எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 24, 2010

நீங்க பாசிடிவா? நெகடிவா?

இங்கே பார்க்கவும்
இதைப் பத்தி மறுபடியும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம் இருக்கிறது. நவராத்திரியில் மஞ்சள், குங்குமத்துக்கு வந்த என்னுடைய உறவுக்காரப் பெண் ஒருத்தருக்குக் கல்யாண வயதில் பையர் இருக்கிறார். பெண் பார்க்கிறார்கள். ஏற்கெனவே இப்போ கன்னிகளை விடவும், கன்யர்கள் (நன்றி தேவ்) நிறைய இருக்கின்றனர். பெண்கள் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. அந்தப் பெண் தன் பையருக்கு வந்த ஒரு பெண்ணை எல்லாப் பொருத்தங்களும் இருந்தும் இரு தரப்பிலும் புகைப்படம் பார்த்துப் பிடிச்சிருந்தும் வேண்டாம்னு சொல்லப் போறோம்னு சொன்னாங்க. காரணம் ரொம்ப சிம்பிள். பெண்ணுக்கு ஓ நெகட்டிவ் வகை ரத்தம். ஆதலால் வேண்டாம்னு சொல்லப் போறாங்களாம்.

பெண் வீட்டிலே இதைக் குறிப்பிடவில்லை என்றால் கட்டாயமாய்ச் சம்மதம் சொல்லி இருப்பாங்களோ?? ஆமாம்னு நினைக்கிறேன். நெகட்டிவ் வகை ரத்தமாய் இருந்தால் குழந்தை பிறக்கும்போது பாதிப்பு ஏற்படும் என்று பயம் அவங்களுக்கு. உண்மைதான் இல்லைனு சொல்லவே இல்லை. எனக்கு அந்த அநுபவம் உண்டு. என்னுடையதும் ஓ நெகட்டிவ் வகை ரத்தமே. ஆனால் எங்க கல்யாணத்தில் அதை எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கலை. முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பிறந்த மூன்றாம் நாளே கடுமையாக வந்தும் மருத்துவருக்குக் கூட ரத்தம் நெகட்டிவா, பாசிட்டிவா என்று அதைப் பார்க்கத் தோணலை. என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை வந்து குணமாகி இருந்தால் அவரிடமிருந்து எனக்குத் தொற்றி, என்னிடம் இருந்து குழந்தைக்கு வந்திருக்குமோ என்ற கோணத்திலேயே யோசித்தனர். ஆனால் இரண்டாம் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும்போதே வந்து, பிறக்கும்போதே மஞ்சள் காமாலை, லிவர் என்லார்ஜ்மெண்ட் என்று தான் பிறந்தது.

இது அனைத்தும் அவங்களுக்கும் தெரியும். அதனால் வேண்டாம்னு சொல்றாங்க போல! ஆனால் இப்போ மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. பெண்ணுக்கு நெகட்டிவ், ஆணுக்குப் பாசிட்டிவ் வகை ரத்தம் என்று குழந்தை பிறக்கும் முன்னாடியே கண்டு பிடித்தால் கர்ப்பம் தரிக்கும் போதே, அல்லது முன்னரோ பாதுகாப்புக்கள், தற்காப்புகள், அதற்கு உரிய மருந்துகள் என நிறையவே வந்தாச்சு. மேலும் இப்போது கர்ப்பம் தரிக்கும்போது இந்த ரத்தப் பரிசோதனையை நாம் கேட்டும் செய்யச் சொல்லித் தெரிந்து கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக்கலாம். என்றாலும் இன்னமும் சிலர் நெகட்டிவ் வகை ரத்தம் உள்ள பெண்ணா?? வேண்டாம்னே சொல்றாங்க. அது கொஞ்சம் வருத்தமாவே இருக்கு! அந்தப் பெண்களுக்கும் கல்யாணம் ஆகும்,குழந்தை பிறக்கும். இறைவன் கொடுத்த வாழ்க்கையை வாழ்வாங்க என்றாலும், மனதளவில் கொஞ்சம் வருத்தம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.

