எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 30, 2011

கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி

எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க. அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது. மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க. காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க.

சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன்.

பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை. அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மேலே செய்ய வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் பற்றியே பேச்சு நடந்ததால், நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்துவிட்டு பிள்ளை வீட்டில் கடிதம் போட்டதும், வேலை துவங்கவேண்டும் என்ற அளவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மதியம் சாப்பாடும் ஆனதும், அவங்க சொந்தக் காரங்க காந்திகிராமத்தில் இருப்பதால் அங்கே போயிட்டு ஊருக்குப் போகப் போவதாய்ச் சொல்லவும், அப்பா அப்படியே என் பாட்டிக்கு மாப்பிள்ளையைக் காட்டவேண்டும் என்று கூறிவிட்டு டிவிஎஸ் நகரில் இருந்த என் மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய வருஷம் தான் தாத்தா இறந்து போயிருந்ததால் அப்புறம் பாட்டி வெளியேயே வரவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் மேல் குடும்பம் நடத்தி இருக்கார். ஐந்து வயசில் கல்யாணம் ஆகி இருந்தது அவருக்கு. அங்கே கூட்டிப் போய்விட்டுப் பின்னர் மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் அப்பா அவங்களை காந்தி கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி விட்டார். திரும்பி வருகையில் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. என்னனு எங்களுக்கு யாருக்கும் புரியவில்லை.

மறுநாள் அப்பாவைப் பார்க்க அப்பாவின் இன்னொரு நண்பர் வரவே அவரிடம் அப்பா முதல்நாள் பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததையும், திரும்பிப் போகும்போது என் மாமனார் பெண் உயரம் கம்மி, பிள்ளைக்கு ஏற்ற உயரம் இல்லைனும் பேசிக்கொண்டதாயும், பிள்ளையின் அத்தை பெண் ஒருத்தி இருப்பதால் அவளும் உயரமாயும் இருப்பாள் என்பதால் அதையே முடிச்சுடலாமா என யோசித்துக்கொண்டு பேசிக்கொண்டதாயும் சொன்னார். அப்போப் பார்த்து எங்க ஜோசியர் மாமா வந்தார். அவர் ரொம்ப ஏழை. எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கவும் மாட்டார். பார்த்ததுக்குப் பணமும் வாங்க மாட்டார். எப்போவானும் அவருக்குத் தேவை அவசியம் என்று தோன்றினால் மட்டுமே அப்பாவிடம் வந்து பணம் வாங்கிப்பார். கூடியவரையில் திரும்பக் கொடுப்பார். அப்பா வேண்டாம்னாலும் விட்டதில்லை. எதாவது அவசியம் என்றால் அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுங்கனு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ரொம்ப ஆசாரம் என்பதால் அன்னிக்கு வீட்டில் யாருக்கானும் அசெளகரியம், வீட்டு விலக்கு என்று தெரிந்தால் உள்ளேயே வரவும் மாட்டார். அப்படிப் பட்டவர் அவர் சொல்லித் தான் அப்பா இந்த வரன் விஷயத்திலேயே இறங்கி இருந்தார். இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். முதல்லேயே வேண்டாம்னு சொன்னேன். இப்போப் பாருங்க பெண்ணைப் பார்த்துட்டு இப்படிப் பேசிக்கறாங்கனு சொல்லி விட்டார். ஆனால் அவரோ அசரவே இல்லை. மறுபடியும் ஜாதகத்தைப் பாருங்கனு அப்பா சொல்ல, "தேவையே இல்லை. :" னு சொல்லிட்டு ஏதோ மனக்கணக்காய்ப் போட்டுவிட்டு, "உங்க பெண்ணுக்கு இந்தப் பிள்ளைதான். அடுத்த மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் ஆகிடும். வைகாசி மூணாம் தேதிக்குள் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் இதே பிள்ளையோட நடக்கும்." னு சொல்லிட்டு வேறே எதுவும் பேசாமல் கிளம்பிட்டார். தள்ளாடிட்டு போனவரை அப்பா கூப்பிட்டு, சாப்பிட்டுட்டுப் போங்கனு சொல்ல, "இன்னிக்கு எனக்கு இங்கே போஜனம் இல்லைனு தெரிஞ்சு தான் வந்தேன். நான் அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போயிட்டார்.

