயில்வே அனுமதி கொடுத்திருப்பது கடந்து நாலு ஆண்டுகளில் கொடுத்திருக்கும் மாபெரும் வசதி. உண்மையில் இந்த வசதியைப் பிரயாணிகளுக்கு எந்த நாட்டிலும் கொடுக்கவே மாட்டாங்க! நாளை கழிச்சு மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப் போறோமே? இந்த ஒரு காரணத்துக்காகவே நம் ரயில்வே துறைக்குப் பாராட்டு விழா எடுக்கலாம், பட்டங்கள், விருதுகள் கொடுக்கலாமே! பரிசோதகர் திரும்பினாரோ இல்லையோ, ஆக்கிரமிப்பாளர்கள் எங்க இடத்தில் வந்து உட்கார்ந்துட்டு வெற்றிப்புன்னகை செய்தாங்க. வேறே வழி?? கிடைச்ச இடத்தில் ஒண்டிக்கொண்டோம். இந்த மட்டும் எங்களை எழுந்து போங்கனு சொல்லலையே? ஒரே ஆச்சரியம் என்னன்னா அந்தப் பெட்டியில் இருந்த மற்ற முன்பதிவு செய்து பிரயாணம் செய்யும் பயணிகளில் யாருமே எங்களுக்கு உதவிக்கு வரவில்லை என்பதே! நம்ம இடத்துக்கு வரலையே? நமக்கு என்ன என்று பேசாமலே இருந்துவிட்டனர். ஒரு சிலர் எங்களோட சண்டை போட்டவங்களுக்கு மறைமுக ஆதரவும் தெரிவித்தனர். அவங்க சாமான்களை நாங்க கால் வைக்கும் இடத்தில் வைக்கலாமே என்ற ஆலோசனைகளையும் தாராளமாய் வழங்கினார்கள். நம்ம ம.பா. உடனே இதுக்குத் தான் பேருந்திலே போகலாம்னு சொன்னேன். அங்கே இந்த மாதிரி சீட்டுக்குப் போட்டி போடமாட்டாங்க பாருனு என்னைப் பார்த்துக் கிண்டலடிச்சார். சரிதானோனு தோணியது எனக்கும்.

ஏனெனில் குளிரூட்டப் பட்ட பெட்டிகளிலே பயணம் செய்யும்போதுமே இம்மாதிரியான ஆக்கிரமிப்புகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து தான் வருகிறது. அதுவும் மும்பை, புது தில்லி போனால் கேட்கவே வேண்டாம். நீங்க காலைக்கீழேயே வைக்கமுடியாது. கீழே இரண்டு பேராவது படுத்திருப்பார்கள். அவங்க மேலே தான் வைக்கணும். பரிசோதகர் கிட்டே சொன்னால் காலம்பர எழுந்து போயிடுவாங்க, கொஞ்சம் பொறுத்துண்டுதான் போகணும்னு சொல்லிடுவார். ஆஹா, நம்ம ரயில்வே ஒரு காலத்தில் எவ்வளவு உன்னதமாய் இருந்தது? இந்தத் தலைமுறை அது பற்றி அறிந்திருக்குமா?? சந்தேகமே! இந்தப் பதிவை இங்கே போடுவதின் முக்கிய காரணமே அனைத்துத் தரப்பிற்கும் இந்தச் செய்தி போகவேண்டும் என்பதே. இந்திய அரசின் grievanaces தளத்தில் இது பற்றிச் சொல்லப் போகிறேன் என்றாலும் இதன் மூலம் ரயில்வே அதிகாரிகள் எவருக்கானும் தெரிந்தால் இன்னும் நல்லது என்பது என் நம்பிக்கை! ஏனெனில் இது முதல்முறை அனுபவம் இல்லை.

12 comments:

  1. Ippolam Blackla Vikrangalam,.....

    Romba Kastam..........

