எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 19, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 11


“ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா!
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!!
என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடிக்கு லலிதா காமேஸ்வரரின் திருக்கல்யாணத்துக்குப் பின்னர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீகாமேஸ்வரரோடு வீற்றிருந்த தேவியிடம் தேவாதி தேவர்கள் பண்டாசுர வதம் பற்றி நினைவூட்டுகின்றனர். அம்பிகையும் இதற்கெனவே தான் தேவ கார்யத்துக்காக அவதாரம் எடுத்திருப்பதால் இனி தாமதிக்கக் கூடாதென்று தன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு பண்டாஸுரனோடு யுத்தம் செய்யத் தயாராகின்றாள். இதை லலிதா சஹஸ்ரநாமம் “தேவர்ஷி-கண-ஸங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேனா-ஸமன்விதா!! என்று கூறுகிறது.

“ரதகஜ துரக பதாதிகளுடன் கடல்
அலைபோல வருகின்றாள் சேனையுடன்
சதுரங்கமான சக்தி சேனைகளுடனே
சங்கரி வருகிறாள் –சோபனம் சோபனம்

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட- மந்திரிணீ-பரிஸேவிதா
கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா
பண்டஸைன்ய-வதோத்யுக்த-பாலா விக்ரம-நந்திதா
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா

ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு
சிங்கார உருளைகள் நான்கு வேதம்
பூஜ்யமான தர்மார்த்த காம மோக்ஷம்
புனிதமான நான்கு குதிரைகளாம்
ஆனந்தக் கொடிமரம் அதற்கு மேலழகாய்
ஐந்து யோசனை யகலம் முத்துக்குடை
முந்நூறு தேர்ப்படை முழுதுஞ் சக்திகள் வாராள்
முழுத்தேரும் தேவிக்குச் –சோபனம் சோபனம்


அம்மன் தொரட்டியில் இருந்துமொரு தேவி
ஸம்பத்கரி என்று உண்டானாள்
நன்மையாகவே பின்னும் அச்வாரூடை யுதித்தாள்
நாகபாசத்திலே உண்டாகி
யானைகள் ஸம்பத்கரிக்குச் சேனையாம்
அச்வாரூடைக்குக் குதிரைகளாம்
தாயார் மந்திரிணியுடைய ஸ்ரீசக்ரத்தில்
தட்டுக்களேழுண்டு-சோபனம் சோபனம்

மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே
மஹாசக்திதேவிகள் நிறைந்திருக்காள்
விந்தையாய்ப் பதினாறு நாமத்தால் தேவர்கள்
மந்த்ரிணியை ஸ்தோத்திரங்கள் செய்தார்
சியாமளையுடைய திருக்கையிலிருந்து
தானும் பாணத்தோடொரு கோதண்டத்தை
நமஸ்கரித்தம்மனிடம் வாங்கியே மந்த்ரிணி
நாயகி வருகிறாள் –சோபனம் சோபனம்


பைரவி, பஞ்சமி பாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலி மாலினி சூலி வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே!”
என்கின்றார் அபிராமிபட்டர்.


பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள்.

இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர்,
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”
என்கின்றார்.

“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க்
கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல்
கூட வருகிறார் சக்திகளும்
தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி
அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும்
கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக்
கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம்

ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு
அஸுராள் மேல் கோபிஷ்டைகளாகக்
கோலாஹலமாக யுத்த பேரி வாத்யம் முழங்க
கொடி பறக்க அணியணியாய் வாராள்
தேவ வாத்தியம் முழங்க கந்தர்வர் கானம் பண்ண
தேவதாஸிகள் நாட்டியமாடிவர
தூயமுனிவர் மலர்சொரிய லலிதேச்வரி
சுகத்துடன் வருகிறாள்-சோபனம் சோபனம்

தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு
திடுக்கிட்டுப் பண்டாஸுரன் சபையில்
கோபத்துடனே சிம்ஹாசனத்திலிருந்து
கூடிய அஸுராளோடு யோசித்தான்
இடிபோல் அட்டகாசஞ் செய்தான், கோட்டை வாசல்கள்
எல்லாவற்றிலும் காவல் வைக்கச் சொன்னான்
குடிலாக்ஷன் மந்திரியை யுத்தத்திற்கனுப்பினான்
கோபிஷ்டை லலிதையுடன் – சோபனம் சோபனம்

அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம்.