அப்பா சொன்னதற்கு ஏற்பப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற உடனேயே எக்ஸ்ப்ரஸ் தபாலில், (அப்போல்லாம் உண்டு, உடனே பட்டுவாடா பண்ணுவாங்க) பெண் பிடித்திருக்கிறது என்றும் ஆனால் உயரம் கம்மி என்பதால் யோசிப்பதாயும், மேலும் கல்யாணத்தை மதுரையில் நடத்தப் போவதாய் என் அப்பா கூறியதால் அவங்க தரப்பில் 200 பேருக்கும் மேல் கல்யாணத்துக்கு வருவாங்க என்றும் அதுக்காகச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். இல்லை எனில் கல்யாணத்தைக் கும்பகோணத்தில் நடத்தவேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். கடிதத்தைப் படிச்சதுமே அப்பாவுக்குப் பிடிக்கலைனு சொல்லாம ஏதோ சுத்தி வளைக்கிறாங்கனு புரிஞ்சு போய் வேறே ஜாதகங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டார். ஆனால் எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்.

68 comments:

  1. Maammi andha josya mamma innum irukaara.. Illai Avar sandhadhigal yaarachum pakraala....

    ReplyDelete
  2. ஹிஹி சினிமா மாதிரி செம டென்சன் போல. உங்கப்பா ரொம்ப டென்சன் ஆவாரோ ??

    ReplyDelete
  3. //எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்.//

    விதி வலியது!

    ReplyDelete
  4. சித்தி சேலை பத்தி இந்த பதிவிலேதானே வந்து இருக்கு? எப்படி ஜெயஸ்ரீ அக்கா போன பதிவு பின்னூட்டத்திலேயே எழுதினாங்க?

    ReplyDelete
  5. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை.// அட சொந்த வீட்டிலே இதெல்லாம் கேக்கணுமா? நாமா எடுத்து சாப்பிட வேண்டியதுதான்! :P:P

    ReplyDelete
  6. //இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். //
    பாவம்! அப்பா என்ன என்னை மாதிரி கோவக்காரரா? :-))

    ReplyDelete
  7. பாலாஜி அங்கிள், வடை உங்களுக்கே தான்! :))))))

    ReplyDelete
  8. இல்லை பாலாஜி, அது ஒரு சோகம். ரொம்ப ஏழைப்பட்டவர், தெலுங்கு பிராமணர் தான். கோபால ஐயர்னு பெயர். சொன்னால் சொன்னபடி நடக்கும். இப்போ இல்லை. அப்போவே அவருக்கு ஐம்பதுக்கு மேலே வயசிருக்கும். ஒரே பிள்ளை, மனநிலை சரியில்லாமலோ என்னமோ தெரியலை. அவர் தான் ஒரு விபத்திலே தான் செத்துப் போவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம், அப்படியே பேருந்து விபத்தில் மாட்டிக்கொண்டு போனார். எங்க அப்பா பல மாசங்கள் எனக்குத் தெரிவிக்கவே இல்லை. இது மட்டும் அவர் சொல்லி நடந்ததுனு சொல்ல முடியாது. கல்யாணம் ஆனதுமே நாங்க சென்னையிலே தான் குடித்தனம் போடுவோம்னு சொன்னார். அதையும் யாரும் நம்பலை. ஏன்னா அவர் அப்போ புனாவில் இருந்தார். மாற்றல் கிடைக்காதுனு சொல்லிட்டு என்னை மட்டும் புக்ககத்தில் விட்டுட்டுத் தான் போனார். முடிஞ்சால் தீபாவளிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் போன வேகத்தில் பதினைந்தே நாட்களில் மாற்றலில் திரும்ப வந்து சென்னையிலே வீடு பார்த்துக் குடித்தனமும் வைத்தது! எல்லாம் கண் மூடித் திறக்கறதுக்குள்ளேம்பாங்களே அப்படி நடந்தது. ஆனால் அப்படித் தான் அவசரமாத் தான் நடக்கும்னும் சொல்லி இருந்தார். அதுக்கப்புறமும் என் கணவரோட வேலையில் பிரமோஷன் கிடைச்சது, அப்போவே நாங்க வட மாநிலம் மாற்றல் எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ சர்வ நிச்சயமாய் இப்போ வடக்கே போக மாட்டார். இங்கேயே வேறே ஆபீஸுக்கு மாத்துவாங்க. ஒரு வருஷத்துக்கு அப்புறம் வடக்கே போவாங்க, அதுவும் தொலைதூரம்னு சொன்னார். இது தான் கடைசியா அவர் எங்களுக்குச் சொன்னது. அதுக்கப்புறமா அவர் இல்லை.:(

    ReplyDelete
  9. அவரோட உறவிலே என் சிநேகிதர் ஒருத்தர் இருந்தார். அவர் ஜாதகமும் பார்ப்பார், கையும் பார்ப்பார். அவர் கை பார்த்துச் சொல்லியது எனக்கு நடந்திருக்கிறது. இப்போ எங்கே இருக்காரோ?