    ReplyDelete
  2. நீங்க‌ள் சொல்லிய‌து எல்லாம் வ‌ட‌க்க‌த்து க‌லாச்சார‌ம் மாதிரி தெரியுதே!! இங்கேயும் வ‌ந்துடுச்சா?
    டெல்லியில் இருந்து ப‌ய‌ண‌ப்ப‌ட்டு சென்னையில் இருந்து தெற்கு போகும் ந‌ம்மூர் ம‌க்க‌ளை/ர‌யில் நிர்வாக‌த்தை வாழ்த்தும் கால‌ம் எல்லாம் போய்விட்ட‌து என்று தோனுகிற‌து.

    ReplyDelete
  3. வாங்க பிசி, ஆமாம், எல்லாம் ஏஜெண்டுகள் மூலம் விற்பனைனும் கேள்விப் பட்டேன். அதுவும் ஆன்லைனிலே முன்பதிவு வந்தப்புறம் ஜாஸ்தியா இருக்குனும் சொல்றாங்க. நாம போனா ஆன்லைனில் ரயில்வே முன்பதிவுத் தளமே லேசிலே திறக்காது. திறந்தாலும் குறிப்பிட்ட ரயிலுக்கான அட்டவணை கிடைக்கிறதும் இல்லை! :P

    ReplyDelete
  4. வாங்க வடுவூர், இந்த விஷயத்திலே வடக்காவது, தெற்காவது?? இப்படி மாறிப் பல வருஷங்கள் ஆச்சே??? நீங்க பறந்துட்டே இருப்பீங்க! :D அதான் தெரியலை! இம்முறை உங்க ஊருக்குப் போய் ராமரைப் பார்க்க நினைச்சும் முடியலை! :(

    ReplyDelete
  5. கும்பகோணத்துக்கு ஒரு டிரைன் மட்டும் தான் இருக்கு. ரொம்ப நொந்துட்டீங்க போல இருக்கே? ரிசர்வ்ட் இடத்தில வந்து மத்தவங்க உட்கார்வது அராஜகம் தான்

    ReplyDelete
  6. மாயவரம் போயிட்டு வந்தாச்சா? கோவில் விவகாரம் நல்லபடியா ஆகிறதா? ஊர் ஜனங்கள் ஏதாவது உருப்படியா ஒத்துக்கொண்டு செய்ய முனைப்பட்டிருக்காளா? ரயில் விஷயம் .. கஷ்டம் தான் . சேர் கார் individual seats இல்லையோ. அதுல எப்படி 2/3 பேர் உட்காரமுடியும்?ஸ்லீபெர் சிட்டிங்க் க்கும் அன்ரிஸ்ர்வ்ட்க்கும் வித்யாசம் கிடையாது இப்பல்லாம்!!. FIRST CLASS A/c தேவலை, SECOND CLASS A/C CONGESTED ஆ வழில்ல 3 சீட் போட்டு வரும்படி பண்ணறேன்னு லல்லு மூச்சுதிணற வைச்சிட்டு போயிட்டார்.அதாவது அவர் செய்தார்!! மம்தா அம்மா சொட்டை சொள்ளை சொல்லிட்டு இப்ப நாக்சலைட்டோட பேசப்போறேன்னு STUNT அடிச்சிண்டு இருக்காங்க.உருப்படியா குறை சொல்லறத தவிர ஒண்ணும் செய்த மாதிரி இல்லை. சீக்கரமே புது பாதை ?BROADGAUGE சரியாயிட்டா நன்னாதான் இருக்கும்.அதுவும் யார் வாய்க்கரிசிக்கு வேண்டி DELAY ஆகிண்டு இருக்கோ!!இந்த மாதிரி பல வாரியங்கள்ல ஆதங்கம் தான்.அது அப்படின்னா இன்னொரு பக்கத்தில் "பாருக்குள்ளே நல்ல நாடுன்னு "" அரசு நிகழ்ச்சிகள் குடி அரசுக்கு முழங்க என்னமோ தவறது இல்லை !! ஆட்டோல மீட்டர்,, ஒபென் டாய்லெட் பழக்கம் போய்,ரோட்ல துப்பாம இருந்து, illegal occupancy , லஞ்சம் அடாவடி இதெல்லம் என்னிக்கு போய் என்னிக்கு மனசார பாடுவோமோ!!:((

