அன்பின் பாதைகள் மிகக் கடினமானவையாக இருந்த போதிலும் அன்பு உன்னை அழைக்கும்போது நீ தொடர்ந்து செல்வாயாக!
அன்பு தன் சிறகுகளை விரித்து உன்னைத் த்ழுவிக் கொள்ளும்போது அதன் உடையில் மறைந்திருக்கும் வாள் உன்னைப் புண்படுத்தும், ஆயினும், நீ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வாயாக
வாடைக்காற்று தோட்டத்தைப் பாழ் படுத்துவது போல, அன்பின் குரல் உன் இன்பக் கனவுகளைக் குலைத்துவிட்ட போதிலும், அன்பு உன்னுடன் பேசும்போது அதை நம்பு.
கலீல் கிப்ரான் கருத்துகளும்,
கைகளில் ரணம் படாமல் தான் எதையும் செய்துவிட ஆசைப்படுகிறோம். ஆனால் மனதிலும், கைகளிலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழமுடிவதில்லை.
பொருள்களின் இல்லாமையாலும், வசதிகளின் குறைவாலும் ஏழை ஆவதற்கு நம் உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒரு போதும் தயாராக இல்லை.
நா.பார்த்தசாரதியின் கருத்துகளும்
Nice post Maami...
ReplyDeleteஅன்பு என்பது ஒரு முகம் காட்டும் பேழை.
ReplyDeleteநாம் முதலில் அதன் முன்னே நிற்கவேண்டும்.
அன்பில்லாதோரையும்
அன்பு செய். அணைத்துச் செல்.
இளகிப்போய் அவரும் ஒரு நாள்
உவகையுடன் உன்முன்னே
எழுந்து நிற்பார்.
அன்பின் சக்தி வலியது அல்லவா !!
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நன்றி ஏடிஎம், பாராட்டிட்டுக் கேசரியோ, இட்லியோ கொடுத்துடாதீங்க! :P
ReplyDeleteவாங்க சூரி சார், அழகான விளக்கம். வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. அன்பின் சக்தி மிக மிக வலியது! உணர முடியுமே!
ReplyDeleteஉண்மை. அருமை.
ReplyDelete