எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 24, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 1

வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதைப் பல்லாண்டுகளாய்த் தொலைக்காட்சி மூலம் பார்த்து வருகிறோம்.  நாங்க மதுரையில் இருந்த வரையில் அப்பா மேலமாசி வீதி கூடலழகர் கோயிலுக்கும், நான், அண்ணா, தம்பி, அம்மா, வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும் ஸ்வர்க வாசல் திறக்கப் போயிடுவோம்.  வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் கோஷ்டிகளில் நாங்கள் கலந்துக்காத நாட்கள் சொற்பமே.  அந்தப் பிரசாதத்தின் சூடுக்கும், சுவைக்குமே அங்கே போவோம் என்று சொல்வதில் தயக்கமே இல்லை.  பொதுவாய்ப் பெருமாள் கோயில்களில் எப்போவும் ஏதேனும் ஒரு சந்நிதியில் ஏதேனும் ஒரு சாப்பாடோ அல்லது லட்டு, அதிரசம், வடை போன்றவையோ கொடுத்துட்டுத் தான் இருப்பாங்க.  பெருமாள் கோயில்களுக்குப் போயிட்டு வெறும் வயிறோடு வந்தோம்னே இருக்காது. :))))

ஹிஹிஹி, சொர்க்க வாசல் பத்தி ஆரம்பிச்சுட்டுப் பிரசாதத்துக்குப் போயிட்டேனா!    வடக்குக் கிருஷ்ணன் கோயில் சொர்க்க வாசலுக்கு நிறையத் தரம் போயாச்சு.  கோயில் ஒரு மாடக்கோயில்.  பல படிகள் ஏறி மேலே போகணும்.  நாங்க முன்னாடியே போய் உள்ளே இடம் பிடிச்சுப்போம்.  மேலாவணி மூலவீதியிலேயே வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு பிரிவதால் சிரமம் ஒண்ணும் இல்லை. கிருஷ்ணரோட இராப்பத்து, பகல்பத்து உற்சவங்களை பள்ளியில் அரைப் பரிக்ஷை நேரமாக இருந்தாலும் பார்க்காமல் இருந்தது இல்லை.  ஸ்கூல் பாடமெல்லாம் படிச்சு முடிச்சுட்டு சாப்பாடும் சாப்பிட்டுட்டு இராப்பத்துக்குக் கிளம்புவோம்.  உற்சவக் கடைசி நாள் கண்ணாடிப் பல்லக்கு திருநெல்வேலிக் கண்ணாடிச் சப்பரம்னு அலங்காரம் தூள் பறக்கும்.  குதிரை வாகனத்தில் வையாளி சேவையும் பார்த்திருக்கேன்.  வையாளி சேவை குறித்துப் பழம்பாடல் ஒண்ணு எங்கோ படிச்சது அரைகுறை நினைவு.

வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”


என்று நினைவு.   இதையெல்லாம் அவ்வப்போது ரங்க்ஸ் கிட்டே பேசிண்டு இருக்கிறச்சே சொல்லுவேன்.  இப்போ ஸ்ரீரங்கம் வந்ததும், அவருக்கு வைகுண்ட ஏகாதசிக்குச் சிறப்பு தரிசனத்துக்குப் போகணும்னு ஆவல்.  அவர் சிதம்பரம், கும்பகோணம் ஆகிய ஊர்களில் படிச்சாலும் இதெல்லாம் பார்த்ததில்லை.  ஆகவே வைகுண்ட ஏகாதசிக்குச் சில நாட்கள் முன்னால் இருந்தே தகவல்கள் திரட்டினார்.  அப்போ எதிர் வீட்டுக்காரங்க திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய புத்தகத்தைக் கொடுக்க, அதிலே சிறப்புச் சேவைக்கட்டணமாக ௹. 2,000/- இது சந்தனு மண்டபத்திலே பெருமாள் முதல்லே வரச்சே பார்க்கக் கூடிய இடம் , அடுத்து ௹ 300/-  இது கிளி மண்டபம் தாண்டி அர்ச்சுன மண்டபத்திலே இருந்து பெருமாள் பிராஹாரம் சுத்திப் போறப்போப் பார்க்கிறதுக்கு என இரண்டு திட்டங்கள் போட்டிருந்தன.  கூடவே அலுவலகத் தொலைபேசி எண்ணும் கொடுக்க, தொலைபேசி விசாரிக்கையில் விண்ணப்பம் எழுதிக் கொண்டு கொடுக்கச் சொன்னாங்க.  நாங்க விசாரிச்ச அன்னிக்குத் தான் விண்ணப்பம் கொடுக்கக் கடைசி நாள்.  அவசரம் அவசரமாக ஓடினால், ஃபோட்டோ வேணும்னு கேட்க, அவரோட ஃபோட்டோ இருந்தது.  என்னுடையது கிடைக்கலை.  அங்கே இங்கே தேடிக் கண்டு பிடிச்சு ஒரு ஃபோட்டோவைத் தேத்தி எடுத்துக் கொண்டு கொடுத்தார்.

விண்ணப்பத்தை வாங்கினதுமே உங்களுக்கு ௹.2,000/- கிடைக்காது.  300௹ தான் கிடைக்கும்னு சொன்னாங்களாம்.  பார்க்கலாம்னு சொல்லிட்டு ரிசல்ட் என்னிக்குனு கேட்டுட்டும் வந்தார்.  பரிக்ஷை ரிசல்டை விட இந்த ரிசல்டை அதிகம் எதிர்பார்த்தோம்.  21, 22 தேதிகளில் ரிசல்ட் எனச் சொன்னார்கள்.  இதுக்கு நடுவே வீட்டில் விருந்தினர்கள் வருகையும், போகையுமாக இருக்க வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது.