என்னோட கேள்வி நெகட்டிவ் வகை ரத்த க்ரூப் பெண்களை வேண்டாம்னு ஏன் ஒதுக்கணும்?? எல்லா ரத்த வகையிலும் பாசிடிவ் நெகட்டிவ் இரண்டும் இருக்கு. நெகட்டிவ் வகை ரத்தம் நாம் கேட்டுப் பெறுவதில்லையே?? ரத்த க்ரூப் என்பது எது என்பது நம் கையிலும் இல்லை அல்லவா?? கறுப்பு நிறம் என்று ஒதுக்குவது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு இதிலும் இருக்குனு என்னோட கருத்து. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க??

எங்கே ரெடி, ஷ்டார்ட், வரிசையா வாங்க பார்க்கலாம்!

19 comments:

 1. அடப்பாவிகளா!! நாளை DNA வை கிராபில் கேட்பார்கள் போலிருக்கே??

  ReplyDelete
 2. ஸேம் ப்ளட்!

  நானும் ஓ நெகடிவ்தான். நம்மாளும் ஸேம் ஸேம்.

  நீங்க சொல்வதுபோல மருத்துவம் ரொம்ப முன்னேறி இருக்கும் காலக்கட்டத்தில் இதெல்லாம் பார்க்க வேண்டியதில்லைதான்.

  ReplyDelete
 3. வடுவூர், எனக்குத் தெரிஞ்சு இம்மாதிரி மூன்றோ, நான்கு பெண்கள் பையர் வீடுகளால் மறுக்கப் பட்டிருக்கிறார்கள். :(((((((

  ReplyDelete
 4. துளசி, நல்ல காலம் ரெண்டு பேரும் நெகட்டிவ்ங்கறதாலே பிழைச்சீங்க. இல்லாட்டி கதை கந்தல் தான். நாங்க படாத பாடு பட்டோம். :((((((( ஆனால் அதுக்கு அப்புறம் எங்க வீடுகளிலே திருமணம் ஆனதுமே ரத்த க்ரூப்பைத் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செய்து கொள்ள ஆரம்பிச்சாங்க. அது ஒரு நன்மை தானே? :)))))))))

  ReplyDelete
 5. திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கையில் ப்ளட் க்ரூப் பற்றி விசாரிக்கிறார்கள் என்பதே உங்கள் பதிவின் மூலமாகதான் அறிய வருகிறேன். நல்ல பதிவு. பகிர்வு.

  ReplyDelete
 6. மேடம்!ரத்தம் பார்த்து கல்யாணம்ங்கிறது நவீன தீண்டாமை மாதிரி தெரிகிறது.

  ரத்தம் நெகடிவ்!எண்ணம் பாசிடிவ்ன்னு பரிகாரம் செய்துக்கலாம்.

  ReplyDelete
 7. இந்த மாதிரி உறவுக்கார பெண்ணை/அம்மையாரை நவராத்ரிக்கு எல்லாம் அழைக்காதீர்கள். விலகி நில்லுங்கள்

  ReplyDelete
 8. உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன்.

  ReplyDelete
 9. ரா.ல. பல வருடங்களாய் பெண்ணின்/பையரின் ரத்த க்ரூப் எழுதியே ஜாதகங்கள் அல்லது பயோ டேட்டா வருது. :)))))))

  ReplyDelete
 10. ராஜ நடராஜன், எல்லா விதத்திலும் பிடித்த ஒரு பெண்ணை நெகட்டிவ் வகை ரத்தம் என்பதால் ஒதுக்குவது சரியல்ல என்பதைப் புரிந்து கொண்டதுக்கு நன்றி.

  ReplyDelete
 11. ராம்ஜி யாஹு, அவங்களே மனம் மாறலாம். நாம் ஏன் ஒதுக்கவேண்டும்??

