எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, October 02, 2010
துரோகி யாரு????
கத்தரிக்காய்க்கும் எனக்கும் சின்ன வயசிலே இருந்தே நட்பு உண்டு. கத்தரிக்காய் மேலே இருந்த ஆசையிலே தான் தமிழ்வாணனின் கத்தரிக்காய் கண்டு பிடித்தான் தொடரை லக்ஷம் முறையாவது மனப்பாடம் பண்ணி இருப்பேன். இந்த விஷயத்திலே இது குடும்ப ஆசைனு கூடச் சொல்லலாம். ஹிஹிஹி, குடும்பத்தில் எல்லோருடைய ரத்த அணுக்களுமே கத்தரிக்காய், கத்தரிக்காய்னு கூவிட்டு இருக்கும்னு நம்பறேன். அப்படி ஒரு கத்திரிக்காய்ப் பிரியர் நாங்க எல்லாருமே. இரண்டு நாள் முன்னே, அம்பியோட ஒரு மொக்கை பஸ்ஸை ஓட்டறதுக்கு திவாவும், ஷைலஜாவும் அடாவடிக் கூட்டணி அமைச்சுக் கத்திரிக்காய்ப் பொடி அடைச்ச கறியும், அதன் செய்முறையும் சொல்லிட்டு இருந்தாங்களா?? உடனேயே ஆஹா, நம்ம வீட்டிலே கத்திரிக்காய் வாங்கி ரெண்டு நாளாச்சேனு நினைப்பு வந்தது.
ம்ஹும், நினைப்பு வந்து என்ன பண்ண? எண்ணெய்க் கத்திரிக்காய் சாப்பிட முடியாதே இப்போ இருக்கிற உடம்பிலே. ஆஹா, கத்திரிக்காயிலேதான் எத்தனை விதமாய்ச் சமைக்க முடியும்?? கத்திரிக்காயைச் சுட்டுப் பச்சடி, சுடாமல் பச்சடி, சுட்டுத் துவையல், சுடாமல் துவையல், சுட்டுக் கொத்சு, சுடாமல் கொத்சு, சுட்டுச் சப்பாத்திக்கு பைங்கன் பர்த்தா, சுடாமல் கூட்டு, அது தவிர, எண்ணெய் விட்டு வதக்கல், எண்ணெயே கண்ணிலே காட்டாமல் வேகவிட்டுக் கொட்டிக் கறி, பொடி அடைச்சுக் கத்திரிக்காய்க் கறி, பொடி அடைக்காமல் காய்கறிக் கலவைகள் அடைச்ச கத்திரிக்காய் மசாலா, கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் போட்டுக் காரக்கறி, கூட்டு, கத்திரிக்காய் சாம்பார், கத்திரிக்காய் பிட்லை, கத்திரிக்காய் ரசவாங்கி, கத்திரிக்காய் (வாங்காத) ரசம், கத்திரிக்காய் பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு, கடைசிக் கடைசியாக் கத்திரிக்காய் புளிவிட்ட கூட்டு, புளி விடாத கூட்டுனு எத்தனை வகை. கத்தரிக்காய் சாதத்தை விட்டுட்டேனே!
ஒண்ணு, ரெண்டு விட்டிருக்கும், பரவாயில்லை. இப்படி எல்லாம் என்னை சந்தோஷப் படுத்திட்டு இருந்த கத்திரிக்காயை நேத்திக்குச் சாப்பிட்டேனா?? உடனே ஆரம்பிச்சது தொல்லை. நேத்து மத்தியானமாய் மூச்சு விடமுடியாமல் ஆரம்பிச்ச அவஸ்தை தொடர ரங்க்ஸ் கத்திரிக்காய்க்கு 144 தடை உத்தரவு போட்டுட்டார்! என்ன அநியாயம்! இதைப் போல அக்கிரமம் எங்கானும் உண்டா?? ஒருவேளை அம்பி ஏதானும் ரகசியமாய்ச் செய்தி அனுப்பி இருக்கார்னு சொல்லவும் சான்ஸே இல்லை. அவர் தான் இந்தப் பக்கம் தலை வச்சுக்கூடப் பார்க்கிறது இல்லை. அதோட இன்னிக்குச் சனிக்கிழமையா?? நொட்டு ஒண்ணும் சொல்ல மாட்டார். சீச்சீ, நெட்டுப் பக்கம் செல்லமாட்டார். ஹிஹிஹி, சொந்தக் கணினியிலே பார்க்கிற வழக்கமே அம்பிக்குக் கிடையாதே! அதனால் தைரியமாச் சொல்லலாம், இது அம்பி வேலை இல்லை! அப்போ யார் வேலை??? கண்டு பிடிக்கணும்!
