யு.எஸ்ஸுக்கு மூன்று முறை வந்தும் எங்கேயும் சுற்றிப் பார்க்கப் போனதில்லை. முதல் முறை அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையரைப் பார்க்கச் சென்ற போது அங்கே ஸ்மோக்கி மவுன்டன்ஸ், இன்க்ளைன்ட் ரயில் பயணம், குகைக்குள்ளே ரூபி ஃபால்ஸ் போன்றவை பார்த்தோம். அப்போ இணையத்தில் எழுத ஆரம்பிக்கவில்ல. எழுத ஆரம்பித்ததும் சென்ற முறை வந்தப்போ அதிகமா எங்கேயும் போக முடியவில்லை. அருகே இருக்கும் கால்வெஸ்டன் பீச்சுக்கு மட்டும் காலை கிளம்பிப் போய்விட்டு மாலை வந்தோம்.
இம்முறை இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் சான் அன்டானியோவுக்குப் பையர் அழைத்துச் சென்றார். சான் அன்டானியோ கதையும், அங்குள்ள ரிவர் வாக்கும் தனியாக வரும். இப்போது அங்கே பார்த்த ஸீ வேர்ல்ட் பற்றி மட்டுமே. கடல், கடல் சார்ந்த பிராணிகள் குறித்த இந்தப் பூங்கா குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ருசிகரமாய் ஆவலைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஸீ வேர்ல்டுக்குள் போக டிக்கெட் மட்டும் ஒருத்தருக்கு 50 டாலர். அதோடு தண்ணீர் மட்டும் எடுத்துப் போகலாம். உள்ளே சென்றால் வெளியே வரக் குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும். ஆனால் சாப்பாடு உள்ளே விற்பதைத் தான் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்க என் கணவரின் நீரிழிவு நோயைக் காரணம் காட்டிவிட்டு குட் டே பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்ல அநுமதி வாங்கிக் கொண்டோம். மற்றப் பழங்கள், உணவுப் பொருட்களைக் காரிலேயே வைக்கும்படி ஆயிற்று. இதோ ஸீ வேர்ல்டின் நுழைவாயில்.
நுழைகையில் பாதுகாப்புச் சோதனை உண்டு. சிறு குழந்தைகளுக்கும் பாதுகாப்புப் பரிசோதனையோடு குழந்தைகளின் கை விரல் அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. உள்ளே போய்க் குழந்தை பிரிந்துவிட்டால் அடையாளம் காண வேண்டி எனச் சொன்னார்கள். நல்ல யோசனைதான். உள்ளே நுழைகையிலேயே கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நாம் வருஷம் பூராவும் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இவர்கள் கொண்டாடும் இந்த ஒரே நாள் பண்டிகைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மனதைக் கவர்கிறது. முக்கியமாய்க் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த சான்டாவின் பலவேறு விதமான கோலங்களை எங்கும் காணலாம். ஒரு சிலர் சான்டாவைப் போல் உடையணிந்தும் காணப்படுகிறார்கள். அவர்களைப் படம் எடுக்கிறதுக்குள்ளாகக் காட்சி மாறிவிட்டது. முதலில் ஷாமு ஷோ பார்க்கச் சென்றோம்.
இந்த ஷாமு 1961-ல் பிடிபட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தில் ஒன்று. பெண் திமிங்கிலமான இது உலகின் நான்காவது பெரிய திமிங்கிலமாகவும், இரண்டாவது பெண் திமிங்கிலமாகவும் இருந்ததோடு பொதுமக்களின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டது. நாளாவட்டத்தில் இதைப் பழக்கி ஷாமு எனப் பெயரிட்டு சான் டியாகோவில் இருந்த ஸீ வேர்ல்ட் காட்சியில் நக்ஷத்திர அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் குழந்தைகள், பொதுமக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த இந்த ஷாமு பதின்மூன்று மாதங்களே காட்சிகளில் வந்தது. 1971-ல் இது இறந்ததாய்ச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பல திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்துக்கும் பிரபலமான ஷாமுவின் பெயரையே சூட்டினார்கள். அது சான் டியாகோவில் மட்டுமில்லாமல் எந்த மாநிலத்தின் ஸீ வேர்ல்ட் காட்சியாக இருந்தாலும் ஷாமுவின் பெயரிலேயே காட்சி நடந்து வருகிறது. காட்சியின் சில பகுதிகளைக் காணலாம்.
