எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 28, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே!

விளக்குகளில் ஒளிரும் தெற்கு கோபுரம்.  எல்லா கோபுரங்களுக்குமே விளக்கு அலங்காரம் செய்யப் பட்டிருந்தாலும் தெற்கு கோபுரம் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது.  கிட்டப் போனால் சரியாப் படம் எடுக்க முடியலை. சுற்றிலும் உள்ள கடைகளின் வெளிச்சம் வேறு.  அதோடு கோயிலிற்காகப்போட்டிருக்கும் வேறு விளக்குகளின் வெளிச்சங்கள். வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு கோயிலுக்குச் செல்கையிலே எடுத்த படம். காமிரா எடுத்துப் போகலை.  கூட்டத்தில் காமிராவைக் கையாள முடியுமானு யோசனை. செல்லில் எடுத்த படம் தான்.


22--ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மறுபடி தேவஸ்தான அலுவலகம் சென்றார்.  அங்கே சென்றால் 2,000 ரூபாய் டிக்கெட் குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர், முதல் அமைச்சர் போன்றவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு, அவர்களின் சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்களுக்குனு சொல்லிட்டாங்க.  எங்களுக்கு இவங்க யாரையும் தெரியாதுனு சொல்ல முடியாது.  என்ன பிரச்னைனா அவங்களுக்கு எல்லாம் எங்களைத் தெரியாது.  அதான் விஷயம்.  :P :P :P  300 ரூ. டிக்கெட்டில் உங்க பெயர் வந்திருக்கானு போய்ப் பாருங்க, அது  வேறே இடம்னு சொல்லிட்டாங்க.  அதைத் தேடிப் போனால் தேர்ந்தெடுத்தவர்கள் பெயரை வரிசைக்கிரமப் படுத்தி எழுதி எங்கும் ஒட்டவில்லை. யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் எல்லாரிடமும் கேட்டால், ஒருத்தருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை.  அங்கேயே தேவுடு காத்து, ஒரு வழியா யாரோ ஒருத்தர் தான் சொல்வதாகச் சொல்லிச் சில பெயர்களைப் படிச்சுட்டு, உள்ளே போக, 250 பேர்னு சொல்லிட்டு, மத்தவங்க பெயர் இல்லையேனு எல்லாரும் கேட்க, உள்ளே போனவர் திரும்பி வந்து மூன்று தவணைகளில் 250 பெயர்களையும் படித்தார்.  எங்க பெயர் கடைசியில் இருந்தது.  அங்கேயே சித்திரை வீதியில் இருக்கும் ஐஓபியில் பணம் கட்டி டோக்கன் வாங்கச் சொல்ல, அங்கே இருந்த ஒரு வரிசையில் நின்றால் பணம் கட்டும் நேரம் பார்த்து, இது 2,000 ரூ. டிக்கெட், 300 ரூபாய்க்கு வேறே கவுன்டர்னு சொல்லி, அந்தக் கவுன்டர் திறக்கக் காத்திருந்து பணம் கட்டிட்டு வீட்டுக்கு வரச்சே 2-30 மணி ஆயாச்சு!