    ReplyDelete
  10. ஹிஹிஹி எல்கே, எங்க அப்பா மட்டும் டென்ஷன் ஆகலை. வீட்டிலே எல்லாருக்குமே டென்ஷனா இருந்திருக்கும். ஆனால் அப்பா ரொம்பக் கோபக் காரர், கண்டிப்பும் கூட. :)))))

    ReplyDelete
  11. விதி வலியது!//

    @திவா, :P

    ReplyDelete
  12. @திவா, பின்னூட்டங்களை எல்லாம் ஒழுங்காப் படிக்கணும்னு இதுக்குத் தான் சொல்றது. அதிலே ஜெயஸ்ரீ நான் கட்டின புடைவை பத்திக் கேட்டிருந்தாங்க. பதில் சொல்லி இருந்தேன். :D

    ReplyDelete
  13. அட சொந்த வீட்டிலே இதெல்லாம் கேக்கணுமா? நாமா எடுத்து சாப்பிட வேண்டியதுதான்! :P:P//

    சாதாரண நாளானா சாப்பிட்டிருப்பேன். ஆனால் அன்னிக்கு முடியாதே! :P:P:P:P

    ReplyDelete
  14. பாவம்! அப்பா என்ன என்னை மாதிரி கோவக்காரரா? :-))//

    உங்களை மாதிரி?? ம்ம்ம்ம்ம்ம்?? உங்க கோபம் எப்படினு தெரியலையே?? :P உங்க கோபம் பெரும்பாலும் மெளனத்திலேயே இருந்திருக்கும், இல்லாட்டி மோனோசிலபலில் கோபத்தைக் காட்டுவீங்களா இருக்கும்.:)))))))))))))))) ஹிஹிஹி, அப்பாவோட கோபம் தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகம். அவரே சமாதானம் ஆனால் தான்ன் உண்டு. கன்னாபின்னானு கத்துவார்.

    ReplyDelete
  15. @திவா, இன்னிக்கு என்ன கமெண்ட் மழை?? :P:P:P:P

    ReplyDelete
  16. அட ராமா!!!!!! இதுவா சப்பு சப்புன்னு இருக்கு!!!!!!!!!


    என்னமோ போங்க. ஆனாலும் இவ்வளோ அவையடக்கம் கூடாது:-))))

    ReplyDelete
  17. பாவம் ஜோஸ்ய மாமா. !!!

    ம்... அட்டஹாஸம்.. இன்னும் சொல்லுங்கோ.
    கல்யாண full detail சொல்லணும் ஆட்டுமா?. பத்திரிக்கை, முஹூர்த்த புடவை கலர், நிச்சியதார்த்தத்துக்கு ஊஞ்சலுக்கு ரிஸப்ஷனுக்கு என்ன கலர் புடவை , ஜானவாஸம் மெனு போளி??? மாப்பிள்ளை அழைப்புக்கு முந்திரிபருப்பு, மிட்டாய் பருப்பு தேங்காய்... ஊர்வலத்துக்கு petromax light ?? இத்யாதி எல்லாம் detail ப்ளீஸ். முருக்குல பேர் உண்டா?? மட்டை தேங்கா உண்டுதானே ?? தஞ்சாவூர் ஸ்பெஷல்:)))))திரு. சாவியின் வாஷிங்டன்னில் திருமணம் ஞ்யாபகம் வந்தது:))))

    ReplyDelete
  18. ""விதி வலியது!""
    :))))))))))))) ஆமாம் மிஸ்டர் திவா!! அதை யாராலும் வெல்ல முடியாது!!

    ReplyDelete
  19. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு
    "ஓ அப்போலேந்தெ இருக்கா இந்த பழக்கம்." இப்போ இருக்குன்னு எங்களுக்கே தெரியும்".
    என் கணவர் தனியா எதுவும் கேட்கலை.
    "அடேங்கப்பா அப்பவே "கண்ணொடு கண்ணொக்கின் வாய் சொற்கள் பயனில" இல்லைன்னா "சில சமயம் அதிர்ச்சிலேகூட பேச்சு வராது"

    ReplyDelete
  20. அப்பாவோட கோபம் தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகம். அவரே சமாதானம் ஆனால் தான்ன் உண்டு. கன்னாபின்னானு கத்துவார். " சாம்பு மாமா என்ன
    சொல்லறீங்கோ பலமா சொல்லுங்கோ ""பிதுராஜ்ய சொத்து எங்கேயும் போகலை அப்படியே அம்பத்தூர் வந்துடுத்து அப்பிடிறீங்களா . சரி சரி நான் பங்களூர் கிளம்பறேன் மாமி வரதுக்குள்ளே

    ReplyDelete
  21. ஹிஹிஹி, துளசி, அப்படிங்கறீங்க, ஓகே, ஓகே நீங்க சொன்னாச் சரியாய்த் தான் இருக்கும், :)))))))))) நன்னி ஹை!