பின் குறிப்பு:  இந்தப் பதிவுகளில் இம்மாதிரிப் பொதுவான விபரங்கள் மட்டுமே கொடுக்கிறேன்.  வைகுண்ட ஏகாதசி குறித்த விபரமான பதிவுகளை ஆன்மிகப் பயணம் பக்கத்தில் சென்று பார்க்கவும். நன்றி. :)))

8 comments:

  1. பகல்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள் சென்று சேவிச்சுட்டு வந்தேன். அதன் பின்பு ரோஷ்ணிக்கு பரீட்சை என்பதால் போகவில்லை. நேற்று மோகினி அலங்காரம் இரண்டு மணிநேரம் வரிசையில் காத்திருந்து சேவிச்சுட்டு வந்தேன்...:)

    இன்று ரத்னாங்கி சேவையை வரிசையில் நிற்காமல் சற்று தள்ளி நின்றே பார்த்துட்டு வந்துட்டேன்...:)

    சொர்க்கவாசல் படி மிதிப்பதற்கு நிற்கும் வரிசையை பார்த்தால் காலையில் நின்றால் சாயங்காலம் பார்க்கலாம்...:))

    அதனால் முடிந்தால் இன்று மாலை, இல்லையென்றால் இரண்டு நாள் கழித்து செல்லலாம் என்று வந்து விட்டோம்.

    ReplyDelete
  2. காலை டிவியில் ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு காட்டும்போது எங்கள் மச்சினர் குடும்பத்தைப் பார்க்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது (:))) எல்லோரும் பெருமாளைத்தான் பார்ப்பாங்க..!) நீங்கள் எங்காவது கண்ணில் படுகிறீர்களா என்று பார்த்தேன்! :)))))))))))))

    ReplyDelete
  3. பேருக்கு,.. 'வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில்' என்று ஆரம்பித்து, சொந்த மதுரை புராணம் மண்வாசனை கமகமக்க வாசித்து விட்டு, இரண்டு பாரா தாண்டி,
    இப்போ ஸ்ரீரங்கம் வந்த பிறகு.. என்று சாவகாசமாக..

    ReplyDelete
  4. //ஹிஹிஹி, சொர்க்க வாசல் பத்தி ஆரம்பிச்சுட்டுப் பிரசாதத்துக்குப் போயிட்டேனா! //
    இதெல்லாம் நமக்கு சகஜம்தானே. நானும் இங்க இருக்கற பெருமாள் கோவில் போகும் போதெல்லாம் என்னதான் மெய் மறந்து சுவாமி தரிசனம் பண்ணிண்டு இருந்தாலும், பிரசாதம் குடுக்கற நேரம் டான்னு அங்க போய் நின்னுடுவேனாக்கம். :) என் பிரிண்ட்ஸ் எல்லாம் என்னய்யா, இங்கதான இருந்த அதுக்குள்ள எங்கயா போனேன்னு கேட்டா, அவங்க வாயிலேயும் கொஞ்சம் போடுவேன், அடுத்து அவங்களும் தானா நேரா queue ல போய் நின்னுடுவாங்க. "தான் கேட்ட குரங்கு வனத்தையும் சேத்து கெடுத்துதாம்" ஏதோ நம்பளால ஆனா உபகாரம். :)

    இப்ப ரெண்டு நாள் முன்னாடி கோவில் போனபோது, முதல்ல சக்கரை பொங்கல். அதை வாங்கிண்டேன். அது காலி ஆனவுடனே வெண் பொங்கல். அதையும் போய் வாங்கிண்டேன். அங்க பிரசாதம் குடுத்துண்டு இருந்தவர், இன்னும் அரை மணில சுட சுட நெய் பாயசம். திரும்ப வாங்கோன்னு சொல்லி சிரிச்சார். ஆஹா! நம்பள நல்லா கண்டுகினாரே இந்த மனுஷர்ன்னு நெனச்சுண்டேன். :)

    ReplyDelete
  5. வாங்க கோவை2தில்லி, இந்தப் பின்னூட்டங்களைக் கவனிக்கவே இல்லை. மறந்திருக்கேன். :(

    மோகினி அலங்காரம் பார்க்கப்போன நண்பர்கள் கூட்டத்தைப் பார்த்து பயந்து ஓடியே வந்துட்டாங்க! :)))) அதனாலும், திரும்ப ராத்திரி போய் நிக்கணும்ங்கறதாலும் நாங்க போகலை.

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், நாங்க தான் பெருமாளோடு போகமுடியாமப் பண்ணிட்டாங்களே! :(((

    ReplyDelete
  7. ஹிஹி, ஜீவி சார், என்ன இருந்தாலும் பிரசாதம் பிரசாதம் தான். அப்போல்லாம் நேரே கோஷ்டி முடிஞ்சு சந்நிதியிலே நிக்கிற பட்டாசாரியாருக்கெல்லாம் கொடுத்ததும் எங்களுக்கும் கொடுப்பாங்க. அது பிரசாதம்! அந்த டேஸ்ட் இப்போ இருக்கானு பார்த்தா இல்லை! :(

    ReplyDelete
  8. //அங்க பிரசாதம் குடுத்துண்டு இருந்தவர், இன்னும் அரை மணில சுட சுட நெய் பாயசம். திரும்ப வாங்கோன்னு சொல்லி சிரிச்சார். ஆஹா! நம்பள நல்லா கண்டுகினாரே இந்த மனுஷர்ன்னு நெனச்சுண்டேன். :)//

    ஹிஹிஹி, நம்ம செட்டு! :)))))

    ReplyDelete