எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 25, 2013

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன்.  அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க.  இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல்.  கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா?  இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு.  ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.  அதைப்  போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை)  எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன.  அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன.  அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம்.  அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க.  பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை.  எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள்.  அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர்,  காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க.  என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன்.  கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா?  ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை.  இதை எல்லாம் தவிர்க்கலாம்.

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.  அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார்.  வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க.  சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம்.  கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும்.  இப்போது எப்படினு தெரியலை.  

60 comments:

  1. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

    படாடோபத்திற்காக வாங்கும் பட்டுக்கள் அடுத்த விஷேசத்திற்கு கட்டுவதில் சற்று தயக்கம் காட்டப்படும் ..

    எல்லோரும் மாடர்னான நியூஅரைவல்-புது டிசைன் - புடவையில் வந்திருக்க இந்த புடவை பழைய ஓல்டு பேசனாகி இருக்கும் ...

    ReplyDelete
  2. எங்கள் பதிவு எழுதியவர் ராமன்.

    ReplyDelete
  3. நல்ல ஐடியா கீதா.

    எங்கள் ப்ளாக் படிக்கலை. ஆடம்பரம் இல்லாத திருமணங்கள் நடக்கும் காலமும் வரலாம்.

    ReplyDelete
  4. அட! இப்பதான் எங்கள் பிளாக்கில உங்க பின்னுட்டங்களை படிச்சேன். அதுக்குள்ள பதிவு எழுதிட்டீங்களே?

    //வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான்.//

    உண்மைதான் என் நாத்தனார் பெண் கல்யாணத்திற்கு வைத்து கொடுத்த புடவை கலர் சரியில்லை என்று என் புக்காத்து மாமி படுத்திய பாடு இருக்கே! உடனே மாற்றி கொடுத்தவுடந்தான் சமாதானம் ஆனார்.

    கடைசி பத்தியில் சொல்லியிருப்பது நன்றாக இருக்கே! செலவைப் பகிர்ந்துக்கணும் அப்படீங்கறது சிறப்பான விஷயம்.

    ReplyDelete
  5. @கெளதமன் சார், பதிவின் கீழேயே பெயரைப் பார்த்ததால் கெளதமன் சார் பகிர்ந்து கொண்ட பதிவு எனப் போட்டிருக்கேன். வி.எ. ஊத்திட்டுப் பாருங்க! :))))

    மற்ற பதில்கள் பின்னர்!

    ReplyDelete
  6. இப்பொழுதே சிக்கனத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம் கவனிப்பதில்லை.
    வைத்துக் கொடுக்கும் புடைவை, ரவிக்கைகளில் வரும் குறைகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதில் ஆண்கள்தான் பெஸ்ட். குறையே சொல்ல மாட்டார்கள்! வேஷ்டி, துண்டில் என்ன குறை இருக்கப் போகிறது! :))

    ReplyDelete
  7. தேவையற்ற செலவுகளை குறைத்தாலே போதும். அதை யாரும் செய்வதில்லை.. இவ்வளவு செலவு செய்தேன் என சொல்லுவதை கௌரவம் எனக் கருதுகின்றனர்.

    நெருங்கிய சொந்தகளுக்கு மட்டுமே தாம்பூலத்தில் ஏதாவது வைத்துத் தரும் வழக்கம் இருந்தது.

    சமீபத்தில் ஒரு சதாபிஷேகம் சென்றேன். அங்குக் கூட ஒரு தட்டு வைத்துத் தந்தார்கள். நன்கு பழகியவர் என்பதால் திட்டிவிட்டு வந்தேன்

    ReplyDelete
  8. தேவையற்ற செலவுகளை குறைத்தாலே போதும். அதை யாரும் செய்வதில்லை.. இவ்வளவு செலவு செய்தேன் என சொல்லுவதை கௌரவம் எனக் கருதுகின்றனர்.

    நெருங்கிய சொந்தகளுக்கு மட்டுமே தாம்பூலத்தில் ஏதாவது வைத்துத் தரும் வழக்கம் இருந்தது.

    சமீபத்தில் ஒரு சதாபிஷேகம் சென்றேன். அங்குக் கூட ஒரு தட்டு வைத்துத் தந்தார்கள். நன்கு பழகியவர் என்பதால் திட்டிவிட்டு வந்தேன்

    ReplyDelete
  9. தேவையற்ற செலவுகளை குறைத்தாலே போதும். அதை யாரும் செய்வதில்லை.. இவ்வளவு செலவு செய்தேன் என சொல்லுவதை கௌரவம் எனக் கருதுகின்றனர்.

    நெருங்கிய சொந்தகளுக்கு மட்டுமே தாம்பூலத்தில் ஏதாவது வைத்துத் தரும் வழக்கம் இருந்தது.

    சமீபத்தில் ஒரு சதாபிஷேகம் சென்றேன். அங்குக் கூட ஒரு தட்டு வைத்துத் தந்தார்கள். நன்கு பழகியவர் என்பதால் திட்டிவிட்டு வந்தேன்

    ReplyDelete
  10. தேவையற்ற ஆடம்பரங்கள் அதிகரித்து விட்டது. இங்கே ஒரு கல்யாணத்திற்கு தந்த பத்திரிகை விலை 600 ரூபாய்! அப்படி என்ன அதில் ஸ்பெஷல் என எனக்குப் புரியவில்லை! சில்வர் லெட்டர்ஸ், என என்னமோ கதை சொன்னார்! போய்யா போக்கத்தவனே என நினைத்துக் கொண்டேன். :(

    ReplyDelete
  11. என்ன நடக்கிறது இங்கே?.. கல்யாண கலாட்டா or கலாட்டா கல்யாணம்?.. யார் பெண் வீட்டுக்காரர்கள், யார் பிள்ளை வீட்டுக்காரர்கள் என்றே தெரியலையே! அல்லது இரண்டு வீட்டுக்காரர்களும் சேர்ந்து திருமணச் செலவுகளே வருகிற விருந்தினர் களால் தான் என்று ஓரங்கட்டுகிறார்களா?..