    ReplyDelete
  22. கல்யாணப் பத்திரிகை ரொம்ப சிம்பிளா அடிச்சிருந்தார் அப்பா. இன்னும் ஒரே ஒரு காப்பி பத்திரமா வச்சிருக்கேன். :D
    ஆனால் அவங்க வீட்டிலே க்ராண்டா இருந்தது. ஹிஹிஹி, என்னோட பேருக்கு ஒரு பத்திரிகை வந்ததா, என் தம்பியும், அவன் நண்பர்(ன்) கிருஷ்ணனுமாச் சேர்ந்து வாங்கி இருக்காங்க. என்னோட நெருங்கிய தோழி கல்யாணப்பத்திரிகைனு என் கிட்டேக் கொடுக்கச் சரியாப் படிச்சுப் பார்க்காம (அப்போ ஏதோ வேலையா இருந்தேன்னு நினைக்கிறேன்.) நான் பிரிச்சுப் பார்க்க, என்னடா இது பொண்ணு பேரு கீதா என்ற சீதாலக்ஷ்மி, சீ நம்மபேருன்னா இது என்று உறைக்க அப்புறம்தான் குழல் விளக்குக்கு மண்டையிலே ஏறினது. இது தான் ஹையஸ்ட் ரொமான்ஸ்.

    ப்ரியா, இது போதுமில்ல?? :)))))))))))

    ReplyDelete
  23. மிச்சம் அப்புறம், ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு பதிவாயிட்டு வருதுனு கூகிள் கிட்டே இருந்து திட்டு! :))))))

    ReplyDelete
  24. "ஓ அப்போலேந்தெ இருக்கா இந்த பழக்கம்." இப்போ இருக்குன்னு எங்களுக்கே தெரியும்".//

    ஹெஹெஹெஹெ, அப்பா, அம்மாவுக்கு பயமே இதிலே தான். கையையும், காலையும் வச்சுண்டு சும்மா இருந்தாக் கூடப் பரவாயில்லை, இது வாயை வைச்சுண்டு சும்மா இருக்காதேனு கவலைப்படுவாங்க. ஆனாலும் அம்மாவுக்கு தைரியம் என்னமோ இருந்தது. அப்பா அளவுக்கு இல்லை. சமாளிச்சுப்பேன்னு நினைச்சா. ஏன்னா எல்லா இடத்திலேயும் புகுந்து புறப்பட்டிருக்கேனே! :)))))))))

    ReplyDelete
  25. பிதுராஜ்ய சொத்து எங்கேயும் போகலை அப்படியே அம்பத்தூர் வந்துடுத்து அப்பிடிறீங்களா . சரி சரி நான் பங்களூர் கிளம்பறேன் மாமி வரதுக்குள்ளே//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  26. சிறந்த குடும்ப பதிவை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. வாங்க சுவனப்ரியன், பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  28. ஆஹா பெண்பாக்கர வைபவத்லேயே
    இவ்வளவு அமர்க்கள்மா? மேற்கொண்டு சொல்லுங்க. வெயிட்டிங்கு.

    ReplyDelete
  29. என்ன இவ்வளவு விறு விறுப்பா சம்பவங்கள் நடக்கிறது. சப்புச் சப்புனு பில்ட் அப்பா:)
    சாமி ஒ!! ஒரு கல்யாணம் நடக்கறதுக்குள்ள என்ன வெல்லாம் அடங்கி இருக்கு. பாவம் ஜோசியர். நல்ல மாதிரி சொல்கிறவா அவளப்பா இருந்தான்னு வரலாறே இல்லை.
    சுவையொ சுவை. தொடருங்கோ.

    ReplyDelete
  30. வாங்க லக்ஷ்மி, ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க. :)))

    ReplyDelete
  31. ஹிஹி வல்லி, எல்லாரும் பெண் பார்க்கிறச்சே நாங்க ரெண்டு பேரும் என்ன பேசிண்டோம், முதல்லே சொன்னது என்னனு கேட்டாங்க. முக்கியமா ப்ரியா. அதான் சொன்னேன் சப்புச் சப்புனு இருக்கும்னு! :))))

    உண்மைதான் அந்த மாதிரி ஜோசியம் சொல்றவங்கள் அப்புறம் பார்க்கலை. ஆனால் குஜராத்தில் என் கணவரோட ஆபீஸில் அவரிடம் வேலை பார்த்த ஒருத்தர் ஜோஷி என்பவர் எங்க பொண்ணு கல்யாணத்திலே சொன்னது சொன்னபடி நடந்தது. அதுக்கப்புறம் பலமுறை அவருக்கு ஜாதகங்கள் அனுப்பிக் கேட்க முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. செய்தி மட்டும் அனுப்புவார், இப்போ முடியலைனு. அவங்க வீட்டிலே ஒரு பழைய ஜாதகக்கணக்குப் புத்தகம் இருக்கு.

