எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 13, 2013

நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா?

நந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம்.  இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர்.

பரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது.  முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.  உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம்.

பரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர்.

காட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன்.

ஆஞ்சநேயர் தனி சந்நிதியில்

ஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை!  பிடிச்சுட்டேன்.



லவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.


விக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை. 

3 comments:

  1. பரத்குண்ட் குளம், பரத்-அநுமன் மிலன் தர்சனம்பெற்றோம்.

    ReplyDelete
  2. என்ன சிறப்பான இடங்கள்? தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. பரதனும் அனுமனும் சந்தித்த இடம் - தரிசனம் கண்டேன். மகிழ்ச்சி.....

    தொடரட்டும் பகிர்வுகள்....

    ReplyDelete