9 comments:

 1. கொஞ்சம் விரிவாய்ப் போட நினைத்த பதிவு இது. இரண்டு நாட்களாய் ஆற்காட்டாரின் தொந்தரவு தாங்க முடியலை. அதனால் சுருக்கி(:D) போட்டிருக்கேன். பார்க்கலாம் அடுத்த பதிவையாவது ஒழுங்கப் போட விடறாரானு!

  ReplyDelete
 2. //தூய முனிவர்கள் மலர் சொரிய லலிதேச்வரி சுகத்துடன் வருகிறாள்.//

  நாமும் அவள் பாதாரவிந்தங்களில் மலர் தூவி எல்லோருக்கும் சுகத்தைத் தர பிராத்திப்போம்.

  நன்றி.

  அடுத்த பதிவை ஒழுங்காப் போட லலிதை அருள் புரிவாள்.

  ReplyDelete
 3. பதிவுகள் எல்லாம் தெய்வீக மணம் கமழ்கிறது. அம்மனின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.
  அதோடு ஆற்க்காட்டாரின் அருளும் தடையில்லாமல் கிடைக்க அந்த அம்மனே அருளட்டும்.
  நவராத்திரி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாங்க கோமதி அரசு, உங்க நல்வாக்குக்கு நன்றி.

  வாங்க நானானி, பண்டிகை சமயத்திலே தான் பார்க்கமுடியுது! :D அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும், இல்லையா??? நான் மட்டுமே வச்சுட்டு என்ன செய்யறதாம்??? :))))))))

  ReplyDelete
 5. நல்ல பதிவு கீதாம்மா
  அருள் பிரசாதம் எங்களுக்கும் கிடைக்கும் தானே !

  ReplyDelete
 6. பகிர்விற்கு நன்றிகள் மாமி.

  எனக்கு ஒரு விளக்கம்/பதில் வேண்டும்.

  த்ரயானம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் என்ற சௌந்தர்யா லஹரி ஸ்லோகத்தின் தமிழ் இப்படி ஆரம்பிக்கும்.

  மூவருக்கும் முதல் பிறப்பே , முக்குண

  அதன் முழு வடிவம் கிடைக்குமா.

  ReplyDelete
 7. //நான் மட்டுமே வச்சுட்டு என்ன செய்யறதாம்??? :))))))))//

  ஏன்? மிச்சத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கலாமே!!

  என்ன நாஞ் சொல்றது?

  ReplyDelete
 8. வாங்க ப்ரியா, சந்தேகம் எதுக்கும்மா?? அம்மனின் அருள் அனைவருக்கும் கிட்டும். நாம் வாழத்தான் உதவி செய்வாளே தவிர, வீழ அல்ல! நம்முடைய பூர்வ வினைகளும், அசட்டுத்தனமான சில முடிவுகளுமே நம்மைப்படுகுழியில் தள்ளுகின்றன. வரங்கள் பல பெற்றும் அதைச் சரியாகப் பயன்படுத்தாத அசுரர்களைப் போல! :)))))))

  ReplyDelete
 9. ராம்ஜி யாஹூ, இதை ஏற்கெனவே எழுதினேன், என்றாலும் மீண்டும் எழுதுகிறேன். செளந்தர்யலஹரியின் 25-வது ஸ்லோகம் அது. தேவியைப் பூஜிப்பதன் மூலம் மும்மூர்த்திகளையும் பூஜித்த பலன் கிட்டும் என்பதைச் சொல்லுவது. அதோடு யோகமுறையில் ஆன அர்த்தமும் வரும்.

  ReplyDelete