    தலைக்கு வச்சுண்டா கழுத்து வலிக்கும், அவ்வளவு உயரம். அதிலே எல்லார் ஜாதகமும் இருக்கும்னு சொன்னார் அவர். நாங்க முதல்லே நம்பலை. என் கணவர் அவரோடதும், என்னோடதும், பெயர் கொடுக்காமல் நக்ஷத்திரம், பிறந்த வேளை, ஊர் மட்டும் கொடுத்தார். எங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் அதிலேருந்து எடுத்துக்கொடுத்துட்டார்.

    எங்க ஜாதகங்களோட ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படியே டிட்டோ. இதெல்லாம் கணக்குப் போட்டு எழுதி வச்சுட்டுப் போயிட்டாங்கனு சொல்வார். நாட்டோட எதிர்காலம் கூட அதிலே இருக்குனு சொல்வார். ஆனால் பார்க்கிறதுக்கு ஏதேதோ சில சாஸ்திரங்கள், நேரம் அப்படினுஇருக்கும்பார்.

    ReplyDelete
  32. kalyaana kathai interesting.
    horoscope calculations are amazing to know. nallaarukku Geethammaa!

    ReplyDelete
  33. //இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது//
    பேசி இருந்தா சுதாரிச்சு இருக்கலாம்னு யாரோ பீல் பண்றாளாமே மாமி... அப்படியா...:)))

    //"அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்//
    ஆஹா... பெரிய சுவாரஷ்யமான எபிசொட் இருக்கு போலியே... சீக்கரம் சீக்கரம்...:)))

    ReplyDelete
  34. தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கேன் கீதாம்மா..

    ReplyDelete
  35. தலைவி கல்யாணம்ன்னா சும்மாவா....யப்பா!!! :)

    எப்போ அந்த கருப்பு வெள்ளை படம் போட போறிங்க..கடைசி பதிவுலியா!? ;))

    ReplyDelete
  36. வாங்க நானானி, பல நாட்கள் கழித்துப் பார்க்க முடிந்தது. வருகைக்கு நன்றி. நீங்க சொல்லுவது உண்மை. அப்படி ஒரு ஜோசியரை இன்று வரை கண்டதில்லை. எங்க பொண்ணுக்குப் பார்த்துச் சொன்னவரும் இப்போக் கல்யாணம் ஆகாது என்றும், முயற்சி செய்ய வேண்டாம் என்றும் சொன்னார். அப்படி இருந்தாலும் நீங்க செய்யும் முயற்சிகள் பலனளிக்காது என்றும் மூணாவது தரம் எடுக்கும் முயற்சியே பலனளிக்கும் என்றும் மட்டும் சொன்னார். பையர் யார், எப்படினு எல்லாம் சொல்லவில்லை. ஆனால் பெண் வெளிநாட்டில் தான் இருப்பாள் என அடித்துச் சொன்னார். நாங்க நம்பலை. பெண்ணைக் கொடுக்கும்போதும், பெண்ணோட கண்டிஷனும் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்னு தான். எங்களுக்கும் வேண்டாம்னு தான் இருந்தது. அப்போ மாப்பிள்ளை மும்பையில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் தான் இருந்தார். திருமணம் ஆகி இரண்டே மாசத்தில் வெளிநாடு போயாச்சு! :P:P:P

    ReplyDelete
  37. பேசி இருந்தா சுதாரிச்சு இருக்கலாம்னு யாரோ பீல் பண்றாளாமே மாமி... அப்படியா...:)))//

    ஹிஹிஹிஹி, ஏடிஎம், உங்களுக்கு நடந்ததை எல்லாம் அப்படியே எனக்கு நடந்தாப்போல் சொல்றீங்களே? எனக்கு கோவிந்த் மெயில் வந்துச்சே! :))))))))))

    ReplyDelete
  38. வாங்க அமைதி, அமைதியாத் தொடர்ந்து வரேங்கறீங்க. நன்றிம்மா.

    ReplyDelete
  39. அதானே கோபி, பின்னே என்ன சும்மாவா? தலைவின்னால் ஒரு பில்ட் அப் வேண்டாம்?? ஹிஹிஹி, அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது! அதைப் போடணும்கறீங்க?? :P

    ReplyDelete
  40. எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க.//

    ஆமாம் ! ஏதோ நமது உறவினரின் திருமணம் நடக்க போகிறது என்ற ஆவலை தான் இந்த பதிவுகள் தருகின்றன:)

    எங்களுக்கு ஆவலை மேலும் அதிகரிக்க செய்து கொண்டும் இருக்கிறது கீதாம்மா !