    (சத்திரச்செலவில் சிக்கனம் என்று) புறநகரில் நடக்கும் கல்யாண மண்டபத்திற்கு வர ஆட்டோ செலவு ரூ.300/- திரும்ப ரூ.300/-.

    குறைந்தபட்ச மொய் செலவு ரூ.500/-

    அழைத்து விட்டார்களே என்று காலை 8 மணி முகூர்த்த நேரத்தை தப்ப விடக்கூடாதென்று அதிகாலை 4 மணிக்கே எழுந்து, குளித்து, காப்பி கடை முடித்து, உடுத்தி (பட்டுப்புடவை பெண்கள் சிரமம் தனி) ஒரு தேங்காய், முதல் நாளே பையில் இட்டு வைத்திருந்த நசுங்கிய இரண்டு வெற்றிலை, பாக்குத்தூள் என்று முக மலர்ச்சியுடன் பெற்று மதியம் 3 மணிவாக்கில் ஒரு நாடகக்காட்சியில் கலந்து கொண்ட அயர்வுடன் வீடு வந்து சேரும் அழைக்கப்பட்ட விருந்தினரின் அசட்டுக் கதையே தனி தான்!






    ReplyDelete
  12. நல்ல பதிவு. நல்ல யோசனைகள். இதெல்லாம் இனி வருங்காலத்திலாவது நடக்க வேண்டும்.

    என் அப்பாவின் முப்பத்தியேழு வருஷ உழைப்பின் பலன் என் மூன்றே நாள் கல்யாணத்தில் காலி. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. என் ஆத்ம திருப்தி, என் ஒரே லட்சியம் என்று உறுதியாக இருந்துவிட்டார். என் கல்யாணம் முடிந்து இரண்டே வருடத்தில் என் சித்தப்பா பெண் கல்யாணம். சுவாமி சந்நிதியில் எங்கள் குடும்பம் அவர்கள் குடும்பம் என்று மொத்தமாகவே முப்பது பேர் கூட இல்லை. அரை மணியில் கல்யாணம் முடிந்து விட்டது. :)) என்ன சொல்வது! :)

    //வேஷ்டி, துண்டில் என்ன குறை இருக்கப் போகிறது! :))// சரிதான் ஸ்ரீராம். :))

    ReplyDelete
  13. வாங்க ராஜராஜேஸ்வரி, கட்டுவதில் தயக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனால் உண்மையான பட்டைப் பத்தியோ, பட்டின் மகிமை பத்தியோ, தரம் குறித்தோ நம் பெண்கள் அறியவில்லை! :((( ஆகவே அதிக விலை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் என்பதே நான் சொல்ல வந்தது! :((((

    ReplyDelete
  14. வாங்க டிடி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. வாங்க வல்லி, இப்போதே நடப்பதாய்ச் சொல்கிறார்கள். எங்கே? எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லை. ஒருவேளை பெற்றோருக்குத் தெரியாமல் செய்து கொள்ளும் கல்யாணங்களில் வேண்டுமானால் ஆடம்பரம் இருக்காதோ என்னமோ! ஆனால் அப்படி நடக்கும் காலம் வரும். வரணும்!

    ReplyDelete
  16. வாங்க ராம்வி, நீங்களாவது கல்யாணத்துக்கு வாங்கிய புடைவையை மாற்றித் தரச் சொன்னதாச் சொல்றீங்க.

    என் நெருங்கிய உறவினர் ஒருவர் மாமியார் இறந்ததுக்கு பட்டுப்புடைவை வாங்கித் தரணும்னு பிறந்த வீட்டில் கண்டிஷன் போட்டதோடு, அந்தப் புடைவை முதலில் ரொம்ப சிம்பிளா இருக்கு ஜரிகை இல்லைனு மாத்தச் சொல்லி, அதுக்கப்புறமா கலர் பிடிக்கலைனு மாத்தச் சொல்லி, மூன்றாம் முறை கூடப் பணம் போட்டு எடுக்கச் சொல்லி...........

    தி.நகரில் புடைவைக் கடைக்கு மூன்று முறைகள் அம்பத்தூரில் இருந்து போன எனக்கு வெறுத்துப் போச்சு. :(((((((((

    ReplyDelete
  17. ஆமாம், ராம்வி, செலவு பகிர்ந்துக்கறது புதிசில்லை. எனக்குத் தெரிஞ்சு குஜராத்தியர் திருமணங்கள் இன்று வரை அப்படித்தான் நடைபெறுகின்றன. சென்னையில் இருக்கும் குஜராத்தியர் உட்பட அப்படித் தான் திருமணம் நடத்துகின்றனர். சாப்பாடும் எளிமையாக அதே சமயம் ரொம்பவே வீட்டுச் சாப்பாடு போலவும் இருக்கும். எதுவும் வீணாகாத வண்ணம் பரிமாறுவார்கள். மிச்சம் இருப்பவை அன்றே ஆசிரமங்களுக்குச் செல்லும். குஜராத்தியர் மண்டலிக்காரங்களே நிறைய விருத்தாசிரமம், அநாதாசிரமம் நடத்தறாங்க. அங்கே போகும்.

    ReplyDelete
  18. வாங்க ஸ்ரீராம், எனக்குத் தெரியலை, எங்கே சிக்கனத் திருமணம் நடக்குதுனு! :)))))

    வேட்டி, துண்டிலும் குறை சொல்றவங்க எத்தனை வேண்டும்! ஜரிகை பத்தலை, மயில்கண் வேட்டியாக் கொடுக்கலை. எனக்கு ஒன்பதுக்கு ஆறு கட்டி வழக்கம் இல்லை. பத்துக்கு ஆறு எடுக்கலைனு! :)))))))

    ReplyDelete
  19. வாங்க எல்கே, நாம் வைக்கிற மொய்க்குத் திரும்ப அவங்களும் பரிசுப் பொருள் கொடுக்கணும்னு இல்லை. என்றாலும் அது இப்போது வழக்கம் ஆகி விட்டது. நான் அநேகமாக விக்ரஹங்கள் வாங்கிக் கொடுத்துடுவேன். எங்க பொண்ணு கல்யாணத்துக்கு எதுவும் கொடுக்கலை. பையர் கல்யாணத்திலே ஊஞ்சல் ஆடும் வெண்கலப் பிள்ளையார்.