அடுத்த நாள் இரவு பனிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள்ளாகக் கிளிமண்டபத்திலோ, அர்ச்சுன மண்டபத்திலோ இருக்கணும்னு சொல்லிட்டாங்க.  ஞாயிற்றுக்கிழமை மத்தியானமே ராத்திரி தூங்க வேண்டியதைத் தூங்கிக்கறேன்னு ரங்க்ஸ் தூங்க, எனக்கு சும்மாவே தூக்கம் வராது;  அன்னிக்குப் படுக்கக் கூட நேரமில்லை. அப்புறமா ராத்திரி கொஞ்ச நேரம் படுக்கலாம்னு போனால் நீ தூங்கிடப் போறேனு 11-30 மணிக்கு அலாரம் வைச்சார்.  அவரும் வந்து கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டு உடனே தூங்கிப் போனார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  11-30 ஆகிற வரைக்கும் எழுந்து எழுந்து மணி பார்த்துட்டு, 11-30-க்கு அவரையும் எழுப்பிட்டு இரண்டு பேரும் கோயிலுக்குப் போகத் தயார் ஆனோம். வைகுண்ட ஏகாதசிச் சிறப்புக்காக ஞாயிறு, திங்கள் மட்டும் தடையில்லா மின்சாரம் இருந்ததால் லிஃப்ட் வேலை செய்தது.  இறங்கி ஒரு ஆட்டோ பிடிச்சுத் தெற்கு கோபுர வாசலில் இறங்கிக் கொண்டோம்.  அங்கே இருந்து போலீஸ்காரங்க கெடுபிடி ஆரம்பம்.  எல்லார் கிட்டேயும் டிக்கெட்டைக் காட்டிட்டு நேரே போய்க் கொண்டே இருந்தோம்.  ரங்கா கோபுரமும் வந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள போலீசெல்லாம் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப் பட்டு விட்டது போல் எங்கெங்கு காணினும் போலீஸ் தலை. இதிலே முதல் மந்திரி வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்ய வந்தாலும் வரலாம்னு ஒரு வதந்தீ பரவவே, ஏகக் கெடுபிடி.  மக்களைப் போட்டு வறுத்து எடுத்து விட்டனர்.  ரங்கா கோபுரத்துக் கிட்டே நுழையவே கெடுபிடி. எங்க டிக்கெட்டைக் காட்டினால் நேரே கிளி மண்டபம் வரை போகலாம், என்ன, 2,000 ரூபாய்க்கு ஒரு 250 பேர், 300 ரூபாய்க்கு ஒரு 250 பேர்னு நினைச்சுட்டு வந்த ரங்க்ஸுக்குத் தலை சுற்றல். ரங்கா கோபுரத்திலேயே எங்க டிக்கெட்டைப் பார்த்துட்டு கோபுர வாசலில் நின்று கொண்டிருந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வரிசையில் போய் நிற்கச் சொன்னாங்க.  அப்பாவியாய் நான், "நாங்க 300 ரூ. டிக்கெட் வைச்சிருக்கோம்."னு சொல்ல, "போங்கம்மா, 2,000ரூ டிக்கெட்டே அங்கே தான் நிக்குது.  எல்லாரையும் சேர்த்துத் தான் உள்ளே விடப் போறோம்.  அவங்க சந்தனு மண்டபம் போவாங்க, நீங்க அர்ச்சுன மண்டபம் அவ்வளவு தான்." என ஒரு உள்ளூர்ப் போலீஸ் சொல்ல, மயக்கமே வந்தது.  வரிசையில் எங்களுக்கு முன்னால் சுமார் ஐநூறு பேர் ஏற்கெனவே நின்றிருந்தனர்.  எங்கே இருந்து இத்தனை பேர் வந்தார்கள் என நினைத்தால் கூட்டம், கூட்டமாக எங்கிருந்தோ ஆந்திர மக்கள் வந்து கொண்டிருந்ததோடு எல்லார் கையிலும் இலவச பாஸ். வரிசையில் நிற்கக் கட்டி இருந்த கம்பிகளின் இடைவெளி வழியே உள்ளே நுழைந்து வரிசையில் முன்னாலும் நின்று கொண்டனர்.  மணி பனிரண்டரை ஆகி இருந்தது.  எப்போக் கதவு திறந்து உள்ளே விடுவாங்கனு தெரியலை.

எனக்கோ அதிக நேரம் நின்றால் கால் வீங்கிடும்.  அங்கே உட்கார வசதி இல்லாததோடு நிற்கவும் முடியாமல் கல்லும், மண்ணும் காலைக் குத்தின. வீட்டுக்குள்ளேயே செருப்பில்லாமல் நடக்கக் கூடாது என மருத்துவர்கள் சொல்லி இருக்க, அங்கே இந்தக் கல்லிலும், மண்ணிலும் எத்தனை நேரம் நிற்கணுமோ, தெரியவில்லை. நின்று கொண்டிருந்தோம்.