    ReplyDelete
  41. //அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். //



    திருமண முன் பின் நிகழ்வுகளை நீங்க விவரிக்கும் விதமும் சுவையாக தான் இருக்கிறது

    சப்புன்னு நீங்க சொன்னாலும் படிக்க சுவையாக தான் இருக்கிறது :)



    //இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது.//

    அடடே ! ஜெயஸ்ரீ மேடத்துக்கு கிடைத்த நிமிடங்கள் கூட அப்போ பெரிய விஷயம் தான் இல்லையா !

    ReplyDelete
  42. //மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க.//

    காப்பியை கொடுத்து மாப்பிளையை கவர் பண்ணறாங்க போல !

    //காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. //

    ஆஹா! பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டதாக்கும் !



    /சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே.

    கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. //

    முகம் ஏன் சிவந்தது என்பதற்கு கொஞ்சம் டென்சன் அப்படி என்றும் சொல்லலாம் இல்லையா கீதாம்மா

    ReplyDelete
  43. //அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன். //

    ஹ ஹா அடுத்தவங்களை சீண்டும் போது வரும் உற்சாகமே தனி தான் :)

    //பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி,

    அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். //

    மாப்பிளை அந்த கோலத்தை கவனித்தாரா !

    ReplyDelete
  44. //கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை.//

    முதல்லே உங்களுக்கு பசிச்சுதா!

    அப்புறம் வீடே உங்களுடையது ;அதற்க்குள் உங்களை உபசாரம் பண்ணனும்ன்னு நினைத்தா எப்படி

    கீதாம்மா :) :)

    ReplyDelete
  45. //அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. //

    இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் ! மனதிற்க்குள் தோன்றிய முதல் எண்ணம்!!!!!!



    //அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! //

    அமிதாப் ஜெயா பாதுரி பத்தி ஏன் யாரும் சொல்ல வில்லை !

    ஏன்னா அவங்களுக்கு அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் ஆச்சாம் !

    ReplyDelete
  46. அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.//

    வீணை வாசிக்க தெரியுமான்னு கேட்கலையாக்கும் !

    அப்புறம் உங்க கிட்டே தனியா எதுவும் கேட்காததாலே உங்களுக்கு மகிழ்ச்சி தானே

    இத்துடன் இந்த அளவில் கமெண்ட்ஸ் ஐ நிறைவு செய்யட்டுமா கீதாம்மா !

    ReplyDelete
  47. //சீ நம்மபேருன்னா இது என்று உறைக்க அப்புறம்தான் குழல் விளக்குக்கு மண்டையிலே ஏறினது. இது தான் ஹையஸ்ட் ரொமான்ஸ்.//

    நினிச்சேன்! சரி ஹையஸ்ட் ரொமான்ஸ் இருந்தா லோயேஸ்ட்ரொமான்ஸ் ம் இருந்து இருக்குனுமே !


    //ப்ரியா, இது போதுமில்ல?? :)))))))))))//

    ஹி ஹீ ம்ஹும்! போதாது !!

    இன்னும் வேணும் :) :)

    தங்க தலைவியோட அந்த நாள் நிகழ்வுகளை நகைச்சுவையோடு படித்து ரசித்து கொண்டு இருக்கிறோம்

    களம் ,காலம் ,பெற்றோர்களின் கடமை ,உபசரிக்கும் பாங்கு,அதை ஒட்டிய நிகழ்வுகள் , சித்தி சேலையில் ஆரம்பித்து

    ஜோதிட காரர் வரை குறிப்பிட்ட நேர்த்தி !

    கலக்கறீங்க கீதாம்மா !!!!!!!!!!

    ReplyDelete
  48. பேசி இருந்தா சுதாரிச்சு இருக்கலாம்னு யாரோ பீல் பண்றாளாமே மாமி... அப்படியா...:)))//


    ஹிஹிஹிஹி, ஏடிஎம், உங்களுக்கு நடந்ததை எல்லாம் அப்படியே எனக்கு நடந்தாப்போல் சொல்றீங்களே? எனக்கு கோவிந்த் மெயில் வந்துச்சே! :))))))))))//

    அப்போ உங்க ரெண்டு பேருக்கும் இது நடந்து இருக்குன்னு எங்களாலே யூகிக்க முடியுது ஹ ஹா

    ReplyDelete
  49. /அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது! அதைப் போடணும்கறீங்க?? :ப//



    அது என்னவோ தெரியலை ! உங்களை நினைக்கும் போது இப்போ எல்லாம் சில சமயம்

    பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை

    அதனாலே விரைவில் போடுங்க கீதாம்மா :)

    ReplyDelete
  50. வாங்க ப்ரியா, லேட்டா வந்தாலும் கமெண்ட்ஸ் எல்லாம் லேட்டஸ்டா அள்ளி விட்டிருக்கீங்க போல? :D