வரேன், இன்னும் இரண்டு நாளிலே. கொஞ்சம் உட்கார முடியணும்! :( அதுவரைக்கும் இப்படி ஒரு சின்னச் சின்ன மொக்கைகள்! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
Subscribe to:
Post Comments (Atom)
எனகென்னவோ அம்பியோட தம்பி மேல சந்தேகம்
ReplyDeleteஆக கத்தரிக்காயை உங்களுக்கு பிடிக்கும், கத்தரிக்காய்க்கு உங்களை பிடிக்காது. இதானே கதையின் நீதி!
ReplyDeleteஇதுக்காக 'நண்பேன்டா' அம்பியை கலாய்த்திருப்பதை கண்டித்து ஒரு ஓட்டு போட்டுக்கறேன்! (உங்களுக்கு சரியா கலாய்க்க தெரியலை என்பதையும் தாழ்மையுடன் குட்டி காண்பிக்கிறேன்)
ஹிஹிஹி, எல்கே, இருக்கும், இருக்கும்! நீங்க சொன்னாச் சரியாவே இருக்கும்! :))))
ReplyDeleteஅபி அப்பா, கத்தரிக்காய்க்கு என்னைப் பிடிக்காமல் போனது ஏன்? அதானே மில்லியன் டாலர் கேள்வி?? சதியே அதில் தான் ஆரம்பம்! கண்டு பிடிக்கணும்!
ReplyDeleteஉடம்பைப் பார்த்துக்கோங்க அம்மா :)
ReplyDelete(பாவம் கத்தரிக்காய், அதை விட்டுருங்க :P)
கத்தரிக்காயின் சுவை கருதி அது ஒரு ஹாட் செல்லிங் வெஜிடபிள் என்றாலும் சில்வற்றைக்
ReplyDeleteகருத்தில் கொள்வது நல்லது.
1. பெஸ்டிசைட் அதிகம் உபயோகிக்கப்படும் காய் இது. காய்க்கும்பொழுதே சொத்தையாகிவிடுகிறது என
தேவைக்குமேல் பெஸ்டிசைட் அடிக்கிறார்கள். இருப்பினும் பலவற்றில் சொத்தை பார்க்கிறோம். பலர்,
சொத்தை இருக்கும் பக்கம் மட்டும் நறுக்கிவிட்டு, மிச்சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இது தவறு.
சொத்தை என்றால் முழு கத்திரிக்காயையும் விலக்கவேண்டும்.
2. வாங்குவது ஜெனடிக் மாடிஃபைட் ஆக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதா ? இது போன்ற காய்களின்
தொலை நோக்கு பார்வை இன்னமும் முடிவு பெறவில்லை. இது ஒரு கார்சினோஜேனிக் என்பதும்
சில டிரையில்ஸில் தெரிய வந்திருக்கிறது.
3. ஆஸ்துமா தொந்தரவு ஏற்கனவே இருந்தால் இது ஒரு trigger .
4. பெரிய சைஸ் கூடியவரை அவாய்ட் செய்யவும்.
5. எண்ணையில் வதக்குவதைத் தவிர்க்கவும்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
எங்கள் வீட்டில் கத்தரிக்காய் பிடித்த ஒரே ஆள் நான்தான். நீங்கள் பட்டியலிட்டுள்ள அத்தனையும் ருசித்திருக்கிறேன்..அதனுடன் கத்தரிக்காய் பஜ்ஜியும்... (ஹி..ஹி.. நீங்க விட்டு விட்ட ஒண்ணை சொல்லிட்டேனே..)
ReplyDeleteyenakkum kathrikaai_kum Kaadha dhooram. AaLai vidungo Maami.
ReplyDeleteaana yevalo ambi_yai Kalaichalum ippo thirumba badhil solla varadhae illaiyae? Thirundhitaaro? ungali romba kalayikiraidhu illaiyo ippo?