    ReplyDelete
  7. வாங்க மோகன்குமார், இப்போ எந்த எழுத்தாளரைப் பத்தி எழுதறீங்கனு வந்து பார்க்கணும்! :D

    நொந்து போயிட்டேனா? அதை ஏன் கேட்கறீங்க?? எங்களோட 3 பேர் அமரும் பெஞ்சிலே உட்காரும் இன்னொரு நபர் விழுப்புரத்திலே வரேன்னு சொல்லிட்டு எழுந்து போனார். போனால் போகட்டும்னு ஒரு வயதான அம்மாவை உட்காரட்டும்னு இடம் விட்டுட்டு நகர்ந்து உட்கார்ந்தோம். அந்த அம்மா அவங்க குடும்பத்தையே அந்த இடத்தில் உட்கார வைக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்ஷேபிச்சதுக்கு ஏகமாய்க் கத்தல்! மூணு பேரே கஷ்டப் பட்டுத் தான் அமர முடியும். இந்த அழகிலே அவங்க பேரன், அவனுக்கோ ஜன்னலோர சீட் தான் வேணும், அவங்க மகள் எல்லாரும் உட்காரணும்னு பிடிவாதம். என்னத்தைச் சொல்றது??? லாலு ரயில் மந்திரியா ஆனதிலே இருந்து இந்த அராஜகம் அதிகம்னு ரயில்வே காரங்களே சொல்றாங்க. மேலும் இம்மாதிரி இடத்தை ஆக்கிரமிப்பவர்களும் ரயில்வே ரிடயர்டு ஆசாமிகளும், ரயில்வே பாஸில் வரவங்களும் அதிகமா இருக்காங்க. அதனால் ரயில்வே பரிசோதகர்களும் துணையாக ஒத்து ஊதறாங்க!

    ReplyDelete
  8. வாங்க ஜெயஸ்ரீ, கோயில் வேலை நல்லபடியா ஆரம்பிச்சு இருக்கு, விரிவா எழுதறேன். அப்புறம் இந்த முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஆக்கிரமிப்பது லாலுவின் காலத்துக்கு அப்புறம்தான் அதிகம்னு சொல்றாங்க. இனி யாராலும் எதுவும் செய்யமுடியாது என்ற அளவுக்கு நிர்வாகச் சீர்குலைவு நடந்திருக்குனு விபரம் அறிந்தவர்கள் சொல்றாங்க. யார் வந்து மாத்தப் போறாங்க?? நம்ம காலத்துக்குள் மாற்றம் வருமா??? :(((((((((((

    ReplyDelete
  9. Covai to Chennai Sunday Mathiyam varum Kovai Expressla Reserve panni vandengana itha vida kodumaya pakkala. Seatla irunthu pantryku poitu vantha unga seatla vera oruthar irupar :( . also pantry porathuku oru 30 mins agum because unreserved people akramichu irupanga

    ReplyDelete
  10. நொந்து நூலுல்ஸ் ஆகிட்டீங்க போல!

    இப்போ புதுமொழி ஒன்னை தினமும் நூறுதடவை சொல்லி மனசைத் தேத்திக்கறேன்.

    'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும்'

    ReplyDelete
  11. ஜெயஸ்ரீ,

    இப்பவும் பாருக்குள்ளே நல்ல நாடுதான்!

    Bar க்குள்ளே:(

    ReplyDelete
  12. வாங்க துளசி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லி இருக்கீங்க, நன்றிம்மா. இங்கெல்லாம் இப்படித் தான் மாறவே மாறாது! :(((((((((((

    ReplyDelete