    ReplyDelete
  20. வாங்க வெங்கட், ஆமாம்,ஆயிரம் ரூபாய் வரைக்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்யாணப்பத்திரிகையையும் பார்த்திருக்கேன். தெரிஞ்சவங்க ஒருத்தர் பெண்ணின் அரங்கேற்றத்துக்கு ஐநூறு ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பத்திரிகை அடித்தார்கள். எனக்கு மயக்கமே வந்தது!~ :((((

    ReplyDelete
  21. ஹாஹா ஜீவி சார், கலாட்டா கல்யாணம் தான்! சத்திர வாடகை மட்டுமின்றி திநகர், மயிலாப்பூர் போன்ற நகருக்குள்ளே நடைபெறும் திருமணச் சத்திரங்கள் சுத்தத்தைப் பார்த்தால்! :(((((((( போதும், போதும்னு ஆகிவிடுகிறது. உடனடியாக நோய் வந்துடும். அவ்வளவு மோசமான பராமரிப்பு. புறநகரிலும் வாடகை குறைந்த பட்சமாய் இரண்டரை,மூன்று லட்சம் ஆகிவிட்டது.

    ReplyDelete
  22. தாம்பரம், குரோம்பேட், பம்மல் போன்ற புறநகர் எனில் அம்பத்தூரில் இருந்து நேரே பேருந்து இருக்கு. அதில் போயிடுவோம். திரும்பி வரச்சேயும் அப்படியே. இல்லை எனில் ரயிலில் போய் அங்கிருந்து முப்பது ரூபாய்க்குள் உள்ள தூரம் எனில் ஆட்டோ. கூடியவரை வீட்டில் இருந்து ஆட்டோவில் கல்யாணங்களுக்குச் செல்வதில்லை. ரயிலுக்குப் போவதெனில் கூட கால் டாக்சி தான். மீட்டர் போடுவாங்க. ஆட்டோவை விடவும் குறைச்சலாக ஆகும்.

    ReplyDelete
  23. வாங்க மீனாக்ஷி, எனக்குத் தெரிஞ்சு எங்க உறவினரில் யார் கல்யாணமும் எளிமையாக நடக்கவில்லை. எளிமையாய்க் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டு இருந்த எங்க அண்ணா பையர் கல்யாணம் மிக மிக ஆடம்பரமாக நடந்தது. :))))) இப்போ அண்ணா பெண் கோயிலில் எளிமையாக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாச் சொல்றா. பார்க்கலாம்! :)))))

    ReplyDelete
  24. என் தாத்தா பாட்டி காலங்களில் தெரு அடைக்கப் பந்தல் போட்டு நாலு நாள் கல்யாணம் செய்வார்களாம். அதுவும் ஆடம்பரம் தானே?

    வசதியிருப்பவர்கள் விருப்பத்தோடு செய்வதில் ஆடம்பரம் எங்கே வந்தது? நாலு நாள் கல்யாணம் தெரு அடைக்கப் பந்தல் தேர் அலங்காரத்தோடு மாப்பிள்ளை அழைப்பு - இதில் இருந்த கௌரவம் இன்றைய வழக்கங்களில் கூடியதா குறிந்ததா?

    எங்கள்ல எழுதலாம்னு இருந்தேன்.. நீங்க வேறே பதிவு எழுதறதா நோட்டீஸ் குடுத்திட்டீங்களா.. உங்க கிட்டயே வம்புக்கு வரலாம்னு இங்கயே எழுதிட்டேன் :)

    ReplyDelete
  25. புடவை கேக் நினைவுக்கு வந்தது.. ஓகே, அது வேணும்னா indulgence..

    ReplyDelete
  26. கல்யாணம் என்பது once-in-a-lifetime அனுபவமாகக் கருதப்படுவதால்.. எல்லாருக்குமே அதை ஒரு அற்புதமான நினைவாக அமைத்துக்கொள்ள ஆசை வந்துவிடுகிறது. அதற்கப்புறம் தட்புடல் தான்.

    ReplyDelete
  27. என் தங்கை கல்யாணத்தை விட எளிமையாக நடத்தமுடியாது. படுத்து தூங்க, டாய்லெட், குளிக்க எல்லாம் மரத்தடி ஆத்தங்கரை குளக்கரைக்கு அனுப்பிவிட்டோம். சமையல் கூட எல்லாரும் ஒரு ஐட்டம் எடுத்து வரவேண்டும் என்று சொன்னதாக நினைவு.

    ReplyDelete
  28. வாங்க அப்பாதுரை, கொஞ்ச நாட்களாக் காணோமேனு நினைச்சேன். :))))

    தெருவடைக்கப் பந்தல் போட்டுத் தான் என் கல்யாணமும் நடந்தது. அதன் காரணம் அப்போதெல்லாம் வீடு பெரிசாக இருந்துவிட்டால் வீடுகளிலேயே திருமணம் நடக்கும். வீட்டுக்குள் இடம் போறலைனா தெருவில் இரண்டு, மூன்று வீடுகளைச் சேர்த்துப் பந்தல் போட்டு நடைபெறும். இதுக்குச் செலவெல்லாம் இல்லை. பந்தல் செலவு கூட ஊரில் உள்ளவங்க தென்னங்கீற்றெல்லாம் கொடுத்துடுவாங்க. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் அனைவரும் அமர்ந்து பனைஓலைத் தோரணம், மற்றும் தாழையில் அலங்காரம்னு செய்துடுவாங்க. ஆகவே இதில் ஆடம்பரமோ செலவோ இல்லை. :))

    ReplyDelete
  29. அப்பாதுரை, நல்லா நினைவில் வைச்சிருக்கீங்க. ஆமாம், என் அண்ணா பையர் கல்யாணத்தில் தான் புடைவை மாதிரி பாதாம் கேக், முந்திரி வேட்டி! :))))))

    ReplyDelete
  30. கட்டாயமாய் கல்யாணம் வாழ்விலே ஒரு முறை என்பதால் நினைவில் இருக்கும்படி நடத்தணும்தான். மற்றபடி விரிவான பதிவுகள் தயாராகின்றன அப்பாதுரை. வம்புக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு. தயாரா இருங்க! :)))))))