கத்ரிகாய் படத்தை பாத்ததுமே ஒரு நெகட்டிவ் ஓட்டு சத்தக்குனு குத்திட்டேன். இப்ப தான் ஆத்திரம் குறைஞ்சது.
ReplyDeleteஆண்டவன் தடுக்கறதை யாராலும் குடுக்க முடியாது. ஹிஹி. :))
காதலும், கத்திரிக்காயும் ஒண்ணு தான்.
ReplyDeleteதூரத்தில பார்த்தா நல்லா இருக்கும்.
அனுபவிச்சா அவ்வளவு தான்..
ப்ராணாவஸ்தை!!!
நானும் கத்திரிக்காய் பைத்தியம் தான் மாமி... ஆனா அவருக்கு அது பிடிக்காதுங்கறதை மறைச்சுட்டாங்க .... கேட்டா ஜாதக பொருத்தத்துல இது அவுட் ஆப் சிலபஸாம்... ஹும்... So இப்ப அதிகம் கத்திரிக்காய் இல்ல என் வாழ்க்கைல... இன்னிக்கி நீங்க ஞாபகபடுத்தி விட்டுடீங்க... ஹும்...
ReplyDeleteசரி என் சோக கதையா விடுங்க... உங்க துரோகி யாரு... நீங்க சொல்றவராதான் இருக்குமோ... இருக்கலாம்... நான் FBI ல சொல்லி வெக்கறேன்... கண்டுபிடிச்சுடுவோம் (ஹா ஹா ஹா)
வாங்க கவிநயா, பல மாசங்களுக்குப் பின் வருகை! நன்றிம்மா!
ReplyDeleteபி.கு. கத்தரிக்காயை விட்டாச்சு! :)))))
வாங்க சூரி சார், நாட்டுக் கத்தரிக்காய்தான் வாங்குவார். வெண்டை, கத்திரி, முள்ளங்கி போன்ற எல்லாமே முட்டைக்கோஸ் உள்பட நாட்டு ரகம் தான். இங்கே தோட்டங்களில் விளைந்து வரும் காய்களே அதிகம் வருது. :))))))
ReplyDeleteகத்தரிக்காய் ஒத்துக்காதுனு தெரிஞ்சே தான் சாப்பிட்டுட்டு அவதி! :))))))) வம்பை விலை கொடுத்து வாங்கியாச்சு!
வாங்க ஸ்ரீராம், ஆமாம் இல்லை, பஜ்ஜியை மறந்துட்டேனே! எப்படி??? போகட்டும்! கத்திரிக்காய் ரசிகரான உங்களுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ReplyDeleteஎஸ்கேஎம், நீங்க கத்திரிக்காய் பிடிக்கும்னு சொல்லி இருந்தாத் தான் ஆச்சரியப் பட்டிருப்பேன்! என்ன இருந்தாலும் அம்பியோட அருமை அக்காவாச்சே நீங்க! :P கீழே பதில் சொல்லி இருககார் பாருங்க.
ReplyDeleteஅம்பி எல்லாம் இப்போப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவர் ஆகிட்டதாலே என் மாதிரி சாதாரணப் பதிவர்களுக்குக் கமெண்டறதில்லை. அம்புட்டு பிசி! :)))))))))
அம்பி, தும்பி, வம்பி, நறநறநறநறநற நீங்க தான் கத்திரிக்காய்க்குச் சொல்லிக் கொடுத்திருப்பீங்களோனு சந்தேகமா இருக்கு! :D
ReplyDeleteவாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி! அவஸ்தைதான்! என்ன செய்யறது?? அப்போ வாங்கின அரைகிலோவிலே இன்னும் ரெண்டு கத்திரிக்காய் மிச்சம் இருக்கு! ஆனாலும் சாப்பிடத் தடா! :))))
ReplyDeleteஏடிஎம், என் அருமைத் தோழியே, கத்திரிக்காய் ரசிகையே! எல்லாம் இந்தப் பதிவுகள் எழுத வந்தாலே அவங்களுக்கு எதிரியாக் கத்திரிக்காயை வெறுப்பவர்கள் வந்துடுவாங்க போல! நம்ம சோகக் கதையை யார் கிட்டே சொல்றது?? :(((((((
ReplyDeleteஏடிஎம், அது சரி, அடைப்புக்குறிக்குள்ளே சிரிக்கிறீங்களே, அந்தச் சிரிப்பை, யார் மாதிரிச் சிரிச்சுக்கறது?? வீரப்பா ஸ்டைலா, நம்பியாரா, அசோகனா?? எம்.ஆர். ராதாவா? பாலையாவா??? புரியலையே??