    ஆவல்?? அது சரி! எங்களோட குழந்தைங்க இப்படித் தான் எங்க கிட்டே கேட்பாங்க, பழசெல்லாம் கேட்பாங்க. அலுக்காது அவங்களுக்கும். :)))))))

    சுவையாய் இருந்தால் நல்லது ப்ரியா, நான் கொஞ்சம் யோசிச்சேன், இன்னிக்குத் தான் என் கணவரிடம் இதைப் பத்திச் சொன்னேன், இந்த மாதிரி எழுதறேன், சிலருக்கு நிஜம்மா இப்படி நடந்ததானு ஆச்சரியம்னு சொன்னேன், சிரிச்சார், மேலே இன்பம், துன்பம் னு ஒருத்தர் கேட்டிருக்கார் பாருங்க கதையானு. அதைச் சொன்னேன்.

    ReplyDelete
  51. ஆம், ஜெயஸ்ரீ மேடத்துக்குக் கிடைத்தது பெரிய விஷயம் தான் என்றாலும் இதில் இரு தரப்புப் பெற்றோரின் மனப்பான்மையும் அடங்கும் என்பது என் கருத்து. என்ன தான் படிச்சு உத்தியோகம் பார்த்தாலும் என்னோட அப்பா இதுக்குச் சம்மதிக்கலை. :))))))))))) ஆனால் இதை அந்தக் காலம்னு சொல்லவும் முடியலை. ஏனென்றால்...........


    எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்தப்போ தனியாப் பேச ஒத்துண்டா என்றாலும் திருமணத்துக்கு முன்னாடி கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் போன்றவற்றுக்கு உறுதியாக மறுத்துவிட்டாள். அதே போல அப்போத் தான் ஆரம்பம் ஆகி இருந்த திருமணத்துக்கு முதல்நாளே ரிசப்ஷன் என்பதற்கும் உறுதியான மறுப்பைத் தெரிவித்தாள். தாலி கட்டி, அம்மி மிதிச்சு, சப்தபதி முடிஞ்சதுனா இது என் ஹஸ்பண்ட் என்று என் சிநேகிதிகளிடம் அறிமுகம் செய்வேன். முதல் நாளே என்ன சொல்றது? நாளைக்கு இவர்தான் எனக்குத் தாலி கட்டப் போறார்னா?? என்னாலே முடியாதுனு சொல்லிட்டா. எங்களுக்கும் அதே கருத்துத் தான். ஆகவே முதல்நாள் ரிசப்ஷன் எங்க பொண்ணு, பையர் யார் கல்யாணத்திலும் வைக்கலை. கல்யாணம் முடிஞ்சு நலுங்கும் முடிஞ்சு அன்று மாலைதான் ரிசப்ஷன். :)))))))

    ReplyDelete
  52. மாப்பிளை அந்த கோலத்தை கவனித்தாரா !//

    நீங்க வேறே, அவருக்கு அதிலெல்லாம் அவ்வளவு இண்ட்ரஸ்ட் இல்லை. :P ஆனால் என்னோட மாமியார் கவனிச்சிருக்காங்க. கவனிச்சுக் கவலைப்பட்டிருக்காங்க. அது ஏன் என்பது சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))))))

    ReplyDelete
  53. முதல்லே உங்களுக்கு பசிச்சுதா!


    அதெல்லாம் பசிச்சது. அப்படி எல்லாம் கனவிலே எல்லாம் மிதக்கலை. பொதுவாகவே ரொம்ப எதிர்பார்ப்புக் கிடையாது. கல்யாண விஷயத்திலே எதுவும் ஆசைனு வச்சுக்கலை. பெரியவங்க நமக்கு நல்லது தானே செய்வாங்க. என்ன கொஞ்சம் டென்ஷன் இருந்தது என்னமோ உண்மை/

    ReplyDelete
  54. அமிதாப் ஜெயா பாதுரி பத்தி ஏன் யாரும் சொல்ல வில்லை !

    ஏன்னா அவங்களுக்கு அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் ஆச்சாம் !//

    இல்லை, அவங்களுக்கு எங்களுக்கு முன்னாடி ஆயிடுச்சுனு நினைக்கிறேன். ம்ம்ம்ம்ம்?? பார்த்துட்டு கன்பர்ம் பண்ணறேன். :)))))))

    ReplyDelete
  55. வீணை வாசிக்க தெரியுமான்னு கேட்கலையாக்கும் !//

    எனக்கு ஆசைதான் வீணை கத்துக்கணும்னு. ஆனால் எங்க வீட்டுச் சூழ்நிலையிலே அதெல்லாம் முடியாது. எல்லாத்துக்கும் அப்பாவோட சாங்ஷன் வேணும், அவ்வளவு சுலபமாக் கிடைச்சுடாது! :))))))))))))


    பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை?? :P:P:P:P

    ReplyDelete
  56. கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  57. பொண்ணு பிடிச்சிருக்குனு தெரிஞ்சு போச்சுனு தானே சொல்றீங்க (இல்லே சமையல் பிடிச்சிருக்குன்னா?)
    >>>மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு

    சாப்பிடுறதை வச்சு பெண் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்குற டெக்னிக் இருக்கா?