    ReplyDelete
  31. கிராமங்களில் கல்யாணம் நடந்தால் இப்படித்தான் அப்பாதுரை, அதோடு வீட்டுக்கு ஒரு ஐடம் என்பது புதிதும் இல்லை. அந்த நாட்களில் ஊரில் ஒருத்தர் வீட்டுக் கல்யாணம் என்றால் அவங்க அவங்க வீட்டிலே வாங்கும் அல்லது கறந்து வரும் பாலை எல்லாம் கல்யாண வீட்டுக்குக் கொடுத்துடுவாங்களாம். அவங்க தான் அங்கே சாப்பிடப் போறாங்களே! அதோடு ஒரு வீட்டில் காய்கறி சப்ளை, ஒரு வீட்டில் பக்ஷண சப்ளை என நடக்குமாம். சம்மந்தி உபசாரம் ஒரு வீட்டுக்காரர் எடுத்துக் கொண்டு பொறுப்பாகப் பார்த்துப்பாராம். இது குறித்து விரிவாய் வரும் பாருங்க.

    ReplyDelete
  32. ஆடம்பரம் செலவு என்பது எல்லாம் ரெலடிவ் இல்லையோ? தெரு அடைக்க பந்தல் போட்ட கல்யாணங்களை மடத்தில் கல்யாணம் செய்தவர்கள் ஆடம்பரம் என்று நினைத்திருப்பார்கள். நான் சொல்ல வருவது - கல்யாணம் முறைகளில் கௌரவம் என்று எதுவும் இல்லை. ஆடம்பரம் என்பதில் என்றைக்குமே அர்த்தம் இல்லை. நூறு வருடங்களுக்கு முன்னாலயும் எத்தனையோ ஜனங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கிடந்தார்கள். இன்றைக்கும் கிடக்கிறார்கள். இருந்தாலும் செலவு செய்ய முடிவெடுப்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஏழைகளைப் பற்றி கவலைப்படாவிட்டால் போகிறது..

    கல்யாணச் செலவை பெண்/பிள்ளை இருவர் பெயரிலும் பிக்சட் டெபாசிட்டாக போட்டுவிட வேண்டும் என்று இருபது வருசத்துக்கு முன்னால ஒரு மூவ்மெண்ட் வந்ததே.. புஸ்வாணமா போயிடுச்சா? பெரிய கல்யாண சத்திரங்களின் முன்னால் இவர்கள் (மிக மிக அழகான ஆண்/பெண்கள் என்பது மட்டும் நினைவில் இருக்கிறது) நோட்டீஸ் கொடுத்துப் பேசுவார்களே? இயக்கம் வலுக்கவில்லையோ?

    ReplyDelete
  33. மடத்திலே எல்லாம் கல்யாணம் அந்தக் காலங்களில் செய்ததாய்த் தெரியலை. வீடுகளிலே தான் செய்திருக்காங்க. அதுவும் வைதீக காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துச் செய்திருக்காங்க. பொதுவாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்து தான் வரதக்ஷணை என்னும் பூதமும், கல்யாணங்களில் நகை போடுவது, பாத்திரங்கள் சீருக்குப் பேரம் பேசுவது எல்லாம் ஆரம்பம். அதன் முன்னால் இவை எதுவும் இல்லை. இரு வீட்டுச் சொந்தங்கள், ஊர்க்காரங்க என கல்யாணங்கள் எளிமையாகவே நடைபெற்றிருக்கின்றன. ஆங்கிலப் படிப்பு ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் எல்லாம். :(

    ReplyDelete

  34. பல கேரளத் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடக்கின்றன. பட்டுப் புடவை பற்றி காஞ்சி பெரியவர் சொன்னதை மறந்து. பத்திரிக்கைகளில் பெரியவர் ஆசியுடன் என்று எழுதுவார்கள். இருப்பவர் செலவு செய்யட்டும். இல்லாதவரும் செலவு செய்ய வற்புறுத்துவது தவறு.

    ReplyDelete
  35. வாங்க ஜிஎம்பி சார்,

    கேரளத்திருமணங்கள் இப்போதெல்லாம் ஆடம்பரமாகவே நடக்கின்றன. எங்காவது ஒரு சிலர் எளிமையாக நடத்தலாம். தெரியலை. :(

    ReplyDelete
  36. //சத்திர வாடகை மட்டுமின்றி திநகர், மயிலாப்பூர் போன்ற நகருக்குள்ளே நடைபெறும் திருமணச் சத்திரங்கள் சுத்தத்தைப் பார்த்தால்! :(((((((( //

    நகரில் நல்ல சத்திரங்கள் இருக்கின்றன. (கார்பார்க்கிங் வசதிகளோடு)சமையற்கூட லட்சணம் கேட்டரிங்காரர் கைவசப்படுத்திய பிறகு அவர் பராமரிப்பு சம்பந்தப்பட்டது..
    நல்ல கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் விசிட்டிங் கார்டு கையில் வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி விடுகிறார்கள். அவர்களுக்குத் தெரியும், ஒரு கல்யாண சர்வீஸ் பல கல்யாணங்களுக்கு அச்சாரம் என்று தொழில்திறமை காட்ட ஒவ்வொரு கல்யாணத்தையும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறார் கள்.

    கல்யாணங்களில் விருந்தினர் உபசரிப்பு தான் ரொம்ப முக்கியம். அதைச் சரிவரச் செய்யவில்லை என்றால்
    என்ன செலவழித்தும் நிறைவில்லை.
    பெண் வீட்டார் தான் திருமணத்தை நடத்துவது. அவர்களுக்கு பிள்ளை வீட்டாரைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால், சில கேட்டரிங்காரர்கள் விருந்தினர்களை விசாரிக்கவே ஆண்-பெண் ஊழியர்களை அமர்த்தியிருக்கிறார்கள்!

    அலுவலக நண்பர்கள், தெருக்காரர்கள்,
    ப்ளாட்காரர்கள், சொந்தங்கள் இவர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே வாத்தியார்கள் கூட
    'போய் விசாரித்துவிட்டு வா' என்று
    அதற்காக மந்திர உச்சாடனத்திற்கு இடை இடையே நேரம் ஒதுக்கித் தருகிறார்கள்.

    பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்தக்கால திருமணங்களில் இருந்த ஹரிபுரி இந்தக்கால திருமணங்களில் இல்லை. ஹாயாக இருக்கிறார்கள். சிஸ்டமேடிக்காக எல்லாம் நடப்பதற்கு நிறைய ஏற்பாடுகள் வந்துவிட்டன.
    எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்பது தான் விசேஷமே.

    கல்யாணத்திற்கு அப்புறம் இருக்கிறது,
    மாப்பிள்ளை-பெண் வீட்டார் பங்கு போட்டுக்கொள்வது, இழைவது- இழையாமல் போவது எல்லாம்.
    அப்புறம் வாழ்க்கை பூராவும் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதில் பிஃப்டி பிஃப்டியாக இருந்து விட்டுப் போகட்டும். யார் கேட்டார்கள்? அவர்கள் வீட்டுக்கல்யாணம் என்று வரும் பொழுது தங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு பல சொந்த சிரமங்களை ஒத்தி வைத்துவிட்டு வாழ்த்த வருகிறவர்களை இந்த இரு வீட்டாரும் சேர்ந்து வரவேற்று அவர்களை முகம் மலர அனுப்பி வைப்பது தான் முக்கியம்.





    ReplyDelete
  37. நடக்கட்டும் டும்...டும். :)

    படித்து ரசிக்க வருகின்றேன்.....

    ReplyDelete
  38. வீண் ஆடம்பரம் தான் இப்போ எல்லா இடத்திலயும்...:(

    இன்னும் சொல்லுங்கோ மாமி...படிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  39. படோடபம் இல்லாமல்! வைதீகமாகவும், ஆன்மீகமாகவும் வரன்வதுவுக்கு பிடித்தும் தாய் தந்தையர் ஆசிர்வாதத்துடன் ஒரு பைசா கூட கல்யாண மண்டபத்துக்கு , சமையல் இடத்திற்கோ  வாங்காம எளிமை  அதே சமயம் எல்லா சம்பிரதாயங்களுடன் எல்லா வகுப்பினருக்கும் அவரவர் வழக்கங்களுக்கு குறைவில்லாமல் கல்யாணம் இன்னும் சென்னையில் ஒரு விளம்பரமும் இல்லாம ஒரு அமைப்பில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . மண்டபம் நா பிரம்மாண்ட மான் கற்பக விநாயகர் கோவில் மண்டபம் தான் நிச்சிய தார்த்தத்துக்கு !, கல்யாணம் பூர்ண பிரமம் கோவில் வளாகத்தில் யாக சாலை மண்டபத்தில்? பெண் வீட்டுக்காரர் சம்பிரதாயங்கள்துர்க்கை கோவில் யாக சாலைல! கல்யாண உற்சவம் தாயாருக்கும் பெருமாளுக்கும் பெரிய கோவிலில் !, சாப்பாடு , ஏர்கண்டிஷன் செய்யப்பட டைனிங் ரூம்ஸ் ல! இது   பொருளாதார நிலை சம்பந்தப்பட்டதில்லை?சமீபத்தில் நடந்த திருமணம் வசதி உடைய மிடில் class   வீட்டு கல்யாணம் தான். வைதீக சம்பிரதாயங்கள் நன்கு  வேதம் வைதீகம் அறிந்த பெரியவர்களால் ஒரு குறையும் இல்லாமல் செய்ததுடன் சாயந்திரம் கல்யாண உற்சவம் வேற FREE  யாகவே நடந்து காலனியில் இருந்த தெரிந்தவர் தெரியாதவர் கட்டிட வேலை செய்யும் ஆட்கள் எல்லாருக்கும் அன்னதானமும் மணமக்கள் ஆசிர்வாதத்தோடு இருக்கணும்னு அந்த அமைப்பு காரர்களே செய்தார்கள் ஒரு மகானின் வாக்குக்கு பணிந்து. சம்பந்தி வீட்டுக்காரர்களுடைய விருப்பமாய் இருந்ததால் அந்த மகானே அவா இஷ்ட்டம் நா  ஆள் போட்டு  சமையலுக்கு செஞ்சுக்கோங்கோ இல்லைனா நம்ப ஆளுங்களே பண்ணிடலாம்னார்? கல்யாணம் பண்ணின தந்தை அவருக்கு DEVOTEE ?சம்பந்திக்கு முன்ன பின்ன தெரியாது .அவர் தான் பெண்ணின் அப்பா!! ரெண்டு பேரும்  செலவான காசை தருகிறோம்னு கொடுத்தபோது சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் அந்த மகான்! சம்பந்தி காலில் விழுந்து ஓன்னு அழுதுட்டார்  இந்த பெருந்தன்மையை பாத்ததில்லைன்னு?உலகத்தில் ஒவ்வொரு ஜீவனும்  கடவுள் தான் சார்? அடுத்த தடவை ஏதாவது ஏழைப்பொண்ணுக்கோ , பையனுக்கோ கல்யாணம்நோ படிக்கணும்னோ  உங்களை அண்டி யாராவது  வந்தா மீனாட்சிக்கு படிக்கணும்! துர்க்கைக்கு கல்யாணம் பண்ணனும்னு ஈஸ்வரன் படிக்க வைக்கனும்னு எண்ணத்தோட முடியற அளவு மனசாற  பண்ணிடுங்கோ! இதுதான் பொருளைஅருள் ஆக்கற வித்தை சார் நு சிரிச்சுண்டே சொல்லிட்டு போய் விட்டார்?ஈஸ்வரன்  அளக்கறான் செய்யறோம்?யாரையும் எதிபார்த்து இல்லைன்னு சொன்ன அந்த மகான் இப்ப வாழற ஆன்மீக வாதிகளில் இருந்து மாறுபட்டு உயரத்தில் உள்ளவர்னு பட்டது?? 