10 comments:

  1. நிஜமாக எனக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செல்ல மனம் ஒத்துழைக்காது. சோம்பேறி நான். ஆனாலும் அசாத்தியப் பொறுமை உங்களுக்கு.

    ReplyDelete
  2. நின்று கொண்டிருந்தோம். //ச்சோ ச்சோ!
    நாங்களும் காத்திருக்கோம்!

    ReplyDelete
  3. இந்தப் பொறுமைதான் அசாத்திய பதிவுகளையும் உழைப்பினால் தேடி நமக்குக் கொடுக்க வைக்கிறது. அதிகக் கஷ்டமில்லாமல் பகவானைத் தரிசன்ம் நடந்திருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், அதெல்லாம் இல்லை, பார்க்கப் போனால் ஆரம்பத்தில் இருந்தே இதுக்கு ரங்க்ஸோட வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தேனாக்கும். நான் நிறையப் பார்த்தாச்சு. அவர் பார்த்ததே இல்லை. நீ வரலைனா தனியாவேனும் போவேன் என்றார். தனியே அனுப்பிட்டு ஒரு இரவு பூரா விழித்து வரிசையில் நின்னு காத்திருந்தால், திடீர்னு சர்க்கரை குறைஞ்சுடுச்சுன்னா என்ன பண்ணறது? காவலுக்காகவே போனேன். :))))) பக்தி அந்த இடத்தில் இரண்டாம் பக்ஷமே! இதான் அப்பட்டமான உண்மை. மற்றபடி நான் கூட்டமாக இருக்கும் திருவிழாக்களைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். :))))))

    ReplyDelete
  5. வாங்க வா.தி. காத்துட்டு இருங்க, மெதுவா, வருவேன். :))))))

    ReplyDelete
  6. வல்லி, அதெல்லாம் இல்லை, உண்மைக்காரணம் ஸ்ரீராமுக்கு எழுதி இருக்கேன். ஆனாலும் அன்று பெரிய பெருமாளின் முத்தங்கி சேவையைப் பார்க்கக் கொடுத்து வைச்சது. அதுக்கு என் கணவருக்கு நன்றி சொல்லணும்.:))))

    ReplyDelete
  7. கீசா மேடம்... உங்களுக்கு பெருமாளைப் பார்க்கணுமா இல்லை அவன் ஆபரணத்தைப் பார்க்கணுமா (அலங்காரத்தை). இந்த மாதிரி மிக முக்கிய தினத்துக்கெல்லாம் ஏன் போகிறீர்கள்? கூட்டம் பயங்கரமா இருக்கும், தள்ளு முள்ளு இருக்கும், கட்டண தரிசனம், 'ஜரிகண்டி'....... சரி சரி.. கஷ்டத்தை அனுபவித்து பெருமாளை தரிசனம் பண்ணணும்னு இருந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவில் எங்கேயும் பெருமாளின் ஆபரண அலங்காரங்களைப் பத்திச் சொல்லவே இல்லையே! அதோடு ரத்னாங்கி சேவையின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியாததா? பெருமாள் அலங்காரப் பிரியர் என்பதற்கேற்ப பட்டாசாரியார்களும் மிக அழகாகப் பார்த்துப் பார்த்து அவங்க வீட்டுக் குழந்தைக்கு அலங்கரிக்கிற மாதிரி அலங்கரிக்கிறாங்க அதுவும் குறித்த நேரத்துக்குள்! இதுக்கு எத்தனை நேரம் ஆகும் தெரியுமா!

      Delete
    2. நான் எப்போவோ கூட்டங்களில் போய் ஸ்வாமி தரிசனம் செய்வதை நிறுத்தியாச்சு. இது தவிர்க்க இயலாமல் சென்றது. எப்படி திருக்கயிலைப் பயணம் கேட்காமல் கிடைச்சதோ அதே மாதிரி இந்த வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்துக்குச் சென்றதும் கேட்காமலேயே கிடைத்தது.

      Delete
    3. முத்தங்கி சேவையைச் சொன்னேன்.

      Delete