    ஜோசியர் நம்ப முடியாத ஆச்சரியம்.

    சுவாரசியமா உண்ட மயக்கம் தீர கேக்குற கதை போலப் போகுது.

    ReplyDelete
  58. பாக்யம் ராமசாமி நினைவு படுத்திட்டீங்க.. இந்த வாரம் ஆப்பிரிக்க அழகியை எடுத்துப் படிக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  59. அதென்ன இவ்வளோ ஓ? ஓ தேர்தல் வருது இல்லே? 49 ஓ வா இருக்கும்! :P:P

    ReplyDelete
  60. >மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு//

    அப்பாதுரை, கிட்டத் தட்ட அப்படித்தான்.

    //சாப்பிடுறதை வச்சு பெண் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்குற டெக்னிக் இருக்கா//

    அவங்க சாப்பிடும்போது (கீழே வந்து சாப்பிட்டாங்க) அவங்க இலையில் இல்லாததைப் பரிமாறச் சொல்லிச் சித்தியையும், அம்மாவையும் கூப்பிட்டுச் சொன்னேனா?? ஆடிப் போயிட்டாங்கல்ல! :)))))))

    அந்த ஜோசியர் சொன்ன நிறைய விஷயங்கள் அப்படியே நடந்திருக்கு.

    சுவாரசியமா உண்ட மயக்கம் தீர கேக்குற கதை போலப் போகுது.//

    கதை இல்லை, உண்மை! :P :))))))))))

    ReplyDelete
  61. //priya.r said - பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை//

    ஹா ஹா ஹா... இதுக்கு மாமிய நேராவே "பாட்டி"னு கூப்பிட்டு இருக்கலாம் ஐ சே...இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு சேம் சைடு கோல் போட வராது ப்ரியாக்கா ஒத்துக்கறேன்... ஹையோ ஹையோ...:)))

    ReplyDelete
  62. //கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ//
    ஹி ஹீ 73 ஓ வுக்கு தேங்க்ஸ் கீதாம்மா !!

    ReplyDelete
  63. தோ பாருங்க !

    எங்க தங்க தலைவி

    கடமை கண்ணியம் கட்டுப்பாடில்

    ஒரு சீதா(PR ஹீரோயின்),ஒரு JJ ,ஒரு பிரதீபா பாட்டில் மாதிரி

    ஆகவே அப்பாவி உங்க பருப்பு இங்கே வேகாது !

    ஆயிரம் தான் சொல்லுங்க அப்பாவி ! நீங்க வேற கட்சி

    நாங்க வேற கட்சி

    எங்க கட்சியில் நாங்க ஆடுவோம் பாடுவோம் ஜாலியோ ஜிம்கானா!!

    ReplyDelete
  64. //எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்தப்போ தனியாப் பேச ஒத்துண்டா என்றாலும் திருமணத்துக்கு முன்னாடி கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் போன்றவற்றுக்கு உறுதியாக மறுத்துவிட்டாள். அதே போல அப்போத் தான் ஆரம்பம் ஆகி இருந்த திருமணத்துக்கு முதல்நாளே ரிசப்ஷன் என்பதற்கும் உறுதியான மறுப்பைத் தெரிவித்தாள். தாலி கட்டி, அம்மி மிதிச்சு, சப்தபதி முடிஞ்சதுனா இது என் ஹஸ்பண்ட் என்று என் சிநேகிதிகளிடம் அறிமுகம் செய்வேன். முதல் நாளே என்ன சொல்றது? நாளைக்கு இவர்தான் எனக்குத் தாலி கட்டப் போறார்னா?? என்னாலே முடியாதுனு சொல்லிட்டா. எங்களுக்கும் அதே கருத்துத் தான். //

    ஆஹா! என்ன ஒரு தெளிவு! தீர்மானம் !!

    தாய் எட்டு அடி பொண்ணு பதினாறு அடி !

    அவருக்கு எனது வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  65. \\அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது! அதைப் போடணும்கறீங்க?? :P\\

    கல்யாண படம் இருந்தால் கூட போடுங்க ;) எனக்கு என்னாமே தொடர்ந்து வருவதால் அந்த படம் தான் சரியாக இருக்குமுன்னு தோணுது ;)

    ReplyDelete