    ReplyDelete
  40. //பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்தக்கால திருமணங்களில் இருந்த ஹரிபுரி இந்தக்கால திருமணங்களில் இல்லை. ஹாயாக இருக்கிறார்கள். சிஸ்டமேடிக்காக எல்லாம் நடப்பதற்கு நிறைய ஏற்பாடுகள் வந்துவிட்டன.
    எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்பது தான் விசேஷமே.//

    ஜீவி சார், நீங்க சொல்லுகிற மாதிரிச் சத்திரங்கள் வாடகையெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! இல்லையா? நடுத்தர வர்க்கத்துக்குச் சத்திர வாடகையே 3 லக்ஷத்தில் இருந்து 5 வரை கொடுக்கணுமா? தேவையா? அதோடு நீங்க சொல்ற மாதிரி இப்போல்லாம் யாருக்கும் எந்த விஷயமும் பூரணமாய்த் தெரியவில்லை என்பதே உண்மை. ஏதோ தெரிஞ்சாப்போல் நடந்துக்கலாம்! பல கல்யாணங்களிலும் பார்த்துட்டேன். ஸமாவர்த்தனம் என்றால் என்னனே புரியலை! தெரியலை! :(

    ReplyDelete
  41. இந்தக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் சரி, பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் சரி, ஏதோ ஒரு வகையில் ஹரிபரி என்னும் அழுத்தம் இருக்கவே செய்கிறது. :(

    ReplyDelete
  42. வாங்க மாதேவி, நிதானமா வரும். மெதுவா வந்து படிங்க. :)

    ReplyDelete
  43. வாங்க கோவை2தில்லி, கொஞ்சம் வீட்டுப்பாடம் படிச்சுக்கறேன். அப்புறமா எழுத ஆரம்பிக்கிறேன். முன்னாடி சமயபுரப் பயணத்தையும் அதைத் தொடர்ந்த பயணத்தையும் முடிச்சுக்கறேன். :))))

    ReplyDelete
  44. வாங்க ஜெயஸ்ரீ, நீங்க சொல்லி இருக்கும் விஷயம் இன்று வரை கேட்டதே இல்லை. படிக்கையிலேயே மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து விட்டது. இப்படி எல்லாருக்கும் நடந்தால்! நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. அந்த நாளும் வரட்டும். :)))))) பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டும் மஹான் யாரென ஊகிக்க முடிகிறது. :)

    ReplyDelete
  45. ஜிஎம்பீ சார்!

    திருமணத்திற்கு கல்யாணச் சத்திரம் தான் Base; அடிப்படையான சமாச்சாரம். அது நீங்கள் அழைக்கக் கூடிய விருந்தினர்களைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம்.

    இரண்டு நாள் பாதுகாப்பாக; மணமகன்-மணமகள் குடும்பம் தங்குவதற்கு பாதுகாப்பாக. எதற்கெல்லாம் பாதுகாப்பை நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்களோ, அதெற்கெல்லாம்.அதற்கேற்ப வசதிகளுடன் கல்யாண மண்டபம்.

    முதல் நாள் ரிஷப்ஷன்; அடுத்த நாள் கல்யாணம் இரண்டிற்கும் சேர்த்து குறைந்த பட்சம் 1000 பேர் வந்து வசதியாக இருந்து சாப்பிட்டு கழித்துப் போவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்யத் தயாராய் இருக்க வேண்டும் என்பது உங்கள் யூகத்திற்கே.

    கணக்குப்போட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

    இப்பொழுது விடியோ, போட்டோ ஆல்பம் (மணமகன், மணமகள் வீட்டார் தனித்தனியே) இதற்காக செலவாகும் தொகைx8= கல்யாண சத்திர வாடகை இரு நாட்களுக்கு.

    தேவையா?.. என்று கேட்டால் என்ன சொல்வது?.. ஆடம்பரம், கெளரவம் இந்த இரண்டும் இல்லாது கூட செலவு செய்தே ஆக வேண்டிய சில தேவைகள் ஏற்பட்டு விடுவது உண்டு.
    அதெல்லாம் மணமகனின் வேலை, தகுதி இவற்றின் அடிப்படையில் அமைந்து விடும்.


    ReplyDelete
  46. //ஜீவி சார், நீங்க சொல்லுகிற மாதிரிச் சத்திரங்கள் வாடகையெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! இல்லையா? நடுத்தர வர்க்கத்துக்குச் சத்திர வாடகையே 3 லக்ஷத்தில் இருந்து 5 வரை கொடுக்கணுமா? தேவையா? //

    எனது சென்ற பின்னூட்டம் கீதாம்மா கேட்டதிற்கானது. தவறாக GMB சார் என்று விளித்து விட்டேன்! Sorry GMB Sir!

    ReplyDelete
  47. //ஸமாவர்த்தனம் என்றால் என்னனே புரியலை! தெரியலை! :( //

    பிள்ளைகள் குருகுல வாசம் செய்த அந்தக் காலத்தில் அவர்களின் குருகுல வாச காலத்தை பிரம்மச்சரிய காலமாகவும், அதை முடித்து அவன் வீட்டுக்குத் திரும்புவதை ஸமாவர்த்தனம் என்றும் அழைத்தனர்.
    பிரம்மச்சரியம் முடிந்தவுடனே, விவாஹம் செய்வித்து அவன் கிரகஸ்தாஸ்ரமத்தை மேற்கொள்ள வேண்டும். அதனால் ஸமாவர்த்தனத்திற்கு முன்னேயே திருமணம் நிச்சயக்கப்பட்டதாகக் கொண்டு ஸ்மாவர்த்தனம் செய்து பிறகு விவாக சடங்குகளை சிலர் மேற்கொள்கின்றனர்.

    இதில் இன்னொரு முரண்பாடும் இருக்கிறது.ஸமாவர்த்தனம் செய்த பிறகு அவன் திருமணத்திற்கு தயாராக வேண்டுமே தவிர, தன்னை நைஷ்டிக பிரம்மச்சாரியாகக் கருதிக் கொண்டு காசி யாத்திரை என்னும் பரதேச கோலம் பூணக்கூடாது.