  ReplyDelete
 12. அடடா!! THIRD TRIMESTER ல RhoD immunoglobulin கொடுத்தா போச்சு. இப்பல்லாம் in utero exchange transfusion பண்ணலாம். இத்தனை ஏன் பெரிசாக்கறாங்க ஜனங்க?தவிற இப்பல்லாம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு தானே நிறய WORKING CLAAS COUPLE க்கு :). O negative universal Donor. One should be proud to have O negative. Emergency ல கை கொடுக்கிற க்ரூப்!!AIDS இருந்தாலுமே நல்ல மனசு பார்த்து கல்யாணம் பண்ணீண்டு, குழந்தைகளை ADOPT பண்ணிண்டு இருக்கா வெளிநாட்டுல!! வர்ணம், காழ்ப்புணர்ச்சி போக இப்ப இதுவேற சேந்துண்டா ...:((( படிப்பு நெகடிவா பாக்கறத விலக்க!! அந்த படிப்பு இந்த புரிதல குடுக்கலைன்னா அது வேஸ்ட்!!.இதெல்லம் தெரியாத காலத்திலேயே இந்த க்ரூப்போட பிறந்து வளந்து நன்னா தானே இருக்கா அந்த பொண்ணு!! இப்படி எதெல்லாம் வடிகட்டி நிறுத்த முடியும் லைஃப் ல? பொண்ணாத்துக்காறா DIABETES , HYPERTENSION, IHD, DEMENTIA இருக்கானு பாக்க ஆரம்பிச்சா!!???ஒவ்வொருத்தருக்கும் கல்யாணம் ஆனாப்பல தான்!ஆப்பிள் ஆரஞ்சு பொறுக்கி எடுத்து வாங்கற மாதிரி சரியான வரன் பாத்து பாத்து கல்யாணம் பண்னினா ப்ராப்லமே வரதா???? அப்படியும் வாங்கற பழத்துக்குள்ள கண்ணுக்கு தெரியாம புழு உட்கார்ந்து கொண்டுதான் இருக்கு. வரணும்னா எப்படியும் வரலாம். !!

  ReplyDelete
 13. @ஜெயஸ்ரீ, ஓ நெகட்டிவ் வகை ரத்தம் உள்ள நானும் சரி, எனக்குப் பிறந்த பாசிடிவ் வகை ரத்தம் உள்ள என் குழந்தைகளும் சரி, நல்லாவே இருக்கோம். என்றாலும் குழந்தைகள் பிறந்தப்போ அவங்களோட ரொம்பவே கஷ்டப் பட்டோம் இல்லையா? எங்க பையருக்கு ஒரு லெவலில் blood transfusion பண்ணவேண்டி இருக்குமோனு யோசிச்சாங்க. கடவுள் அருளால் அப்படி எதுவும் நடக்கலை. ஆனாலும் ஐந்து வயசு வரைக்கும் கொஞ்சம் சிரமப் பட்டோம் தான்! அதை நினைச்சு பயப்படறாங்க! :(((((( என்னைப் பொறுத்தவரைக்கும் சவாலே சமாளி டைப், சோ பிரச்னை இல்லை.

  நீங்க சொன்ன மாதிரியே இப்போ எல்லா வகை ட்ரீட்மெண்டும் இருக்குனு அவங்களுக்கும் தெரியும். ஆனாலும் ரிஸ்க் எதுக்குனு சொல்றாங்க! அவங்க பையரும் (ஐடியிலே இருக்கார் :D) இதுக்கு ஒத்துப்போறது எனக்கு இன்னும் ஆச்சரியம். மற்றபடி நீங்க சொல்லி இருக்கும் அனைத்தையும் பற்றி நானும் ஏற்கெனவே விக்கி பசங்களுக்காக எழுதினேன். எங்க உறவுப் பெண்ணிடமும் சொல்லிட்டேன். அவங்களா மனம் மாறணும்.

  @துளசி, நன்றிப்பா.

  ReplyDelete
 14. இந்த தவறான புரிதலை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்
  ஜெயஸ்ரீ மேடம் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை !
  உங்கள் பதிவும் தான் டீச்சர்!

  ReplyDelete
 15. Ippo yellam injection potta sariyaidudhu. Adhu avaa avaa ishtam. Vendam_nu solla oru reason. That is what I am thinking.

  ReplyDelete
 16. வாழ்பவர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஒதுக்குவது தவறுதான் எனினும்...

  வாழ்பவர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள்.

  ReplyDelete