ReplyDelete//கீதா சாம்பசிவம் said...ஏடிஎம், அது சரி, அடைப்புக்குறிக்குள்ளே சிரிக்கிறீங்களே, அந்தச் சிரிப்பை, யார் மாதிரிச் சிரிச்சுக்கறது?? வீரப்பா ஸ்டைலா, நம்பியாரா, அசோகனா?? எம்.ஆர். ராதாவா? பாலையாவா??? புரியலையே??//
ReplyDeleteமாமி நான் பிரகாஷ்ராஜ் fan (வில்லன் நடிப்புக்கு), சோ அவர் போல சிரிங்க...I will be happy... ha ha ha
விடுங்க கீதாம்மா !
ReplyDeleteசுகர் பேசண்டுக்கு ஸ்பெஷல் சுகர் கண்டு பிடித்த மாதிரி நம்மை மாதிரி வீசிங் பேசண்டுக்கு ஸ்பெஷல் கத்திரி கண்டு பிடிக்காமையா
போய்ட போறாங்க ! அப்ப கவனித்து கொள்ளலாம் !ஓகே வா !!
இந்த பதிவில் ATM உட்பட நிறைய பேர்களின் கமெண்ட்ஸ் ரசிக்கும் படியாக இருந்தது !!
வாங்க ப்ரியா, என்ன இருந்தாலும் கத்தரிக்காய், கத்தரிக்காய் தான்! ம்ம்ம்ம்ம்ம்! மனசு துடிக்கிறது! பேசாம அம்பியை வரச் சொல்லிட்டுக் கத்தரிக்காயை அந்தச் சாக்கிலே பண்ணிடலாம்னு நினைக்கிறேன். :)))))))
ReplyDeleteகத்தரிக்காய் இவ்வளவு பிடிக்கும்னு சொல்ற ஒருத்தரை இப்போதான் பார்க்கிறேன். கத்தரிக்காயில் ஓரிரண்டு ஐட்டம் ரொம்பப் பிடிக்கும்னு சொன்பவர்களைப் பார்த்திருக்கிறேன். நல்லவேளை, கத்தரிப் பாயசம் ஒன்றுதான் உங்கள் லிஸ்டில் இல்லை.
ReplyDeleteஇப்பயாவது கத்தரி சாப்பிடமுடியுமா அல்லது ஒரேடியாகத் தடா போட்டாச்சா?
ஹிஹிஹி, நெல்லைத் தமிழன் வாங்க, வாங்க நேத்திக்குக் கூட அதாவது திங்கட்கிழமை (இங்கே யு.எஸ்ஸில்) கத்திரிக்காய்க் கறி தான்! என்றாலும் நம்ம ஊர்க் கத்திரிக்காய் மாதிரி இல்லை! :))))
Delete"அம்பி எல்லாம் இப்போப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவர் ஆகிட்டதாலே என் மாதிரி சாதாரணப் பதிவர்களுக்குக் கமெண்டறதில்லை. அம்புட்டு பிசி! :)))))))))"
ReplyDeleteஇதுதான் காரணமா, சில பதிவுகளுக்கு நீங்கள் எங்கள் பிளாக்கில் பின்னூட்டம் இடாததற்கு. நான்கூட உடம்பு சரியில்லையோ, அல்லது வெளியூர்ப் பயணமோன்னு அப்பாவியாட்டம் நினைத்துக்கொண்டிருந்தேன். ம்ஹும். அதான் விஷயமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@நெல்லைத் தமிழன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் அம்பி தான்! நான் இல்லை. நிஜம்மாவே ஊரில் இல்லாத காரணத்தாலும் மற்றச் சில வேலை மும்முரங்களினாலும் தான் பதிவுகளுக்கு வர முடியலை! :) நானெல்லாம் பெரிய பதிவர்னு சொல்லிண்டாலும்! :)))))
Delete