    ஆனால் குருகுலவாசமே இல்லாத இக்காலத்தில் ஒவ்வொரு சடங்கையும் ஆப்டாக அப்படி அப்படியே இருந்தாக வேண்டும் என்று நுணுகிப் பார்க்கவும் கூடாது. திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசிரியரே சரியென்று ஏற்றுக்கொண்டு அவர் எவ்வழியோ அதுவே நம்வழியாகக் கொள்ள வேண்டும். இதனால் அதற்கு மேல் அப்பீல் இல்லை என்றில்லை; அவர் தான் அந்த நேரத்தில் அந்த இடத்தில்
    எல்லாவற்றையும் தீர்மானிப்பவர். அது சரியாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்பது தான்.

    நான் சொல்ல வந்தது வேறே. எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்று சொன்னது, லெளகீக விஷயங்களில். பெரியவர்களும் ரொம்ப அடிச்சுப் பிரண்டாமல் இளைஞர்களை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போய்விடுகின்றனர். இதற்குக் காரணம் 'இவன் எவ்வளவோ பரவாயில்லை!'
    என்று திருப்தி கொள்வது தான்.

    அந்த திருப்தி தான் முக்கியமும் கூட.


    ReplyDelete
  48. //முதல் நாள் ரிஷப்ஷன்; அடுத்த நாள் கல்யாணம் இரண்டிற்கும் சேர்த்து குறைந்த பட்சம் 1000 பேர் வந்து வசதியாக இருந்து சாப்பிட்டு கழித்துப் போவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்யத் தயாராய் இருக்க வேண்டும் என்பது உங்கள் யூகத்திற்கே.//

    முதல்நாள் ரிசப்ஷன் என்பதே எங்க வீட்டிலே யாருக்கும் பிடிக்காத ஒன்று. கல்யாணம் ஆனப்புறம் தான் ரிசப்ஷன். குறிப்பாய்ச் சென்னையில் சாப்பாட்டுச் செலவு மிக மிக அதிகம் தான். சாதாரணமாக நிச்சியதார்த்தத்துக்கேக் குறைந்த பட்சமாக ஒரு இலைக்கு 200ரூ வாங்கறாங்க. :(

    ReplyDelete
  49. எல்லாச் செலவுகளையும் செய்த பின்னர் பெண் வீட்டுக்கு இதன் மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்க மாட்டாங்களா?

    ஸமாவர்த்தனம் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. :(

    ReplyDelete
  50. இப்போதைய செலவை நினைச்சால்.........மயக்கமே வருது! :)))))

    ReplyDelete
  51. //முதல்நாள் ரிசப்ஷன் என்பதே எங்க வீட்டிலே யாருக்கும் பிடிக்காத ஒன்று. கல்யாணம் ஆனப்புறம் தான் ரிசப்ஷன்.//

    நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டே எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது. இதெல்லாம் அவரவர் விருப்பப்படி. அவரவர் செளகரியப்படி.
    ரிசப்ஷனே இல்லாமல் திருமணத்தோடு கூட இருவீட்டாரும் விரும்பினால் முடித்துக் கொள்ளலாம். ரிசப்ஷன் எல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்தான்.

    அலுவலக நண்பர்கள், நண்பிகள், நெருங்கிய சொந்தங்கள் அல்லாத பொதுவான நண்பர்கள் கலந்து கொள்ளும் சந்தோஷ விழா போல இப்பொழுதெல்லாம் ரிஷப்ஷனை எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெண்களும் அலுவலங்களுக்குச் செல்வதால் தங்கள் நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சொல்லப்போனால் இதில் தான் மணமக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நிறைய புத்திசாலிப் பெண்கள் நல்ல வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்திற்கு பகிர்ந்து கொண்டது போக, தங்கள் திருமணத்திற்காக சேர்க்கத் தொடங்கிவிடுகின்றனர். முக்கியமாக தனக்கு வேண்டிய முக்கியமான நகைகள். அதிபுத்திசாலியான பெற்றோர்கள், சிக்கனமாக குடும்பத்தை நடத்தி பெண் சம்பாதிப்பதில் பங்கு கேட்காமல் இருக்கிறார்கள். எல்லோருடைய குறிக்கோளும் வரப்போகும் அந்தத் திருமணத்தைக் குறித்தே.

    அடுத்த நாள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கும் கல்யாணம் இருபகுதிக்குமான நெருங்கிய உறவினர்களுக்கானது. ரிஷப்பனுக்கு வரும் கூட்டத்தில் கால்வாசி கூட கல்யாணத்திற்குத் தேறாது. அது சிறுகச் சிறுகக் குறைந்து கட்டுசாத கூடையின் போது 50 பேர்களாகி விடும்.

    ReplyDelete
  52. அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பாதிக்கு மேல் சாப்பிடாமலேயே வீணாக்கிவிடுகிறார்கள்.
    குழந்தைகளின் பக்கத்தில் பெற்றோர் அமர்ந்துகொண்டு சிறிய அளவில் குழந்தைக்கு போடச் சொல்ல வேண்டும்.
    பெரியவர்களே இலையில் போட்டுக்கொண்டு சாப்பிடாமல் எறிந்து விட்டுப் போவது மிகவும் வருந்தத்தக்கது.

    திருமணத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஆடம்பரத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.

    பின்னூட்டங்கள் சூப்பர்!

    ReplyDelete
  53. //நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டே எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது. இதெல்லாம் அவரவர் விருப்பப்படி. அவரவர் செளகரியப்படி.
    ரிசப்ஷனே இல்லாமல் திருமணத்தோடு கூட இருவீட்டாரும் விரும்பினால் முடித்துக் கொள்ளலாம். ரிசப்ஷன் எல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்தான்.//

    நம்ம வீட்டுக் கல்யாணத்திலே நாம் தான் முன்னிலை. ஆகையால் எங்க பொண்ணு, பையர் இரண்டு பேர் கல்யாணத்திலும் அவங்களோட சம்மதத்தின் பேரிலும், பெண், பையர் வீட்டுக்காரங்க சம்மதத்தின் பேரிலும் கல்யாணம் ஆனப்புறமே ரிசப்ஷன். அதே போல் ரிசப்ஷனுக்குக் கச்சேரியோ, மெல்லிசையோ வைக்கக் கூடாது என்றும் எங்கள் அன்பான கட்டளை. கச்சேரி வைத்து பாடகர்களை அவமானம் செய்வதோ, (யாருமே கேட்க மாட்டாங்க, பேச்சுக் கச்சேரிதான் நடக்கும்.) மெல்லிசை என்ற பெயரில் சத்திரமே அதிர்ந்து வாய் வார்த்தை கூடப் பேச முடியாமல் தத்தளிப்பதும் பல கல்யாணங்களில் அனுபவித்தது. அதெல்லாம் நம்ம வீட்டிலே வேண்டாம்னு நாங்க கூடிப் பேசி முடிவெடுத்தோம். வந்தவங்களுக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் பார்த்துப் பேசிக்கவும், தகவல்கள் பரிமாறிக்கவும் வசதி.

