முதல் ஹிஹிஹி, ஞாயிற்றுக்கிழமை Darar இந்திப் படம் பார்த்தேன். வழக்கம்போல்ப் பாதியிலே இருந்துதான். ஆனால் நம்ம தமிழ், ஹிந்திப் படங்களை முடிவும்போது பார்த்தாக் கூடப் புரியும்! வழக்கம்போல் படுக்கவும் முடியாம, உட்காரவும் முடியாம, படிக்கவும் முடியாமத் தடுமாறும்போது மனதை மாற்றவேண்டிப் பார்க்கற வழக்கப் படியே பார்த்தேன் என்றாலும், இப்படி என்னிக்கோ, எப்போவோ உட்காரும்போது நல்ல படங்களாகக் கிடைப்பது அதிர்ஷ்டமே. உண்மையிலேயே அனைவரின் நடிப்பும் நல்லா இருந்தது. ஜூஹி சாய்வாலா, சீச்சீ, சாவ்லாவின் நடிப்பு, பயம் கொண்ட மனைவியாகச் சிறப்பாக அமைந்த மாதிரி கடைசியில் ரிஷி கபூரின் காதலியாக நடிக்கும்போது அமையவில்லைனு சொல்லலாம். ரிஷி கபூர் வழக்கம்போல், பெருந்தன்மையான கதாநாயகன். ஜூஹியின் கணவனாக வரும் கான் நடிகர் (என்ன கான் அவர்? தெரியலை!) நடிக்கலை. வாழ்ந்திருக்கார். கண்களின் மூலமே ஆண் நடிகர்களும் தங்கள் உணர்வுகளைக் காட்டுவது என்பதை வெகு இயல்பாக, எளிதாகச் செய்திருக்கார். ஒரே ஒரு குறை என்னன்னா, இது ஏதோ ஆங்கிலப் படத்தின் காப்பி, பேஸ்ட்னு சொன்னாங்க. என்ன படம்னு தெரியலை! :(
அடுத்த ஹிஹிஹி! நேத்திக்கு மத்தியானமெல்லாம் தொலைக்காட்சிப் பக்கம் போக முடியலை. செவ்வாய்க்கிழமை ராகுகால வழிபாடு இருக்கிறதாலே போக முடியாது. ரங்க்ஸ் தான் ஆக்கிரமிப்பார் எப்போவும். நேத்திக்கு எனக்குச் சீக்கிரமா முடிஞ்சதாலே நானும் சிறிது நேரம் உட்கார்ந்தால், ஆஹா, ஜூப்பருங்க! நம்ம அபிமான எழுத்தாளர் அகதா கிறிஸ்டியோட நாவலைப் படமா எடுத்திருக்காங்க. ரொம்ப வருஷமா வாசிக்கணும்னு நினைச்ச நாவல். ஆனால் படிக்கலை இன்னமும்! :( அதனாலேயே படம் சுவாரசியமா இருந்திருக்கணும். ஆனால் துரதிருஷ்ட வசமாப் பார்க்கும் போது கோர்ட் சீன் ஆரம்பிச்சாச்சு. மோட்டல் கொலைகள் சில, பல நடந்துவிட்டன. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டு மால்கோம் யாருனு ஒரு ஊகம் பண்ணிண்டு பார்த்தேன். இன்னொரு வாட்டிப் போடாமலா இருப்பாங்க?? உலகத் தொலைக்காட்சிகளில் லக்ஷத்து ஆயிரத்தெட்டாம் முறையாப் போடும்போதாவது பார்த்தால் போச்சுனு மனசைத் தேத்திக்கிட்டேன்! படத்தோட பேர் Identitiy!
நிஜம்மாவே நாளைலேருந்து பார்க்க மாட்டேங்க. அப்பாடி தலைப்புச் சம்பந்தம் வந்தாச்சு! நவராத்திரி ஆரம்பிக்குது இல்லை?? சுண்டல் கலெக்ஷனுக்கு போகணுமே! :))))))))
sundal ready panni vaingo nan varen
ReplyDeleteநவராத்திரி வாழ்த்துக்கள் தலைவி ;))
ReplyDelete//நிஜம்மாவே நாளைலேருந்து பார்க்க மாட்டேங்க.//
ReplyDeleteநம்மப்றேன்! :P:P:P
வாங்க எல்கே, தினமும் சுண்டல் உண்டு. சீக்கிரம் வரணும், சரியா?? அப்புறம் தீர்ந்து போயிடும்! :D
ReplyDeleteகோபி நன்றிப்பா.
ReplyDeleteஹிஹிஹி திவா, நேத்திக்கே பார்க்கலையாக்கும், ரங்க்ஸுக்கு ஒரே ஆச்ச்ச்ச்ச்ச்சரியம், என்னாச்சு? சினிமா பார்க்கலையா இன்னிக்கு?னு கேட்கிறார், என்னமோ தினமும் நான் பார்த்துண்டு இருக்கிறாப்போல! :P எப்போவோ பார்க்கிறதுக்கு இவ்வளவு கிண்டல்?? நறநறநறநற
ReplyDelete"Identity" எனக்கும் பாத்தா ஞாபகம் இருக்கு... நல்ல மூவி... என்ன மாமி வர வர மூவி encylopedia ஆய்டுவீங்க போல இருக்கே... சூப்பர்...
ReplyDeleteஐ சுண்டல் சீசன் ஆரம்பிச்சாச்சா...சூப்பர்... அப்ப சுண்டல் ரெசிபிஸ் போட்டு அசத்துங்க... என் சார்பா கொஞ்சம் சுண்டல் சேத்து சாப்பிடுங்க... நன்றி நன்றி
வாங்க ஏடிஎம், சுண்டல் ரெசிபி, அங்கே போடறேன், பார்த்துக்குங்க. :D
ReplyDeleteஎன்னை மறந்தராதீங்கோ !
ReplyDeletecollection சுண்டல்லில் share வேண்டும் !