நாங்கள் அமர்ந்திருக்கும் பக்கம் அருகே வந்த திமிங்கிலத்தையும் அதே சமயம் எதிர்ப்பக்கம் போன திமிங்கிலத்தையும் காணலாம்.
எதிர்ப்பக்கம் சென்ற திமிங்கிலம்.
குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமான வேஷங்களில் காட்சி கொடுப்பவர்கள். இப்போது கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்துக் காட்சிகளும் அதை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸின் புனிதமும், கிறிஸ்துவின் அறிவுரைகளும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், சான்டாவைப் பற்றியும், அவர் எவ்வாறு நல்ல குழந்தைகளுக்கு அருமையான பரிசை அளிப்பார் எனவும், வழி தவறும் குழந்தைகளை எவ்வாறு அரவணைத்துத் திருத்திப் பெரிய பரிசளிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
இவர்களோடு கை குலுக்கி உரையாடிப் படங்கள் எடுத்துக்கொள்கின்றனர் குழந்தைகள் தனியாகவும், அவர்கள் குடும்பத்தினரோடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இடம் அடைக்கும் என்பதாலும், திறக்க நேரம் பிடிக்கும் என்பதாலும் ரெசலூஷனைக்குறைச்சுப் போட்டிருக்கேன் சில படங்களை. சரியா வந்திருக்கானு தெரியலை. தொ.நு.நி. மன்னிக்க. :P
சாண்டியாகோவைப் பற்றிய தகவல்கள்- பதிவு நன்று.
ReplyDeleteபடங்கள் நல்லா வந்துருக்கு கீதா.
ReplyDeleteநாங்க சான்டியாகோ போன சமயம் அங்கே ஒரு திமிங்கிலம் குட்டி போட்டுச்சு. அதைப் பார்த்து பிரமிப்புதான்.
ஊர் சுற்றல் விவரங்களுக்கு வெயிட்டிங்:-)
படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு, மாமி. சான் அன்டானியோ பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDeleteஅடுத்தது எங்க??
வாவ்...சூப்பர் பிக்சர்ஸ்... கலக்கல் போஸ்ட் மாமி...enjaaaaai....;)
ReplyDeleteஇந்த ஷாமு தான் முக்கால்வாசி எல்லார் வீட்டுப் பசங்களுக்கும் கம்பானியன். பெரிய பேரனிடமிருந்து இப்போ சின்னப் பேரனுக்கு வந்திருக்கு.
ReplyDeleteபடங்கள் நன்றாகத்தான் வந்திருக்கின்றன கீதா.
விச்சு, நல்வரவு. நாங்க போனது டெக்ஸாஸில் சான் அன்டானியோ, சான் டியகோ கலிபோர்னியாவில் இருக்கு.
ReplyDeleteவாங்க துளசி, நாங்க சான் டியகோ போகலை. :))))
ReplyDeleteநன்றி ராம்வி.
ReplyDeleteஏடிஎம், திடீர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteஆமாம் வல்லி, அந்த முதல் ஷாமுவுக்கு அப்புறமா எல்லாத் திமிங்கிலங்களுக்கும் எல்லா ஊர்களிலும் ஷாமு என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள். :)))))
ReplyDeleteஇன்னுமா எல்லா ஸீ வோர்ல்ட் லையும் இந்த ஷாமு பெயரை விடாம பிடிச்சு வச்சுண்டிருக்கா !!எத்தனாவது ஜெனரேஷனோ!!:)))
ReplyDeleteபசங்களுக்கு ரொம்ப பிடிச்சது ஷாமு!!
ReplyDelete