    ReplyDelete
  54. //அலுவலக நண்பர்கள், நண்பிகள், நெருங்கிய சொந்தங்கள் அல்லாத பொதுவான நண்பர்கள் கலந்து கொள்ளும் சந்தோஷ விழா போல இப்பொழுதெல்லாம் ரிஷப்ஷனை எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெண்களும் அலுவலங்களுக்குச் செல்வதால் தங்கள் நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சொல்லப்போனால் இதில் தான் மணமக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்//


    இது இருவீட்டார் விருப்பம் தான் என்றாலும் முதல்நாளே வருவதை விட மறுநாள் வருவது இன்னும் சிறப்பு. வரும் நண்பர்கள் அன்றும் வருவார்கள். அன்றும் இதில் கவனம் செலுத்தலாம். பெண்கள் தங்கள் நண்பர்களைத் திருமணம் ஆனதும் நடைபெறும் ரிசப்ஷனுக்கும் அழைக்கலாம். சொல்லப் போனால் எங்க பொண்ணு இதில் பிடிவாதமாய் இருந்தாள். முதல்நாள் ரிசப்ஷன் வைத்துக் கொண்டு என் சிநேகிதர்கள் கிட்டே நாளைக்கு இவரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்லியா அறிமுகம் செய்வேன்? கல்யாணம் ஆயிடுச்சுன்னா, என் கணவர் என்று அறிமுகம் செய்யலாமே? எனக் கேட்டாள். அதோடு இதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. :(

    ReplyDelete
  55. //நிறைய புத்திசாலிப் பெண்கள் நல்ல வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்திற்கு பகிர்ந்து கொண்டது போக, தங்கள் திருமணத்திற்காக சேர்க்கத் தொடங்கிவிடுகின்றனர். முக்கியமாக தனக்கு வேண்டிய முக்கியமான நகைகள். அதிபுத்திசாலியான பெற்றோர்கள், சிக்கனமாக குடும்பத்தை நடத்தி பெண் சம்பாதிப்பதில் பங்கு கேட்காமல் இருக்கிறார்கள். எல்லோருடைய குறிக்கோளும் வரப்போகும் அந்தத் திருமணத்தைக் குறித்தே.//

    பெற்றோருக்கும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என விருப்பம் இருக்க வேண்டும். மாற்றிச் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். பெரும்பாலும் பெற்றோருக்குப் பெண் சம்பாதிப்பதால் விரைவில் திருமணம் செய்து அனுப்புவதில் தயக்கமும் இருக்கிறது. வசதி படைத்த பெற்றோரும், விபரமான பெற்றோரும் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஒரு சில அனுபவங்கள்! :((((( மனமே கசந்துவிடும்.

    ReplyDelete
  56. //அடுத்த நாள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கும் கல்யாணம் //

    எங்க வீடுகளில் முதல்நாளே விரதம், நாந்தி, பாலிகை கொட்டல் எல்லாம் நடக்கும். மறுநாள் கல்யாணம் விரிவாக நடக்கவேண்டுமென்பதால் விரதத்தையும், நாந்தியையும் கல்யாணத்தன்று வைத்துக்கொள்வதில்லை. பெண் கல்யாணம் ஆனாலும், பிள்ளை கல்யாணம் ஆனாலும் எதுவானாலும் நாந்தி உண்டு.

    ReplyDelete
  57. //அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பாதிக்கு மேல் சாப்பிடாமலேயே வீணாக்கிவிடுகிறார்கள்.
    குழந்தைகளின் பக்கத்தில் பெற்றோர் அமர்ந்துகொண்டு சிறிய அளவில் குழந்தைக்கு போடச் சொல்ல வேண்டும்.
    பெரியவர்களே இலையில் போட்டுக்கொண்டு சாப்பிடாமல் எறிந்து விட்டுப் போவது மிகவும் வருந்தத்தக்கது.//

    வாங்க ரஞ்சனி, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. பல விஷயங்களில் ஆடம்பரம் குறைய வேண்டும்.

    ReplyDelete
  58. நல்லதொரு பதிவு. பல விஷயங்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    பகட்டான பட்டுப்புடவைகள் கட்டினால் பெண்களுக்கு ஓர் அழகாக உள்ளதே தவிர, அதில் உள்ள அவஸ்தைகள் பற்றி, பெண்களுக்கு மட்டுமே மிக நன்றாகத்தெரியும். [எனக்கும் நன்றாகத் தெரியும் - மடித்து எடுத்துப்போய் அழகாக பொறுமையாக அயர்ன் செய்துகொண்டு வரும் எல்லா ஆண்களுக்குமே தெரியும்]

    பத்திரிக்கை அடிப்பதிலிருந்து, அழைப்பதிலிருந்து, பல விஷயங்களிலும் ஆடம்பரங்கள் தான் உள்ளன. ஒவ்வொன்றையும் பற்றி நாம் எவ்வளவோ பதிவுகள் எழுதலாம் தான்.

    ஆனால் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த இனி இயலாது எனத் தோன்றுகிறது.

    பணம் படைத்தவர்களுக்கும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், செலவு செய்து, தங்களை விளம்பரப் படுத்திக்கொண்டு பெருமைப்பட இவைகளெல்லாம் உதவக்கூடும்.

    கடன் வாங்கி பணத்தை எப்படி எப்படியோ புரட்டி திருமணங்கள் செய்யும், நடுத்தர வர்க்கம் + ஏழை பாழைகளுக்குத்தான் மிகவும் கஷ்டம்

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete